Wednesday, March 16, 2011

சமணர் கோவில், ஒற்றைக்கோபுரம் (விஜயபுரி) விஜயமங்கலம்,




திருக்கோவில் அமைவிடம்: விஜயமங்கலம்.,

பெருந்துறை வட்டம்,ஈரோடு மாவட்டம்.

மூலவர் : சந்திரபிரபா தீர்த்தங்கரர் (8 ஆம் தீர்த்தங்கரர்)

அம்பாள் : குஷ்மாண்டணி தேவி (தர்மதேவி)

காணப்படும் சிலைகள் : வர்த்தமான் மகாவீரர் .ரிஷப தீர்த்தங்கரர் (ஆதிநாதர்) நிபக்ஷாயக்ஷிகள் (5 இறைவன் புகழ் பாடிய புலவர்கள் )

கோவிலின் சிறப்புகள் : விஜய நகரப்பேரரசு ஆட்சிக்காலத்தில் விஜயபுரி (விஜயமங்கலம்)தலைநகராகவும் இருந்து வந்துள்ளது. இங்குதான் வரலாற்று சிறப்புமிக்க இல்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் சுமார் 2800 வருடங்கள் பழமையானது என்கிறார்கள் .அண்மையில் இத்திருக்கோவில் சென்று பார்த்தபோது பலவீனமாக இருப்பதை உணர முடிந்தது.

"நெட்டைக்கோபுரம்"ஒற்றைக்கோபுரம் என விஜயமங்கலம் மக்களால் அழைக்கப்படும் இத்திருக்கோவில் மிகப்பழமை வாய்ந்த கோவிலாக தெரிகிறது. ஆனால் சிலருக்கு மட்டுமே இக்கோவில் பற்றி தெரிகிறது. பழங்காலத்தில் பல சமண மதத்தை சார்ந்தவர்கள் இங்கு குடியிருந்து வந்ததாகவும் ,கால மாற்றங்களினால் அவர்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கு குடியேற்றம் ஆகிவிட்டதாக தெரிகிறது. இந்த திருக்கோவிலை கொங்கு வேளீர்கள் கட்டியதாக வரலாறு. காலம் கி.பி ஆறாம் நூற்றாண்டை சேர்ந்தது எனவும் கூறப்படுகின்றது.

தற்போது கேரளாவின் வயநாடு பகுதிகளில் இத்திருக்கோவில் சம்பந்தப்பட்ட சொந்தங்கள் வசிப்பதாக சொல்கிறார்கள். தற்போது இக்கோவில் வளாகத்தில் மூன்று குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்கள்தான் இத்திருக்கோவில் பூஜை புனஸ்காரங்கள் செய்து கோவிலை தற்போது பராமரித்து வருகின்றனர்.

இத்திருக்கோவிலில் மூலவர்(சந்திரபிரபா தீர்த்தங்கரர் 8 ஆம் தீர்த்தங்கரர்) சிலை சில வருடங்களுக்கு முன் திருட்டுப்போய் விட்டதால் பூஜை குஷ்மாண்டணிதேவி எனும் அம்பாள் சிலைக்கு தான் செய்யப்படுகிறது.

கோவில் தற்போது தேசிய முக்கியதுவம் வாய்ந்து சின்னமாக (1958 எண் 24 கீழ்) கருதி மத்திய தொல்பொருள் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சின்னங்களையோ ,கோவிலையா சேதப்படுத்துதல்,அகற்றுதல் ,திருத்துதல் ,தகாத முறையில் உபயோகித்தால் 3மாத சிறை 5000 அபராதமாகும் எனும் அறிவிப்பு பலகையாகவும், கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பகுதியாகவும் இப்பகுதியை சுற்றி 200மீட்டர் தோண்டுதல் கட்டிடப்பணிக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

பழங்கால இக்கோவில் பற்றி கேள்விப்பட்டு மக்கள் பலரும் அவ்வப்போது வந்து செல்கிறார்கள். நீங்களும் முடிந்தால் பழங்கால கோவில் பார்க்க ஆசையிருப்பின் கோயமுத்தூரில் இருந்து சேலம் செல்லும் நான்கு வழிச்சாலையில் விஜயமங்கலம் (பெருந்துறையில் இருந்து 12 கி.மிட்டர்)உள்ளது. அங்கிருந்து கள்ளியம்புதூர் செல்லும் சாலையில் வலதுபுறம் செல்லவேண்டும் .நெட்டைக்கோபுரம் என விசாரித்தால் சொல்லுவார்கள். திருக்கோவிலுக்கு ஸ்ரீ அமணேஸ்வரர் ஆலயம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. திருக்கோவில் சிற்பங்கள் கல்தூண் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ள ராசி சக்கரங்கள் , சமணர்கள் வாழ்க்கை வரலாறு,தத்துவம் ,பண்பாடு சமணர் இலக்கியத்தை விளக்கும் நல்லதொரு சான்றாக திருக்கோவில் விளங்குகின்றது

இக்கோவில் பற்றி எழுதப்பட்டுள்ள இவ்விடுகை பழங்கால ஆராய்ச்சியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் உதவி செய்யும் நோக்கில் பலரையும் கேட்டு செவி வழிச்செய்தியாக உங்கள் முன் வைக்கிறேன். ஆகவே இதன் உண்மைதன்மைகள் ஆய்ந்து உணர வேண்டியுள்ளது.இக்கோவில் பற்றி தகவல்கள் கிடைக்கும் போது இப்பகுதி நீட்டிக்கப்படும். உங்களுக்கு தெரிந்தால் மெயில் செய்யவும்.மற்றபடி உங்களின்
விமர்சனங்கள் வேண்டி
குரு.பழ.மாதேசு.

Saturday, March 12, 2011

அருள்மிகு அந்தியூர் குருநாதசாமி வரலாறு பாகம் - 3 arul migu anthiyur gurunathasamy temple history part -3





அந்தியூர் குருநாதர்க்கு அண்ணன் முறையில் பெரிய குருநாதசுவாமி கோவிலாகும் .


(இக்கோவில் பற்றி மேலும் அறிய தனியாக ஒர் கட்டுரை இதே வலை தளத்தில் உள்ளது அதைப்படிக்கவும்)

இது அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் வழியாக 4கி.மீ ல் குருவரெட்டியூர் செல்லும் வழியில் உள்ளது.

இங்கு பில்லி,சூன்யம்,காற்று, கருப்பு,வைப்பு,பைத்தியம், என பல வியாதிகளைகளை குணப்படுத்தும் அழகிய ஆலயம்.இங்கு பிரதி வருடம் பங்குனி மாதம் 4 ஆம் வெள்ளிக்கிழமை நாள் ஒருநாள் திருவிழா ஆகும்.

அருள்மிகு கொன்னமரத்தய்யன் கோவில் வனம். இது சித்திரை மாதம் 4ஆம் வியாழக்கிழமை தேர்த்திருவிழாவாக உள்ளுர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. பிரதிவாரம் மாலை 6.00 மணிக்கு பூஜை நடைபெறும். இவ்விரண்டும் அந்தியூர் குருநாதசாமி சம்பந்தப்பட்ட உபகோவில்களாகும்.

வாரபூஜை விபரங்கள் :

செவ்வாய் மாலை வேளை- அந்தியூர் குருநாதசாமி வனத்தில் பூஜை.

புதன்மாலை வேளை-

கொன்னமரத்தி அம்மன் கோவில் அந்தியூர்.

வெள்ளி மாலை வேளை-

பெரிய குருநாதர் பொரவிபாளையம்.

சனிக்கிழமை மாலை வேளையில் -அந்தியூர் குருநாதசாமி கோவில் பூஜை,
(Anthiyur gurunathasamy temple ) மற்றும் அமாவசை,மார்கழி அதிகாலை பூஜை ஆகியனவாகும்.

மாட்டுச்சந்தை :

தமிழ்நாட்டில் (tamilnadu) கூடும் பெரிய மாட்டுச்சந்தையில் அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழாவின் போது கூடும் மாட்டுச்சந்தையும் ஓன்றாகும்.

ஆடிமாதம் 4 ஆம் புதன் கிழமை மாட்டுச்சந்தையுடன் குதிரைச்சந்தையும் தொடங்கி விடும். 4 நாட்கள் நடக்கும் இச்சந்தைக்கு இந்தியாவின் (INDIA) பல பகுதிகளில் இருந்து குதிரை,மாடுகள் ஆயிரக்கணக்கில் வந்து பிரமாண்டமாக வியாபாரம் நடக்கும். இது 1951முதல் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

மாட்டுச்சந்தைக்கு தனியாக இடம் இல்லை எனினும் இப்பகுதி மக்கள் தங்கள் விவசாய நிலங்களை பலகாலமாக மாட்டுசந்தை நடைபெற உதவியாக உள்ளனர். தங்கள் நிலங்களில் ஆடிமாதம் மட்டும் பயிர் செய்யாமல் வைத்து மாடுகள்,குதிரைகள் கட்ட ஏக்கர் கணக்கில் உதவிசெய்வது சிறப்பு,


இந்த இடுகையை எழுத உதவியாக இருந்த "குருநாதசாமி திருக்கோவில் வரலாறு புத்தகம் " பி.ஜி பெருமாள் & சகோதர்கள் பரம்பரை அறங்காவலர் குடும்பம், குருநாதரின் வரலாற்றை எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை தெரிந்து கொண்டு குருநாதசாமி வரலாற்று புத்தகத்தை பரிசளித்த தற்போதைய அறங்காவலர் குழு திரு.சாந்தப்பன் என்கிற செல்வன் அவர்களுக்கும்,ஜீ.பி.ராஜன் எல்.ஐ.சி ஏஜென்ட் (G.p Rajan l.i.c agent. guruvareddiyur ) அவர்களுக்கும், கோவில் பற்றி கேட்ட இடத்தில் எல்லாம் குருநாதசாமியின் பழங்கதைகள் கூறி உதவியாக இருந்த அனைத்து ஆன்மீக செம்மல்களுக்கும் என் மனம் உவந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.

நீங்களும் ஆடிமாதத்தில் நடைபெறும் அந்தியூர் குருநாதசாமியை ( ANTHIYUR ARULMIGU GURUNATHASAMY TEMPLE )தரிசனம் செய்து, குதிரை .மாட்டுச்சந்தைகளை தரிசித்து


அருள்மிகு குருநாதர் அருள் பெற்று எல்லா நலமும் வளமும் பெற

இறை துணை வேண்டுகிறேன்.

Thursday, March 10, 2011

அருள்மிகு குருநாத சாமி தோன்றிய வரலாறு பாகம் -2 arulmigu gurunatha swamy temple history part -2


முதல் பாகம் அந்தியூர் குருநாதசாமி வரலாற்றை படித்து விட்டு தொடரவும் -



குலுக்கை எனப்படும் பெட்டகத்தில் குருநாதசாமியை பாதுகாக்க அந்நியர் யாரேனும் நுழைய முயற்சித்தால் கொடிய விஷ பாம்புகளிடம் கடிபட்டு இறப்பு நிச்சயம் என்பது சத்திய வாக்கு.


இப்பகுதிவாழ் மக்கள் தங்கள் தோட்டங்களில் வாழும் விஷ ஜந்துக்கள் தங்களை தீண்டக்கூடாதென வேண்டுதலிட்டு குலுக்கையை பாதுகாக்கும் பாம்பு புற்றுக்கு பூக்கள் இட்டு வணங்கி வருதல் இன்றும் நடந்து வருவது சிறப்பு.

தற்போதுள்ள மகாமண்டபம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமரர் சா.குருசாமி முதலியாரின் தீவிர முயற்சியின் பேரில் உருவானது.தற்போது அவர் தம் குடும்ப வாரீசுகளால் பராமரிக்கப்படுகிறது.

சபா மண்டபம் ஆலாம்பாளையம் அமரர் நஞ்சமுதலியார் அவர்களால் கட்டப்பட்டது. இன்றும் இவர் குடும்ப வாரிசுகளுக்கு திருவிழாவில் உரிய மரியாதை செய்யப்படுகிறது.

குருநாதர் சாமி வனம் கோவில் உருவான விதம் : -

ஸ்ரீ காமாட்சி அம்மன் தவம் மேற்கொள்ள வனப்பகுதி ஒன்றினை தேர்தெடுக்க அது தற்போதைய புதுப்பாளையம் கோவிலில் இருந்து வடமேற்கில் 2 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.

அக்காலத்தில் தாய் காமாட்சி அம்மன் தவம் செய்ய இவ்வனத்திற்கு செல்ல அப்போது அங்கே பல மாய மந்திர சக்தி கொண்ட உத்தண்ட முனிராயன் அவ்விடத்தை நான் விடமாட்டேன் என தடுக்க அம்மன் திரும்பி வந்து தன் மகன் குருதாதரிடம் சொல்ல தாயை தடுத்த மகா முனி உத்தண்டரை அழித்தே தீருவேன் என வாக்கு தந்து தம் சீடர் அகோர வீரபத்திரனை அழைத்து வனப்பகுதியை விட மறுக்கும் உத்தண்ட முனியை அழித்து வா எனக்கட்டளை இட சீடர் வீரபத்திரன் வனம் சென்று, உத்தண்ட முனிக்கு நல் உபதேசம் செய்தார்.


முனிராயரோ தன் அழிவு தெரியாமல் ஆணவமாக பேசினார். தற்போதுள்ள அந்தியூர் குருநாதசாமி வனத்தில் குருநாதரின் சீடர் அகோர வீரபத்திரனுக்கும் உத்தண்ட முனிக்கும் பெரிய சண்டை நிகழ்ந்தது .மாய தந்திரம் அறிந்த அறிந்த முனிராயர் தன் உருவத்தை பெரிதாக்கி உயரமாகி எதிர்க்க குருநாதசாமி மகாமேரு தேரில் முனிராயரை விட உயரமாகி சண்டையிட்டு உயிர் துறக்கும் முன் முனிராயர் குருநாதரிடம்

"என் அகந்தையை அழித்த குருநாதா.! எனக்கு பூர்வஜன்ம சாபம் உன்னால் நீங்கப்பெற்றேன். தங்கள் தாயார் காமாட்சி அம்மன் ஆர்வப்படி இங்கு தவம் மேற்கொள்ளட்டும். இன்றிலிருந்து இது குருநாதர் வனம் ஆகட்டும். ஆனால் நான் இல்வனத்தில் உன் சீடரான பாதுகாவலரான அகோர வீரபத்திரனின் எதிரில் கைகூப்பி தலை வணங்கி நிற்க அருள் புரிவாயா . ?

எனக் கேட்க குருநாதரும் மனமுவந்து

" அப்பா முனிராயா ! உன் பசிக்கு உணவு தர என் மனம் யோசிக்கிறது. ஏனெனில் என் தாயார் காமாட்சி அம்மன், பெருமாள் சாமி,நான் அனைவரும் சைவம்.எங்களுக்கு தேங்காய்,பழம்., பொங்கல் போதும்.

ஆனால்,உனக்கு ?என்க

அதற்கு முனிராயரோ
"குருவே ! பக்தர்கள் வைக்கும் இரட்டை பொங்கலில் எனக்கு ஒன்றை நீங்கள் எமக்கு தர வேண்டும் என கை கூப்பி வேண்டி நின்றார்,

குருநாதரும் சரியென வாக்களிக்க அன்று முதல் இன்று வரை பக்தர்கள் வெட்டும் சேவல் குருநாதரின் காவல் தெய்வமாக விளங்கும் உத்தண்ட முனிக்காகும்.வனத்துக்கோவிலில் கல் உருவம் வைத்து சீடர்கள் வீரபத்திரனும் உத்தண்ட முனியும் பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதாக வரலாறு.அன்று வைத்த கற்சிலை இன்றும் சிற்பியால் செதுக்காத பொற்சிலையாக வளர்ந்து வருகிறார்.


வரட்டுப்பள்ள நீர்தேக்க நீர் பள்ளத்தில் ஒட இயற்கையின் குளுமை நம்மை தாலாட்ட சுமார் 1 ஏக்கரில் குருஸ்தலமாகி நில மட்டத்தில் இருந்து 3 அடி குழிக்குள் மலை அடிவாரத்தில் குருநாத சாமி வனம் இருப்பது வியப்பு , சிறப்பு

.இங்கு ஸ்ரீ காமாட்சி அம்மன் தவநிலை எதிரில் சித்தேஸ்வரன், மாதேஸ்வரன் , அம்மன் வலபுறம் கீழ் நவ நாயகிகள்.ஏழுகன்னிமார்கள் .மேலும் மகா விஷ்ணு சன்னதியில் பெருமாள், ராமர்.லட்சு ணர்,சீதை ,பரத சத்துருக்ன்,ஆஞ்சநேயர் கருடாழ்வார் ஆகியோர் உள்ளதாக ஐதீகம்.

குருநாதர் இங்கே குன்றாய் இருக்க நாகதேவதை. தண்டகாருண்யர் ,தர்ப்பை அம்மன் எதிரில் அண்ணன்மார் முன்னுடையாரும் குருநாதர் கீழே பதினெட்டு சித்தர்களும் ,மூதாதையர்கள் மூவர் சிலையும் இடது ஓரம் சீடர் அகோர வீரபத்திரனும் ,எதிரில் உத்தண்ட முனிராயரும் அன்னப்பறவையும் காட்சி தர அருகே பஞ்ச பாண்டவர்கள் சிலைகள் உள்ளது.

குருநாதசாமி திருவிழா விபரம் :-

ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் முதல் புதன்கிழமை -பூச்சாட்டுதல் 2- வார வதுபுதன்கிழமை -கொடியேற்றுதல் 3-வது வார புதன்கிழமை வன பூஜை 4 வது வார புதன்,வியாழன்.வெள்ளி சனி ஆகிய நான்கு நாட்கள் ஆடிப் பெருந்தேர்விழா ( மிக விஷேசம் கூட்டம் அதிகமுள்ள பார்க்க வேண்டிய நாள் ). 5வது புதன்கிழமை பால்பூஜையுடன் முடிவடையும். ஆவணி மாதம் முதல் புதன்கிழமை சிதம்பரப்பூஜை எனும் படித்தரப்பூஜை வன்னியர் குல சத்திரியர்களால் நடைபெற்று வருகிறது.

சிதம்பர பூஜை முடித்து பூசாரி பூசை செய்ததும் அருள் வந்து திருவால விளக்கு என்னும் விளக்கில் பச்சை தண்ணீரில் விளக்கு எரித்தீக்காட்டி வணங்கி நிற்கும் பக்தர்களுக்கு பொது வாக்கு அளித்து பின்பூஜை முடித்து பிரசாதம் வழங்குதல் வழக்கம் ,இத்திருவிழாவில் மூலவரே உற்சவராக காட்சி தருவதால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.

ஆடி மாதம் 4ஆம் புதன்கிழமை பல்லாக்கில் ஸ்ரீ காமாட்சி அம்மனும் ,சிறிய மகாமக தேரில் ஸ்ரீ பெருமாள்சாமியும் பெரிய மகாமகதேரில் ஸ்ரீ குருநாதசாமியும் வனத்திற்கு வரும். வனபூஜைகள் முடித்து அன்று இரவு 12.00மணிக்கு மேல் புறப்பட்டு காலை 6.00மணிக்கு அந்தியூர் புதுப்பாளையம்

( PLEASE SEE PART 3)

Saturday, March 5, 2011

Arulmigu gurunatha samy temple history.anthiyur அருள்மிகு குருநாதசாமி தோன்றிய வரலாறு.அந்தியூர்



குருநாதசாமி திருக்கோவில் வரலாறு

அமைவிடம் :

ஈரோடு மாவட்டம் (erode district )அந்தியூரில்(anthiyur) இருந்து வடக்கே 2 கி.மீட்டர் தொலைவில் மேற்கு மலை தொடர் அருகே அழகாய் அமர்ந்திருக்கிறது குருநாத சுவாமி கோவில் பாண்டிய மன்னர்களில் ஒரு குறு நில மன்னன் கற்கோவில் கட்டி வைத்ததாக கதை கூறும் நல் உலகம் கூறுகிறது.

ஆனால் அதற்கான கல்வெட்டிக்களோ செப்பேடு பட்டயங்கங்களோ காலப்போக்கில் அழித்து விட்டது.ஆனால் அக்கோவிலின் பரம்பரை அறங்காவலர்களிடம் திருக்கோவில் பற்றிய பன்நெடுங்கால கதையினை செவிவழிச்செய்தியினை உங்கள் முன் வைக்கிறேன்.

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்காடு நவாபுவின் ஆட்சிக்காலம்.அப்போது தற்போதும் அந்தியூரில் வசித்து வரும் அமரர். குருசாமி பூசாரியார் அவர்களின் குடும்பத்திற்கு மூத்த தலைமுறையினர் சிதம்பரம் அருகில் உள்ள பிச்சாபுரம் எனும் வனத்தில் "குட்டியாண்டவர்" என்னும்பெயரில் கோவில் எடுத்து பூஜை செய்து வந்தனர்.


அக்காலத்தில் இக்கோவில் பூசாரி வீட்டுப்பெண்ணை ஆற்காடு நவாபு திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து பெண் கேட்க அதற்கு பூசாரியாரோ தன் உறவினர்களுடன் கலந்து பேசி தன் முடிவை சொல்வதாக கூறி நவாபின் ஜவானிடம் கூறி அனுப்பி வைத்து பின் தன் உறவினர்களிடம் கேட்க அவர்கள் சம்மதிக்க வில்லை.

நவாபோ சிறிது நாள் அவகாசம் கேட்டு பெண் கொடுக்க மறுத்தால் சிறைச்சேதம் செய்து விடுவேன் என்பது நியாபகம் வர யோசித்தவாறு இருக்க, அப்போது பூசாரியின் உறவினர் ஒருவருக்கு சுவாமி அருள் வந்து

"நீங்கள் வணங்கி வரும் இம் மூன்று கற்சிலைகளையும் எடுத்துக்கொண்டு இரவோடு இரவாக வேறு ஊருக்கு சென்று விடுங்கள் "

என அருள்வாக்கு அளிக்க பூசாரியின் மொத்த உறவுகளையும் அழைத்துக்கொண்டு அம்மூன்று கற்சிலைகள் மற்றும் சிற்சிலைகளை எடுத்து பூசைக்கூடையில் வைத்துக்கொண்டு பிச்சாபுரத்தை விட்டு ஒர் நெடுந்தூர பயணத்தை துவக்கினர்.

இச்செய்தி கேட்ட நவாபும் ஆட்களும் அங்கு சென்று பார்த்தபோது யாரும் அங்கு இல்லை என்பதை அறிந்து கோபம் கொண்டு அத்திருக்கோவில் கோபுரம், குதிரைப்பந்தி, யானைப்பந்திகளை உடைத்துச்சென்று விட்டனர்.

இக்கோவில் குடும்பத்தினர் பல ஊர்கள் சுற்றி பசியாலும் பட்டினியாலும் கஷ்டப்பட்டு ஒரு கட்டத்தில் இச்சிலைகளின் சுமை தாங்காமல் ஆற்றில் வீசிவிட்டு பஞ்சம் பிழைக்க செல்லலாம் என முடிவெடுத்து ஆற்றில் வீசிவிட்டனர்.அப்போதுதான் அங்கு ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

அப்போது பல திசைகளுக்கு செல்ல குடும்பம் குடும்பமாக பிரிய தயாரான நிலையில் தற்போதைய அறங்காவலர் குடும்ப மூதாதையர் வன்னியர்குலத்தை சேர்ந்த சாத்தப்பன் என்பவரது கூடையில் ஆற்றில் வீசப்பட்ட மூன்று சிலைகளும் இருந்ததை கண்டு ஆச்சர்யப்பட்டு அன்றிலிருத்து தம் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மூத்த மகனுக்கு சாந்தப்பன் என்றும் பெண் பிறந்தால் சாந்தா என்றும் பெயர் அவர்கள் மூதாதையரின் பெயர் வைப்பது வழக்கமான ஒன்று.

கூடையில் இருக்கும் கற் சிலைகளை நம் குலதெய்வமாக வழிபட வேண்டும் என்று எண்ணி மகிழ்ச்சியுடன் அனைவரும் சாத்தப்பன் பின்னால் கிளம்பினர். பல தூரம் நடந்து ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் உள்நுழைந்து வருகையில் தொப்பபாளையம் (thoppapalayam) என்னும் ஊரில் இருக்கும் இருசியம்மன், எமராசா,கோவில்களில் தங்கி அங்கு சாமிக்கு சிறப்பு செய்ததாகவும்,

பின் கிளம்பி பொரவிபாளயம் எனும் ஊருக்கு வருகையில் அங்கு கடும் சுமை தாங்காமல் தாங்கள் கொண்டு வந்ததில் பெரிய கற்சிலையை இறைவாக்கின் படி நட்டு கும்பிட்டு ( இவ்விடம் தற்போது அந்தியூரில் இருந்து குருவரெட்டியூர் செல்லும் வழியில் பொரவிபாளையம் எனும் ஊரில் பெரிய குருநாதசாமி என்ற பெயரில் பிரதிவார வெள்ளிக்கிழமைகளில் இரவு 7மணிக்கு பூஜை நடைபெறுகிறது. மேலும் விபரங்களை மேற்படி கோவில் தனி இடுகையில் காணவும்)

மற்ற சிலைகளுடன் அந்தியூர் நோக்கி கிளம்பினர் . ஆதிரெட்டியூர் வழியாக கொண்ணமரத்தியம்மன் கோவில் வந்து சில சிலைகள் வைத்து வணங்கி அந்தியூர் புதுப்பாளயத்தை அடைந்து அப்போது ஆண்ட பாண்டிய மன்னரை அனுமதி கேட்க சில நிபந்தனைகளுடன்

" எம்மீது படை எடுத்து வரும் அரசர்கள் மீது போர் தொடுக்க உதவியாக இருங்கள் எனச்சொல்லி"

நிபந்தனை விதித்து அதன்படியே இவர்களும் அந்தியூர் அருகிலியே தங்க ஆரம்பித்தனர். அங்கு பாண்டிய மன்னரால் கொடுக்கப்பட்ட கல் மண்டபம் மீன் சின்னங்கள் இன்றும் காணலாம் .தாங்கள் கொண்டு வந்த சிலைகளுக்கு முறையான பூஜைகள் செய்து அதன் பின் உணவு அருந்தி வந்தனர்,

பின் தாம் கொண்டு வந்த சிலைகளுக்கு குலதெய்வமாக ஸ்ரீகாமாட்சி அம்மன் ,மற்றொன்று ஸ்ரீ பெருமாள் சாமி (வைணவம் )என்றும் மூன்றாவதாக ஓர் சிலைஎடுத்து சைவக் கடவுளான சிவன்,முருகரை இணைத்து "ஸ்ரீகுருநாதசாமி " எனப்பெயரிட்டு அழைத்தனர். குரு என்றால் ஈஸ்வரரையும் நாதன் என்றால் முருகன் எனச்சொல்லி வணங்கி வந்தனர், இவருக்கு சின்ன குருநாதசாமி,பாலகுருநாத சாமி, உக்கிர குருநாதர் என பல பெயர்கள் உண்டு.

பின் அக்கல் மண்டபத்தில் மூன்று கோபுரங்கள் அமைத்தனர்.அக்காலத்தில் கொள்ளுக்காசுகள் கூலியாக தரம்பட்டதாம்.பெரும் கோவிலாக குருநாதசாமி ஆனபோது யார் பூஜை செய்வது எனக்குழப்பம் வரும்போது இன்றைய பரம்பரை அறங்காவலரின் நான்காம் பாட்டனார் மழு எடுத்து பூஜை செய்தாராம் அப்படி என்றால் தூபக்காளை பித்தளயால் ஆனைதை தீயில் வேக வைத்து அதை எடுத்து சாமிக்க தூபம் காட்டி பூஜை செய்தாராம்.

பின் சாமி பூஜை பொருட்கள் பாதுகாக்க குலுக்கை எனும் பெட்டகம் பிரதி வருடம் ஆடிமாதத்திருவிழாவின் போது முதல் பூஜைக்கு முந்தைய நாள் மேள தாளத்துடன் திறந்து பூஜை பொருட்கள் எடுத்து பூஜை செய்வாக்களாம்.

இன்றும் இம்முறை பின்பற்றப்படுவதுண்டு.மேலும் பாதுகாப்பிற்காக பாம்புகளை விட்டு காற்றோட்டம் அமைத்து பாதுகாப்பதாக சொல்கிறார்கள்.கடும் விரதம் இருந்து வரும் பூசாரிகளில் ஒருவரே இதை திறப்பார்,

பாகம் 2 ல் காண்க.

Tuesday, February 15, 2011

விஜயமங்கலம் அருள்மிகு கோவர்த்தனாம்பிகை உடனமர் ஸ்ரீ நாகேஸ்வரர் ஆலயம்



விஜயபுரி கோவர்த்தனாம்பிகை உடனமர் நாகேஸ்வரர் ஆலய வழிபாடு :-

இறைவன் :
ஸ்ரீ நாகேஸ்வரர்
இறைவி: கோவர்த்தனாம்பிகை

அமைந்த ஊர்:
விஜயமங்கலம் ,பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம்
திருக்கோவில் சிறப்பு :
தமிழகத்தின் மிகப்பழமையான ஊர்களில் கொங்கு நாடு எனப்போற்றப்படுகிற மற்றும் பழங்கால வரலாற்று ஏடுகளில் புரட்டினால் விஜயநகரப்பேரரசு அதன் தலைநகரம் விஜயபுரிதான் தற்போது விஜயமங்கலம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

காலங்களின் உருமாற்றங்கள் இப்பகுதியை மாற்றினாலும் இறை சன்னதிகள் மட்டும் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருவது மிகச்சிறப்பு. பழங்கால மன்னர்களும் புலவர்களும் நன்னூல் எழுதிய புலவர் பவணந்தி முனிவர் என பலரும் வந்த புண்ணிய பூமியில் வீற்றிருக்கும் எல்லாம் வல்ல எம்பெருமான் ஸ்ரீ நாகேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது.எல்லா சிவாலயங்களை விட இது சற்றே மாறுபட்டது

விஷேச மானது.

1. சுயம்புவாக சிவபெருமான் காட்சி தருகிறார்
2.மேற்கு பார்த்தவாறு காட்சி அளிக்கிறார் . (பெரும்பாலான சிவாலயங்கள் கிழக்கு நோக்கி இருக்கும்)
3.பழங்கல்வெட்டுகள் ஆங்காங்கே அமைந்துள்ளன. இவ்வாறு விஜயமங்கலத்தை (vijayamangalam)பார்த்தவாறு அருள்புரியும் இறைவனுக்கு கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற ஆவன செய்யப்படுகிறது.

உங்களால் முடிகிற போது நேரில் சென்று தரிசியுங்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆலயம் சேலத்திலிருத்து ( salem)கோயம்புத்தூர் (coimbatore) செல்லும் சாலையில் 90கி.மீட்டரிலும் ஈரோடு (erode )மாவட்டம் பெருந்துறையில் (perundurai)இருந்து 10 கி.மீட்டரிலும் அமைந்துள்ள இப்பழம்பெரும் நாகேஸ்வரர் ( nageswarar) ஆலயத்தை தரிசனம் செய்து இறையருள் பெற்று வாழ்வாங்கு வாழ இறை சித்தம் வேண்டுகிறேன்.

அருகிலுள்ள ரயில் நிலையம் ஈரோடு (erode) 30 கி.மிட்டர்,

மேலும் தகவல் வேண்டுபவர்கள் எம்மை தொடர்பு கொள்ளவும்.

Monday, February 7, 2011

அருள்மிகு அல்லால் ஈஸ்வரர் வடிவுடையம்மன் திருக்கோவில்


அல்லால் ஈஷ்வரர், வடிவுடையம்மன்


திருக்கோவில் அமைவிடம் :


ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து சென்னிமலை செல்லும் சாலையில் 5 கி.மீட்டரில் ஈங்கூரில் அமைந்துள்ளது .

மூலவர் : அல்லால் ஈஷ்வரர்

அம்பாள்: வடிவுடைஅம்மன் .

ஸ்தல விருட்ஷம்: வில்வம் .
பெயர் காரணம் அல்லால் ஈஸ்வரர் என்றால் அல்லல்களை களைபவர்
எனப்பொருள்படும்.
ஸ்தல வரலாறு மற்றும் சிறப்புகள் :

கொங்கு நாட்டில் புகழ் பெற்ற ஈஷ்வரர் ஆலயங்களில் இதுவும் ஒன்று.இங்கே சிவபெருமான் மேற்கு பார்த்த நிலையில் இருப்பது ஒர் தனிச்சிறப்பு, பெரும்பாலான சிவாலயங்கள் கிழக்கு நோக்கிய இருக்கின்றன. அவ்வகையில் இக்கோவில் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பு அவ்வகையில் அல்லால் ஈஸ்வரரை தரிசனம் செய்தால் 12 ஈஸ்வரர் ஆலயங்களை தரிசனம் செய்த பலன் கிடைக்குமென ஆன்மீகப்பெரியோர்கள் சொல்கிறார்கள்

.இக்கோவில் 50 ஆண்டுகளுக்களுக்கு மோலாகி தற்போது 7.2.11 அன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 50 பெண்கள் 5000 ரூபாய் வீதம் வசூலித்தும் ஆன்மிகப்பெரியோர்கள் ,சிவனடியார்கள் பேருதவியுடன் அல்லாலீஷ்வரர் கும்பாபிசேகம் மிக அருமையாக நடைபெற்றது.

அன்னதானம் மிகச்சிறப்பாக செய்து ஆன்மீகத்திற்கு உயிரூட்டிக்கொண்டிருக்கும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்து நானும் என் நன்பன் பார்த்தீபனும் கோபுர தீர்த்ததில் நனைந்து ( கோபுர தீர்த்தம் கோடி நன்மையாம்) வந்தேன்.

ஈங்கூர் ரயில் நிலையம் அருகில் உள்ள இந்த அல்லால் ஈஸ்வரப் பெருமானை வணங்கி உங்கள் வாழ்வின் அல்லல்கள் குறைந்து எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துகிறேன்.

Thursday, February 3, 2011

எம் இணையத்தை காண வந்த உங்களுக்கு

எம் இணையத்தை காண வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன். ஆன்மீகம் சம்பந்தமான புது புது கோவில்கள் குறிப்பாக ஈரோடு மாவட்டக்கோவில்கள் தேடி கண்டு பிடித்து உங்களுக்கு அளிக்க ஆவலாக உள்ளேன். எனக்கு உங்களிடம் தேவை எல்லாம் உங்கள் மேலான கருத்துரைகள் மட்டுமே.வெளிநாடு வாழ் தமிழ் உள்ளங்கள் ஆன்மிக அன்பர்கள் தங்கள் விமர்சனங்களை எமக்கு அனுப்புங்கள். அது மேன்மேலும் எழுத தூண்டும் .கருத்துரைகள் அனுப்பிய சிவதமிழோன், vetrigee அவர்களுக்கு நன்றி.

Tuesday, January 25, 2011

பசு ,மாடு,கோமாதா


பசு : இடுகையின் தலைப்பை பார்த்தவர்களுக்கு பசுவிற்கு ஓர் இடுகையா ..? என ஆச்சர்யர்யம் அளிக்கலாம் ஆனால் நம் புராணங்களும் இந்து மதங்களின் நூல்களும் மிக மேன்மையாக சொல்லுகின்ற விஷயமாக பசு இருப்பது நிஜமே. அப்படி என்ன தான் இருக்கிறது பசு மாட்டில் என நம் ஆன்மிக அறிவை (?) வைத்து ஆராய்ததின் பலன் எமக்கு தெரிந்த சில விஷயங்களை உங்கள் முன் வைக்கிறேன் .

புராணத்தில் எல்லா தெய்வங்களும் பசு மாட்டின் உடலில் வந்து இடம்புகுந்ததாகவும் மகா லட்சுமி கடைசியாக வந்த போது உலகின் முப்பத்து முக்கோடி தெய்வங்களும் பசுவின் உடலில் இடம் கொடுத்து விட்டதாக பசு எனப்படுகிற கோமாதா சொல்ல சரி எனது சாணம் இடும் இடம் தான் உள்ளது எனச்சொல்ல மகா லட்சுமியும் கிடைத்த இடம் போதும் என அங்கே தங்கி விட்டதாகவும் புராணக்கதைகள் சொல்கின்றன.


ஆகவே தரித்திர நிலையில் உள்ளவர்கள் செல்வ வளம் இல்லாதவர்கள் அதிக பாவங்களை செய்து விட்டதாக எண்ணுபவர்கள் கன்றுடன் கூடிய பசு மாட்டை நம்பிக்கையுடன் ஒருமுறை சுற்றி வந்து பழம் அல்லது அகத்திக்கீரை கொடுத்து வணங்க எல்லா வளமும் நலமும் கிட்டுமெனவும் உலகின் அனைத்து தெய்வங்களையும் வலம் வந்த புண்ணியம் கிட்டுமென ஆன்மீகப்பெரியோர்கள் சொல்கிறார்கள்.

பசுவின் பால்,தயிர்,நெய், கோமியம்,பசுஞ்சாணம் ஆகியவை சேர்த்துதான் பஞ்ச காவ்யம் தயாரிக்கப்படுகிறது. திருநீரு பசு சாணத்தில் தயாரிக்கப்படும் வெண் திரு நீரு உயர்வாக கருதப்படுகிறது. பசு மாட்டின் நிறத்தை பொறுத்து பாலின் பண்பு அமைவதாக பெரியோர்கள் சொல்கிறார்கள் . வெண்மை நிறம் கொண்ட பசுவின் பால் பித்த ரோகத்தை தீர்க்கும் . சிவப்பு நிறம் கொண்ட பசுவின்பால் வாத நோயை போக்கும் . வெண்புள்ளியும் கருஞ்சிவப்பு நிறமும் (கபிலை நிறம் ) கொண்ட பசுவின் பால் மூன்று ரோகமான வாதம் பித்தம் ,சிலோத்தும ரோகங்களை நீக்குவதாக பழங்கால நூல்கள் இயம்புகின்றன. இந்துவாக பிறந்த ஒருவர் இது போன்ற உயர்வுகளை கொண்ட பசுக்களை வதை செய்யாமலும்,அடிமாடுகளை விற்காமாலும் மாட்டிறைச்சியை உணவாக உட்கொள்ளாமல் கண்டிப்பாக தவிர்த்து ,

அன்புடன் பராமரித்து பசுக்களின் அருமையை உணர்ந்து சிவன் அருள் மட்டுமன்றி உலகின் அனைத்து தெய்வங்களின் அருளும் தடையின்றி பெற வாழ்த்துகிறேன்.

Sunday, January 16, 2011

அருள்மிகு கொண்டத்துக் காளியம்மன் திருக்கோவில்,பாரியூர், கோபி , Arulmigu kondathu kaliamman thirukovil ,pariyur,gobi.




அருள்மிகு கொண்டத்துக்காளி அம்மன் திருக்கோவிIL


ARUL MIGU KONDATHU KALIAMMAN THIRUKOVIL :


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் என்றால் தமிழ் சினிமாவின் சில படங்கள் எடுக்கப்படும் பதிவுகள் இங்கே உள்ள இயற்கை காட்சிகளின் அழகில் அமைந்திருப்பது தான் அருள் மிகு கொண்டத்து காளி அம்மன் திருக்கோவிலாகும்.

கோபியில் இருந்து அந்தியூர் சாலையில் சுமார் 5 கி.மீட்டர் வயல் வெளிகளை பச்சையை ரசித்துச் சென்று பாரியூரில் இறங்கினால் திருக்கோவிலை அடையலாம்.பவானி ஆற்றின் வாய்க்கால்கால்கள் சுற்றிலும் ஒட தென்னை மரங்கள் மற்றும் இயற்கையின் குளுமை நம்மை ஆர்பரிக்கும் ஒர் அழகான கோவிலாகும்.

திருக்கோவில் உள் பிரகாரம் கருங்கற்களால் அழகாய் வடிவமைக்கப் பட்டுள்ளது.அங்கே மூலவராய் கொண்டத்து காளியம்மன் தம்மை காண வரும் பக்தர்களின் வரம் தரும் அம்பாளாக காட்சி தந்து பக்தர்களின் குறை நீக்கி அருள் புரிகிறார். இயற்கையின் எழிலுடன் அமைந்துள்ள இத்திருக்கோவிலுக்கு கோபி (cobi chettipalayam) பக்கம் வந்தால் வந்து விட்டு செல்லுங்கள்.

காரில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் அந்தியூர் செல்லும் சாலையில் மேலும் பயணித்து அத்தாணி (athani) வரை வந்தால் இயற்கையை நன்கு ரசிக்கலாம். கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழா தைமாதம் போகிப் பண்டிகையில் ஆரம்பித்து 5 நாள் வரை பொங்கல் திருவிழா காலங்களில் நடத்தப் படுவதால் கூட்டம் அலை மோதுகிறது.


பிரசித்தி பெற்ற முத்துப்பல்லாக்கில் கொண்டத்துக் காளியம்மன் பாரியூரில் இருந்து கோபி வரை வந்து பக்தர்களுக்கு காட்சி தருவது மிக அற்புதமான ஒன்று. ஈரோடு ரயில் நிலையத்தில் சுமார் 40 கி.மீட்டர். தங்கும் விடுதிகள் கோபி நகரில் உண்டு. கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய ஆலயம் .

மற்ற கோவில்களை போல் அல்லாமல் இங்கு ஒரு விதமான மண் திருநீரு தருகிறார்கள் இதுவும் விஷேசமான ஒன்று. இறைவியை தரிசித்து விட்டு எமக்கு எழுதுங்கள் .

ஸ்தல வரலாறு பின்னர் எழுதப்படும் .

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் .நன்றி

Thursday, January 6, 2011

ஸ்ரீ ரங்கம்மா கோயில் ஸ்தல வரலாறு ,மாடு கட்டி பாளையம், விஜய மங்கலம். sri Rangangammal kovil temple history, madukattipalayam, vijayamangalam

ஸ்ரீ ரங்கநாயகி அம்மன் கோவில் (வைணவம்) வரலாறு

அமைவிடம் :

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் விஜயமங்கலத்தில் இருந்து சென்னி மலை சாலையில் மாடுகட்டி பாளையம் - 638051 என்னும் ஊரில் உள்ளது. விஜயமங்கலம் ரயில் நிலையத்தில் இருந்து 3கி.மி , பெருந்துறையில் இருந்து 7கி.மி . ஈங்கூரில் இருந்து 4கி.மீ தொலைவிலும் மாடுகட்டிபாளையம் எனும் சிற்றூரில் உள்ளது.

திருக்கோவில் நிஜ வரலாறு :

சுமார் 300 ஆண்டுகளுக்கு கம்மாவர் மாடுகட்டி பாளையம் பகுதியில் வாழ்ந்து வந்தனர்.அக்காலத்தில் நம்பூரார் துக்கினார் குலத்தில் நடந்த நிஜ வரலாறு. ரங்கம்மா தந்தை கொண்டம நாயுடு ரங்கம்மா தீயில் பாய்ந்து இறந்த பிறகு ரங்கம்மா பேர நாயுடு நினைவாக அவர்களுக்கு சிலை செதுக்கி கோவில் கட்டி வைத்தார். அந்தக்கோவில் இன்னமும் மாடுகட்டிபாளையத்தில் உள்ளது.


பூசாரியோ மற்றவர்களோ உள்ள செல்ல வேண்டுமானால் பக்கவாட்டாக உட்கார்ந்துதான் செல்ல வேண்டும். கோவில் உற்சவ விக்கிரகங்கள் வைக்க சிறிய மண்டபம் உள்ளது. அழகான கருட கம்பம் முன்புறம் உள்ளது. ரங்கம்மா கோவில் வடகிழக்கு மூலையில் கம்மவார் குல தெய்வமான எல்லம்மா ஸ்ரீ ரேணுகா தேவி சன்னதி உள்ளது. மற்றும் ஸ்ரீ ரங்கம்மாளின் வழிபாட்டு தெய்வமான ஸ்ரீ அங்காளம்மன் கம்பீரமாக காட்சி தருகிறது..

பிரமோற்சவம் :

கார்த்திகை மாதத்தில் , மற்றும் பிரதி மாத பெளர்ணமி பூஜை .. மிகச்சிறப்பாக அறங்காவலர் குழுவால் பூஜை ,விசேஷங்கள் நடைபெற்று வருகிறது.மற்ற நாட்களிலும் கோவில் திறக்கப்பட்டே இருக்கும்,

பூஜை விபரங்கள் :

பால் பூஜை காலை 06.00 மணிக்கு மேல் , உச்சி கால பூஜை பகல் 12.00 மணிக்கு மேல், சாயங்காலபூஜை : மாலை 0600 மணிக்கு மேல் .. ஓவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று திருமஞ்சன பூஜை காலை 10.00 மணிமுதல் 11.00 மணி வரை..

பஸ் வசதி :

விஜய மங்கலம் மெயின் ரோடு TO மாடுகட்டி பாளையம் ரங்கம்மா கோவில் பஸ் நெம்பர் C4 காலை 7.15, பகல் 1.45, மாலை 6.00 மணி.

எம் அனுபவம் : தெய்வீக பெண்ணாக வாழ்ந்து இறந்த ரங்கம்மா கணவருக்காக தீ மூட்டிய சிதையில் இறங்கிய வரலாறு கேட்க சிலிர்க்கிறது. இங்கு நிஜமாக வாழ்ந்த மனிதமும் கடவுள் ஆகலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் தம்மை நாடி வருபவர்களுக்கு மக்கட்பேறு,திருமணம். நல்வாழ்வு இந்த அன்னை நிகழ்திய அற்புதங்கள் பலர் சொல்லக்கேட்டேன்.

உங்கள் குறைகளை ஸ்ரீரங்கம்மாளிடம் எடுத்து வைத்து நிறைவேற பெளர்ணமி அன்று வந்து தரிசித்து விட்டு நல்லது நடக்கும் பின் எனக்கு எழுதுங்கள்.. கோவில் பற்றி மேலும் தகவல்களை சேகரித்து எழுதுகிறேன் .

மேலும் விபரங்களை துக்கினார் நம்பூரார் சேம நல சொசைட்டியின் போன் தொடர்புகொள்ள நெம்பர் 04294-292124, .மற்றும் 9791571704.

திருக்கோவில் விபரங்கள், போட்டோக்கள், வீடியோக்கள் இணையத்தளத்தில் பார்க்க முகவரி www.srirangammal.com , ஸ்ரீரங்கம்மாவை நேரில் தரிசித்து விட்டு எழுதுங்கள் . நன்றி.

Wednesday, December 29, 2010

குப்பண்ணசாமி வருகை வரலாறு பாகம் 2


பழங்காலத்தில் கொங்கு நாடு பல குறுநில மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அப்போது தென்னிலை என்னும் ஊரினை தலைநகராக கொண்டு "கொக்கராயன்" என்னும் குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான்,

அவர் மைசூரை ஆண்டு வந்த திப்பு சூல்தானுக்கு கப்பங்கட்ட மறுத்தார். அதனால் கோபம் கொண்ட திப்பு கொங்கு நாட்டில் இருந்து வந்து தம்மிடம் படைத்தளபதியாக இருக்கும் "குப்பண்ணக்கோ " என்பவரை அழைத்து நீர் சென்று கொங்கு நாட்டில் இருக்கும் கொக்கராயன் மீது படையெடுத்து அவன் செல்வங்களை கவர்ந்து வா என திப்பு சூல்தான் ஆணையிட குப்பண்ணக்கோ கலங்கிப் போனார் .

தன் தாய் நாட்டின் மீதே படையெடுப்பதா ? என நினைத்து மனம் வருந்தி மன்னன் கட்டளைக்காக மனதை திடப்படுத்தி பெரும்படையுடன் கிளம்பினார்..கொங்கு நாடு வந்ததும் குப்பண்ணசாமி என்னும் தளபதியாருக்கு சக்கரசுவாசம் என்னும் விஷக்காய்ச்சல் தாக்கியது.

கனககிரி மலைச்சாரலில் தங்கிய அப்படை பிரிவு வீரர்களுக்கு தன் தளபதி குப்பியண்ணர் நோய்கொடுமை தாங்காமல் துன்படுவதை நீக்க வழி தெரியாமல் மருத்துவரை தேட அப்போது தம்பிரான் சுவாமிகள் என அழைக்கப்படும் செல்வக்குமார சாமிகள் துக்காச்சி ஊரில் விஷக்கடிக்கு வைத்தியம் பார்த்து குணப்படுத்துவார் எனச்சொல்ல , படை வீ ரர்களும் நோயால் துன்பப்படும் தம்பிரான் சுவாமிகளிடம் அழைத்துச்சென்றனர்.

சுவாமிகளை கண்ட குப்பண்ணக்கோ அவரை நெடுசாண் கிடையாக விழுந்து வணங்க அவரை தம்பிரான் சுவாமிகள் தம் திருக்கரங்களால் எழச்செய்து அவர் நோயை தொட்டார். அவர் தொடவிக் கொடுத்தவுடன் குப்பண்ணர் உடல் குணமானது. அவர் அருட்பார்வையால் குணமான குப்பண்ணர் செல்வக்குமரன் என்கிற தம்பிரான் சுவாமிகளிடம் தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டினார்.

அதன் படியே சிஷ்யனாக குப்பணசாமியை ஏற்றுக்கொண்டார். குருவும் சிஷ்யனும் சேர்ந்து கிணறு வெட்டினர். இது தற்போதும் திருக்கோவிலில் உள்ளது. சர்வரோக நிவாரண தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.


குப்பண்ணர் தன் குருநாதரின் கட்டளைப்படி கொல்லிமலை.குடமலை. சிவமலை,சென்னிமலை, வெள்ளிமலை, ஆகிய மலைகளுக்கு சென்று அமிர்தகரணி, சந்தானகரணி,சங்கரகரணி, வெண்சாரை, கருநொச்சி, ஆகிய மூலிகைகளை கொண்டு தம்மிடத்தில் பயிராக்கினார்.

இச்சூழ்நிலையில் தம்பிரான்சுவாமிகள் வயதாகிவிட தன் சிஷ்யர் குப்பண்ண சாமியை அழைத்து "தம்மால் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ செல்வமுத்து குமாரசுவாமிக்கும் சுயம்பு மூர்த்திக்கும் பங்கம் ஏற்படாத வகையில் பாதுகாப்புடனிருந்து வருக"! என கட்டளை இட்டு இறையடி சேர்ந்தார்.

அதன்படியே கோவிலை பாதுகாத்த குப்பண்ணர் தான் வயதாகி இறையடி சேரும் முன் ஊர்மக்களை அழைத்து " எம் குருநாதரையும் எம்மையும் தூய அன்புடன் நினைத்து இத்தீர்த்தத்தில் நீராடி இத்தீர்த்தத்தை உட்கொண்டும் வருவோர் கொடிய ரோகங்களிலும்,விஷக்கொடுமைகளிலிருந்தும் நீங்கி நலம் பெறுவார்கள் என்று கூறி இயற்கை எய்தினார்.

செல்வக் குமாரத் தம்பிரான் சாமிகள் உடல் அடக்கம் செய்த கால மாறுதல்களால் தற்போது அழிந்து விட்டன. தற்காலத்தில் குப்பண்ணசாமி இளம்பிள்ளை ஜமீன் கனவில் தோன்றி "நான் காவிரி ஆற்றில் வருவேன் என்னை எடுத்து வைத்திரு "என கட்டளை இட்டார். அடுத்த நாள் காவிரியில் நீராடும்போது வேங்கை கட்டையொன்று மிதந்து அவர் பக்கத்தில் வர அவர் அதனை விலக்கினார்.பலமுறை அக்கட்டை பக்கத்தில் வரவும் விலக்கவும் இருந்தார்.

அப்போது வீரன் போல் கையில் தண்டு ஓச்சி நின்ற நாம் காவிரியாற்றில் வருவோம் எடுத்து வைத்திரு என்ற கனவு நினைவில் வர அக்கட்டயை எடுத்துச்சென்று தூய்மையான இடத்தில் வைத்தனர். அந்த வேங்கை மரம் இரவு நேரங்களில் பல அற்புதம் நிகழ்த்தியது, அந்த ஜமின் கலங்கிப்போய் நிற்க கனவு நிலையில் வீரனாக காட்சியளித்த குப்பண்ணர் அன்பனே! செல்வமுத்துக் குமாரசாமி தம் கோவில் இருக்குமிடம் தெரிவித்தார்.

ஜமீன் தாரும் இறைவன் குப்பண்ணர் கட்டளைப்படி வேங்கை கட்டையில் குப்பண்ணசாமியின் திருவுருவம் அமைத்து எடுத்து வந்து பீடத்தில் நிறுத்தினார. அஷ்ட பந்தன விழா அமைத்த நேரத்தில் நாகப்பாம்பு அங்கு வந்து வேங்கை திருவுருவில் இருந்த குப்பண்ணரின் பீடத்தில் மூன்று முறை சுற்றி படுத்துக்கொண்டது. அதனை விரட்டியும் போகவில்லை.

தைரியத்துடன் ஆன்மீக அன்பர்கள் அதை தொட்டுப்பார்க்க அது அஷ்டபந்தன மருந்து போல் இருக்கமாயிருக்க கண்டு,நாக பந்தனமாக அதிசயம் கொண்டு திருவருள் நிலையை எண்ணி வியந்தனர்.அன்று முதல் இன்று வரை குப்பண்ணசாமி காக்கும் கடவுளின் திர உருவமாக காட்சி அளித்து அருள் செய்பவர் அவரே.

ஸ்ரீ செல்வக் குமாரத்தம்பிரான் சுவாமிகள் ஆத்மார்த்மாக வழிபட்டு வந்த மூர்த்தியே தற்பொழுது ஸ்ரீ செல்வக்குமார் சுவாமி என்னும் திரு நாமமுடன் விளங்கி வருகிறார். இளம்பிள்ளை ஜமீன்தாரால் அமைக்கப்பட்ட தாருபிம்பமே ஸ்ரீகுப்பண்ணசாமியாக விளங்கி மக்களின் தீராத பிணிகளை தீர்த்து அருள் புரிந்து வருகிறார்.

முனிவரான செல்வக்குமாரத் தம்பிரான் சுவாமிகளால் மூர்த்தி கீர்த்தி உடையதாக அமைத்துள்ளது. குப்பண்ணரும் தம்பிரானும் சேர்ந்து தொட்டபெருமையால் அமைந்த "சர்வரோக நிவாரண தீர்த்தக் கூவல்" தீர்த்தப்பெருமை கொண்டதாக அமைந்துள்ளது. மக்கள் எல்லாக்காலங்களிலும் வந்து வழிபட்டு செல்வதால் தலப்பெருமை கொண்டுள்ளது.

ஆகவே ஸ்தலம் மூர்த்தி ,தலம், தீர்த்தம் என்னும்படுயான உயர்ந்த ஸ்தலமாகும்.இத்தலத்தை வந்து வழிபட்டுச் செல்வோர் இகபர சாதனங்களை அடைந்து இன்புற்றி நோய் நீக்கம் பெற்று இன்புற்று வாழ்கின்றனர்.

ஸ்தலம் இருக்குமிடம் :

ஈரோடுமாவட்டம் 60வேலம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது. ஈரோட்டிலிருந்து 10,29 நெ பஸ் கோவிலுக்கு வந்தடைகிறது.

கோவிலில் உள்ள மூர்த்திகள்:

ஸ்ரீ செல்வக்குமாரசாமி, ஸ்ரீவள்ளி,தெய்வானை, ஸ்ரீ குப்பண்ணசாமி, ஸ்ரீகருப்பராயர் ஸ்ரீ செல்வக்குமாரசாமித் தம்பிரான் கண்ட
சுயம்பு மூர்த்தி தீர்த்தம் :
கோவில் அக்னி பாகத்தில் உள்ள சர்வரோக நிவாரண தீர்த்தம்

திருவிழா :

ஆண்டு தோறும் மார்கழிப்பெளர்ணமி உள்ளிட்ட பத்து நாட்கள் திருவிழா நடைபெறும்.

வாரபூஜை:

ஞாயிறு தோறும். வந்து தரிசனம் செய்து இறையருள் பெருக. நன்றி

அருள்மிகு குப்பியண்ணசாமி கோவில் ஸ்தல வரலாறு ,துக்காச்சி,அறச்சலூர். ஈரோடு மாவட்டம் ARULMIGU KUPPIYANNA SAMY TEMPLE HISTORY,TUKKATSI, ARASALUR ,ERODE DISTRICT.


குப்பியண்ணசாமி செல்வக்குமார சாமி தோன்றிய வரலாறு:



சுமார் 400ஆண்டுகளுக்கு முன்பு பூந்துறை நாட்டில் மேல் கரைப்பிரிவைச் சார்ந்த சென்னிமலை முருகனுக்கு தேரோட்டும் காணியாளர் நால்வரில் ஒருவரான எழுமாத்தூர் வோளாண் குடிமக்கள் வாழ்ந்து வருகின்ற பகுதியில் வேளாண் குடும்பத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லாமல் மனம் வருந்தி சென்னிமலை, நாகமலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை வேண்டி விரதமிருக்கையில் அம்முருகப்பெருமான் ஒர் குழந்தை வரத்தை கொடுக்க அக்குடும்பம் அக்குழந்தையை "செல்வக்குமரன்" எனப் பெயரிட்டு திருமுருகன் பெயராலேயே அழைக்பட்டது.


அக்குழந்தையை செல்வக்குமரன் குருகுலத்தில் பயிற்றுவித்து அசுவசாஷ்திரங்களும் மூலிகைகளால் நோய் தீர்க்கும் மருத்துவ முறைகளையும் கற்றுணர்ந்தார். திருமண வயது அடைந்த செல்வக்குமாரசாமிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முயற்சிக்க அதற்கு செல்வக்குமரனோ "என்னைப் பெற்றோர்களே , என்னுடம்பு எடுத்ததின் பயனே பாசங்களை விட்டொழித்து இறைவனை அடைவதற்கே ஆகும் ."


எனச்சொல்லி மக்களுக்கு தொண்டு செய்யவும் மகேஸ்வரனுக்கு (இறைவன்)தொண்டு செய்யவும் விரும்பி முருகர் இருக்கும் குன்றுகளான சிரகிரி (சென்னிமலை) நாகமலை ,கனகாசலக்குன்றுகளில் தங்கி தவம் செய்தார். தற்போது கோவில் இருக்கும் இடமான துக்காச்சி என்னும் இடத்தில் வந்தவுடன் இவ்வூரில் பல தொன்மையான மரங்கள் இருக்குமிடத்தை பார்த்தவுடன் ஓர் நுட்பமான மன மாற்றம் மனதில் ஏற்பட நாம் இறைவனை அடைய இதுவே சிறந்த இடம் எனக்கருதி குடில் அமைத்து தங்கினார்.

அவ்விடத்தின் அருகில் காராம் பசு ஒன்று தினமும் காலை மாலையில் பால் செரியும் அற்புதம் கண்டு பசு மேய்பன் , அப்பசுவின் சொந்தகாரருடன் அவ்விடம் சுத்தம் செய்ய அங்கே லிங்கம் அற்புதமாய் வீற்றிருப்பதை கண்டு வணங்கினர். செல்வக்குமர சாமி அன்றிலிருந்து அந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வரலானார்.

இவ்விடம் தற்போதும் கோவில் வளாகத்தில் உள்ளது செல்வக் குமாரரிடம் பாம்பு,தேள், செய்யான்,பூரான், போன்றவகளால் கடிபட்டு வைத்தியம் பார்க்க நிறைய மக்கள் வர வேம்பாலும்,திருநீராலும் போக்கி வந்தார்.

அவரை மக்கள் தம்பிரான் செல்வக்குமார பூசாரியார் என அழைக்க அவரோ தம்மை வணங்குவதைக் காட்டிலும் இறைவனை வணங்குவதே சிறப்பு எனச்சொல்லி சுயம்பு மூர்த்திக்கு அருகில் யந்ரஸ்தாபனம் செய்து முத்தலைச் சூலமொன்றை நிறுவினார் அதுவும் தற்போது உள்ளது.

தாம் நிறுவிய மூர்த்திக்கு " செல்வ முத்துக்குமாரசாமி" எனப்பெயரிட்டு தானும் தம்மை நாடி வருபவர்களையும் வழிபடச்செய்தார். மறுபடியும் பெற்றோர்கள் அழைக்க செல்ல மறுத்து காவியுடை தரித்து தம்பிரான் சுவாமிகள் சிவனடியார் கோலத்தில் துறவியாக வாழ்ந்தார் பெற்றோர்கள் இறந்த பின் பல்லாண்டுகள் கழிந்தன , அவரால் நிறுவப்பட்ட ஆலயம் தான் இன்றும் தம்பிரான் கோவில், செல்வக்குமாரர் கோவில்,வினை தீர்த்தான் மடம் என பலவாறு அழைக்கப்படுகிறது.

இவவிடுகையின் தொடர்ச்சி "குப்பண்ணசாமி வருகை " எனும் இடுகையில் காணவும்.

ஆன்மீகத்தை அறிய வந்த உங்களுக்கு எம் சிவனருள் பெறுக. நன்றி.

Thursday, December 23, 2010

அருள்மிகு மலைமாதேஸ்வர மலையின் சிறப்புகள்


"கன்னட நாட்டின் காவிரிக் கரையின், பொன்னாச்சி மலைச்சாரலிலே, உயர்ந்ததாய நடுமலை யொன்றதை யென்னென நான் சொல்வேன் "..... குரு சித்த கவி .
நூல் "மாதேஸ்வர சாங்கத்யம்" (கி.பி 1750).....


அருள்மிகு மாதேஸ்வரர்(MATHESWARAR) பற்றி பல சிவனடியார்களும், சித்தர் களும் பாடியிருக்க அவர்களில் ஒருவர் தான் குரு சித்தகவி இவர் மாதேஸ்வர மலைய(MATHESWARAN MALAI) வியந்து பாடியவர்.

மேலும் மாதேஸ்வர மலையின்(matheswaran malai hills) புகழை " காசி(kasi) கேதாரம்(KOTHARAM) ஸ்ரீசைலம்(SRI SAILAM) ராமேஸ்வரம்(RAMEASWARAM) வி ஷேச குடும்ப தீர்த்தமதில் , ஆயிரமுறை மூழ்குவதினும் பலவி , சேடமிதனைக் கேட்பவருக்கு" இதன் பொருள்: காசி.கேதாரம்,ஸ்ரீசைலம்.ராமேஸ்வரம் முதலிய இடங்களின் தீர்த்தங்களில் ஆயிரம்முறை ஸ்நானம் செய்த பலன் இதனைக்கேட்கும் பக்தர்களுக்கு கிட்டும் என்பதாகும்.


மாதேஸ்வர சுவாமி கோவில் பிரசாதங்கள் உங்களுக்கு வேண்டுமா?

நிர்வாக அதிகாரி, ஸ்ரீமலை மாதேஸ்வரசுவாமி தேவஸ்தானம்,மாதேஸ்வரன் மலை- 571490 கொள்ளேகாலம் தாலுக்கா முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள். நன்றி . உபசெய்தி: இக்கோவில் பற்றி மட்டும் அதிக இடுகைகள் எழுதக் காரணம் இக் கோவில் வேண்டுதலால் நான் பிறந்ததாக எனது தந்தையார் கூறுவார் .எனது பெயரையும் சுவாமியின் பெயரே வைத்து விட்டதால் ஒர் ஈர்ப்பு .

எம் கருத்துகள்: மேலான சிவத்தலங்களுள் இதுவும் ஒன்று. நமக்கருகில் இருக்கும் ஓர் அற்புத பார்க்க வேண்டிய ஸ்தலம். இறைவழிபாடும் இயற்கையும்,அமைதியும் ஒருங்கே அமைந்துள்ள நம் வாழ் நாளில் பார்க்க வேண்டிய ஸ்தலம். கண்டிப்பாக பக்தியுடன் வாருங்கள்.

ஸ்ரீமாதேஸ்வரர் அருள் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்தும் .

அடியேன் குரு.பழ.மாதேசு .
உங்கள் கருத்துரகள் எதிர்பார்க்கும் ஆருயிர் நட்பு.

சிவ சிவ

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை







நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனது பிறந்த நாளை கொண்டாட எங்கே செல்லலாம் என யோசித்த போது ஏற்கனவே பல முறை சென்றிருந்த்தாலும் நினைத்தாலே உற்சாகம் தரும் மாதேஸ்வர மலை (matheswaran temple) சென்று வரலாம் என முடிவு செய்து இருவரும் எங்கள் கிராமத்திலிருந்து பயணித்தால் 70கி.மீட்டர் தொலைவில் இருக்கும் மலை மாதேஸ்வர மலைக்கு (matheswaran hills) கிளம்பினோம்.

25 கி.மீட்டர் பயணித்து கொளத்தூர் வந்தடைந்து பயணத்தை தொடர்ந்தோம். அங்கிருத்து 2வது கி.மீட்டரில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு தான் சின்னத்தண்டா (chinna than;da) எனும் ஊர்க்கு செல்ல பிரிவு உள்ளது. அங்கு நம் வாகனத்திற்கு தேவையான பெட்ரோல் நிரப்பிக் கொண்டு கிளம்பினொம்.

சேலம்(SALEM) மேட்டூர் (METTUR)கொளத்தூர்(KOLATHUR) வழியாக மாதேஸ்வர மலைக்கு வாகனத்தில் வருகிற பக்தர்கள் இவ்விடத்தில் தங்கள் வாகனத்திற்கு தேவையான எரிபொருளை நிரப்பிக் கொள்வது சிறப்பு . அடுத்த 40கி.மீட்டருக்கு அதாவது மாதேஷ்வர மலை வரை பெட்ரோல் பங்க் கிடையாது. அங்கிருத்து கருங்கல்லூர்(KARUNKALLUR) ,வெடிக்காரனூர்,(VEDIKARANUR) காவேரிபுரம் (KAVERI PURAM),என கிராமங்களின் அழகு நம்மை வரவேற்கின்றன.

நாங்கள் செல்கிற இவ்வழி மேட்டூரில் இருந்து மாதேஷ்வர மலை செல்கிற வழிதான் என்பதை அறியவும். நாம் செல்கிற வலது புறம் காவிரியின் தொடர்ச்சியாக சென்று மேட்டூர் அணைக்கு செல்கிறது.காவேரிபுரம் தாண்டிச்சென்றால் வலதுபுறம் கோட்டையூர் (KOTTAYUR)பரிசல் துறை 5கி.மீட்டர் சென்றால் காவிரியில் பரிசலில் பயணம் செய்து வரலாம். செல்லும் வழிகள் எல்லாம் வாழைத்தோட்டங்களும் மிளகாய் தோட்டங்களும் நம்மை கடந்து செல்ல கொளத்தூர் மிளகாய்க்கு பெயர் பெற்றது.

அடுத்ததாக நாம் வந்தடந்தது கோவிந்தப்பாடி மேட்டூரில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் இங்கு சற்றே 5 நிமிடமாவது இளைப்பாறி செல்வது வழக்கம். நாமும் சற்றே இளைப்பாறியவாறு நம் பயணத்திற்கு தேவையான முருக்கு .பண்,(குரங்களுக்கு உணவாக கொடுக்க ) குடிநீர் ஆகியவை வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனப்பயணத்தை தொடர்ந்தோம். அடுத்து நாம் மலைப்பாதையில் பயணிக்க வேண்டியதாகிவிட்டது.

இடையில் காவிரியின் சிற்றோடகள்கள் அழகாய் குறுக்கிட பயணித்தால் சில கி.மீட்டர் தூரத்தில் பாலாறு சோதனைச்சாவடி வருகிறது.அங்கு புகைப்படம் எடுக்கும் அளவு காவிரியின் குறுக்கே பெரிய பாலமும் அழகிய பாலாறு நம்ம வியக்கவைக்கிறது. இவ்விடத்தில் இருந்து கர்நாடக எல்லைப்பகுதிக்கு நாம் வந்து விடுவதால் சோதனை சாவடியில் நம் வாகனத்தை தணிக்கை செய்து அனுப்புகிறார்கள் .


அடுத்து எங்கள் பயணம் தொடர்ந்தது . சற்று தூரத்திலியே வலது புரம் ஒகேனக்கல் 29 கி.மி,ஆலம்பாடி 34 கி.மீ கோபிநத்தம் 16 கி.மீட்டர் என பிரிகிறது. இவ்வழியே ஒகேனக்கல் செல்லலாம். ஆனால் முக்கிய நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடியாது என அங்கிருந்த பெரியவர் சொல்ல நேராக நம் பயணித்தை தொடர்ந்தோம்.

ஆங்காங்கே இலந்தை மரங்கள் ,குரங்கள் பசியால் ரோட்டின் ஒரங்களில் மக்கள் வரவுக்காக நாங்கள் வாங்கிச் சென்ற பண், பொரிகளை உணவாக கொடுத்து விட்டு கிளம்பினோம். அடர்ந்த மலைப்பகுதியில் ஆட்கள் நடமாட்டமில்லாத அமைதி 18 குறுகிய கொண்டை ஊசி வளைவுகள் தாண்டி செல்ல வேண்டி இருப்பதால் கார். இரு சக்கர வாகனத்தில் கவனமாக செல்வது சிறப்பு.

அங்காங்கே மலைப் பசுக்கள் ,குரங்குகள் இவைகளை தான் காண முடிந்தது. வெயில் காலங்களில் யானைகள்,மான்களை பார்க்கலாம். கடைசியாக நாம் மலை உச்சிக்கு சென்றது போல் ஒரு பிரமிப்பு. அதே அளவில் பக்கத்தில் அழகான மலைகள்,அதன் மேல் மலைவாழ் மக்களின் குடியிருப்பு என தொடர்ந்த நம்பயணத்தை மற்றொரு சோதனைச்சாவடியில் நிறுத்தி வாகனத்திற்கேற்றவாறு வாகனக்கட்டணம் செலுத்தி அனுப்ப நாம் வந்தைடைந்தது மலை மாதேஸ்வர மலையின் முகப்பை அடைந்தோம்.

அட! இங்கு இருந்து பார்த்தால் சுற்றிலும் அழகான மலை நடுவில் மாதேஸ்வரர் திருக்கோவில் பிரமாண்டமாக அமைந்து நம்மை ஆச்சரியப்பட வைத்தது.

கோவில் முன்பாக நெய் தீபம் என குச்சியால் சுற்றி வித்தியாசமாய் விற்கிறார்கள். பூக்கள் சிறுமிகள் ஒடி வந்து விற்கிறார்கள். விலை குறைவே. சற்றே நடந்தால் நம் காலணிகளை பாதுகாக்க விட்டு திருக்கோவில் புத்தக நிலையம், குழந்தை வரம் வேண்டி தொட்டிகள், ஆகியவற்றை ரசித்து போனால் சிவப்பு கலர் உடையணிந்து நம்மூரில் மயிலிரகால் ஆசிர்வாதம் கொடுத்து காசு கேட்கிறார்களே அதைப்போல ஆசிர்வதிக்கிறார். விருப்பமிருந்தால் காசு கொடுக்கலாம்.

சற்று தூரத்தில் அங்கப்பிரதட்சனம் செய்து கடவுளை வழிபடுகிறார்கள். சற்று தூரத்தில் ஸ்ரீ மகா கணபதி சன்னதியை வணங்கி விட்டு அருகில் வாழைப்பழங்கள்,தேங்காய்,பூக்கள் அபிஷேகப்பொருட்கள் கடைகளில் வாங்கி கொண்டு மிகப் பெரிதான கோமாதாவை (நந்தி) வணங்க படிக்கட்டில் ஏறி தரிசனம் செய்து விட்டு கோமாதவிற்க்கு நேர்த்திக் கடனாய் நெய்,பால்., தானியங்கள் கொண்டு வந்து தந்து பூஜிக்கிறார்கள். இந்த நந்தியை சுற்றிலும் பணம்,காசுகளை ஒட்டி அழகு பார்க்கின்றனர்.

கோமாதாவின் தரிசனம் முடித்து கோவிலுக்குள் கிளம்பினோம்.உள்ளே கோவில் அறங்காவலர் குழுவால் பக்தர்கள் பாதுகாப்பாகவும் வரிசையாகவும் செல்ல கம்பித்தடுப்புகள் அமைத்து அருமையாக செய்திருக்கிறார்கள்.தேங்காய், பழங்கள் மாற்றி உள்ளே சென்றால் மலை மாதேஸ்வரர் தரிசனம் நிம்மதி தரிசனம் கிடைக்கிறது. சிவ தரிசனம் செய்ய வில்வம் கொண்டு செல்வது சிறப்பு. கூட்டமில்லாத நாட்களில் சென்றால் நன்றாக தரிசனம் செய்து வரலாம். திருநீரும் வில்வமும் மாதேஸ்வரர் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

முதல் கால பூஜை காலை 6.00 மணிமுதல் 8.00 மணிவரை இரண்டாம் கால பூஜை காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை, மூன்றாம் கால பூஜை மாலை 6.45 மணி முதல் இரவு 8.30 மணி வரை. ஆயினும் பக்தர்களின் தரிசனத்திற்காக கோவில் காலை 5.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

மேட்டூர் வழியாக வரும் பக்தர்கள் இரவு நேரத்தில் பயணம் வன விலங்குகளால் ஆபத்து என அறிக. இரவு கோவில் தங்க தங்குமிட ஏற்பாடுகள் ,மற்றும் லாட்ஜ் வசதிகள் உள்ளன. இங்கே மதிய உணவு பக்தர்களுக்காக விஷேசமாக தயாரிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.

அருள் மிகு மாதேஸ்வரர் தரிசனம் செய்து விட்டு எழுதுங்கள் .
நன்றி

Tuesday, December 21, 2010

ஆலய தரிசனம்: ஸ்ரீ மலை மாதேஸ்வர ஸ்வாமி திருக்கோவில் (sri malai matheswara swamy temple)



திருக்கோவில் பெயர்:

ஸ்ரீ மலை மாதேஸ்வர ஸ்வாமி திருக்கோவில்,


மாதேஸ்வர மலை, கொள்ளேகால் வட்டம், சாம்ராஜ் நகர் மாவட்டம், கர்நாடக மாநிலம்.


sri malai matheswara swamy temple,matheswara malai. kolleagal taluk,samraj nagar district, karnataka state.

எப்படி செல்வது:

சேலத்திலிருந்து 100 கி.மீ தொலைவிலும் மேட்டூரில் இருந்து 50கி.மீ தொலைவிலும் ,கர்நாடக மாநிலத்தின் தெற்கே உள்ள கிழக்கு தொடர்ச்சி மலைகளின் நடுவே கொள்ளேகாலத்திலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் இயற்கை எழில் பொங்கும் நடு மலையில் மாதேஷ்வரமலை உள்ளது.

இறைவன் (மூலவர் ):
மாதேஸ்வரர் சிவயோக சமாதியாக வீற்றிருந்த ஸ்தலமாகவும் ,அருள்மிகு மாதேஸ்வரர் சிவயோக சமாதி நிலையில் இருந்து மக்களுக்கு அருள் புரிவதாக ஐதீகம்.

விசேஷ நாட்கள் :

மஹா சிவராத்திரி,தீபாவளி, யுகாதி,கார்த்திகை சோம வாரங்கள்,அம்மாவசை,பௌர்ணமி, பிரதோஷம், மற்ற எல்லா விஷேச நாட்களும்,

இங்கு வழிபடவேண்டிய ஆலயங்கள்:

மஹா கணபதி ஆலயம், .ஸ்ரீ வீரபக்ரேஷ்வர் சன்னதி, மாதேஷ்வர் மூலஸ்தானம், நந்தீஷ்வரர் கோமாதவாக பெரியசிலை,

பார்க்க வேண்டிய ரதங்கள்:

தங்க ரதம்,ருதராக்ஷி மண்டப ரதம்,வெள்ளிப்புலி வாகனம்,வெள்ளிப்பசு வாகனம், வாகன உற்சவம் செய்ய விரும்பும் பக்கதர்களுக்கு 100 ரூபாய் மட்டும் டிக்கட்டாக செலுத்தி ஏதேனும் வாகனத்தை வடம் பிடிக்கலாம்.

அன்னதானம் :

மதிய உணவாக திருக்கோவில் நிர்வாகத்தால் சிறப்பாக உணவு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

கார் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கவனிக்க வேண்டியவை :

பாலாறில் இருந்து 18 கி.மீ பயணிப்பது கவனம் தேவை. மிக குறுகிய வளைவு. அடர்ந்த காட்டிப்பகுதி மெதுவாக செல்வது நல்லது.

மாதேஷ்வர மலைக்கு செல்வதால் நமக்கு கிடைப்பது :

1. சிவாலய தரிசனம் 2. காவிரியின் பாலற்று அழகு, 3. இயற்கை அழகு 4. உயர்ந்த மலைகள் 5. மன அமைதி.

பஸ் வசதி :

சேலத்தில் இருந்து தமிழக அரசு பஸ்களும், மேட்டூரில் இருந்து கர்நாடக மற்றும் தமிழக அரசு பஸ்கள் உள்ளன. தங்குமிடம் வசதிகள் உண்டு. ஒரு முறை சென்று தரிசித்து விட்டு எழுதுங்கள்.


மேலும் விபரங்களை பயணக்கட்டுரையில் நான் பார்த்த இடங்கள் ரசித்தவைகள் மற்றும் படங்கள் இடம்பெறும். நன்றி

Wednesday, December 15, 2010

அன்புள்ள உங்களுக்கு

எனது வலைப்பூவை காண வந்த உங்களுக்கு வணக்கம்.எனது கவிதைகள் தலைப்பில் உள்ள படைப்புகள் அனைத்தும் 2000 முதல் 2002 வரை எனது படைப்பாக.,துணுக்காக வெளிவந்து பரிசு சில பத்திரிக்கைகள் வார இதழ்களில் பரிசு பெற்றவை.ஆகவே இவைகளை மறுபதிப்பு செய்து வெளியிட்ட வேண்டாமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வழைப்பூ உங்கள் அன்றாட விரைவு வண்டியாய் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வில் இருந்து சற்றே விலக்கி சின்ன சின்ன சந்தோஷங்களையும் ,ஆன்மீகத்தளங்களை பற்றி அறியவும் உதவினால் மிகவும் மகிழ்வுறுவேன். தங்கள் மேலான கருத்துரைகளை எனக்கு அனுப்புங்கள். நன்றி

Monday, December 6, 2010

உங்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையவேண்டுமா?


மனித வாழ்வில் எவ்வளவு நாள் சந்தோஷமாக போகின்றது ?
எவ்வளவு நாள் மன வருத்ததுடன் உள்ளோம்
என பார்த்தால் பல நாட்கள் கஷ்டமாகவும்;
சில நாட்கள் மட்டும் சந்தோஷமாக போகின்றது.
அப்போது ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக செல்ல
என்ன வழி என தேடிய போது அருணகிரி நாதர் இயற்றிய


" நாள்என் செய்யும் வினைதான் என்செயும்
எனை நாடி வந்த கோள் என்செயும் கொடுங்கூற்று என்செயும்,
குமரேசர் இருதாளும் சிலம்பும்
சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும்
கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே."

என்கிற இப்பாடல் முருகப்பெருமான், முருகன்,சுப்பிரமணியர்,மயில் வாகனன், ஆறுமுகத்தோன் ,வள்ளிமணாளன் என்றெல்லாம் அழைக்கப்படுகின்
இறைவன் முருகருக்காக அருணகிரி நாதர் இயற்றிய இப் பதிகத்தை நாள் உடற்சுத்தம் செய்து ஒரு நினைப்போடு முருகப்பொருமானை நினைத்து
இப்பாடலை பாட , ( நம்பிக்கையடன் படிக்க )
உங்களின் இன்றைய நாள் நல்ல நாளாகவும் மகிழ்ச்கியாகவும்
துன்பம் இல்லாமலும் செல்வது கண்கூடு .இப்பாடலை பாராயணம் செய்த உங்களுக்கு
எல்லாம் வல்ல திருமுருகப்பெருமான் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.
உங்கள் அனுபவங்களை எனக்கு எழுதுங்கள், நன்றி.

Wednesday, December 1, 2010

திருவண்ணாமலையில் அஷ்டலிங்க தரிசனமும் ஜோதிடதில் நம் ராசிக்கு வழிபடவேண்டிய லிங்கங்கள்


திருவண்ணாமலை கிரி வலத்தில் காணப்படும் அஷ்டலிங்கங்களை தரிசித்தால் ஏற்படும் நன்மைகள் :

1 இந்திரலிங்கம் :


 (கிழக்கு) திருவண்ணாமலை ராஜகோபுரத்திலிருந்து கிழக்கே கிரிவலம் செல்லும்பாதையில் அமைந்த முதல் லிங்கம் கிழக்குத்திசையில் அமைந்த லிங்கம் .
 கிரக அதிபதி :
சூரியன் ,சுக்கிரன் வழிபாட்டின் பலன் : லட்சுமிகடாட்சம் நீண்ட ஆயுள் ,புகழ் ,செல்வம் கிட்டுமென்பது இறைஐதீகம்

 2 அக்னி லிங்கம் : 


(தென்கிழக்கு )கிரிவலப்பாதையில் செங்கம் ரோட்டில் தாமரை குளத்திற்கு அருகேயுள்ளது. கிரிவலப்பாதையின் வலப்பக்கத்தில் அமைந்த சிறப்பு பெற்ற லிங்கம் தென்கிழக்கு திசை கிரக அதிபதி :சந்திரன் வழிபாட்டு பலன் :நோய் ,பிணி,பயம் ,எதிரிகள் ஆகிய தொல்லைகள் விலகும்.

 3. எமலிங்கம் (தெற்கு )


 ராஜகோபுரத்தில் இருந்து சுற்றி வருகையில் தரிசிக்கும் 3 வது லிங்கமாகும் . சிம்ம தீர்த்தம் அருகே அமைந்துள்ளது. கிரக அதிபதி :செவ்வாய் பலன் : ரத்த சம்பந்த நோய்கள் தீரும் ,இடம் பூமிப்பிரச்சினைகள் தீரும் .பொருளாதார உயர்வு ஏற்படும் .

4 நிருதிலிங்கம் (தென்மேற்கு) : 


இவ்கு வழிபட்டு மலையை பார்த்தால் நந்தீஷ்வரர் தலையை உயர்த்தி பார்ப்பது போல தெரியும்.சனி தீர்த்தம் அருகேயுள்ளது . திசை அதிபதி: ராகு.வழிபாட்டுப்பலன் :
சுக வாழ்வு ,குழந்தைப்பேறு

 5.வருணலிங்கம் (மேற்கு )


 வருணதீர்த்தம் அருகே அமைந்துள்ளது. 8வது கிலோமீட்டரில் அமைந்த லிங்கம் மேற்கு திசாஅதிபதி :சனி வழிபாட்டு பலன் : நீண்ட ஆயுள் ,புகழ் 6. வாயுலிங்கம் (வடமேற்கு ) திசா அதிபதி :கேது வழிபாட்டுபலன் : பொறுமை ,அமைதி,

7 குபேரலிங்கம் (வடக்கு): 


திசா அதிபதி :குரு பலன் :தரித்திரம் நீங்கி பொருளாதாரம் உயரும்

8.ஈசான்ய லிங்கம் (வடகிழக்கு ) : 


எல்லா நிலைகளும் கடந்து ஈசனை தேடுமிடம் திசா அதிபதி :புதன் இறை நிலை அடைய வழிகாட்டுமிடம் எட்டு லிங்கமும் முக்கிய மானவையே . ஏதேனும் பெளர்ணமி இரவில் தரிசனம் செய்து விட்டு எழுதுங்கள்
கீழ் கண்ட ராசிகாரகள் வழிபடுவதன் மூலம் மேன்மை பெறலாம்


மேசம் - நிருதிலிங்கம்

ரிஷபம் -இந்திர லிங்கம்

மிதுனம்-ஈசான்ய லிங்கம்

கடகம் - வாயு லிங்கம்

சிம்மம் -அக்கினி லிங்கம்

கன்னி- ஈசான்ய லிங்கம்

துலாம் -இந்திர லிங்கம்

விருச்சிகம்-எமலிங்கம்

தனுசு -குபேர லிங்கம்

மகரம் -வருண லிங்கம்

கும்பம்-வருண லிங்கம்

மீனம் -குபேர லிங்கம்

Tuesday, November 30, 2010

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தரிசிக்க வேண்டிய இடங்களும்,காணப்படும் மடங்களும்


திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் காணப்படும் கோவில்கள் மடங்கள் :

1. இந்திர நந்தீஷ்வரர்
2 இந்திர லிங்கம் (முதல் லிங்கம்)
3.விநாயகர் சன்னதி
4.அக்னிலிங்க தீர்த்தம்
5.அக்னி லிங்கம் (2வது லிங்கம்)
6.சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம்
7.காளி அம்மன் கோவில்
8.தட்சிணாமூர்த்தி சன்னதி
9.ரமணர் ஆசிரமம்
10.யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம்
11.ஆதிபராசக்தி சித்தர் பீடம்
12. ஆறுமுகசாமி ஆலயம்
13.சிம்ம தீர்த்தம்
14.எமலிங்கம்(3வது லிங்கம்)
15.ஜய்வனேஸ்வரர் ஆலயம்
16.ஜோதி விநாயகர் ஆலயம்
17.சோனா நதி
18.மகாசக்தி மாரியம்மன் கோவில்
19.காளிங்க நந்தன கோபலசாமி
20. நிருதிலிங்கம் (4வது லிங்கம்)
21.நவலிங்கம் நவசக்தி
22.திரு நேர் அண்ணாமலையார் சன்னதி
23.வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்
24.ராகவேந்திரா பிருந்தாவனம்
25.பழனி ஆண்டவர் கோவில்
26. இராஜேஸ்வரி திருக்கோவில்
27.சூர்ய லிங்கம்
28.சூர்ய லிங்கம்
29.முக்தி முரளி கிருஷ்ணா
30.சுவாமி சிவானத்தா சேவா சங்கம்
31.உதவும் கரங்கள்
32.வருணலிங்கம் (5வது லிங்கம்)
இவரை தரிசிப்பதால் ஜலதோஷம், சிறுநீர் சக்கரை வியாதிகள் தீரும் என்பது உப செய்தி 33.ஆதி அருணாசலேஸ்வரர் கோவில்
34. மாணிக்க வாசகர் கோவில் (திருவெம்பாவை அருள் செய்த இடம் )
35.ரேணுகை மாரியம்மன் கோவில்
36.சுத்தானந்த ஆசிரமம்
37.சாய்பாபாயி இல்லம்
38.வாயுலிங்கம் (6வது லிங்கம்)
39.நமசிவாய ஆசிரமம்
40.சந்திரலிங்கம்
41.லோபா மாதா அகஸ்தியர் ஆசிரமம்
42.குபேர லிங்கம் (7வது லிங்கம்)
43.இடுக்கு பிள்ளையார் கோவில்
44. மகாலட்சுமி துர்காதேவி ஆலயம்
45.ஈசான்ய லிங்கம் ( 8வது லிங்கம்)
46. ஈசான்ய ஞான தேசிகர் ஜீவ சமாதி
47.அம்மை அப்பன் கோவில்
48. சுப்பிரமணிய சாமி திருக்கோவில்
49.துர்க்கை அம்மன் ஆலயம்
50.பெரிய ஆஞ்சனேயர் கோவில்
51.பவழக்குன்று
52.பூத நாரயணப்பெருமாள் திருக்கோவில்.

பின்குறிப்பு:

இவை நான் கிரிவலப் பாதையில் வரிசையாக பார்த்த இடங்கள்
ஆங்காங்கே சில இடங்கள் விடுபட்டிருக்கலாம்.
அடுத்த முறை கிரிவலம் செல்லும்போது திருத்தப்படும்.

நீங்களும் கிரிவலப்பாதயில் வலம் வந்து மேற்கண்ட
ஆலயங்களை தரிசித்து இறையருள் பெற வாழ்த்துக்கள்.

Thursday, November 25, 2010

திருவண்ணாமலையில் பார்க்க வேண்டிய கோவில்; பவழக்குன்று (pavala kundru)



நமக்கு எங்கு சென்றாலும் புதிதாய் ஒர் இடத்தை கண்டு பிடித்து தரிசனம் செய்வதில் தனி ஒர் ஆர்வம்.

அப்படி திருவண்ணாமலையில் அண்ணாமலையார் உண்ணாமலையாரை தரிசித்து விட்டு தேடுகையில் தான் பவழக்குன்று பற்றி ஒர் பெட்டிக்கடை நன்பர் சொல்ல அக்கோவில் எங்குள்ளது என விசாரிக்க அக்கோவில் கிரிவலப்பாதயில் கடைசி லிங்கமான ஈசான்ய லிங்கத்தை தரிசித்து விட்டு வரும் வழியில் சின்னக்கடை தெருவில் விசாரிக்க ஒரு சிறிய வீதியின் வழியே செல்ல பவழக்குன்று உள்ளது

. சுமார் 200 படிக்கட்டுகள் ஏறினால் அங்கே காவல் துறையினர் பயன்படுத்தும் வாக்கி டாக்கி ரிப்பீட்டர் உள்ளது. அதன் அருகே மிக அழகாகவும் ரம்மியமான குட்டிமலை அது. நான் அக்கோவிலை தீபத்திருநாள் அன்று மாலை 4.00 மணிக்கு சென்றடைந்தேன்.

அளவான கூட்டம் . பழங்குன்றின் மேல் இருந்து பார்த்தால் திருவண்ணாமலை கோவில் அமைப்பும் .தீபம் ஏற்றுவதையும் தெளிவாக காண முடிகிறது. சரி இனி இறைவனையும் இறைவியையும் தரிசனம் செய்து வருவோம் என்றெண்ணி கோவிலுக்குள் நுழைந்தோம்.

அங்கே வயதான அர்சகர் ஒருவர் நம்மை வரவேற்றார். அவ்விடத்தை பற்றி அறிந்த கொஞ்சமான பக்தர்கள் விநாயர் சன்னதி. வள்ளி தெய்வானையுடன் உடனமர் முருகப்பெருமான் வெளிப்புற வாசலில் தரிசனம் செய்து நந்தீஷ்வரர் தரிசித்து மூலவர்வர்களாக அருள்பாலிபவர்கள் இறைவன் :


பவழகிரிஷ்வரர் ,அர்த்தநாரீஷ்வரர்

இறைவி: முத்தாம்பிகையையும்

வணங்கி விட்டு சற்றே கோவிலில் இளைப்பாறி இவ்விடத்தின் சிறப்பை அர்ச்கரிடம் கேட்க அவர் கோவிலின் உட்பகுதியில் சிறிய அறை அதில் படுத்தவாறு தான் உள்நுழைய முடியும். அங்கு ரமணர் தியானம் செய்த இடத்தை காட்டினார்.

அட நமக்கு மட்டும் அதிஷ்டம் தான் உள்ளே நுழைந்த நான் அவ்விடத்தை பார்த்த நான் அசந்து தான் போனேன். அழகான அமைதியான இடம் .

எவ்வளவு பெரிய மகான் தியானம் செய்த இடம் நமக்கு பார்க்க வாய்ப்பு கிடைத்து அதில் 5 நிமிடம் உட்கார்ந்து வர வாய்ப்பு கிடைத்தில் பெருமிதம் அடைந்து அர்ச்சகருக்கு நன்றி சொல்லி வெளியில் வந்து திருவண்ணாமலையின் கோபுரங்கள் தரிசித்து விட்டு அக்கோவிலின் பின்புறமுள்ள பெரிய பாறையில் உட்கார்ந்து

மாலை 6.00 மணிக்கு ஏற்றிய தீபத்தை சிவநாமத்தை சொல்லி தரிசித்து விட்டு தெளிவாக தீபத்தை தரிசனம் திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பினேன்.

பவழக்குன்றின் மிக முக்கிய சிறப்பம்சங்கள் :
அன்னை பார்வதி தவம் புரிந்து அருணாசலேஷ்வருடன் ஐக்கியமானதும், கெளமர் பகவான் ரமணர் மற்றும் பல மகரிஷிகளும் வசித்த புனிதமான இடம் இப்பவழக்குன்று. இங்கு தான் ரமண மகரிஷிகள் தனது முதல் உபதேசத்தை அன்னை அழகம்மையாருக்கு இப்பவழக்குன்றில் 1899 ஆம் ஆண்டில் அருளியதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.


அவர் அருளிய குறிப்பு ;

" அவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான், என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது ; 

 நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. 

இதுவே திண்ணம். ஆதலின் மௌனமாய் இருக்கை நன்று..



ரமணாஸிரமத்தின் மூலம் இப்பவழக்குன்று கோவில் 27. 8.2004 ல் கும்பாபிசேகம் செய்யப்பட்டது. அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.


PAVALAKUNDRU ,THIRUVANNAMALAI LORD:
pavalagiriswarar, arthanariswarar MOTHER: muthambikai. MOTHER parvathi did PENANCE in this PAVALAKUNDRU (coral rock ) and was obsorbed in to ARUNACHALALESWARA , gomthama maharshi.bagavan RAMANA and many other also sactified the place.

எமக்கு அறிந்த வகையில் தகவல்களை தேடியும் சேகரித்தும் உங்களுக்கு பவழக்குன்றினை பற்றி அளித்துள்ளேன்.

 ஓர் சிறிய புராணக்கதை :

திருக்கயிலாயத்தில் பார்வதி தேவி ஒருநாள் விளையாட்டாக சிவபெருமானின் கண்களை பொத்திக்கொள்ள உலகம் முழுவதும் இருண்டுபோனது. அதனால் உலகத்தில் உள்ள உயிர்கள் துன்பத்திற்கு உள்ளானது. அந்தப்பாவத்தை போக்கிக்கொள்ள அம்பிகை காஞ்சிபுரம் சென்று சிவபெருமானை நினைத்து தவம் இருந்தார் .அப்போது சிவபெருமான் தோன்றி திருவண்ணாமலை சென்று தவம் செய்யும்படி கூறினார் .

 அதன்படி பார்வதி தேவி திருவண்ணாமலை வந்து "பவழக்குன்று" மலையில் பர்ணசாலை அமைத்து கவுதம முனிவர் உதவியுடன் தவம் இருந்தார் 


.கார்த்திகை பரணி நாளில் பிரதோஷ நேரத்தில் மலைமேல் ஜோதி உருவாக தரிசனம் கண்டுமகிழ்ந்தார்.அப்போதுசிவபெருமான் பார்வதிக்குஇடப்பாகத்தைகொடுத்துஅருளாசி வழங்கினார்.

கோவில்சிறிய அளவுதான்எனினும் மிக்கஅமைதியையும் தெளிவையும்இப்பவழக் குன்று உங்களுக்கு தரும் என்றுநம்பி இப்பயண கட்டுரையை முடிக்கிறேன்.திருவண்ணாமலையில் தரிசிக்க வேண்டிய அற்புத ஸ்தலம் இது.

உங்களுக்கும் சிவனருள் கிட்ட பவழக்குன்றை தரிசித்து விட்டு எழுதுங்கள்.

நன்றி.

Friday, November 19, 2010

திருநீறின் மகிமைகள் THIRUNEERU


திருஞான சம்பந்தர் 2ஆம் திருமுறை

திரு ஆலவாய்

பண்: காந்தாரம்


'மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன் திரு ஆலவாயன் திருநீறே '..


என திருஞான சம்பந்தரால் திருநீறின் பெருமை விளக்கியுள்ளார்.

திருநீறு நெற்றியில் இடும் போது இப்பதிகத்தை பாடுதல் சிறப்பு.

திருக்கோவில்களில் நாம் திருநீறு வாங்கும் போது கவனிக்க வேண்டியது :

1. திருநீறு இடது கையை கீழே வைத்து வலது கையால் வாங்கப்பட வேண்டும்
2.அத் திருநீறு இடது கைக்கு மாற்றக் கூடாது
3.நல்ல சுத்தமான தாளில் மாற்றிக்கொள்ளலாம்
4. திருநீறை கீழே சிந்தக்கூடாது. அப்படி சிதறினால் அவ்விடம் சுத்தம் செய்ய வேண்டும் 5.திருக்கோவிலில் வாங்கிய திருநீறை கொட்டிவிட்டு வரக்கூடாது .

திருநீறு நெற்றியில் இடும்போது கவனிக்க வேண்டியது :

1.கிழக்கு ,வடக்கு திசைகளில் நின்றாவாறே திருநீறு இட வேண்டும்

2.சிவ நாமங்களான "சிவ சிவ" "ஓம் நமச்சிவாய"
"ஒம் சிவாய நமஹ" உச்சரித்தல் நல்லது.
உங்கள் இஷ்ட தெய்வங்களை நினைத்து இடுவதும் நல்லதே.
3. திருநீறு என்றால் ஐஸ்வர்யம் என்பது பொருள் .அப்படியெனில் ஐஸ்வர்யம் நம்முடனிருக்க திருநீறு இடுவோம்..
4.வலது கை சுண்டுவிரல், கட்டை விரல் தவிர்த்து ஏனைய விரல்கள்களால்

திருநீறை நெற்றியின் இடக் கண் புருவ ஆரம்பத்தில் இருந்து வலது கண் புருவ இறுதி வரை மூன்று கோடுகளாக இடுதல் வேண்டும்.

இரு புருவ மத்தியில் அம்பாளுக்கு உகந்த குங்குமம் வைத்துக்கொள்ளலாம் பயன்கள்:

1. சிவனருள்
2. மன அமைதி
3. நெற்றியின் புருவ மத்தியியை வைத்து தான் ஹிப்டானிசம் செய்வதாக சொல்லப்படுகிறது. தீருநீறு ,குங்குமம் வைக்கும் போது தவிர்க்கப்படுகிறது.

4. நம் நெற்றியில் தேவையற்ற நீர் உறிஞ்சும் சக்தி உடையது
5. நாம் திரு நீறு இட்டு வெளியே செல்லுதல் கண் திருகஷ்டியில் இருந்து விலக்கு.

மேற்கோள்:

பெணபாற் புலவரான அவ்வையார் தன் உரையில்
"நீறில்லாத நெற்றி பாழ்" என்கிறார் .
எப்போதெல்லாம் குளிக்கிறீர்களோ அப்போதெல்லாம் இடுங்கள் .
திருநீறு வாங்கும்போது நல்ல வெண் திருநீறு எங்கு கிடைக்குமென சிவனடியார்களை விசாரித்து வாங்குங்கள்.ஆன்மீகத்திற்கு சுத்தம் முக்கியம்.

இப்படி பல முன்னோர்களால் சுட்டிக்காட்டப்பட்ட "திரு" நீறை அணிவோம்

திவ்விய மான வாழ்வைப் பெறுவோம். ஐஸ்வர்யம் வந்தால் அனைத்தும் வந்த மாதிரி தானே.? திருநீற்றுப்பதிகம் பாடி பாண்டிய மன்னரின் வெப்பு நோயை திருஞான சம்பந்தர் நீக்கியதாக வரலாறு.

சுத்தமான வெண் திருநீறு வாதத்தினால் உண்டாகும் 81 நோய்களையும்.பித்தத்தினால் உண்டாகும் 64 நோய்களையும் கபத்தால் உண்டாகும் 215 நோய்களையும் தீர்க்கு வல்லமை உள்ளதாக சாஸ்திரங்கள் சொல்லுகிறது.


உங்களுக்கு இக்கட்டுரை திருநீறு அணியவும் சிவாலயம்

செல்லும் ஆர்வத்தை ஊட்டும் என நம்பி என் இடுகையை முடிக்கிறேன் .

தவறுகள் சுட்டிக்காட்டினால் திருத்தப்படும். நன்றி.

Wednesday, November 17, 2010

திருவண்ணாமலை உருவான கதை thiruvannamalai story


திருத்தலப் பெயர் :


திருவண்ணாமலை THIRUVANNAMALAI

இறைவன் : அண்ணாமலை (சிவன் sivan லிங்க உருவில்)
இறைவி: உண்ணாமலை அம்மன்

கோவில் உருவான கதை:

புராண காலத்தில் இருந்து இன்று வரை உலகை ஆட்சி செய்யும் கடவுள்களான பிரம்மா(படைத்தல்) விஷ்ணு என்னும் பெருமாள் (காத்தல் ) சிவன் (அழித்தல்) தன்னால் படைக்கப்பட்ட இவ்வுலகத்தை செவ்வனே வழி நடத்தி மக்களுக்கு பல இன்ப துன்பங்களை உணர்த்தி நல்வழிப்படுத்தி காத்து வந்தனர்.

ஒரு நாள் , மனிதனை படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும் காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் தங்களுக்குள் "யார் பெரியவர் " ..?என்ற கர்வம் ஏற்பட்டு கருத்து மோதல் ஏற்பட சிவபெருமானிடம் யார் பெரியவர் என தீர்ப்பு கேட்கலாம் என சிவனை தேடி வந்தனர். சிவன் என்ன விபரம்? எனக்கேட்க அதற்கு பிரம்மாவும் விஷ்ணுவும் தாங்கள் வந்த விஷயத்தை சொல்ல சிவபெருமான் சிரித்தவாறே உங்களுக்கு ஒரு போட்டி வைக்கிறேன் உங்களில் யார் ஜெயிக்கிறீர்களோ அவர்களே உயர்த்தவர்.! என அறிவிக்கிறேன்


என்றவாறு சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக வான் உயர்ந்து நின்று என் அடியும் (கால்அடி) முடியும் (தலைமுடி) தொட்டு விட்டு முதலாக வருபவர்களே பெரியவர் எனக்கூறி வான் உயர்ந்து நிற்க பிரம்மாவும் விஷ்ணுவும் பல நாட்கள் சிவனின் அடியும் முடியும் தேடி அலைந்து தன் தோல்வியை ஒப்புக்கொண்டு "சிவபெருமானே நீங்கள் தான் பெரியவர் " தயவு செய்து வாருங்கள் எனக் கூற இறைவன் ஜோதிப்பிழம்பாக காட்சி தந்தார் .

அந்த அற்புதத்தை நிகழ்த்திய இடம்தான் திருவண்ணாமலை THIRUVANNA MALAI வாருங்கள் அண்ணாமலை உண்ணாமலை அம்மனை தரிசித்து வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துக்கள் . 21 .11.2010 அன்று தீபத்திருநாள் நடைபெறுகிறது.
நான் சென்று பார்த்துவிட்டு மேலும் தகவல்களுடன் இக்கட்டுரையை விரிவு படுத்துகிறேன் .

விஷேச செய்தி : தீபத்திரு நாளில் அண்ணாமலை .உண்ணாமலை அம்மன் இருவரும் கிரிவலம் வந்து மக்களுக்கு காட்சி அளிப்பதாக வரலாறு.

இக்கட்டுரயில் தவறு இருப்பின் ஆன்மீகப்பெரியோர்கள் மன்னிகவும்.

சுட்டிக்காட்டவும். எதிர்கால சந்ததிக்கு எம்மால் ஆன சிறு முயற்சி .

Tuesday, November 9, 2010

என் குரு எழுத்துச்சித்தர் பாலகுமாரன்


புத்தகம் படிப்பது சிறு வயதிலிருந்தே எனக்கு பிடித்த ஒன்று.

எனக்கு சிறு வயதிலிருத்தே தினகரன் பேப்பரையும். தினமலர் சிறுவர் மலரையும் படித்துதான் தமிழ் கற்றுக்கொண்டேன் என்பதே உண்மை அதற்காக என் தகப்பனாருக்கும் என் ராஜா அண்ணாவுக்கும் நன்றி சொல்லவேண்டும் .

என் 16 வயதில் கடுமையான கஷ்டங்களிலும் மன உளைச்சலிலும் திரிந்த போது எனக்கு என் மூர்த்தி அண்ணா கொடுத்த உதவிய பாலகுமாரன் புத்தகங்கள் அகல்யா,எட்ட நின்று சுட்ட நிலா. திருப்பூந்துருத்தி, இனிது இனிது காதல் இனிது. இப்படி பல பாலகுமாரன் புத்தகங்கள் படித்து வாழ்க்கை சூட்சமங்களை நிறைய அறிந்த கொள்ள முடிந்தது.


ஆனால் இதுவரை அவருக்காக ஒரு கடிதம் கூட எழுத முடியவில்லை என்கிற ஆதங்கம் எனக்கு உண்டு பல கதைகளில் படிப்பினைகள் தெளிவாக தன் வீச்சில் எமக்கு உணர்த்திய ஆசான் அவர் .அவர் புத்தகங்கள் இன்றும் தேடி படிக்கிறேன். வாங்கி சேமிக்கிறேன். பலருக்கும் கொடுத்து அறிமுகப்படித்தி இருக்கிறேன்.

எழுத்துச்சித்தர் பாலகுமாரன் குருவாக ஏற்றுக்கொண்டது 18 வயதிலிந்து தான். அவருக்கு ஒரு குரு உண்டு என அவர் அடிக்கடி சொல்லும் யோகி ராம் சுரத்குமார் அவர் திருவண்ணாமலை வாழ்ந்த யோகி அவரையும் எனக்கு பிடிக்கும் .

எழுத்துச்சித்தர் பாலகுமாரன் பிடிக்கும் என்பதாலும் அவருக்கு குருவான யோகி ராம் சுரத்குமாரின் படம் என் வலைப்பக்கத்தின் முகப்பை அலங்கரிக்க விட்டுள்ளேன்.


நீங்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவராக இருப்பின் அல்லது மற்ற புத்தங்கள் வாசிப்பவராக இருப்பின் பாலகுமாரன் புத்தகங்களையும் தொட்டு விட்டுச் செல்லுங்கள்.


என்றாவது ஒரு நாள் எழுத்துச்சித்தர் பாலகுமாரனை பார்க்கவேண்டும் என விருப்பம்

.அப்படி ஒரு நாள் சந்தித்து விட்டு வரும்போது '
பின்னொரு நாளில் விரிவாய் எழுதுகிறேன்.
நன்றி.

கட்டுரை : என் மதிப்புமிக்க ஆசான்கள்

1988 வருடத்தில் நான் முருகேசன், ராஜ்குமார் மூன்று பேரும் மும் மூர்த்திகளாய் குருவரெட்டியூர் பள்ளியில் வலம் வந்த காலம் அது.

ஒரு கிராமத்து அரசு மேல் நிலைப்பள்ளி எப்படி அக்காலத்தில் இருந்திருக்கும் வறுமைக்கோட்டுக் கீழ் பல மாணவர்கள் படிக்க எங்கள் மூவருக்கு பள்ளி முருகேசன் ஆசிரியர் அவருக்கு சொந்த ஊர் ரெட்டிய பாளையம் அவர் தான் ஆங்கில வகுப்பு எடுப்பார்.

அவரின் ஆங்கில புலமை அபரிவிதமானது. எங்கள் டீம் பார்டர் மார்க்கை தாண்டாது. பையன் நன்றாக படிக்கட்டும் என எங்கள் மூவர் வீட்டிலும் முருகேசன் ஆசிரியரிடம் டியுசன் விட எங்கள் வீட்டிலும் முருகேசன் வீட்டிலும் டியூசன் காசு கொடுப்பது ரொம்ப சிரமப்பட்ட காலம் அது. பல மாதங்களுக்கு நானெல்லாம் டியூசன் பீஸ் கொடுத்ததே இல்லை.

ஆனால் ஒருநாள் கூட ஆசிரியர் என்னிடம் கேட்டதே இல்லை. ஆசிரியர் மனைவி கலா அக்கா பல நாள் கணக்கு பாடத்திற்காக குட்டு வாங்கியதுண்டு. அதற்கு மேல் கணக்கு பாடத்தை நன்றாக யாரேனும் சொல்லித்தர முடியுமா ? என தெரியாது. அவ்வளவு நன்றாக சொல்லி தருவார்கள் . நமக்கு தான் சுட்டு போட்டாலும் வராது.

ஒரு நாள் புது வீடு கட்டி ஆசிரியர் குடும்பத்துடன் சந்தைக்கு பக்கமா குடி போய்டார் எனக்கெல்லாம் கஷ்டாமா போய்டுச்சி. ஆனா டியூசன் அரசமரத்து வீதீலயே தான் இருந்துச்சி. 9வது 10 வதும் அவர்கிட்டயே தான் டியுசன் அப்புறம் நாங்க 3 பேரும் 60 சதவீதம் மார்க் எடுக்கிற அளவுக்கு தயாராய்டோம் எங்க டீம்ல சம்பத் மட்டும் சேரமாட்டான்.

எங்களுக்கு கொஞ்ச நாள்ல டியுசன் சென்டரை நைட் டியூசன் சென்டரா மாத்தி எங்க வீதி பசங்களுக்கு உதவி செஞ்சாரு அப்ப நானு, முருகேசன் , ராஜ்குமார் .நியோ சர்ச் தர்சீஸ் தெய்வம் சீனிவாசன் முருகேசன் ஆசிரியர் பொண்ணு கோமதி எல்லாம் படிப்போம் .10வது படிக்கிறப்ப அவர் செஞ்ச உதவி மகத்தானது, அந்த உதவிதான் என்னை 65 சதவீதம் எடுக்க கூடிய மாணவனா என்னை உயரத்திச்சு.

இப்ப 15 வருடம் கழிச்சு திரும்பி பாக்கிறப்ப நான் நல்ல அரசு வேலையில இருக்கேன். முருகேசன் எல்.ஐ.சி ஏஜென்டா நல்ல நிலைமயில இருக்கான் .சம்பத்தும் ராஜாவும் நல்ல நிலையில இருக்காங்க . தர்சீஸ் டாக்டராகி சேவை பண்ணிட்டு இருக்கான்.


போன வருடம் வரைக்கும் என் ஆசான் இருந்த திரு. முருகேசன் ஆசிரியர் சென்ற வருடத்தில் திடிரென உடல் நிலை மோசமாகி இறந்துவிட்டதை எல்.ஐ.சி முருகேசன் தான் போன் பண்ணி சொன்னான். எனக்கு மனதை உலுக்கி எடுத்த மறைவு அது.

உடலை பார்த்து அழ வாய்ப்பு இல்லாமல் 2ஆம் நாள் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வந்தேன் பல தீபங்கள் ஏற்றி வைத்த ஒரு அகல் விளக்கு அணைந்து விட்டது மிக்க வருத்தமே. அந்த உடல் மறைந்தாலும் அந்த ஆன்மா எங்களை விட்டு மறையாது.


ஒரு மாணவனாய் அவர்க்கு எந்த கைமாறும் நான் செய்ய வில்லை. ஒரு ஆசானாய் எங்கள் வாழ்வை உயர்த்திய முருகேசன் ஆசிரியருக்கும் ,
எனது அரசு மேல்நிலைப்பள்ளி. குருவைக்கும்(g.h.s.school,guruvareddiyur-638504) எனது வணக்கத்தை தெரிவித்து

என் மற்ற ஆசான்கள் திரு.மோகனகாந்தி,

திரு ஜெகதீசன் ,திரு தங்கவேலு, சீ.கே என அழைக்கப்படும் சிஃகுழந்தையப்பன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து இடுகையை முடிக்கிறேன். நன்றி

Saturday, November 6, 2010

Arulmigu gurunathaswamy temple,poravipalayam,velli tirupur near








ஈரோடு மாவட்ட கோவில்கள்:


ஆலய தரிசனம் ;


ஆலய பெயர், முகவரி:

பெரிய குருநாத சுவாமி கோவில் பொரவிபாளையம்
வெள்ளித்திருப்பூர் பவானி வட்டம் ஈரோடு மாவட்டம்

கோவில் அமைவிடம் ; அந்தியூர் வெள்ளித்திருப்பூரில் இருந்து
குருவரெட்டியூர் செல்லும் வழியில் 5 கி.மீ ல்


மூலவர்: குருநாதசாமி.

கோவில் விபரங்கள் :

குருநாதசாமி கோவில் குருவரெட்டியூரில் இருந்து 3 வது கி.மீட்டரில் உள்ளது. பலமுறை எனது நண்பர்களுடன் சென்று வந்ததுள்ளதாலும் அங்குள்ள இறை அனுபவத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் எனும் ஆர்வத்தின் விளைவே இக்கட்டுரை.

இக்கோவிலின் சிறப்பு அம்சமே மன நிலை சரியில்லாதவர்கள் பேய் பிசாசுகள் தொல்லையால் இரவு உறக்கம் இல்லாமல் தவிப்பவர்கள், ஏதேனும் தடைகளால் முன்னேற்றம் இன்றி தவிப்பவர்கள் என பலர் குறைகளை தீர்க்கும் தெய்வமாக குருநாதசுவாமிகள் விளங்குவது தனிச்சிறப்பு. சரி கோவிலுக்குள் செல்வோமா..?


ஒரு வெள்ளிக்கிழமை நாளில் மாலை நாம் சென்ற போது கோவிலின் முகப்பில் நம்மை வரவேற்பது ஊஞ்சல் மரங்களுக்களிடையில் பாம்பு புற்று அங்கே தரிசனம் செய்து சற்று தூரம் நடந்தால் அங்கே கோவிலின் முகப்பு நம்மை வரவேற்கிறது.


பெரிய குருநாதர் அழகாகவும் கம்பீரமாகவும் நமக்கு காட்சி தர பல பெண்கள் ஊதுபத்தியை கையில் பற்ற வைத்து இறைவனை கும்பிட்டவாறு நின்று கொண்டிருக்க அங்காங்கே உட்கார்ந்த படி தலை விரித்த படி சில பெண்கள் ஆடிக்கொண்டிருக்க நமக்கு கொஞ்சம் பயமாகதானிருக்கிறது சற்றே ஆசுவாசப்படுத்தி இறைவனை வணங்கி விட்டு உட்கார்ந்தோம் . இரவு எட்டு மணிக்கு குருநாதசாமிக்கு சிறப்பான பூஜை நடக்கிறது. அதைத்தொடர்ந்து 2 பூஜைகள் நடக்கின்றது.

குக்கிரத்தின் அருமையான மரங்களுக்கிடையில் அமைதியான சூழ்நிலை இறை வழிபாட்டை அமைதியாக்குகிறது. இக்கோவிலில் பல மன நோயளிகள் , பேய் பிசாசு பிடித்தவர்கள் குணமாகிச் செல்வதையும் பல பேரின் அனுபவங்களையும் சொல்லக்கேட்டிருக்கிறேன் நீங்களும் நேரில் சென்றால் கண்டிப்பாக உணரலாம்.


பஸ் வசதி:

அந்தியூரில் இருந்து கண்ணாமூச்சி செல்லக் கூடிய ஏ5 பஸ் மற்றொரு தனியார் பேருந்தும் உண்டு. பவானியில் இருந்து 30கி.மீ குருவரெட்டியூர்க்கு பி10, பி5, ஜெயகிருஷ்ணா.,முருகன் பஸ்களில் வந்து இறங்கி குருவரெட்டியூர் பஸ் நிலையத்தில் இருந்து 3கி.மீ செல்ல குருநாத சாமி கோவிலை வந்து அடையலாம். கோவிலுக்கு வருபவர்கள் பூஜை முடித்து செல்ல போதிய பஸ் வசதி இல்லை. வாகன ஏற்பாட்டுடனும் இரவு உணவு எடுத்து வருதல் சிறப்பு. கோவிலில் சிறிய கடை உண்டு.


விசேஷ பூஜை நாள் :

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 7 மணிக்கு மேல். உப செய்தி: அந்தியூர் புகழ் மாட்டுச்சந்தை சின்ன குருநாதசாமி கோவில் இக்குருநாத சாமிக்கு தம்பி முறை ஆவார். வருடாவருடம் ஆடி மாத குருநாதசாமி கோவிலுக்கு இக்கோவிலில் அழைப்பு விடுக்கப்பட்டு பெரிய குருநாதசாமி கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்லக் கேட்டுருக்கிறேன் .


எம் அனுபவம் :

இங்கு நல்லதொரு சக்தி இருப்பதாய் உணர்கிறேன்

நீங்களும் வந்து தரிசித்து விட்டு எழுதுங்கள் நன்றி.

Saturday, August 21, 2010

நன்றிகள்

எனது எழுத்துப் பணிக்கு முதல் படிக்கட்டாக இருந்த ஆருயிர் நன்பர் திரு.சோலோ செல்வா அவர்களுக்கும் ., கணிணிப்பொறியில் வடிவமைத்துக் கொடுத்த நன்பர் திரு. பிரகாஷ் ,சென்னிமலை அவர்களுக்கும் , வெளியிட்டு உதவுகின்ற கூகுள் இணைய தளத்திற்கும் என் மனமுவந்த நன்றிகள்.

Monday, July 12, 2010

அடியேன் படைப்புகளை வாசிக்க வந்தவர்களே..

அன்பான உங்களுக்கு எனது பணிவான வணக்கம்.எனது படைப்புகளை இங்கே உங்களுக்காக சமர்பிக்கிறேன். உங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகிரறது. பிழைகளை சுட்டிக் காண்பியுங்கள்.நன்றிகள் ஆயிரம்.

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...