Friday, February 10, 2012

ஸ்ரீ மலைக்கருப்பசாமி திருக்கோவில் தரிசனம் .அந்தியூர்





அருள்மிகு அந்தியூர் மலைக்கருப்பசாமி திருக்கோவில்
ARULMIGU ANTHIYUR SRI MALAI KARUPPASAMY TEMPLE
மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரலின் அமைதி தழுவ குழுமையான ஓர் இடத்தில் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு தன் அருட்சக்தியால் மக்களைக் காக்கும் ஸ்ரீ மலைக்கருப்பசாமி திருக்கோவில் விஷேசமானது.

திருக்கோவில் அமைவிடம் :
அந்தியூரில் இருந்து 10 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட நேரங்களில் பஸ் வசதி உண்டு .

செல்லும் வழி :

அந்தியூரில் இருந்து கோபி செல்லும் வழியில் (1கி.மீ ) தவிட்டுப்பாளையத்தில் இருந்து வலப்புறம் திரும்பி 9 கி.மீட்டர் பயணித்தால் சுற்றிலும் தென்னை மரங்கள் பசுமை இழுக்க பயணித்தால் அந்தியூர் மலையின் ஒருபகுதியை அடையலாம் . முகப்பில் உள்ள முனியப்ப சாமி யை வணங்கி விட்டு பின் ஸ்ரீமலைக்கருப்பசாமி திருக்கோவில் முகப்பை அடையலாம் .

ஸ்ரீதவசியப்பன் சன்னதி :

இரண்டவதாக நாம் வணங்க வந்துள்ள சன்னதி ஸ்ரீ தவசியப்பன் சன்னதியாகும் . பிரமாண்ட முனியப்பர் போன்ற மூலவர் ஸ்ரீ தவசியப்பன் சன்னதியும் அருகருகே உள்ள சிறிய அளவிலான முனியப்பர் சன்னதிகளும் சூழ்ந்து இருக்க நேர்த்திக்கடனாக குத்தப்பட்ட வேல்கள் நூற்றுக்கணக்கில் இருக்க திருக்கோவிலை சுற்றியும் புளிய மரங்கள் இருக்கிறது.

ஸ்ரீ தவசியப்பர் சைவக்கடவுள் ஆதலால் சர்க்கரைப்பொங்கல் மட்டுமே நிவேதனமாக படைக்கப்படுகிறது. ஸ்ரீ தவசியப்பர் சன்னதியில் அமைதியான சூழல் தென்படுகிறது

பூஜை முறை :

திருக்கோவில் பூசாரி அவர்கள் வலக்கையால் நிரம்பும் அளவுக்கு கற்பூரத்தை கையில் எடுத்து அதை பற்ற வைத்து ஸ்ரீ தவசியப்பர் சன்னதி மூலவர் எதிரே உள்ள சிறு குழியில் போடுகிறார் .பின்னர் அங்கு வந்துள்ள பக்தர்களுக்கு வேலில் குத்தப்பட்டுள்ள எலுமிச்சம் பழங்களை ஒவ்வொன்றாக விநியோகிக்கிறார் . பக்தர்களுக்கு பின் அங்குள்ள குங்குமம் அளிக்கப்படுகிறது.

மூலிகைச்சாறு :

திருக்கோவில் வளாகத்தில் பூஜை முடித்த பின் கொடுக்கப்படும் மூலிகைச்சாறு வாங்க பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வருவார்கள் . தீராத நோய்கள் , வயிற்று வலி, சளி தொந்தரவுகள் போன்ற பல உடல்ரீதியான பிரச்சினைகளுக்கு திருக்கோவில் பூசாரியால் 4 விதமான பாத்திரங்களில் வரும் பக்தர்களுக்கு முற்றிலும் இலவசமாக மூலிகைச்சாறு வழங்கப்படுவது சிறப்பு .

மன நோய் உள்ளவர் இங்கு வந்தால் சிறப்பாக நோய் தீர்ந்து நல்ல மனிதராக திரும்பி வீட்டுக்கே செல்வது மற்றொரு சிறப்பு . பல்லாயிரக்கணக்கான மக்கள் மன நோய் தீர்ந்து சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .


ஸ்ரீ மலைக்கருப்பசாமி சன்னதி :

திருக்கோவில் வளாகத்தில் மூன்றாவதாக ஸ்ரீ மலைக்கருப்பசாமி சன்னதி . காக்கும் கடவுளான மலைக்கருப்பசாமியை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும் .ஸ்ரீ மலைக்கருப்ப சாமியை வணங்குபவர்களுக்கு பில்லி,சூனியம் ,போன்றவைகளால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு நல்லதோர் தீர்வாக தம்மை நாடி வரும் பக்தர்கள் குறை தீர்ப்பதால் லட்சக்கணக்கான பக்தர்களின் காக்கும் கடவுளாக அருள்பாலித்து வருகிறார் .

இங்கு கோழி ஆடுகளை பக்தர்கள் பலியிட்டு தாங்கள் நேர்த்திக்கடனை பல பக்தர்கள் நிவர்த்தி செய்வார்கள் . ஆனால் இங்கு வந்து ஸ்ரீமலைக்கருப்ப சாமியை வழிபட்டு நேர்த்திக்கடன் முடித்து அசைவ உணவு உண்டவர்கள் ஸ்ரீதவசியப்பர் சன்னதிக்கு வரக்கூடாது.

வாரபூஜை:

செவ்வாய் ,வெள்ளி செவ்வாய் அதிகளவு கூட்டமும் வெள்ளியில் சுமாரான கூட்டம் வரும் . இரண்டு நாட்களும் மூலிகைச்சாறு வழங்கப்படும்

வருடத்திருவிழா :

சித்திரை மாதத்தின் முதல் செல்வாய் கிழமைகளில் வருடாந்திரத்திருவிழா ஆரம்பித்து 4 நாட்கள் நடைபெறுகிறது. யானை உலவும் காட்டுப்பகுதியாதலால் ஸ்ரீ மலைக்கருப்பசாமியை வணங்க வருபவர்கள் மாலை 6 மணிக்குள் வனத்தில் இருந்து சென்று விடவும் .

காட்டுக்குள் நீண்ட தூரம் செல்லாமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது சுற்றிலும் அமைதியான சூழலில் அமைந்துள்ள காக்கும் கடவுளாம் ஸ்ரீ மலைக்கருப்பசாமி ஸ்ரீ தவசியப்பர் ,

ஸ்ரீ முனியப்பசாமியை வணங்கி தீவினைகள் நீங்கப்பெற்று வளங்கள் பெற்றிடுங்கள் .நன்றி

2 comments:

ananthu said...

நல்லதொரு கோவில் அறிமுகத்திற்கு நன்றி !

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

தங்களின் மேலான கருத்துரைக்கு நன்றி நன்பா.!

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...