ப‌ய‌ண க‌ட்டுரைக‌ள்

படகு இல்லம் (BOAT HOUSE OOT



Y)


கடந்த வாரம் ஊட்டி போகலாம் என ஒரு நாள் இன்பச் சுற்றுலாவாக ஊட்டி பஸ் நிலையம் வந்து இறங்கி படகு இல்லம் நோக்கி என் நண்பர்களுடன் சுமார் ஒரு கி.மீ தானே என நன்பர் ஒருவர் சொல்ல நடக்க ஆரம்பித்தோம்.

ஊட்டி குளுமை நம்மை தாக்க இதமான உணர்வு. ஊட்டி ரயில் பாதை மேம்பாலத்திற்கு அடியில் நடந்து சென்றால் 100மீட்டர் தூரத்தில் ஒருபார்க் நம்மை வரவேற்கிறது . அட உள்ளே ஒரு நர்சரி அழகான பூக்கள் நம்மை பார்த்து கண் சிமிட்டுகிறது. ஏராளமான பூக்கள், ரோஜாக்கள் பார்க்க அழகாயிருக்கின்றது. இந்த பூக்கள் நம்ம பகுதியில் வளருமான்னு கேட்டுட்டு வாங்குங்க. இல்லன்னா பர்ஸ் பழுத்துடும் அடுத்த அங்கே குழந்தைகள் விளையாடவென சின்னச்சின்ன சறுக்குமரம் .தூளி. விளையாட பரந்த புல்வெளி. மினி கார் ரேசிங் ஆகியன உள்ளன.

அவை முடித்து வெளியே வந்தால் இன்னும் 500மீட்டர் நடக்க வேண்டும் என நன்பர் பிரகாஷ் சொல்ல நடந்தால் வழியில் குதிரை வண்டியில் சவாரி செய்ய கூப்பிடுகிறார்கள் ரூ.50 கேட்கிறார்கள் . கூடவே குதிரை ஒட்டியும் வருவதால் பயமில்லை. இந்தக்கட்டணம் சீசனுக்கு தகுந்தார் போல மாறும் என நினைக்கின்றேன். வழியில் இன்னொரு நர்சரியும் அழகான பூக்களும் நீண்டு விண்ணை தொடும் யூக்கலிப்டஸ் ,சவுக்கு மரங்கள் அழகாயிருக்கின்றன.

அதைக்கடந்தால் படகு இல்லம் என அழைக்கப்படும் போட்ஹவுஸ் நம்மை வரவேற்கிறது. அங்கே பல நாட்டினவரும் அங்கே கூடியிருக்க பல கடைகள் இருக்கின்றன கேரட் புத்தம் புதிதாய் கிடைக்கின்றது. வாங்கி சாப்பிட்டுக்கொண்டே நடந்தால் மஞ்சள் கலரில் அழகான பூக்கள் விற்கிறார்கள்.

அதையும் ரசித்து நடந்தால் பிரமாண்ட மரங்களுடன் படகு இல்லம் அழகாயிருக்கின்றன் சுற்றிலும் நீண்டு வளர்ந்த மரங்களுக்கு இடையில் படகுப்பயணம் நம்மை சுகமாக்குகிறது.படகில் பயணத்தின் பாதுகாப்பிற்காக போட் ஜாக்கட் வைத்திருக்கிறார்கள். பயமாய் இருந்தால் போட்டுக்கலாம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்கிக் கழகம் பாதுகாப்பான வசதிகள் செய்து கொடுத்துள்ளது நன்றி கால் மிதிப்படகும் உண்டு.

உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை ஊட்டி படகு இல்லம் வந்து மனதை இதமாக்கிவிட்டு செல்லுங்கள். அங்கே எடுத்த நூறு போட்டோக்களை உங்களுக்கு சமர்பிக்கின்றேன் பார்த்து விட்டு உங்கள் அனுபவங்களை எழுதுங்கள். நன்றி,

1 comment:

Thamizhan said...

Really super feel about the place congrats

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...