கவிதை



உண்மையான தீபாவளி

சிகரெட்...!

பான்பராக்..!
குட்கா..!
பீர் ..!
விஸ்கி.!

இப்படி ஒராயிரம்
நரகாசுரன்களை
 
மனதினுள் வைத்துக் கொண்டு
கொண்டாடும்

எந்த தீபாவளியும் தீபாவளியாய் இருக்குமா...?
இம்முறையேனும்

உன்னிலுள்ள
ஒர் நரகாசுகரன் கொன்று கொண்டாடு

"அதுவே"..!
உனக்கும்

உன் சார்ந்த சமுகத்திற்கும்
உன்மையானதொரு "தீபாவளி".
.!

நினைவுகள்:



JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes


அன்பே...!
எத்தனை முறை
துரத்தி விட்டாலும் - தொடர்ந்து
என் நினைவுகளில்
எப்படி..?

தெரியாமல் போனதேன்

அன்பே....,! 

உன்னைப்பார்த்து 

பார்வை மழையில் 

நனைந்த கொண்டிருக்கையில்-

 எனக்கு தெரியாது...!

 நீ "என் நன்பன்" எனச்சொல்லி

 இடியாய் - என் 

இதயத்தில்

இறங்குவாயென..!

காய்ந்த மனம்


மொட்டை மாடியில் 
ஆசுவாசமாய்
கூந்தலை உலர்த்தியது
அவள்...,!
 தரிசனத்தில்
காய்ந்து போனதோ 
என் மனம்....!,

 

நேர்முகத்தேர்வு


குளிர்சாதன அறை

 இருகிய முகத்தில்

தெளிந்த கிணறாய்

தேர்வாளர்கள் ...!

 பதட்டமாய் உள்ளே நின்ற

என்னிடம்!

" எங்கே இருக்கிறாய் "

என்பது கேள்வி. ..? 

அந்த பயத்தில்

அத்தனை பேர் முன்னிலையில்

 எப்படிச் சொல்வது...?

 அன்பே ...!

"நான் உன்னிடத்தில்

இருக்கிறேனென்று".!!


எதிலும் உன்னைத்தேடி


எப்போதேனும் 

 உன்தோழிகள்

வந்து சொல்லக்கூடும் ...!!

 "உன்னவன் சிகரெட் பிடிக்கிறானென்று"..! 

தயை செய்து நிறுத்திடச் சொல்லாதே..!

 புகைந்து போகும்

சிகரெட் வளையங்களில் 

கலைந்த போன 

உன் நினைவலைகளை

 தேடிக்கொண்டிருக்கிறேன்

நான்..!


திரும்பிபார்


அன்பே..! 

நம் காதலுக்காக 

கவிதை மழையில்

நனைந்து , 

என் சட்டையை

இங்கே உலர்த்தி இருக்கிறேன்..! 

மறவாமல் தொட்டுப் பார்..! 

என் காய்ந்து போன

மனம்

உனக்கு புரியும்..!


தோன்ற‌வில்லை


இப்போதெல்லாம் ; 

"கோவைப்பழ இதழ்"

 "மின்னல் கண்கள்" 

" கொடியிடை" என 

வர்ணித்து கவிதை

எழுத மனமில்லே..? 

சென்ற மாதம்

என் மனைவிக்கு

 "பெண்" குழந்தை ஜனனம்...!



காலக்கோடுகள்

அன்பே.....!

நீயும் நானும்

 பயணித்த

அதே பேருந்து

அதே இருக்கை 

ஆனால்,

என் இடத்தில்

உன் கணவனும் ,

 உன் இடத்தில்

என் மனைவியும்

 என காலப் பேருந்து

 ஒடிக்கொண்டு இருக்கிறது

 சோகமயமாய்...!



சொர்க்கம்

எப்படியும்
கிடைத்து விடுகின்றன்...!
சில பூக்களுக்கு
மட்டும் சொர்க்கம்..?
அவள் கூந்தலை
அlaங்கரித்து.,!

குழந்தையாக

அன்பே....! 
உன்னை பார்க்கும் 
ஒவ்வொரு முறையும் 
குழந்தையாகிறேன்..!
 உன்னை

பார்க்கையில்
 புதிதாய்
பிறந்து,!

தேடல்

அன்பே.....! 
நான் பார்க்கும்
 ஒவ்வொரு
பூவிலும் 
எங்கேனும் 
உன் சாயல்
இருக்கிறதா,
 என தேடிக் கொண்டிருக்கிறேன் ...!

சகுனம்

'சகுனமாய்'
தெரியவில்லை..! 
அப்பா இறந்து 
அம்மா
வெள்ளை சீலை
தரிக்கையில்!

சிகரெட்
மறைத்து
மறைத்து 
குடித்த சிகரெட்
மறைத்தது 
அவனையும்
 ஒரு நாள்
இவ்வுலகை விட்டு...!

என் நாளும் நலமே.!

நமச்சிவாய' 
என நாவாற
நாள் தோறும்
 நவிழ நல்வரம்
நாடி வரும் 
நற்சிந்தனை
நல்கும்
 நலம் யாவும் பெற
நாடு
 நமச்சிவாயத்தை....,!

காதலுக்காக







JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes

திரும்பி பார் : 
அன்பே...!
 உன் காதலுக்காக 
கவிதை
மழையில் நனைந்து....!
 என் சட்டையை
 இங்கே உலர்த்தி
இருக்கிறேன்...! 
தொட்டுபார் ., 
என்
காய்ந்து போன
மனம் 
உனக்கு புரியும்......!

ஞாபகச்சுவடுகள் :
அன்பே..! 
எப்படி உன்னால் 
மறக்க முடித்ததென
தெரியவில்லை 
எனக்கு..,?
எப்படி
நம் காலச்சுவடுகளை 
அழித்து விட்டு சென்றாய்
என புரியவில்லே 
எனக்கு..? 
ஆயினும்,
கலைக்கல்லூரி
மரங்களுக்கிடையே நாம்....!
 ஏற்காடு பூக்களிடையே நாம்....,! 
விநாயகர் சன்னதியில் நாம்...,!
 பஸ் நிலையத்தில்
காத்திருப்பில் நாம்....! 
என
பல பரிணாமங்களில்
 நீயும்.,
உன் நினைவுகளும் 
என்னை
வீழ்ச்சியுறச் செய்து 
கொண்டுதான்
இருக்கிறது , 
இன்றும்...!







JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...