Tuesday, October 16, 2018

அருள்மிகு மங்கம்மாள் மகாலட்சுமி திருக்கோவில், கத்திரி மலை

அருள்மிகு மங்கம்மாள் மகாலட்சுமி திருக்கோயில் ,கத்திரி மலை ,பர்கூர் அஞ்சல்,, அந்தியூர் வட்டம், ஈரோடு மாவட்டம்
ஈரோடு மாவட்ட எல்லையில் அந்தியூர் வட்டத்தில், பர்கூர் பஞ்சாயத்தை சேர்ந்த கிராமத்தில் ஒன்று கத்திரி மலை ஆகும்.
இந்த கிராமம் வடக்கு கிழக்கு எல்லையில் சேலம் மாவட்டம் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.
கத்திரிமலையில் சோளகர் பழங்குடி இனத்தவர்கள் வசித்துவருகிறார்கள்..இவர்களின் பன்னெடுங்கால தெய்வமாக மங்கம்மாள் மகாலட்சுமி கோவில் இருந்து வருகிறது,
ஈரோடு மாவட்டம் ஆக இருந்த போதிலும் கோயிலுக்கு செல்ல சேலம் மாவட்டம், கொளத்தூரில் இருந்து சின்னதண்டா, தார்க்காடு, லக்கம்பட்டி அடிவாரம் வரை 15 கிலோமீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணித்தோம், அதன்பின் ஏழு கிலோமீட்டர் நடைபயணமாக சுமார் நாலு மணி நேரம் நடந்தது கத்திரி மலைக்கு செல்லலாம், கத்திரி பட்டி வழியாகவும் கத்திரி மலைக்கு நடந்து செல்லலாம்..
கடல் மட்டத்திலிருந்து 1050 மீட்டர் உயரத்தில் ஸ்ரீ மங்கம்மாள் மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது, இந்த கோவிலுக்கு புரட்டாசி கடைசி வாரமும், சித்திரை மாதத்திலும் வருடத்தில் இரண்டு முறை வருடாந்திர பூஜை மிகச் சிறப்பாக நடைபெறும்
, இந்த கோவிலுக்கு மேட்டூர், கொளத்தூர், லக்கம்பட்டி கோவிந்தபாடி, சின்னதண்டா, மாதேஸ்வர மலை மற்றும் பூமி. பர்கூர் மலையை சேர்ந்த பல பக்தர்கள் இங்கே வந்து தரிசனம் செய்து வருகின்றனர்., கோவில் அமைப்பு : இந்த கோவில் மூலவராக மங்கம்மாள் மகாலட்சுமி அமைந்து உள்ளார்.
கோவில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது , மிக செங்குத்தான மலைப்பகுதி வயதானவர்கள் கோவிலுக்கு செல்வது எளிதல்ல,

புரட்டாசி மற்றும் சித்திரை மாதங்களில் மட்டுமே வருடாந்திர பூஜை காலங்கள் ஆகும், ஆகவே அந்த நாளில் செல்லலாம், மிகச் சிரமப்பட்டு மலையேறி தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. கத்திரி மலையில் விழாக்காலங்களில் தவிர மற்ற நாட்களில் கடைகள் ஏதும் இல்லை ஆதலால் உங்களுக்கு தேவையான உணவு , தண்ணீர் பாட்டில் ,போர்வை, போன்ற அத்தியாவசிய தேவைகளை உடன் எடுத்துச் செல்லவும். மேலும் அப்பகுதியில் உள்ள நபர்கள் உதவியுடன் மலைக்குக்கு மேலே செல்லலாம் , வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள்,,
இந்த ஊர் கோவில் பற்றி உதவ தெரிந்துகொள்ள தொலைபேசி எண் : ராஜா - 9445988698. கிரியன்- 9488404626, மற்றும் ஓர் புதிய கோயிலுடன் சந்திப்போம் .நன்றி.

Wednesday, October 10, 2018

ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் திருக்கோவில், பெருமுகை, கோபி வட்டம்

சமீபத்துல ஒரு அழகிய ஒரு பெருமாள் கோவில் தரிசனம் எனக்கு கிடைத்தது அதைப் பற்றி சொல்ல தான் இந்த பதிவு. இந்த திருக்கோயில் எங்கு இருக்குன்னா பெரு முகை கிராமம் கோபி வட்டம், ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் சத்தியமங்கலம் to அத்தாணி செல்லும் வழியில் உள்ளது ,

அத்தாணியிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் மலையடிவாரத்தில் உள்ளது. இந்தக் கோயிலோட அமைப்பு எப்படின்னு கேட்டீங்கன்னா மேற்கு தொடர்ச்சி மலையின் அழகிய சூழலில் மலையடிவாரத்தில் இயற்கையாக ரம்மியமான அழகான ஒரு மலைக்குன்றில் அமைந்துள்ளது. இங்கு திருப்பதி திருமலை சீனிவாச பெருமாள் மற்றும் அருள்மிகு சஞ்சீவிராய பெருமாள் திருக்கோயில் ஆகிய சன்னதிகள் அமைந்துள்ளது.

இந்த கோவில் கடந்த 17. 8 .2018 தேதி வெள்ளிக்கிழமை ஆவணி ஒன்றாம் நாள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மிக அழகிய வேலைப்பாடுகளுடன் இவ்வளவு அழகான ஒரு பெருமாள் ஆலயம் காணக்கிடைப்பது அரிது, அவ்வகையில் இந்தத் திருக்கோவில் இப்பகுதியில் மிக பிரமாண்டமான அமைப்புடன் அமைந்துள்ளது.


கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் போது இந்த ஆலயத்தை சென்று அல்லது வழியில் பயணிக்கும் போது இந்த ஆலயத்தை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். பெருமாள் தரிசனம் மிக அழகாக திருப்பதி ஏழுமலையானை பார்ப்பது போன்ற ஒரு அழகிய அமைப்புடன் மிகுந்த வேலைப்பாடுடன் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலை தரிசனம் செய்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...