Thursday, September 5, 2019

மரம் வளர்ப்பு

மரம்.பரமானந்தம் # 6369944630 "பத்து ஏக்கரில் பல வகை மரங்கள்" வியக்கச்செய்யும் ஐயா! -------===================------------ "ஒரு மா மரத்தில், ஐந்து கிளைகளில் ஐந்து வகையான,சுவைகளில் வேறு வேறு மாம்பழங்கள் காய்க்கின்றன." கடலூர் மாவட்டம்,திருமுட்டம் (ஸ்ரீ முஷ்ணம்) அருகில் இருக்கிறது ஆதிவராக நல்லூர். ஊரில் நுழையும் போது புளியமரங்கள் அணி வகுத்து நிற்கிறது. ஐயா கோதண்டராமன், ஆதிவராக நல்லூர் இவர்கள் மகன் கோ.பரமானந்தம் அவர்கள் வளர்த்து வரும் மரங்கள் மிகச்சிறந்த வளர்ச்சியை எட்டி நிற்கின்றன. உள்நாட்டு மரங்கள் முதற்கொண்டு, ஒட்டுரக மரக்கன்றுகள் வரை பல மரங்கள் அடர்ந்த வனமாக காட்சியளிக்கிறது. தம் முன்னோர்கள் சாலையோரம் நட்டு வைத்திருக்கின்ற புளியமரங்கள் ஊர்மக்களுக்கு இன்றும் பலனளித்து வருகிறது.அதன் தொடர்ச்சியாக, இளைப்பாறிச் செல்லும் மக்கள் உதிர்க்கின்ற குளிர்வானச் சொற்களே,தம்மை களிப்பாக வைத்திருப்பதாக கூறுகிறார் எழுபது வயதில் இளமை மிடுக்குடன் இருக்கின்ற ஐயா பரமானந்தம் அவர்கள். சந்தனம், செம்மரம், பலா ,மா, புளி, நாவல் என பல வகை மரங்கள் வானுயர்ந்து நிற்கிறது. மூலிகைகள் வேலியோரம் படர்ந்து இருக்கிறது. மிளகு கொடி மரங்களைப்பற்றி சுற்றி காய்த்து நிற்கிறது. மரங்களின் மீது கொண்ட தீராத காதலால், போகும் இடமெல்லாம் கிடைக்கும் மர வகைகளை சேகரித்து வளர்த்து வருகிறார். முப்பது ஆண்டுகள் தொய்வில்லாத தேடல்,அரிய வகையான மரங்கள் அணி வகுத்து நிற்கிறது. பொது இடங்களில் மரங்கள் நட்டு பராமரிப்பும் செய்து வருகிறார்.தோட்டத்தில் விளையும் சாத்துக்குடி பழங்கள் கொண்டு இனிப்பு ஊறுகாய் தயாரிப்பது இவரது கண்டுபிடிப்பு. ஒரு மா மரத்தில், ஐந்து கிளைகளில் ஐந்து வகையான மாம்பழங்கள் காய்க்கின்றன. ஒட்டு கட்டி மரங்களை வளர்ப்பதில் கைதேர்ந்தவர். இவரின் மரங்கள் வளர்க்கும் ஆர்வம் அனைவரையும் மரங்களின் மீதான காதலை மேலும் தூண்டச் செய்கிறது. ஐயா பரமானந்தம் போன்றோரின் செயலால் பசுமை தழைக்கட்டும். மண் குளிரட்டும். ஆலோசனை பெற்று மரம் வளருங்கள், மரம் பரமானந்தம், -6369944630 ஆதிவராக நல்லூர், ஆதிவராக (ஸ்ரீ முஷ்ணம்), கடலூர் மாவட்டம்.

Monday, January 21, 2019

உயர்திரு . செந்தில் குமரன் , பட்டிமன்ற பேச்சாளர், தாரமங்கலம் , சேலம் (தமிழ் வளர்ப்போம்)

 இந்த 2019 வருடம் நமது குருவரெட்டியூர்
கக்குவாய் மாரியம்மன்  தை மாதம் கரிநாள் அன்று திரைப்படம், டெலிவிஷன் செல்போன், இவைகளால் பெரிதும் பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா ?என்ற பட்டிமன்றம் நடைபெற்றது , பட்டிமன்றங்கள் தமிழையும் தமிழ் இலக்கியங்களையும் மக்களிடம் கொண்டு செல்லும் அருமையான ஒரு நிகழ்ச்சி,, ஆர்வத்துடன் நானும் நண்பர்களை தொடர்பு கொண்டு யார் நடுவராக வரப்போகிறார் என்பதை ஆர்வத்துடன் விசாரிக்க தாரமங்கலத்தில் இருந்து செந்தில் குமரன் என்பவர் வருகிறார்..
அவசியம் நீங்களும் வாருங்கள் என நண்பர்கள் கூற நானும் ஆர்வத்துடன் கிளம்பினேன். நண்பர் செந்தில் குமரன் என்ற உடனே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு குருவரெட்டியூர் பஸ் நிறுத்தத்தில் நடைபெற்ற ஒரு பட்டிமன்றத்தில் பேச்சாளராக இருந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரங்களாக நிலையில்லாத வாழ்வைப்பற்றி நிலையாமை திருக்குறளை உதாரணம் காட்டியும், நல்ல நகைச்சுவையுடன் பேசக்கூடிய அவரின் ஞாபகம் வந்தது,
இன்று எப்படியும் பட்டிமன்றம் பார்த்து விட வேண்டும் என்று குருவரெட்டியூர் வந்துவிட்டேன். சரியாக இரவு 9 மணிக்கு பட்டிமன்றம் உயர்திரு. செந்தில் குமரன் அவர்கள் தலைமையில் சிறப்பாக துவங்கியது. நல்ல நகைச்சுவையான பேச்சு, திருக்குறளை மேற்கோள் காட்டும் மாண்பு,, அடுத்த தலைமுறையினரை சரியான வழிக்கு வழிகாட்டும் உரை, இப்படி ஐந்து மணி நேரம் எப்படி போனதென்றே தெரியலை,, இவருக்கு பல அங்கீகாரங்கள் கிடைத்துள்ளது.. உயர்திரு.. செந்தில்குமரன்
போன்ற சமூகத்திற்கு நல்வழி காட்டுகின்ற இந்தக் குழுவிற்கு மேலும் பல நல்ல வாய்ப்புகளை மக்கள் வழங்க வேண்டும். இதனால் சமூகம் நல்ல தெளிவு பெறும்., உயர்ந்த நிலைக்கு நல்ல சமூக சிந்தனையுடன் கூடிய இளைஞர்கள் உருவாகுவார்கள் என்பது திண்ணம். பழனிக்கு அருகில் இருப்பவர்களுக்கு எப்படி அதன் அருமை எப்படி தெரியாதோ? அதைப்போல மிகச்சிறந்த பட்டிமன்ற பேச்சாளர் நமக்கு அருகில் இருந்தும் இவ்வளவு நாள் அறியாமல் இருக்கிறோம்,   
திறமையானவர்களை தட்டிக் கொடுக்க வேண்டும், அவர்களை அங்கீகார படுத்த  வேண்டும் # வாழ்த்துக்கள் உயர்திரு. செந்தில்குமரன், வாழ்க நலமுடன் , நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...