Wednesday, November 17, 2010

திருவண்ணாமலை உருவான கதை thiruvannamalai story


திருத்தலப் பெயர் :


திருவண்ணாமலை THIRUVANNAMALAI

இறைவன் : அண்ணாமலை (சிவன் sivan லிங்க உருவில்)
இறைவி: உண்ணாமலை அம்மன்

கோவில் உருவான கதை:

புராண காலத்தில் இருந்து இன்று வரை உலகை ஆட்சி செய்யும் கடவுள்களான பிரம்மா(படைத்தல்) விஷ்ணு என்னும் பெருமாள் (காத்தல் ) சிவன் (அழித்தல்) தன்னால் படைக்கப்பட்ட இவ்வுலகத்தை செவ்வனே வழி நடத்தி மக்களுக்கு பல இன்ப துன்பங்களை உணர்த்தி நல்வழிப்படுத்தி காத்து வந்தனர்.

ஒரு நாள் , மனிதனை படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும் காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் தங்களுக்குள் "யார் பெரியவர் " ..?என்ற கர்வம் ஏற்பட்டு கருத்து மோதல் ஏற்பட சிவபெருமானிடம் யார் பெரியவர் என தீர்ப்பு கேட்கலாம் என சிவனை தேடி வந்தனர். சிவன் என்ன விபரம்? எனக்கேட்க அதற்கு பிரம்மாவும் விஷ்ணுவும் தாங்கள் வந்த விஷயத்தை சொல்ல சிவபெருமான் சிரித்தவாறே உங்களுக்கு ஒரு போட்டி வைக்கிறேன் உங்களில் யார் ஜெயிக்கிறீர்களோ அவர்களே உயர்த்தவர்.! என அறிவிக்கிறேன்


என்றவாறு சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக வான் உயர்ந்து நின்று என் அடியும் (கால்அடி) முடியும் (தலைமுடி) தொட்டு விட்டு முதலாக வருபவர்களே பெரியவர் எனக்கூறி வான் உயர்ந்து நிற்க பிரம்மாவும் விஷ்ணுவும் பல நாட்கள் சிவனின் அடியும் முடியும் தேடி அலைந்து தன் தோல்வியை ஒப்புக்கொண்டு "சிவபெருமானே நீங்கள் தான் பெரியவர் " தயவு செய்து வாருங்கள் எனக் கூற இறைவன் ஜோதிப்பிழம்பாக காட்சி தந்தார் .

அந்த அற்புதத்தை நிகழ்த்திய இடம்தான் திருவண்ணாமலை THIRUVANNA MALAI வாருங்கள் அண்ணாமலை உண்ணாமலை அம்மனை தரிசித்து வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துக்கள் . 21 .11.2010 அன்று தீபத்திருநாள் நடைபெறுகிறது.
நான் சென்று பார்த்துவிட்டு மேலும் தகவல்களுடன் இக்கட்டுரையை விரிவு படுத்துகிறேன் .

விஷேச செய்தி : தீபத்திரு நாளில் அண்ணாமலை .உண்ணாமலை அம்மன் இருவரும் கிரிவலம் வந்து மக்களுக்கு காட்சி அளிப்பதாக வரலாறு.

இக்கட்டுரயில் தவறு இருப்பின் ஆன்மீகப்பெரியோர்கள் மன்னிகவும்.

சுட்டிக்காட்டவும். எதிர்கால சந்ததிக்கு எம்மால் ஆன சிறு முயற்சி .

4 comments:

சிவத்தமிழோன் said...

தங்கள் வலைப்பூ கண்டு மகிழ்ந்தேன். வாழ்த்துகள். சிவபெருமானின் திருவருள் தங்கள் எழுத்துப்பணிக்கும் சமூகப்பணிக்கும் துணை நிற்கும் என்பது திண்ணம். எல்லாம் திருவருட் சம்மதம்.

SURYAJEEVA said...

உங்கள் பக்தி உன்னதமானது, அதை நான் மறுக்கவில்லை..
மக்களிடம் பக்தியை புகுத்துவதற்கு பதில், பக்தியின் பெயரால் மக்கள் சுரண்டப் படுவதை எழுதுங்கள்..
உங்களை புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை... ஆனால் என் மனதில் எழுந்த கேள்விகள் உங்கள் பார்வைக்கு..
திருவண்ணாமலை லிங்கம் அமைந்திருப்பது இடைக்காட்டு சித்தரின் சமாதி என்று ஒரு வதந்தி உலவி கொண்டிருக்கிறது... சில சமயம் நெருப்பு இல்லாமல் புகைவது இல்லை...
மற்றும் உங்கள் கட்டுரையில் யார் பெரியவர் என்று போட்டி நடந்ததாக எழுதி உள்ளீர்கள், அப்படி தான் தல வரலாறும் கூறுகிறது...
என் கேள்வி என்ன என்றால், யார் பெரியவர் என்று தெரியாமல் போட்டியிடும் குணம் கடவுள்களுக்கும் உண்டா?
முக்காலமும் உணர்ந்த கடவுள்களுக்கு இது கூட தெரியாதா?
அண்ணாமலை யாரும் உண்ணாமுலை அம்மனும் மலையை சுற்றி வருவது, தீப திருநாளில் அல்ல, தீபம் முடிந்து மூன்று நாட்கள் கழித்து என்று நினைக்கிறேன்... காலண்டரை பார்த்தால் தெரியும்...
இங்கு என் கேள்வி என்ன என்றால் தன்னை தானே ஏன் கடவுள் சுற்றி வர வேண்டும்...

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

திரு சூர்ய ஜீவா அவர்களுக்கு, தங்கள் கருத்துரைகள் எம்மை கவர்ந்தது.பதில் தாமதமாக வந்ததற்கு மன்னிகவும் தாங்கள் கேட்ட கேள்விகள் எம்மைப் புரட்டி போட்டன .தேடல்தான் வாழ்க்கை அது போல தான் எம் ஆன்மிக ஆராய்ச்சிகளும் தேடல்களும் தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் 1. பக்தியின் பெயரால் மக்கள் சுரண்டப்படுவதை எழுதுங்கள் என்றீர்கள் தற்போது எழுதப்பட்ட யார் சித்தர் என்ற இடுகையை வாசிக்கவும் . மேலும் எழுத்தப்படும் 2. திருவண்ணாமலை லிங்கம் அமைந்திருப்பது இடைக்காட்டுச் சித்தரின் சமாதியா என்று ?அது உண்மையா பொய்யா என்று அறியும் முன் சித்தர்கள் எல்லோரும் சிவன் அம்சங்கள் என்பதை நினைவு கூர்கிறேன் .எங்கெங்லாம் புகழ் பெற்ற சிவாலயங்கள் இருக்கின்றதோ அங்கெல்லாம் சித்தர்கள் கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறியலாம் . எடுத்துக்காட்டாக திருவண்ணாமலையில் ரமணரும், யோகிராம் சுரத்குமார் போல எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்துள்ளார்கள்.அது இடைக்காட்டு சித்தர் சமாதியே என்றாலும் கூட அது சிவ அம்சம் தான் என்பதை அறிவோம் .3.யார் பெரியவர் என போட்டியிடும் குணம் கடவுளுக்கு உண்டா என கேட்டுள்ளீர்கள்? புராணங்களும் இதிகாசங்களும் நம்மை நல்வழிப்படுத்த தானே ? அது போல சிவன் தான் பெரியவர் எனச் சொல்லலாம் . ஏனெனில் சிவனின் முதல் பக்தரே பெருமாள் தான் .போட்டி பொறாமைகள் கடவுள்களுக்கு இல்லை. இறை வரலாற்றை பக்தனான நான் எப்படி மாற்ற முடியும்?அண்ணாமலையாரும் உண்ணாமலையாரும் தீபத்திருநாள் அன்றே பக்தர்களுக்காக வலம் வருவதாக கேள்விப்பட்டேன்.தவறு இருந்தால் திருத்தப்படும். கடவுள் ஏன் தன்னைத்தானே சுற்றி வர வேண்டும்? பக்தர்களுக்காக காட்சி தரத்தான் 1கோடி பேர் கூடுமிடத்தில் மக்களுக்காக இறைவன் திருவீதி உலா வந்து காட்சி தருவதாக எடுத்துக்கொள்ளலாமே? தங்கள் கேள்விகள் எம்மை நிறைய யோசிக்க வைத்தது. தங்கள் மேலான கருத்துருக்களை வருமென காத்திருக்கும் நட்பு www.kavithaimathesu.blogspot.com.் கருத்துரைகள் எம்மை கவர்ந்தது.பதில் தாமதமாக வந்ததற்கு மன்னிகவும் தாங்கள் கேட்ட கேள்விகள் எம்மைப் புரட்டி போட்டன .தேடல்தான் வாழ்க்கை அது போல தான் எம் ஆன்மிக ஆராய்ச்சிகளும் தேடல்களும் தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் 1. பக்தியின் பெயரால் மக்கள் சுரண்டப்படுவதை எழுதுங்கள் என்றீர்கள் தற்போது எழுதப்பட்ட யார் சித்தர் என்ற இடுகையை வாசிக்கவும் . மேலும் எழுத்தப்படும் 2. திருவண்ணாமலை லிங்கம் அமைந்திருப்பது இடைக்காட்டுச் சித்தரின் சமாதியா என்று ?அது உண்மையா பொய்யா என்று அறியும் முன் சித்தர்கள் எல்லோரும் சிவன் அம்சங்கள் என்பதை நினைவு கூர்கிறேன் .எங்கெங்லாம் புகழ் பெற்ற சிவாலயங்கள் இருக்கின்றதோ அங்கெல்லாம் சித்தர்கள் கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறியலாம் . எடுத்துக்காட்டாக திருவண்ணாமலையில் ரமணரும், யோகிராம் சுரத்குமார் போல எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்துள்ளார்கள்.அது இடைக்காட்டு சித்தர் சமாதியே என்றாலும் கூட அது சிவ அம்சம் தான் என்பதை அறிவோம் .3.யார் பெரியவர் என போட்டியிடும் குணம் கடவுளுக்கு உண்டா என கேட்டுள்ளீர்கள்? புராணங்களும் இதிகாசங்களும் நம்மை நல்வழிப்படுத்த தானே ? அது போல சிவன் தான் பெரியவர் எனச் சொல்லலாம் . ஏனெனில் சிவனின் முதல் பக்தரே பெருமாள் தான் .போட்டி பொறாமைகள் கடவுள்களுக்கு இல்லை. இறை வரலாற்றை பக்தனான நான் எப்படி மாற்ற முடியும்?அண்ணாமலையாரும் உண்ணாமலையாரும் தீபத்திருநாள் அன்றே பக்தர்களுக்காக வலம் வருவதாக கேள்விப்பட்டேன்.தவறு இருந்தால் திருத்தப்படும். கடவுள் ஏன் தன்னைத்தானே சுற்றி வர வேண்டும்? பக்தர்களுக்காக காட்சி தரத்தான் 1கோடி பேர் கூடுமிடத்தில் மக்களுக்காக இறைவன் திருவீதி உலா வந்து காட்சி தருவதாக எடுத்துக்கொள்ளலாமே? தங்கள் கேள்விகள் எம்மை நிறைய யோசிக்க வைத்தது. தங்கள் மேலான கருத்துருக்களை வருமென காத்திருக்கும் நட்பு www.kavithaimathesu.blogspot.com.

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

welcome sivatamilon

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...