📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.
Showing posts with label சிவதலம். Show all posts
Showing posts with label சிவதலம். Show all posts
Sunday, July 13, 2025
எம பயம் நீக்கும் ஸ்ரீ மங்களாம்பிகை உடனமர் ஸ்ரீ வாஞ்சி நாதர் திருக்கோவில் .திருவாஞ்சியம்
" புற்றில் ஆடரவோடு புனல்மதி தெற்று செஞ்சடை
தேவர் பிரான்பதி சுற்றுமாடங்கள் சூழ் திருவாஞ்சியே "
திருநாவூக்கரசர்
"ஆலயம் பற்றிப் பாடுவோர்க்கு பாவமில்லையே "
என திருக்குறுந்தொகையில் பாடியுள்ளார் .
மூலவர்:
ஸ்ரீ வாஞ்சிநாதர் ,ஸ்ரீவாஞ்சீஸ்வரர் ,
ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி என அழைக்கப்டும் சுயம்பு லிங்கமாவார்.
அம்பாள் :
ஸ்ரீ மங்களாம்பிகை எனவும் மருவார் குழலி (மாறாத மணத்தை கொண்ட கூந்தலை உடைய நாயகி ) அம்பிகை எனவும் சிறப்புப்பெயரால் வழங்கப்பெறுகிறார் .
திருக்கோவில் அமைவிடம் :
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் ஸ்ரீ வாஞ்சியம் கிராமத்தில் அமைந்துள்ளது.
செல்லும் வழி :
கும்பகோணத்திலிருந்து நன்னிலம் வழியாக நாகப்பட்டினம் செல்லும் மார்க்கத்தில் அச்சுதமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் ஸ்ரீ வாஞ்சியம் கிராமம் அமைந்துள்ளது.
தீர்த்தம் :
999 அம்சங்களுடன் ரகசியமாக உரையும் புனித குளம் குப்தகங்கை (முனி தீர்த்தம் ) இது திருக்கோவில் உட்புறத்தில் உள்ளது. திருக்கோவில் சுற்றிலும் 23 தீர்த்தங்கள் உள்ளது.
ஸ்தல விருட்ஷம் :
சந்தன மரம் விஷேச தெய்வங்கள் : ஸ்ரீ எமதர்மராஜா -யோக பைரவர் (அமர்ந்த நிலை ) அஷ்ட பூஜ மகிஸாசுரமர்தினி ,ராகுகேது ஒரே மூர்த்தியாக அமர்ந்துள்ளார்கள்
திருக்கோவில் சிறப்புகள்:
நாயன்மார்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலம் . அருணகிரிநாதர் ,இராமலிங்கசுவாமிகள் ,முத்துச்சாமி தீட்சிதர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம் .
திருக்கோவில் காலம் :
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான பழைய ஆலயமாகும் .கி.பி 946 ல் மூன்றாம் நரசிம்மன் மகன் வீரபாண்டியன் திருவாஞ்சியம் ஆலய கருவரை அமைத்ததாக கல்வெட்டின் மூலம் அறியலாம் .
ஸ்தலத்தின் மேன்மிக்க சிறப்புகள் :
மகாலட்சுமி திருமணம் செய்ய வேண்டி திருமால் ஸ்ரீ வாஞ்சிநாதரை வணங்கி தவம் இருந்ததால் ஸ்ரீ வாஞ்சியம் எனப்பெயர் பெற்றது. மூர்த்தி.தலம் ,தீர்த்தம் மூன்றும் பெற்றது , பிரம்மன் ,சூரியன் ,பெருமாள் , தேவர்கள் சிவனருள் பெற்ற ஸ்தலம் காசியை விட பன்மடங்கு மேலானது .
எமர்தர்மராஜா ஸ்ரீ வாஞ்சிநாதருக்கு வாகனமாக உள்ளார் . தனி சந்நதியில் எமதர்மராஜா அருள்பாலிக்கிறார் ,எமபயம் பைரவ உபாதை நீக்கும் ஸ்தலம் கங்காதேவி 999 கலைகளுடன் குப்த கங்கையாக உறையும் ஸ்தலம் .மகிஷாசுரமர்த்தினியை 108 தாமரை மலர்களால் அர்ச்சித்தால் அனைத்து தோஷ நிவர்த்தி . நால்வரால் பாடல் பெற்ற ஸ்தலம்
கார்த்திகை ஞாயிறு வழிபாடு :
ஸ்ரீ வாஞ்சியத்தில் குப்தகங்கை எனப்படும் முனி தீர்த்தத்தில் நீராடி கார்த்திகை மாதம் முழுதும் வழிபட்டால் மன உடன்தூய்மையுடன் சிவதுரோக பாவம் போகும் . சூரிய பகவானுக்கே பாவம் கார்த்திகை மாதம் நீராடியதால் நீங்கியதாம் .
கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடியவர்களுக்கு பஞ்சமாபாவங்களும் மன்னிக்கப்படும் என்பது சிவபெருமானின் வாக்காகும் . திருவாஞ்சிய மகாத்மியத்தில் குப்த கங்கையில் குளிக்கும் கால பலன்கள் சொல்லப்பட்டுள்ளது அதன்படி
காலை : நாற்கடல் சூழ்ந்த பூமிதானம் செய்த பலன்
மதியம் :ஆயிரம் கோடி காறாம் பசு தானம் செய்த பலன்
மாலை :கோடி பசுதானம் செய்த பலன்
இரவு : அஸ்வமேத யாகம் செய்த பலன் .
இங்கு உழவாரப்பணி செய்வது மிக உயர்ந்த புண்ணியத்தை அளிக்கிறது, கூப்பிட்டால் துயர்தீர்க்க ஓடி வருவார் : ஒவ்வொரு திருக்கோவிலுக்கும் ஓர் தனிச்சிறப்பு உண்டு ,
அந்த வகையில் சுயம்பு லிங்கமான வாஞ்சிநாதரை காசியிலும் 1000 மடங்கு பெருமை கொண்ட ஈசனை " ஸ்ரீ வாஞ்சிநாதா" அபயம் ஏற்படுகையில் கூப்பிட்டால் ஓடி வந்து துயர் தீர்ப்பார் .யாரெல்லாம் ஸ்ரீ வாஞ்சிநாதர் புராணம் வாசிக்கிறார்களோ அவர் முக்தி அடைவார் என ஸ்கந்தபுராணம் சனத்குமார ஸம்ஹிதை 58 அத்தியாயம் விளக்குகிறது.
திருவாஞ்சிய திவ்ய தீர்த்தங்கள் :
1.கிழக்கில் -பிரம்ம தீர்த்தம்
2.அக்னி திக்கில் -நாரக தீர்த்தம்
3 தெற்கில் -விஸ்வாமித்திர தீர்த்தம்
4 நிருதி திக்கில் - ஸர்வ தீர்த்தம்
5 பரத்வாஜ தீர்த்தம்
6ஷேச தீர்த்தம் வேண்டியன அளிக்கும்
7நாராயண தீர்த்தம்
8 ராம தீர்த்தம்
9 இந்திர தீர்த்தம்
10 திருக்கோவில் ஆனந்தக்கிணறு ஆகியன வாகும் .
கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வழிபட மிகப்பெரிய தோஷங்கள் விலகுமென்பது திருவாஞ்சிய மகிமைகளில் ஒன்றாகும் .
பூஜை முறைகள் :
ஆறுகால பூஜைகள் தினசரி நடைபெறுகிறது காலை 0500மணி முதல் 1200மணி வரையிலும் மாலை 0300மணி முதல்0830மணி வரையிலும் திறந்திருக்கும் .
பூஜை நேரங்கள் :காலை உஷத்காலபூஜை 0600மணிக்கும் காலசந்தி 8.30மணிக்கும் உச்சி கால பூஜை 1200மணிக்கும் சாயரட்சை0500மணிக்கும் 2ஆம் கால பூஜை 700மணிக்கும் அர்த்தசாம பூஜை 8.30மணிக்கும் நடைபெறுகிறது
ஸ்ரீ வாஞ்சிநாதரை வழிபடும் முறே :
முதலில் திருக்கோவில் புனித தீர்த்தக்குளம் குப்த கங்கையில் நீராடி அங்குள்ள விநாயகரை தரிசித்து பின் ஸ்ரீ எமதர்மராஜாவை வழிபட்டு பின் அபயங்கர விக்னேஷ்வரரை வணங்கி பின் மூலவர் ஸ்ரீ வாஞ்சிநாதர் வணங்கவும்
முடிவுரை :
ஸ்ரீ வாஞ்சிநாதா என்றால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அபயங்களில் காப்பாற்றும் வாஞ்சிநாதர் அளப்பரிய சக்தியுடையவர் . எமபயம் சாவு பயம் கொண்டவர்கள் பயத்தை நீக்கி ஆயுள் நீட்டிப்பு ஸ்தலமான ஸ்ரீ வாஞ்சியத்தில் குடிகொண்டுள்ள ஸ்ரீ வாஞ்சிநாதரை வணங்கு மிக மேலான பலன்பெற்றிடுங்கள்
" க்ரீங்கர பீஜ மிக்யுக்தம் ஸ்வாஹவசக்திரத; பரம் .
ஸ்ரீ வாஞ்சி நாதர் புராணம் படிக்க வந்த உங்களும் நன்மைகள் கிட்ட
ஸ்ரீ வாஞ்சிநாதரை வணங்கி பதிவை முடிக்கிறேன்
.நன்றி
Wednesday, March 11, 2020
வெள்ளியங்கிரி மலை தரிசனம்
வெள்ளியங்கிரி மலை பயணம் நீண்ட நாள் ஆவல் .நாம் பார்த்திராத இந்த மலையை சென்று ,பார்த்திட வேண்டும் என கடந்த மகா சிவராத்திரி 2020 அன்று கோயம்புத்தூர் சென்றேன் .
தென் கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை கோயம்புத்தூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து பூண்டி மலையடிவாரத்திலுள்ள இடத்திற்கு சென்றால் அங்கிருந்து மலை ஏற ஆரம்பிக்கலாம்.
அருகில் ஈசா யோகா மையம் உள்ளது. பூண்டி மலை அடிவாரத்திலுள்ள பூண்டி விநாயகர் வெள்ளிங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்பாள், ஆகிய சன்னதிகள் கிழக்கு நோக்கி அழகாக அமைந்துள்ளது.சுமார் ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலைப்பாதையில் நடந்தே செல்ல வேண்டிய மலைக்கோயில் ஆகும்,
இதன் உயரம் சுமார் 6000 அடி ஆகும்.இப்பாதையில் செல்லும் இடத்தில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனைகைதட்டி சுனை சீதை வனம் அர்ஜுனன் வில்,பீமன் களி உருண்டை,ஆண்டி சுனை திருநீர்மலை, ஒட்டன் சமாதிஆகிய பகுதிகளை கடந்து செல்ல வேண்டும் , மாசி மகா சிவராத்திரி யிலிருந்து சித்ரா பௌர்ணமி வரை இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
நண்பர் ஒருவருடன் சிவராத்திரி பயணத்தை ஆரம்பித்தேன்,பூண்டி மலை அடிவார விநாயகர் தரிசனம் முடித்து ஆரம்பத்திலேயே வனத்துறையின் சோதனைச் சாவடி உள்ளது, மலை மேலே ஏறும்போது தீப்பெட்டி சிகரெட் எரியும் பொருட்கள் பயன்படுத்த மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அனுமதிக்கப்படுவதில்லை,பின்பு மலை ஏறினால் முதல் இரண்டு மலைகள் கல் படிக்கட்டுகளாக பயணிக்கிறது,
மிகுந்த சவால் விடும் அளவு செங்குத்தான பயணம்,இடையில் எலுமிச்சை உப்பு கலந்த பழச்சாறு ஆங்காங்கே விற்கிறார்கள். அதையும் கடந்து பயணித்து கொண்டே இருந்தால், இடையில் குளித்து விட்டு பயணிக்க அழகிய ஓடை உள்ளது, அங்குள்ள கோவிலை தரிசனம் செய்து பின் பயணித்தால் திருநீர்மலை வருகிறது, அங்கு சில இடங்களை தோண்டி வைத்துள்ளார்கள்,அதில் சுத்தமான வெள்ளை நிறமுடைய திருநீர் மாதிரியான மண் கிடைக்கிறது.
மதியம் இரண்டரை மணிக்கு ஆரம்பித்த பயணம் மாலை 6 மணியளவில் திருநீர்மலையில் ஒரு சுக்கு காப்பி கடையில் ஒரு சுக்கு காப்பியும், தேன் மிட்டாய் வாங்கி சாப்பிட்டு பயணித்தோம், இரவு 8 மணி வரையில் நடந்து கோவிலை அடைந்தோம், முதல் நான்கு மலையில் வேர்த்துப் போன உடம்பு கடைசி மூன்று மலை வெகுவாக குளிரத் தொடங்கியது இரவு எட்டு மணிக்கு சுமார் ஆறு மணி நேர பயணத்திற்கு பின் ஏழாவது மலையான வெள்ளிங்கிரியை அடைந்தோம், நாங்கள் சென்ற நேரத்தில் அதிக கூட்டமில்லை, சுவாமி சுயம்புலிங்கமாக சிறிய லிங்கமாக காட்சி அளிக்கிறார்,
அருமையானதொரு தரிசனம் , மிக நீண்ட நாளைய ஆசை இந்த சிவதரிசனம் செய்ய வேண்டும் என்று , அது நிறைவும் செய்தாகிவிட்டது,உங்களுக்கு 45 வயதுக்குள் இருந்தால் ,மலையேற்றத்தில் ஆர்வமாக இருந்தால், சிவ வழிபாட்டில் ஆர்வமாக இருந்தால் கண்டிப்பாக வாழ்நாளில் ஒரு தடவையேனும் தரிசிக்க வேண்டிய ஆலயம், செல்லும் போது மறவாமல் 2 லிட்டர் தண்ணீர்,மூன்று வேளை உணவு,குளிருக்கு ஏதாவது ஒரு போர்வை , குளுக்கோஸ், டார்ச் லைட் மற்றும்சிற் சில உணவு வகைகளை எடுத்துச் செல்வது இந்த பயணத்திற்கு நல்லது, இந்தக் கோவிலில் மகா சிவராத்திரியும் சித்திரா பௌர்ணமியும் மிக விசேஷமாகும் அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளிங்கிரி வந்து தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் மிகுந்த கவனத்துடன் நடக்க வேண்டிய மலை, ரத்த அழுத்தம் இதய பலவீனமானவர்கள், இந்த மலை ஏற முடியாது, 10 வயதிற்கு மேலும் 40 வயதிற்கு கீழும் உள்ள பெண்கள் இந்தக் கோயிலுக்குச் செல்ல அனுமதி இல்லை ,
வெள்ளிமலை, ரசதகிரி,தென் கைலாயம்,பூலோகத்தின் கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த வெள்ளியங்கிரி மலையை வாழ்நாளில் ஒரு முறையேனும் இரண்டு நாள் பயணமாக சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்,அற்புதமான ஒரு ஸ்தலம் , வாய்ப்பு கிடைத்தால் வணங்கிவிட்டு எழுதுங்கள், ஓம் சிவசிவ ஓம் - நன்றி அடுத்த பதிவில் சந்திப்போம், குரு.பழ.மாதேசு, குருவரெட்டியூர்-638504 www.kavithaimathesu.blogspot.com

Subscribe to:
Posts (Atom)