Thursday, September 5, 2019

மரம் வளர்ப்பு

மரம்.பரமானந்தம் # 6369944630 "பத்து ஏக்கரில் பல வகை மரங்கள்" வியக்கச்செய்யும் ஐயா! -------===================------------ "ஒரு மா மரத்தில், ஐந்து கிளைகளில் ஐந்து வகையான,சுவைகளில் வேறு வேறு மாம்பழங்கள் காய்க்கின்றன." கடலூர் மாவட்டம்,திருமுட்டம் (ஸ்ரீ முஷ்ணம்) அருகில் இருக்கிறது ஆதிவராக நல்லூர். ஊரில் நுழையும் போது புளியமரங்கள் அணி வகுத்து நிற்கிறது. ஐயா கோதண்டராமன், ஆதிவராக நல்லூர் இவர்கள் மகன் கோ.பரமானந்தம் அவர்கள் வளர்த்து வரும் மரங்கள் மிகச்சிறந்த வளர்ச்சியை எட்டி நிற்கின்றன. உள்நாட்டு மரங்கள் முதற்கொண்டு, ஒட்டுரக மரக்கன்றுகள் வரை பல மரங்கள் அடர்ந்த வனமாக காட்சியளிக்கிறது. தம் முன்னோர்கள் சாலையோரம் நட்டு வைத்திருக்கின்ற புளியமரங்கள் ஊர்மக்களுக்கு இன்றும் பலனளித்து வருகிறது.அதன் தொடர்ச்சியாக, இளைப்பாறிச் செல்லும் மக்கள் உதிர்க்கின்ற குளிர்வானச் சொற்களே,தம்மை களிப்பாக வைத்திருப்பதாக கூறுகிறார் எழுபது வயதில் இளமை மிடுக்குடன் இருக்கின்ற ஐயா பரமானந்தம் அவர்கள். சந்தனம், செம்மரம், பலா ,மா, புளி, நாவல் என பல வகை மரங்கள் வானுயர்ந்து நிற்கிறது. மூலிகைகள் வேலியோரம் படர்ந்து இருக்கிறது. மிளகு கொடி மரங்களைப்பற்றி சுற்றி காய்த்து நிற்கிறது. மரங்களின் மீது கொண்ட தீராத காதலால், போகும் இடமெல்லாம் கிடைக்கும் மர வகைகளை சேகரித்து வளர்த்து வருகிறார். முப்பது ஆண்டுகள் தொய்வில்லாத தேடல்,அரிய வகையான மரங்கள் அணி வகுத்து நிற்கிறது. பொது இடங்களில் மரங்கள் நட்டு பராமரிப்பும் செய்து வருகிறார்.தோட்டத்தில் விளையும் சாத்துக்குடி பழங்கள் கொண்டு இனிப்பு ஊறுகாய் தயாரிப்பது இவரது கண்டுபிடிப்பு. ஒரு மா மரத்தில், ஐந்து கிளைகளில் ஐந்து வகையான மாம்பழங்கள் காய்க்கின்றன. ஒட்டு கட்டி மரங்களை வளர்ப்பதில் கைதேர்ந்தவர். இவரின் மரங்கள் வளர்க்கும் ஆர்வம் அனைவரையும் மரங்களின் மீதான காதலை மேலும் தூண்டச் செய்கிறது. ஐயா பரமானந்தம் போன்றோரின் செயலால் பசுமை தழைக்கட்டும். மண் குளிரட்டும். ஆலோசனை பெற்று மரம் வளருங்கள், மரம் பரமானந்தம், -6369944630 ஆதிவராக நல்லூர், ஆதிவராக (ஸ்ரீ முஷ்ணம்), கடலூர் மாவட்டம்.

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...