அண்மையில் சத்தியமங்கலம் சென்றிருந்தேன் . எண்ணிடலங்கா சிவாலயங்கள் இருப்பினும் அவைகள் நம்மால் கண்டு செல்ல முடிவதில்லை என்றோர் வருத்தம் எப்போதும் நாம் இப்போது பகிர்கிற சத்தியமங்கலம் ஸ்ரீ பவானீஷ்வரர் ஆலயம் தேடிப்பார்த்த போது கூட பதிவாக இல்லையே என வருத்தப்பட்டேன் .
சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1கி.மீ அத்தாணி சாலையில்
பவானி ஆற்றுப்பாலத்தை கடந்ததும் அழகிய ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலைஅடையலாம் . பவானி ஆற்றுப்படுகையில் அமைந்த அழகிய சிவாலயங்களில் ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவில் ஒன்றாகும் . கிழக்கு நோக்கிய அழகிய சிவாலயஅமைப்பு மற்றும் எப்போதும் வற்றாது ஓடுகிற பவானி ஆறும் அழகுக்கு அழகுசேர்க்கிற ஒன்றாகும் .
சுயம்புவாக அன்றி ரிசிகளால் தேவர்களால் பிரதிஷ்டைசெய்யப்பட்ட சிவலிங்கமாகவே தோன்றுகிறது .
அம்பிகைக்கு ஸ்ரீ சங்கரிஎன்பதே திருநாமம் .
திருக்கோவில் முகப்பில் உள்ள பஞ்சமுக விநாயகர்
சன்னதி இதுவரை காணாத சிவாலய அமைப்பிலுள்ள விநாயகராவார் . வில்வ வனமாகஇருந்த அமைப்பே பிற்காலத்தில் சிவாலயமாக மாறியுள்ளதோ என ஓர் அமைப்பு .
வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ முருகப்பெருமானின் சன்னதியும் பார்க்க
வேண்டிய அமைப்பாகும் . புதிய சிவாலயங்கள் தேடி வழிபடுபவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய சிறப்பு மிகு ஆலயமாகும் . வாய்ப்பு கிடைக்கையில் வந்து தரிசித்து செல்லுங்கள் .
ஸ்ரீ சங்கரி உடனமர் பவானீஷ்வரர் அருள் பெற
விழைகிறேன் . ஓம் சிவ சிவ ஓம்