Wednesday, June 18, 2014

ஸ்ரீ அறப்பளிஸ்வரர் திருக்கோவில் ஸ்தல வரலாறு

"அடியவர்கு அமுதமே ! மோழை பூபதி பெற்ற அதிபன் ,
 எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைத்தரு
சதுரகிரி வளர் அறப்பளிஸ்வர தேவனே !

                                                                                                          (அறப்பளிஸ்வர சதகம் )


 ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனமர் அறப்பளிஸ்வரர்                                              திருக்கோவில் ஸ்தலம் ,


            பெரிய கயிலூர் ,வளப்பூர் நாடு , கொல்லிமலை ,



அழகிய இத்திருக்கோவில் நாமக்கல் வட்டம் ,நாமக்கல் மாவட்டத்தில்
அமைந்துள்ளது .


 மூலவர் : 

ஸ்ரீ அறப்பளீஷ்வரர் (சுயம்பு )

 அம்பிகை :

அறம் வளர்த்த நாயகி

 வழி :


சேலத்தில் இருந்து ராசிபுரம் வழியாக 90கி.மீ
தொலைவிலும் நாமக்கல்லில் இருந்து 65 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள்ளது .சுமார் 70 கொண்டை ஊசி வளைவுகள கொண்ட ஆன்மீக மற்றும் சுற்றுலா தலமாக அமைப்பெற்றது கொல்லி மலையாகும் . இராசிபுரம் நாமக்கல் மாவட்டத்தில் 17மைல் நீளம் உடையதாக பரந்து விரிந்த பரப்பளவில் அமையப்பெற்ற மலையாகும் .


2000ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்திய புலவர்களால் பாடல் பெற்ற
ஸ்தலம்."கொல்லி ஆண்ட குடவர் கோவே " என சிலப்பதிகார வரிகளால் இது சேரர்கள் வம்சத்திய காலத்திலேயே புகழ் பெற்றதென அறியலாம்.

அறப்பளிஸ்வரர் :

 வள்ளல்வல்வில் ஓரி ஆண்ட கொல்லிமலையின் ஒர் பகுதியே அறப்பள்ளி என்பதாகும் .அறப்பள்ளியில் சுயம்புவாக எழுந்தருளிய சிவபெருமானுக்கு அறப்பளிஸ்வரர்எனப்பெயர் பெற்றது .

 1300ஆண்டுகளுக்கு முன்னர் தேவாரத்தில்
திருஞானசம்பந்தரும் ,திருநாவூக்கரசர் பெருமானும் பாடல் பெற்ற ஸ்தலமாகும். அறப்பள்ளி என்கிற தேவாரத்தில் காணலாம்.

புராணப்பெருமை : 


அறைப்பள்ளி திருக்கோவில் அமைந்துள்ள இடத்தில் விவசாயி
ஒருவர் கலப்பையினால் உழுதபோது சிவலிங்கம் சுயம்புவாக தோன்ற பின்
திருக்கோவில் கட்டி பூஜைகள் ஆரம்பிக்கபட்டதாக வரலாறு . தற்போதும்
சிவலிங்கத்தின் உச்சியில் காயம்பட்ட தழும்பு உள்ளது . ஆலயத்தின்
அருகிலுள்ள பஞ்சநதியில் மீனைப்பிடித்து மூக்கு குத்தி விளையாடுகிறனர்
அதற்கு ஓர் பழங்கால கதையும் உண்டு .

 ஒருவர் மீன் சமைக்கும் போது கொதிக்கிற குழம்பிலிருந்து உயிருடன் மீன்கள் தாவி ஓடியதாக குறிப்புகளுண்டு " அறுத்த மீனைப் பொருத்தி உயிர்பித்த அறப்பளீஷ்வரர் என பெயர் வழங்கப்படுகிறது .

 அம்பிகையும் தலச்சிறப்பும் : 


 தாயம்மை என்றும்,அறம் வளர்த்த நாயகி என்றும் அம்பிகைக்கு பெயருண்டு . மூர்த்தி,ஸ்தலம்,தீர்த்தச்சிறப்புகளை கொண்ட ஸ்தலமாகும் . ஓர் அழகிய சிவாலய அமைப்புடன்விளங்குகிற ஸ்ரீ கொல்லிமலை அறப்பளிஸ்வரரை இராஜராஜ சோழனின் பாட்டியார்செம்பியன் மாதேவியார் ,கண்டராத்தித சோழர் ஆகியோர் வந்து வணக்கியதாககல்வெட்டு குறிப்புள்ளது .

 ஆடி 17,18,19 ஆகிய 3 நாட்களும் ஆண்டு
திருவிழாவாக கொண்டாடப்படுகிறது .

 திருக்கோவில் திறப்பு நேரம் : 


காலை 7.00மணி முதல் மதியம் 1.00மணிவரை
 பிற்பகல் 2.30மணி முதல் இரவு 7.00மணி
வரை திறந்திருக்கும் . திருவிழா காலங்களில் காலை 6.00மணி முதல் இரவு
10.00மணி வரை திறந்திருக்கும் .

 முடிவுரை : 


 அருணகிரி நாதர் ,திருநாவுக்கரசர் ,திருஞான சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்றதேவாரத்திருத்தலங்களில் ஒன்று .பல்வேறு மூலிகைகளை கொண்ட அற்புத மலை ,உடன் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி என எங்கும் பசுமையை போர்த்திக்கிடக்கிற கொல்லிமலை ஓர் அரிய பொக்கிசம் , சுயம்புவான அறப்பளீஷ்வரரை வணங்கி இன்புருங்கள் .நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...