Sunday, April 13, 2014

ஸ்ரீ பெரியநாயகி உடனமர் மகிழீஸ்வரர் திருக்கோவில் ,பெருந்தலையூர்,

                                    ஸ்ரீ மகிழீஸ்வரர் திருக்கோவில்    



அமைவிடம் :

 ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் பெருந்தலையூர் திருக்கோவில் அமைந்துள்ளது . இது ஈரோட்டிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் கவுந்தப்பாடியில் இருந்து 7 கி.மீட்டர் தொலைவில் பெருந்தலையூர் அமைந்துள்ளது .

 கொங்கு நாட்டின் புகழ் பெற்ற பவானி ஆறு சத்தியமங்கலத்தில் இருந்து பவானி கூடுதுறை வரைஆற்றுப்படுக்கையில் 5 புகழ்பெற்ற சிவாலயங்கள் அமைந்துள்ளது . பழங்கால சிறப்பு பெற்ற சுயம்பு லிங்கமான ஸ்ரீ மகிழீஸ்வரர் திருக்கோவில் 2000ஆண்டுகள் பழமையானது .



சங்ககால நூலான நற்றிணையின் ஆசிரியரான பெருந்தலை
சாத்தனால் இவ்வூரின் பெருமையை குறிப்பிட்டுள்ளது. சிவபெருமானுக்கு
திருமகிழ்வனமுடைய நாயனார் ,ஸ்ரீ பிரகன்நாயகி என்ற திருநாமங்கள் உண்டு .

பழங்காலத்தில் மகிழமரங்கள் அதிகமிருந்ததால் சிவபெருமானுக்கு இந்த
திருநாமம் அமைந்திருக்கிறது . பாண்டியர்காலத்தில் உருவான திருக்கோவில்பின் நாயக்கர்கள் காலத்தில் விரிவாக்கம் பெற்றுள்ளது .

 திருக்கோவில்அமைப்பு :

திருக்கோவில் முகப்பில் ஸ்ரீ விநாயகர் சன்னதியும் அதை கடந்து
சென்றால் கிழக்கு நோக்கிய நீண்ட பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய
சுயம்புலிங்கமாக ஸ்ரீ மகிழீஸ்வரபெருமான் அருள்பாலிக்கிறார் .
திருக்கோவில் எதிரில் அழகிய பவானி ஆறு ஒடுகிறது .

திருக்கோவில்உள்முகப்பில் முன்னே கொடிமரம் , ஸ்ரீ நந்தீசர் வலப்புறம்
ஸ்ரீதட்சிணாமூர்த்தி ,சண்டிகேசர் , நவகிரகங்கள் , காலபைரவர் என
திருக்கோவில் பழங்கால சிவாலய அமைப்பை பறைசாற்றுகிறது . அருகே அம்பிகைஸ்ரீ பெரியநாயகிக்கு தனி சன்னதி அமைந்துள்ளது .

 திருக்கோவில் அருகேஅருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஸ்ரீ பொன்னாச்சியம்மன் ஸ்ரீ கூத்தாண்டைமாரியம்மன் ஆகிய திருக்கோவில்கள் அமைந்துள்ளது.

முடிவரை :

பழங்கால சிவாலயங்களில் சிறப்பு பெற்ற ஸ்ரீ மகிழீஸ்வரர் திருக்கோவில் ஒருமுறேயேனும் தரிசிக்க வேண்டிய ஆலயம் .நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...