📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.

Friday, April 11, 2014

சித்தர்கள் அருளிய எண்ணைய் குளியல்

பழங்காலத்தில் மனிதன் நோயின்றி வாழ பல வழிகளை சித்தர்கள்
எடுத்துரைத்தார்கள். எண்ணைய் தேய்த்து குளித்தால் உடலுக்கு நல்லது என
அதற்கான வழிமுறைகளை உருவாக்கினார்கள் . அதனாலேயே அவ்வையார் சனி நீராடு என எடுத்துரைத்தார்கள் .

 சரி சனி நீராடு என சொல்லிவிட்டால் போதுமா ?
அதற்கான சித்தர்கள் கூறிய வழி என்ன என்பதை விளக்கவே இந்த பதிவு !


தயாரிப்பு முறை :

 முதலில் நல்லெண்ணெய் 200 மில்லியில் 20 கிராம்
சீரகத்தை போட்டு லேசாக சூடாக்கவும் . பின் இளஞ்சூடானதும் எடுத்து
சீரகத்தை வடிகட்டி ஆற வைத்து உடலின் தலையில் ஆரம்பித்து எல்லா
இடங்களிலும் தேய்த்து நிழலில் உட்காரவும் .

 வெயிலுக்கு வந்தால் உடலில் எண்ணைய் உள்ளே இறங்காமல் வெளியேறி எண்ணெய் குளியலை பயனில்லாமல் போகும் .காலை சூரிய உதயமான 6 மணிமுதல் 8 மணிக்குள் நமக்கு உகந்த ஒரு மணிநேரம்
எண்ணையில் உடலை ஊறவைக்கவேண்டும் .

பின் பெரிய அண்டாவில் சுடுதண்ணீர் இளஞ்சூடாக காய்ச்சி குளிக்க வேண்டும். அரப்பு ,சீயக்காய் தலைக்கு தேய்த்து குளிக்க உடல் குளிர்ச்சியாகும் . குளித்த பின்பு 200 மில்லி இளஞ்சூடான தண்ணீர் அருந்த உள்சூடு சமப்படும்.

எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நாட்கள்

ஆண்கள் :புதன் ,சனி

 பெண்கள்  :செவ்வாய் ,வெள்ளி

 எண்ணெய் தேய்த்து குளித்த அன்று ஆகாதவை : பழைய சாதம்
, மோர் ,தயிர் ,இளநீர் போன்ற உடலை குளிர்ச்சி ஊட்டம் பொருட்கள் ஆகாது .
இவைகளை சாப்பிட்டால் சளி காய்ச்சல் வர வாய்ப்புகளுண்டு ..

சரி எண்ணைய் குளியல் அன்று என்ன சாப்பிடலாம் ?

 சூடான உணவு வகைகள் , மட்டும் சாப்பிடவும் , அன்றைய தினம் உடலுறவு கொள்வதால் உடல் தளர்ச்சியுறும் .ஆக அதையும் தவிர்த்து உடலை மேன்மையுடையதாய் ஆக்குங்கள் .

 எண்ணெய்  தேய்த்து குளிப்பதால் உண்டாகும் நன்மைகள் :

உள்சூடு கணச்சூடு சமனாகிறது .அல்சர் போன்ற வயிற்று புண்கள் மெல்ல சரியாகிறது . சரிரம் எண்ணெய் படுவதால் மூலம் போன்ற கொடிய நோய்கள் உருவாகாது. பொதுவாக சூட்டினால்உண்டாகும் நோய்கள் உருவாகமல் உடலை பாதுகாக்கிறது .

யார் எண்ணெய்தேய்த்து குளிக்ககூடாது :

சைனஸ் , ஆஸ்துமா , காசநோயளிகள் சித்த
மருத்துவர்களின் ஆலோசனைப்படு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்

முடிவுரை :

சித்தர்கள் சொல்லிச்சென்ற எண்ணெய் தேய்த்து குளிக்கும் முறையில் நான்
அறித்தவற்றை உங்களுக்கு கூறியிருக்கிறேன் . மேலும் தகவல்கள் விட்டு
இருப்பின் விரிவாக்கப்படும் ,நீங்களும் பின்னூட்டத்தில்
கருத்துரையிடுங்கள் . மனிதன் நோயில்லாமல் வாழ வேண்டும் .

எண்ணெய் குளியல் தானே என அலட்சிய படுத்து பலர் பைல்ஸ் போன்ற நோய்களில் சிக்கி அவதிப்படுகின்றனர் . 48 சனிக்கிழமைகள் நீங்களும் எண்ணெய் தேய்த்துகுளியுங்கள் , தேகம் தங்கமாக மின்னும் . நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
நன்றி

2 comments:

Anonymous said...

Hello, this weekend is pleasant in favor of me, because this
occasion i am reading this fantastic educational post here at my
residence.

M. நேத்ரா மாதேஸ்வரன் குருவரெட்டியூர் - 638504 said...

நன்றி நட்பு

எனது இடுகை பதிவுகள்

பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்