
அருள்மிகு வேதநாயகி அம்மன் சன்னதி
(sri vethanayaki amman temple )
ஈரோடு (erode) மாவட்டம் பவானியில் (bhavani) காவிரிஆறும் (kaveri river ), பவானி ஆறும் ( bhavani river) சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள அம்பாள் சன்னதியாகும்
கூடுதுறை (kududurai) என்றும் சங்ககாலத்தில் "திருநணா " என்றும் அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் இறைவியின் திருக்கோலம் அழகானதாகும். சங்கமேஸ்வரரை பற்றி முன்பே இடுகையில் எழுதப்பட்டுள்ளதால் இந்த இடுகையில் அம்மனின் அற்புதங்களை காண்போம்.
சங்கமேஷ்வரர் ஆலயத்தில் உள்ள வேதநாயகி அம்மன் ஆலயத்தில் தூண்களும் சிற்ப வேலைப்பாடுகளும் அழகானதாகும். குறிப்பாக உள் சிற்ப வேலைப்பாட்டில் " சிரிக்கும் சிலை" பெண் உருவத்தில் நாம் பார்க்கும்போது நம்மைப்பார்த்து சிரிக்கும் சிலையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது .
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கி.பி 1804 ல் கோவை மாவட்ட கலெக்டாராக இருந்தவர் சர் வில்லியம் கேரோ ((villiam kero) (தற்போது பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையாக கோவிலுக்கு வெளியே உள்ளது) இக்கட்டிடத்தில் தங்கி இருந்தார்.
ஒருநாள் இரவு பலத்தமழை கொட்டியது. பலத்த மின்னலும் இடியும் இடிக்க பவானி நகரமே அதிர்ந்து .நள்ளிரவு தாண்டியும் இடியும் மழையும் பவானியை நனைக்க கலெக்டர் சர் வில்லியம் கேரோ உள்ளே ஒய்வில் இருந்தார்.
அப்போது கலெக்டர் தங்கி இருந்த அறை கதவு படபடவென சத்தம் கேட்டு கதவை திறந்து வெளியே வந்த கலெக்டர் கேரோ ஒர் சிறுமி நிற்பதைக்கண்டு ஆச்சர்யமாகி பார்க்க அச்சிறுமி அவர் கையை பற்றி இழுத்து அவர் தங்கி இருந்த கட்டிடத்தின் வெளியே கூட்டி வந்து நிறுத்தியது.
ஏதோ சொல்லப்போகிறது இந்த சிறுமி என்றவாறு வியப்புடன் வந்த கலெக்டர் கேரோ என்னவென்று கேட்ட வேளையில் கலெக்டர் கேரோ தங்கி இருந்த மாளிகை இடிந்து விழுந்து சுக்கு நூறாகிப்போனது. அதைப்பார்த்த கலெக்டர் கேரோ அதிர்ந்து பயந்து கூச்சலிட்டவாறு நிற்க மழையும் நின்றிருந்த குளிர்வேளையில் சிறுமிக்கு நன்றி சொல்ல திரும்பி பார்த்த போது அச்சிறுமியை காணவில்லை.
கலெக்டரின் சப்தம் கேட்டு காவலர்களும் அக்ரகாரத்தின் கோவில் அய்யர்களும், சிவனடியார்களும் கூடிவிட கலெக்டரிடம் விபரம் கேட்க அவர் தன்னை ஓர் சிறுமி வந்து காப்பாற்றியதை ஆச்சர்யத்துடன் சொன்னார். கோவில்குருக்களுக்கு புரிந்தது .இது வேதநாயகி அம்மன்தான் சிறுமியாக வந்து உங்களை காப்பாற்றியது எனச்சொல்ல அப்படியா ..?
எனக்கேட்ட கலெக்டர் அப்படி எனில் அச்சிறுமியை பார்க்க வேண்டும் எனக்கூற அவர் ஆலயத்தில் நேரில் தரிசனம் வேண்டாம் பக்கவாட்டில் துளையிட்டு காண்பியுங்கள் எனச்சொல்ல அடுத்த நாள் வேதநாயகி அம்மன் சன்னதியில் இடப்பக்கம் மூன்று துளையிட்டு ( இத்துளை இன்றும் உள்ளது ) அம்பாள் திருஉருவம் காட்டப்பட்டது.
அதைப்பார்த்த ஆங்கிலேய கலெக்டர் சர் வில்லியம் கேரோ தன்னைக்காப்பாற்றிய சிறுமியின் உருவத்தில் வேதநாயகி அம்மனைக்கண்டு உள்ளம் மகிழ்ந்து. உங்கள் கடவுளின் அருட்பார்வை பெரியது நான் ஏதேனும் வேதநாயகி அம்மனுக்கு பரிசாக தர விரும்புகிறேன்.
கோவிலுக்கு வேண்டிய ஏதேனும் ஒன்றைகேளுங்கள் எனக்கூற அதற்கு கோவில் குருக்கள் வேதநாயகி அம்மன் உற்சவர் ,சங்கேmaஸ்வரர் உற்சவர்களுக்கு "ஊஞ்சல் தொட்டில்" தர ஆவணம் செய்யுமாறு கேட்க, அதைக் தொடர்ந்து கலெக்டர் அழகான ஓர் ஊஞ்சல் தொட்டில் தந்தத்தினால் நேர்த்தியாக தயார் செய்து அன்புப் பரிசாக வேதநாயகி அம்மனுக்கு பரிசாக தன் கையொப்பம் இட்டு கி.பி 11.01.1804 தந்தார்.
அவர் தந்த தந்ததினாலான உஞ்சல் தொட்டில் இன்றும் உள்ளது வேதநாயகி சன்னதியில் உள்ளத சிறப்பாகும்.
இரவு பள்ளியறை பூஜை முடிந்ததும் அருள்மிகு சங்கமேஸ்வரர் ,வேதநாயகி அம்மன் உற்சவர்கள் ஆங்கிலேயக் கலெக்டரால் தரப்பட்ட ஊஞ்சல் தொட்டிலில் வைத்து ஆராதிப்பது விஷேசமாகும்.
இன்றும் உள்ள இந்த உஞ்சல் தொட்டில் வேதநாயகி அம்மன் சன்னதியின் இடப்புறம் உள்ளது.
தமிழ் மாதத்தின் முதல் நாள் திருமணம் ஆகாத ஆண்,பெண்களுக்கு சிறப்பு பூஜை காலை 0600 முதல் 0800மணிவரை நடைபெறுகிறது.
3மாதம் தொடர்ந்து பலவகையான பழங்கள்,இரண்டு மாலைகளுடன் ஜாதகத்துடன் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்தால் திருமணம் தடையின்றி நடைபெறுகிறது.
பவானிக்கு வாருங்கள் வந்து தரிசித்து
அருள்மிகு வேத நாயகி அம்மன் அருள் பெற்றுச் செல்லுங்கள்.
அன்புடன்
குரு.பழ.மாதேசு.
3 comments:
இந்த அம்மன் நினைவாகத்தான் எனக்கு எனது தாத்தா 'வேத நாயகன்' என பெயர் வைத்தாராம்.
எனது பெயர் வேதநாயகி எனது சொந்தவூர் சீர்காழி நான் ஒரு வைணவ குடும்பத்தில் பிறந்தவள் ஆனால் சிறு வயசு முதல் விபூதி தொடவே மாட்டேன் நாமம் வழிபாடுதான் என்னை அப்பன் ஈஸ்வரன் ஆட்கொண்டது 28வது வயதிஇல் அப்போது கேட்பேன் என்பேரின் அர்த்தம் எனவற்று ஆனால் திருமணம் ஆகி நான் வந்ததோ கோயம்பத்தூர்அங்கு தான் சங்கமேஸ்வரர் கோயில் வேதநாயகி அம்மன் கோயில் தெரிஞ்சிகொண்டேன் எனது தாயின் கருவே பெருமாள் பேரோ சிவனின் துணைவி பேர் இது எல்லாம் என் அப்பனின் ஆசிர்வாதம் என்னை சூழ்ந்து அவர் ஆட்கொண்ட போது உணர்ந்தேன் எல்லாம் என் அப்பனின் செயல் என்றே அவரை நான் துதிப்பேன் என்றே நான் கருவாக இருந்தா போதே உருவானது போல என் பெயர் வேதநாயகி அதை சொல்லவே பெருமையா இருக்கு அப்பன் அருளா இதும் நடந்தது என்றே நமச்சிவாய
எனது பெயர் வேதநாயகி எனது சொந்தவூர் சீர்காழி நான் ஒரு வைணவ குடும்பத்தில் பிறந்தவள் ஆனால் சிறு வயசு முதல் விபூதி தொடவே மாட்டேன் நாமம் வழிபாடுதான் என்னை அப்பன் ஈஸ்வரன் ஆட்கொண்டது 28வது வயதிஇல் அப்போது கேட்பேன் என்பேரின் அர்த்தம் எனவற்று ஆனால் திருமணம் ஆகி நான் வந்ததோ கோயம்பத்தூர்அங்கு தான் சங்கமேஸ்வரர் கோயில் வேதநாயகி அம்மன் கோயில் தெரிஞ்சிகொண்டேன் எனது தாயின் கருவே பெருமாள் பேரோ சிவனின் துணைவி பேர் இது எல்லாம் என் அப்பனின் ஆசிர்வாதம் என்னை சூழ்ந்து அவர் ஆட்கொண்ட போது உணர்ந்தேன் எல்லாம் என் அப்பனின் செயல் என்றே அவரை நான் துதிப்பேன் என்றே நான் கருவாக இருந்தா போதே உருவானது போல என் பெயர் வேதநாயகி அதை சொல்லவே பெருமையா இருக்கு அப்பன் அருளா இதும் நடந்தது என்றே நமச்சிவாய
Post a Comment