📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.

Friday, February 22, 2013

ஸ்ரீ வேலாயுதசாமி திருக்கோவில். வட்டமலை ,குமாரபாளையம்

குன்று தோறும் குமரன் இருக்குமிடம் என்ற பெரியோர்களின் வாக்கிற்க்கு
இணங்க குமாரபாளையத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில் சுமார் 4
கி.மீட்டர் தொலைவில் நான்கு வழிச்சாலை அருகிலேயே வட்டமலை அமைந்துள்ளது.


ஜே.கே.கே நடராஜா கலை அறிவியல் கல்லூரி பஸ்ஸ்டாப் எதிரே சிறிது தூரம் நடந்து சென்றால் சிறிய குன்றில் திருக்கோவில் அமைந்துள்ளது. 75படிகள் கொண்ட சிறிய குன்றில் படி ஏறி சென்றால் திருக்கோவிலை அடையலாம் .


புதிதாக திருக்கோவில் வேலைப்பாடுகள் நடந்து அழகே அமையப்பெற்றுள்ளது. வட்டமலையில்
முருகர் வேலாயுதசாமியாக மூலவர் வீற்றிருக்கிறார் .

 திருக்கோவில் மேலே செல்ல கார் பைக் வாகனங்கள் பாதையும் உண்டு. பளிங்கு கற்களால் அழகாக அமைக்கப்பட்ட திருக்கோவில் ,கணபதி காசி விஸ்வநாதர் ,நவகிரகங்கள் என  தனிச்சன்னதிகள் அமைந்துள்ளது .

 குமாரபாளையத்தில் பார்க்க வேண்டிய
ஆலயங்களில் வட்டமலை முருகர் திருக்கோவிலும் ஒன்று . திருக்கோவில்
வளாகத்தில் ஆங்காங்கே மயில்கள் விளையாடுகின்றது.

புதுப்புது முருகர்
ஆலயங்கள் தரிசிக்க வேண்டுபவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் வட்டமலை, முருகருக்குரிய செவ்வாய்கிழமை, கிருத்திகை ,தைப்பூசம் ஆகிய நாட்கள் கூட்டம் வருகிறது.

வட்டமலை திருக்கோவில் ஆண்டவர் மலை எனவும் மக்கள்
அழைக்கின்றனர். வாய்ப்பு கிடைக்கும் போது வந்து வணங்கிச்செல்லுங்கள்


.ஓம் முருகா சரணம் முருகா

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

சிறப்பான ஆலயம் பற்றிய தகவல்களுக்குப் பாராட்டுக்கள்..

எனது இடுகை பதிவுகள்

பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்