
அண்மையில் ஓர் கைரேகை ஜோதிடம் பார்க்கும் ஓர் நிபுணரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சாலமன் ரேகை என்ற ஒன்றைப்பற்றி சில விளக்கங்களை சொன்னார். அதைப்பகிரவே இந்தப்பதிவு.
கைரேகை சாஸ்திரத்தில் ஒர் மனிதனின் கைகேகையில் சாலமன் ரேகை என்ற ஒன்று இருந்தால் எதிர்காலத்தை முன் உணரும் சக்தி உடையவராக இருப்பார் என்றும். 26 உயிர்களின் உணர்வுகளை அறிந்தவராக அவர் இருப்பார் என்றும் ,புலனாய்வு துறையிலும் துப்பறியும் துறையிலும் சிறந்து விளங்குவார் என்றும், மனிதர்களை உற்று கவனித்து அவர்களுக்கு சில விஷயங்களை நடப்பதற்கு முன்பே கூறும் சக்தி உடையவராக இருப்பார் என்றும் கைரேகை ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதாம் சரி உங்களுக்கு சாலமன் ரேகை உள்ளதா என அறிய அருகில் உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
ஆண்கள் வலது கையையும் பெண்கள் இடது கையையும் பாருங்கள் .அதில் குருமேடு என்பது பெருவிரல் அருகிலுள்ள ஆள்காட்டி விரலில் கீழ்பகுதியில் உள்ள மேடாகும். (படத்தில் பேனாவில் குறித்துள்ள படி இருப்பது குருமேடு.அதில் கீழ் நோக்கியவாறு கோடுகள் இருப்பதே சாலமன் ரேகையாகும்) சாலமன் எனும் ஓர் அரசருக்கு முன் உணரும் சக்தி இருந்ததாகவும் அவர் பெயராலேயே சாலமன் ரேகை என அழைக்கப்பட்டதாம்.
சுவாரஷ்யத்திற்காக உங்கள் கையை சோதித்துப்பாருங்கள் , நீங்களும் சாலமனாக இருக்கலாம். சாலமன் ரேகைக்கு "சக்திரேகை" எற்று மற்றொரு பெயரும் உள்ளது. கருத்துரைகளில் குட்டலாம்.
4 comments:
படத்தை காணவில்லை நண்பா
படம் போட்டாச்சு தல பார்த்துட்டு சொல்லுங்கோ..!
குருமேடு.அதில் கீழ் நோக்கியவாறு கோடுகள் இருப்பதே சாலமன் ரேகையாகும்//
குரு மேட்டுக்குள் கோடு எங்கிருந்தாலும் அது சாலமோன் ரேகை தானே? அந்த கோடு கீழ் நோக்கித்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை என்பது அடியேன் கருத்து
Its a single line in my left hand forefinger come across from the same portion tats in picture.. is tat soloman line??
Post a Comment