📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.

Wednesday, June 18, 2014

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி கொல்லிமலை

கொல்லிமலை ஸ்ரீ அறப்பளிஸ்வரர் திருக்கோவில் நேர் எதிரே சுமார் 720
படிக்கட்டுகள் செங்குத்தாக இறங்கிச் சென்றால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை
தரிசிக்கலாம் .திருக்கோவில் வடபுறத்தில் 5 நதிகள் ஒன்றாக கூடி வருவதால்
பஞ்ச நதி என அழைக்கப்படுகிறது .

 பின் ஆகாய கங்கையாக மாறி 150 அடி
உயரத்திலிருந்து அழகாக நீர்வீழ்ச்சியாக விழுகிறது . அறப்பளீஸ்வர் மீன்
உருவமாக உள்ளார் என்பது புராணம் உணர்த்தும் உண்மையாகும் . ஆடி 18 அன்றுபெருங்கூட்டம் இங்கே வந்து சந்தோஷமாக குளித்து ஸ்ரீ அறப்பளிஸ்வரரை வணங்கி
மகிழ்கிறார்கள் .

ஏப்ரல் மே ,ஜீன் மாதங்கள் குறைந்த அளவே நீர் வருகிறது
. ஜுலை மாதங்களில் மழைக்காலங்களில் சீசன் ஆரம்பிக்கிறது .ஆகாயகங்கைநீர்வீழ்ச்சி துறையூர் முசிறி சென்று காவிரியுடன் கலக்கிறது . 5 ரூபாய்டிக்கெட் கொடுத்து படிகளில் செங்குத்தாக இறங்கி சென்றால் பல மூலிகைகள்,இதமான குளிர்ச்சி , நீண்டு உயர்ந்த சுற்றிலும் மலை என ஏதோ குகைக்குள்செல்வது போன்ற உணர்வு நமக்கு .

 இங்குள்ள 720 படிகள் தாண்டியதும் உயர்ந்த இடத்திலிருந்து அருவி கொட்டுவது காணற்கரிய காட்சி . இங்குள்ள பாறைகளில் வழுக்கி விழுபவர் பலருண்டு , ஆகவே குளிக்க செல்பவர்கள் ஆல்கஹால்களை அளவே உபயோகிப்பது நன்று . இரண்டு நாள் பயணமாக வருவது நல்லது. இங்கே சில ரிசார்ட்டுகள் தங்கவும் அமைந்துள்ளது .

 படகு இல்லம் ,மூலிகைப்பண்ணை என பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. மலையில் விளையும்தாணியங்கள் இரண்டு இடங்களில் விற்கப்படுகிறது . திடிரென வரும் வாகனங்கள்
70 கொண்டை ஊசி வளைவுகள் என சில ஆபத்தும் உள்ள இடம் கவனமாக செல்வது நலம். சீசன் உள்ள நாட்களில் சென்றால் குளித்து மகிழ உகந்த இடமாககொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது .

 பார்க்க வேண்டிய இடம். ரசித்து கருத்திடுங்கள். நன்றி

No comments:

எனது இடுகை பதிவுகள்

பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்