Sunday, October 2, 2011

அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில், பாலமலை,. கொளத்தூர் , சேலம் மாவட்டம் Arulmigu palamalai sri sidheswaran temple,kolathur,mettur taluk






பாலமலை அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில்

palamalai sri sidheswara temple; kolathur,

mettur taluk salem district

இயற்கையின் அழகில் நம்மை மயக்கும் ஓர் அற்புத மலைக்கோவிலாகும் .

மூலவர் :- ஸ்ரீ சித்தேஷ்வரர்

அமைப்பு :-



சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் கொளத்தூரில் இருந்து தொடங்கும்
பாலமலை ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூர்
30கி.மீட்டர் வரையிலும் குருவரெட்டியூரில் இருந்து ஊமாரெட்டியூர்
நெரிஞ்சிப்பேட்டை வழியாக சென்று மேட்டூர் வரை 30கி.மீட்டர்
என பாலமலையின் எல்லைப்பகுதியாக அடந்த வனப்பகுதியாகவும்,

மேற்குத்தொடர்ச்சி மலையின் தனித்து விடப்பட்ட
7 மலைகள் அமைந்த தனிமலையாகவும் அமைந்துள்ளது.
மலையின் சுற்றளவு சுமாராக 80கி.மீட்டர் இருக்கும் .
உயரம் சுமார் 4000அடி முதல் 5000 அடி இருக்கும் ,

பாலமலை சித்தேஸ்வர மலை சேலம்.ஈரோடுமாவட்ட எல்லையில்
இருக்கின்ற ஒர் அழகிய மலையாகும்.
பாலமலை யின் 7 வது மலையின் உச்சியில்
ஸ்ரீ சித்தேஷ்வரர்க்கு அழகான திருக்கோவிலை உருவாக்கி இருக்கிறார்கள்.


திருக்கோவில் உட்பிரகாரத்தில் மூலராக சித்தேஸ்வரரும் உடன் ஸ்ரீவிஷ்ணுவும் ,ஸ்ரீமாதேஷ்வரர் அமர்ந்து வரும் பக்தர்கள் துபர் தீர்க்கின்றனர். திருக்கோவில் பிரசாதமாக திருநீரும் அழகிய மலைப்பூக்களையும் தருகிறார்கள் .
ஏழாவது மலையின் உச்சியில் சதுர வடிவில் திருக்கோவிலை
தரிசனம் செய்ய பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக
பாதுகாப்பாக திருக்கோவில் அமைந்திருக்கிறது.

திருக்கோவில் ஒருநிலைக் கோபுரமாகவும் வடக்கு நோக்கி அமைந்துள்ளது.
ஸ்ரீ சித்தேஷ்வரர் எதிரே நந்தீஸ்வரர் சிலை அழகானது.
ஸ்ரீசித்தேஸ்வரர் எதிரே உள்ள ஸ்ரீதிருக்கொடி அம்மன் ,
தேள்சாமி, ஸ்ரீஆஞ்சநேயர் சிலை, சிறு நந்திகளின் சிலைகள்
பக்தர்களால் வழங்கப்பெற்ற வேல்களும் அழகானதாகும்.

திருக்கோவில் தோன்றிய வரலாறு :-



பழங்காலத்தில் உணவுக்காக கிழங்கு பறிக்க சென்ற மலைவாழ் மக்கள் தற்போது ஸ்ரீசித்தேஸ்வரர் அமைந்துள்ள இடத்தில் கடப்பாறையால் குத்தும்போது
அங்கிருந்த சித்தேஷ்வரர் சுயம்பு மூர்த்தியின்
சிறிய லிங்க வடிவத்தின் மேல் பட்டு பால் வந்ததாகவும் பதற்றப்பட்டு ,
பின்னர் அந்த இடத்தை சுத்தம் செய்து பார்த்த போது அங்கே
தற்போதுள்ள ஸ்ரீ சித்தேஷ்வரர் சிலை இருந்ததாகவும் அன்றிலிருந்து
பாலமலைவாழ் மக்களால் விரும்பி வணங்கப்படும் தெய்வமாக
ஸ்ரீசித்தேஸ்வரர் உருவானதாக செவி வழிச்செய்திகள் இயம்புகின்றன.


திருக்கோவிலுக்கு செல்லும் வழிகள் :


1. மேட்டூரில் இருந்து அம்மாபேட்டை செல்லும் வழியில் நெரிஞ்சிப்பேட்டையில் இறங்கி (15 கி.மீட்டர் ) செல்வது

2. மேட்டூரில் இருந்து அம்மாபேட்டையில் இறங்கி (20கி.மீட்டர்) அங்கிருந்து ஊமாரெட்டியூர் வந்து அங்கிருந்து மலைப்பாதையை அடைந்து செல்வது.

3.பாலமலையின் மறுபக்கமான மேட்டூரில் இருந்நு கொளத்தூர் கண்ணாமூச்சியை அடைந்து அங்கிருந்து மலையேறுவது.

4.எளிமையான பாதுகாப்பான வழியாக அடிவாரம் வரை பஸ் வசதி உடைய வழியான பவானி வட்டம் குருவரெட்டியூர்- 638504வழியைப்பற்றி பார்ப்போம் .


பவானியில் இருந்து 30கி.மீட்டர் தூரத்திலுள்ள குருவரெட்டியூர் என்ற ஊரில் இருந்து சுமார் 1 கி.மீட்டர் தூரத்தில் பாலமலை சித்தேஷ்வரமலை அமைந்துள்ளது.அந்தியூரில் இருந்து 25 கி.மீட்டர் பயணித்தாலும் குருவரெட்டியூரை அடையலாம்.

பவானி யில் இருந்து B10,B5,ஜெயகிருஷ்ணா பஸ்களில் வரலாம்.அந்தியூரிலிருந்து A5,மாதேஷ்வரா. பஸ்களில் குருவரெட்டியூரை அடைந்து மலைப்பாதையை அடையலாம். குருவரெட்டியூர் பாலமலை அடிவாரத்தில் இருந்து ஸ்ரீசித்தேஸ்வரர் திருக்கோவிலை அடைய சுமார் 15 கி.மீட்டர் கரடு முரடான மலைப்பாதையில் நடந்து பயணிக்கவேண்டும்.

ஏழு மலைகள் அடங்கிய மலை தொகுதியான பாலமலையின் கடைசி முடிவில் ஸ்ரீசித்தேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது .

முதல் மலையின் முடிவில் வெற்றிலைப்பாறை எனும் ஒய்வெடுக்கும் இடமும், இரண்டாவது மலை யில் தும்மம்பொதி என்ற மலைவாழ் மக்கள் வாழும் ஊரும் உள்ளது. இங்கு புரட்டாசி மாதத்தில் வரும்போது டீக்கடைகள் அமைத்து வரும் பக்தர்களுக்கு கொடுக்கப்படும் . மலையில் விளைந்த கொய்யா,விளாம்பழம் இங்கு கிடைக்கும்.


அடுத்ததாகாக நாம் வருவது பெரியகுளம் முக்கியமான இடமாகும் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மொட்டை அடித்து இங்குள்ள பெரிய குளத்தில் நீரில் குளித்தும் ,சுடுதண்ணீரில் குளிக்கும் இடமாகவும். மலைவாழ் மக்களின் கடைகளும்,கொய்யா, மாதுளை ,நெல்லி விற்பனைக்கடைகள் உள்ளன.

வறடிக்கல் :

பெரிய குளத்தில் உள்ள இந்த கல்லை தூக்கி போட்டால் திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணம் நடக்கும் என்கிறாகர்கள்.வீரமாக பல இளைஞர்கள் வறடிக்கல்கல்லை தூக்கிப்போட்டு விளையாடுகிறார்கள்.

தேரோடு வீதி :

அடுத்த மலையில் நாம் காண்பது பூசாரியூர், அடிமலை விநாயகர் கோவில்வீதி என அழைக்கப்படுகிறது. இங்கு விநாயகப்பெருமான் அழகிய உருவில் அமர்ந்துள்ளார் . கடைசி மலையின் துவக்கத்தில் உள்ள விநாயகப்பெருமானை வணங்கிவிட்டு அமரலாம்.சுற்றிலும் நீண்ட பெரிய மரங்கள்,நகப்பழ மரங்கள் என அடர்தியாக இருக்க 200மீட்டர் சுற்றளவில் பக்தர்களுக்காக இளைப்பாற நல்ல அமைதியான இடம். இதில் இருந்து ஒரு மலை செங்குத்தாக சென்றால் ஸ்ரீ சித்தேஷ்வரர் திருக்கோவிலை அடையலாம்.


திருக்கோவில் திறப்பது :

சனிக்கிழமை மட்டும் வார பூஜை

வருட பூஜையாக : புரட்டாசி மாதத்தின் எல்லா சனிக்கிழமைகளிலும் விஷேசமாக திறக்கப்படும். குருவரெட்டியூர் வழியாக பக்தர்கள் கூட்டம் புரட்டாசி 3,4வது வாரங்களில் அதிகளவில் இருக்கும்.லட்சக்கணக்காண பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் தரிசனம் செய்வார்கள்.

அடுத்து சித்திரை மாதத்தில் ஊமாரெட்டியூர் வழியாக பக்தர்கள் ஸ்ரீசித்தேஷ்வரரை தரிசிக்க செல்வபலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியன :

திருக்கோவில் வரும்பக்தர்கள் கம்பளி ,டார்ச்லைட், 3 வேளை உணவு ,தண்ணீர் அவசியம் கொண்டு வரவும். மலைப்பாதைக்கு பஸ்வசதி கிடையாது ஏழு மலைகளும் கரடுமுரடானவை. புரட்டாசி மாதம் தவிர மற்ற நாட்களில் சென்றால் நீங்கள் மட்டும் தான் தனியாக செல்லவேண்டி இருக்கும்.

புரட்டாசி மாதத்தில் ஏதேனும் ஓர் சனிக்கிழமை நாளில்
பாலமலை சித்தேஷ்வரரை வந்து வணங்கி விட்டு நலம் பெறுங்கள்.
http://www.youtube.com/watch?v=xjAhpRZpTak

Wednesday, September 28, 2011

ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில். நாமக்கல்


அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில். நாமக்கல்



அஞ்சிலே ஒன்றைப்பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி அஞ்சிலே ஒன்றா றாக ஆரியர்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு அயலூரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக்காப்பான்..


தமிழகத்தின் வைணவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாகும். பெரிய ஆஞ்சநேயர் சிலையும் அதன் நேர்த்தியான வடிவமைப்பும்,காணற்கரிய ஒன்றாகும். திருக்கோவில் கும்பாபிஷேகம் 22.11.09 ல் அழகாய் செதுக்கியிருக்கிறார்கள் .சலவைக்கற்களால் உட்பிரகாரத்தை அழகு செய்துள்ளார்கள் . மூலவர் ஆஞ்சநேயர் உயரமும் அழகும் பிரமிக்க வைக்கின்றன. மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர்க்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.


அன்றைய தினம் நாமக்கல் நகரத்தில் மற்றுமல்லாது பல மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் ஏராளம்.ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் திறந்திருக்கும் நேரம் 06. 30 முதல் 0100 வரை 04.30 மணி 0900 வரை. ஸ்ரீ ஆஞ்சநேயர்க்கு துளசிமாலைகள் அணிவிக்கப்பட்டு அதை பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படுகிறது. திருக்கோவிலுக்காக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நன்கொடை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலுக்கு எதிரே மிக அருகே உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயரால் ஸ்தாபிக்கப்பட்ட "சாலக் ராம பர்வதம்" என்னும் மலை உள்ளது .மிகப் பெரிய பாறையாக உள்ள இந்த மலையின் இருபுறங்களிலும் ஸ்ரீநாமகிரி தாயார் உடனமர் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயமும் , ஸ்ரீ ரங்க நாயகி உடனமர் அரங்கநாதரும் அருள் பாலிக்கிறார்கள். ஸ்ரீநரசிம்ம சாமி திருக்கோவில் "குடைவரைக்கோவில்" கள் வகையை சார்ந்ததாகும் .கி.பி 8 ஆம் நூற்றாண்டில் உருவான ஸ்ரீநரசிம்மாசாமி திருக்கோவில்கள் கலைச்சிற்பங்கள் அழகானவை. பழங்காலத்தில் பல பாறைகளை மட்டும் வைத்து அழகான கோவிலை உருவாக்கிய உழைப்பும் மிக


நேர்த்தியானது
அருள்மிகு நாமகிரித்தாயார் உடனமர் ஸ்ரீநரசிம்மசாமி திருக்கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 0630 முதல் 0100 வரையிலும் மாலை 0430 முதல் இரவு 0900 மணி வரையிலும் காலை பூஜை 08.00மணிமுதல் 0930 மணிவரை இரவு பூஜை 0700 மணிக்கு தொடங்கி 0800 மணிக்கு முடியும் உச்சிகாலப்பூஜை காலை 1100 மணிக்கு துவங்கி 1230 மணிக்குமுடியும் திருமஞ்சன நேரம் காலை 1000 மணி முதல் 1130 வரை நடைபெறுகிறது.


தரிசன முறை :- முதலில் அருள்மிகு நாமகிரி தாயாரையும் வணங்கவேண்டும் ,இரண்டாவதாக அருள்மிகு லட்சுமி நரசிம்மரை வணங்கவேண்டும் மூன்றவதாக ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கவேண்டும் நான்காவதாக மலையின் மறுபக்கம் உள்ள ஸ்ரீ ரங்கநாயகி உடனமர் ஸ்ரீ அரங்கநாதர் (கார்கோட சயனம் ) வணங்க வேண்டும். முறையான தரிசனம் செய்ய விரும்புபவர்கள் மேற்கண்ட முறைப்படி தரிசனம் செய்வதே சாலச்சிறந்தது .


ஸ்ரீ நாமகிரி தாயாரை வணங்குவதால் கலை,கல்வி,ஞானம், செல்வங்கள் கிடைக்கப்பெறும். உலகம் போற்றும் கணித மேதை ராமனுஜரின் கனவில் தோன்றி கணக்குகளுக்கு விடை தந்தருளிய தெய்வமாக இறைவி போற்றப்படுகிறது."அனந்தசாயி" ஆலயமென அழைக்கப்பெறும் அருள்மிகு அரங்கநாதர் ஆலயம் மலையின் பின்பக்கமாக உள்ளது. இதுவும் ஓர் அற்புதக் குடவரைக்கோவிலாகும்.

ஸ்ரீ அரங்கநாதர் ஆலயம் திறந்திருக்கும் நேரங்கள் காலை 0900மணி முதல் 1100 வரையிலும் மாலை 0500 மணி முதல்0700 வரையிலும் திறந்திருக்கும் . எல்லா ஆலயங்களிலும் பழங்கால சிற்பங்கள் பாதுகாக்கும் பொருட்டு நெய் தீபம் மட்டுமே ஏற்றப்படுகிறது. இறைவனை துளசி மாலைகளால் அலங்கரியுத்து வாழ்வில் செல்வச்செழிப்புடன் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்.
பழங்கால சிற்பங்களையும் திருக்கோவில்களை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துங்கள். முடிந்தால் சிறப்பாக திருக்கோவிலை அலங்கரிக்கும் அறங்காலவர் குழுக்களிடம் நன்கொடைகளை அளித்து நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை கலைகளை உதவி செய்வோம் .
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் பற்றிய இந்த இடுகை மேலும் விரிவாக்கி 2வது பாகமாக்கி சமர்பிக்கிறேன் .நன்றிகளுடன் குரு.பழ.மாதேசு. குருவரெட்டியூர்

Monday, September 26, 2011

நீங்கள் பங்குச்சந்தைக்கு புதியவராஎன் அனுபவத்தை கேளுங்கள் !


நீங்கள் பங்குச்சந்தைக்கு புதியவரா? கண்டிப்பாக இந்த இடுகை உங்களுக்காத்தான். பங்குச்சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க என் நன்பர் அழைத்தார் ,என் முக்கியமான தேவைக்காக வைத்திருந்த பணம் ரூ 20,000 எடுத்துக்கொண்டு நாமும் அம்பானி மாதிரி பெரிய ஆளா வரணும்னு கனவோடு பான்கார்டு எடுத்து செக்புக் உடன் கிளம்பி ஓர் ஷேர் புரோக்கரிடம் தஞ்சம் ஆனேன்.

அவரும் எனக்காக ஓர் மிண்ணணு கணக்கு வங்கியை ஆரம்பித்துக்கொடுத்தார்,அப்போது சென்செக்ஸ் 21000 புள்ளிகளை தொட்டுக்கொண்டிருந்தகாலம் அது. 2007 ஆம் வருடத்தின் இறுதியில் என நினைக்கிறேன்.கேள்வி ஞானமும் சிறிதளவு பங்குச்சந்தை பற்றிய புத்தகங்கள் படித்ததின் ஞானத்தை (?) வைத்துக்கொண்டு எல்லா பணத்தையும் (20,000) ஒரே நேரத்தில் முதலீடு செய்து விட்டு ஐந்து மாதம் கழித்து அது 40,000 ரூபாய்க்கும் பக்கமாய் வளர்ந்திருந்தது. அட நம்ம டேலண்ட் தான் போலிருக்கு ! என சந்தோஷப்பட்டு நான் வேறு வேளைகளில் கவனத்தில் இருந்த நேரம் திடிரென உலகப்பொருளாதார மந்தம் என பங்கு வர்த்தகம் சுணக்கம் கண்டது. நான் சுதாரித்து பங்கை விற்றுவிடலாம் என நினைக்கையில் ஒரே வாரத்தில் சென்செக்ஸ் 6000 புள்ளிகளை இழந்து எனது பணம் ரூ10,000மட்டுமே இருந்தது. பணம் எனக்கு மட்டுமல்ல உலகம் முழுதும் பலகோடிகள் அந்த நாட்களில் காணமல் போனது.

சரி இழந்த பணத்தை எப்படி மீட்பதென தனியாய் உட்கார்ந்து யோசித்து இருந்த மொத்த பங்குகளையும் விற்று விட்டு ஒரே பங்கு மட்டும் தேர்வு செய்து 200 வாங்கி என் கணக்கில் வைத்து விட்டு 2 வருடம் காத்திருந்து என் அசல் 20,000ஐ எடுத்து விட்டு வந்துவிட்டேன்.! முழுவதுமாக வந்துவிடவில்லை.என் அனுபவம் உங்களுக்கு உதவும் என்பதால் பங்குச்சந்தையில் உள் நுழைய சில டிப்ஸ்களை தருகிறேன்.

பங்குச்சந்தையில் ஜெயிக்க இது உதவும் 1.பங்குச்சந்தை என்றால் என்ன என்று தெரியாமல் பங்குச் சந்தை பக்கம் போகக்கூடாது 2. அவசரத்தேவைக்கு என்று வைத்திருக்கும் பணத்தை கண்டிப்பாக முதலீடு செய்யக்கூடாது, 3.ஒரே நேரத்தில் அதிகளவு பணத்தை முதலிடு செய்யக்கூடாது. அதிகளவு பணம் என்பது தனிநபர்க்கு எவ்வளவு பணம் ரிஸ்க் என்பதை பொறுத்தது. 4.முழுக்க முழுக்க புரோக்கர்கள் டிப்ஸ்ஐ நம்பக்கூடாது .5.கடன் வாங்கி முதலீடு செய்யக்கூடாது. 6.இன்ராடே எனச்சொல்லுகின்ற தினசரி வர்த்தகத்தை டெக்னிக்ல் அனாலைஸ் தெரியாமல் அன்றே வாங்கி விற்க கூடாது.

சரி எப்படித்தான் பணத்தை பெருக்குவது ,பங்குச்சந்தையில் சம்பாதிப்பது ?1. தரமான பங்குச்சந்தை தொடர்பான புத்தகங்கள் படியுங்கள், திரு சோம வள்ளியப்பன் எழுதி கிழக்கு பதிப்பகத்தால் வெளிவந்துள்ள "அள்ள அள்ள பணம்" 5 தொகுதிகள் வாங்கிப் படியுங்கள். விகடன் குழுமத்தால் வெளிவரும் "நாணயம் விகடன் " படியுங்கள் . பங்குச்சந்தை ஆலோசகர்கள் திரு நாகப்பன்- புகழேந்தியின் கட்டுரைகள் கவனியுங்கள். மாதம் உங்கள் சேமிப்பாக ரூ 1000 ரூபாய்க்கு(ரிஸ்க் எடுக்கும் திறன் பொறுத்து )வாங்கி சேர்க்கலாம். அதிக லாபத்திற்கு ஆசைப்படாமல் 30% வளர்ந்தால் விற்று விட்டு நல்ல ஷேர்களை தேர்ந்தெடுக்கலாம்.

சென்செக்ஸ் குறைந்துள்ள போது உள்ளே சென்று பங்குச் சந்தை உயரும் போதும் தங்கள் பணம் உயரும் போதும் லாபத்துடன் வெளியே வரும் வித்தைகளை கற்றுக்கொள்ளுங்கள்.எம் அனுபவங்கள் உங்களுக்கு பயன் தந்ததா என கருத்துரையிடுங்கள். இந்த இடுகையின் நோக்கம் பங்குச்சந்தைக்கு வரக்கூடாது என பயமுறுத்த வேண்டும் என்பதல்ல. நன்றாக தெரிந்து,தெளிந்து ,படித்து, அறிந்து பங்குசந்தையில் பணத்தை இழக்கக்கூடாது என்ற நல்லெண்ணமே அன்றி வேறொன்றும் இல்லை. பங்குச்சந்தையும் ஒர் கடல் போலத்தான் நன்கு கற்று கொண்டு உள்ளே குதியுங்கள். பங்குச்சந்தை ஜாம்பவான் "வாரன் பெபட்" போல நீங்களும் வெற்றி பெற வாழ்த்துக்களுடன் குரு.பழ.மாதேசு.

Sunday, September 25, 2011

அருள்மிகு அர்த்தநாரீஷ்வரர் திருக்கோவில். திருசெங்கோடு



அருள்மிகு அர்த்தநாரிஸ்வரர் ஆலயம் திருச்செங்கோடு




திருக்கோவில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருச்செங்கோடு என்பதன் விளக்கம் : திரு என்றால் அழகு ,செங்கோடு என்றால் சிவந்த மலை . அழகு நிறைந்த சிவப்பான மலை திருச்செங்கோடு என பொருள் கொள்ளலாம். கொங்கு நாட்டில் மலை மீது அமைந்திருக்கும் சிவத்தலம் ,சிவன் அமைவிடமே ஊரின் பெயராக கொண்ட திருத்தலம்.பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட திருத்தலம் என பலவாறும் புகழ்பெற்ற மலைமேல் உயர்ந்த இடத்தில் உள்ள திருச்செங்கோடு அர்த்த நாரிஸ்வரரை ஸ்தல வரலாற்றையும், நான் பார்த்த திருக்கோவில் மகிமைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.கடல் மட்டத்திலிருத்து 2000அடி உயரத்தில் அமைந்திருக்கும் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் சுமார் 1200 படிக்கட்டுகளை உடையது.


படிக்கட்டில் ஏறத்தொடங்கும் முன் கிழுவன் மரத்தடியில் அமர்ந்துள்ள கஜமுக விநாயகரை வணங்குவோம். சைவத்திருத்தலமான இங்கு சிவபெருமான் " அர்த்தநாரீஷ்சுரர் " "மங்கை பங்கன் " "மாதிருக்கும் பாதியான்" என்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். அர்த்த நாரீஷ்வரர் என்பதற்கு விளக்கம் அர்த்தம் என்றால் பாதி என்றும். நாரி என்றால் பெண் (சக்தி அல்லது பார்வதி) ஈச்ஷரர் என்றால் சிவபெருமான யும் குறிக்கிறது. சிவன் பார்வதி இணைந்த திருவுருவம் எனவும் அறியலாம்.


திருச்செங்கோட்டிற்கு " கொடிமாடச்செங்குன்றூர்" என்ற பெயரில் சங்க காலத்தில் அழைக்கப்பட்டதாம். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் "செங்கோடு" என அழைத்துள்ளார். முருகர் ஸ்தலமும் சிவஸ்தலமும் ஒன்றாக அமைந்த திருக்கோவிலாக காணப்படுவது மிகச்சிறப்பான ஒன்றாகும்.சிவனும் சக்தியும் ஓரே வடிவில் திருவுருவம் கொண்டு ஒன்றாக நின்ற நிலையில் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் அற்புதக்காட்சி வேறு சிவாலயங்களில் காணமுடியாத ஒன்றாகும்.இடப்பக்கம் பெண் உருவமும் வலப்பக்கம் ஆண் உருவமும் கொண்ட சிலையாகும்,


மூலவரான அர்த்தநாரீஸ்வரரை வேண்டுவோர்க்கு திருமணத்தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற ஆவன செய்கிறார். நீங்கள் ஆலயத்தில் செல்லும்போது கூட மாலையும் கழுத்துமாக திருமணஜோடிகள் நேர்த்திக்கடன் செலுத்துவதைக் காணலாம். அருகே அருகிரிநாதரால் பாடப்பெற்ற "செங்கோட்டு வெற்பன்" முருகப்பெருமான் தனிச்சன்னதில் வீற்றிருக்கின்றார்.


திருச்செங்கோடு மலை நாககிரி,அரவாகிரி,நாகமலை ,என பல சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறது. நாகசர்பத்திற்கும் இந்த மலைக்கும் தொடர்பு உள்ளதற்கு எடுத்துக்காட்டாக படிக்கட்டில் வரும் வழியில் பெரிய பாம்புகள் உருவத்தை செதுக்கி வழிபடுகிறார்கள். திருக்கோவில் உட்பிரகாத்தில் நாகர் சிலை அமைந்துள்ளது. திருச்செங்கோட்டு மலையை தூரத்திலிருந்து பார்த்தால் சிவலிங்கம் திரு உருவம் போல ,ஓர் பெரிய நாக சர்ப்பம் படம் விரித்துள்ளது போல காட்சி அளிப்பது வியக்கும் ஒன்றாகும். திருசெங்கோட்டு மலையில் பல தீர்த்தச்சுனைகள் உள்ளது. அதில் முக்கியமானவை கணபதி தீர்த்தம் ,பாபநாசதீர்த்தம்,தேவதீர்த்தம் , சிவதீர்த்தம்,வைரவதீர்த்தம் ஆகியன முக்கிய மானவையாகும்.


சேலம் ரயில் நிலையத்திற்கும் ஈரோடு ரயில் நிலையத்திற்கும் இடையில் உள்ள சங்ககிரி ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சுமார் 10 கி.மீட்டர் தூரத்தில் திருச்செங்கோடு உள்ளது. எல்லா நாட்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
எல்லா நாட்களும் திருக்கோவில் திறந்திருக்கும். படிக்கட்டு அல்லாமல் ,இருசக்கர வாகனங்கள் ,திருக்கோவில் பேருந்துகள் செல்லும் வகையில் போக்குவரத்து வசதி உள்ளது.மலையில் பயணம் என்பதால் கவனமாக செல்வது நலம். சுற்றிலும் பாறையாக உள்ள மலையில் வாகனத்தில் செல்வது வித்தியாசமானது . இந்தப்பாதையை அமைக்க எவ்வளவு சிரமப்பட்டு அழகாய் முடித்திருக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்தால் புரியும்.


பல்வேறு சூட்சம சக்திகள் கொண்ட திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் பற்றி நான் எழுதியது சிறிதளவே. அர்த்தநாரீஸ்வரை ஆய்வு செய்ய நிறைய முறை செல்ல வேண்டியுள்ளதால் அடுத்தமுறை படிக்கட்டு வழியாக சென்று விரிவுபடுத்தலாம் என எண்ணி இடுகையை நிறைவு செய்கிறேன்.
1500 வருடம் முன்பாக உருவான பழங்கால சிவத்தலங்களில் ஒன்றான திருசெங்கோட்டு மலையில் அர்த்தநாரிஷ்வரரை தரிசனம் செய்து தடைகளை தாண்டி முன்னேற வாழ்த்துக்கள் கூறி இடுகையை முடிக்கிறேன் .


நட்புடன் குரு.பழ.மாதேசு

Saturday, September 24, 2011

அருள்மிகு மீனாட்சி உடனமர் சொக்கநாதர் ஆலயம் ,சொக்கநாத மலையூர் ,வெள்ளித்திருப்பூர், பவானி வட்டம்



அருள்மிகு மீனாட்சி உடனமர் சொக்கநாதர் ஆலயம்,


சொக்கநாத மலையூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ள மலைக்கோவிலாகும், ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் வழியில் சொக்கநாத மலையூர் என்னும் ஊரில் அமைந்திருக்கும் அழகிய திருக்கோவிலாகும் .சொக்கநாத மலையூரில் இருந்து சுமார் 1 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இத்திருக்கோவில் நந்தவனம் போல அழகிய தோற்றத்தில் அமைந்திருக்கிறது.

பழங்கால அரசமரங்கள் புளிய மரங்கள் என மரங்களின் வயதை யோசித்துப்பார்த்தாலே சுமார் 200 வருட பாரம்பரியம் புரியும் . சொக்கநாதர் மலையின் அடிவாரத்தில் உள்ள அரசமரத்தினடி விநாயகர் தரிசனம் செய்து மலையின் படிகள் ஏற ஆரம்பித்தால் அடிவார லிங்கத்தை தரிசனம் செய்யலாம். பழங்காலத்தில் அழகாய் செதுக்கிய படிக்கட்டுகள் இதமானவை. 50வது படிக்கட்டு அருகில் பெரிய தாமரைக்குளம் அமைந்துள்ளது. அதன் மேலே நடந்து சென்றால் அழகிய கற்களால் ஆன கொடிமரத்தை வணங்கி திருக்கோவிலை அடையலாம். சுமார் 200படிக்கட்டுகள் இருக்கும் .

திருக்கோவில் மலையே ஓர் பெரிய பாறையின் உச்சியில் அமைந்துள்ளது போன்ற உணர்வு நமக்கு . திருக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. திருக்கோவில் உள்ளே நுழையும் முன் பிரமாண்ட நந்தியும் உள்முகப்பில் சிறிய நந்தியும் கடந்து சென்றால் இடப்புறம் உள்ள கணபதியாரை வணங்கி மூலரான சொக்கநாதரை லிங்க வடிவில் தரிசனம் செய்யலாம்.அருகில் மீனாட்சி அம்மன் அழகுடன் காட்சி அளிக்க அருகே உள்ள பிரகாரத்தில் அமைந்திருக்கும் முருகர் சன்னதி பார்க்க தூண்டுவதாக அமைந்துள்ளது.



பழங்காலத்தில் சந்தனம் அரைக்கும் கட்டையில் சந்தனம் தருகிறார்கள் இதமான குளிர்ச்சியுடன் திருக்கோவிலில் பிரசாதமாக தரப்படும் சந்தனமும்,திருநீரும் "சிவாய நமஹ " எனச்சொல்லி இட்டுக்கொள்ளலாம். திருக்கோவில் வெளிப்பிரகாரத்தில் ஆஞ்சனேயர் சன்னதி,ஜயப்பர் சன்னதி, சூரிய மூர்த்தி,பின்புறம் விநாயகப்பெருமான் , குருபகவான், அண்ணாமலையார், சண்டிகேஸ்வரர் , நவகிரகங்கள் ,மஹீஸ்வர வர்த்தினி, விஷ்ணுதுர்க்கை ,கஜலட்சுமி சிலைகள் என திருக்கோவில் சுற்றி அமைந்துள்ள சிலைகள் அழகானவையாகும். மூன்று நிலைக்கோபுரங்களுடன் அமைதியான இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ள சொக்கநாதர் மலை பல சூட்சமங்களுடன் அமைந்துள்ளது,


திருக்கோவிலின் பழங்காலத்தை அறிய முடியவில்லை எனினும் முதல் திருப்பணி கி.பி 1920 ஆம் ஆண்டில் நடைபெற்றுள்ளதாகவும் ,சொக்கநாத மலையை அமைத்த பெரியவர் இங்கேயே வாழ்ந்து ஜீவசமாதி அடைந்ததாகவும் செவிவழிச்செய்திகள் தெரிவிக்கின்றன. பிரதோஷ வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகிறது. இயற்கை சூழலில் அமைந்த மீனாட்சி உடனமர் சொக்கநாதர் ஆலயம் பார்க்கவேண்டிய ஆலமாகும்.

பழங்காலத்தில் உருவான சிவத்தலமான சொக்கநாதரை வணங்கி வாழ்வில் நலங்கள் பெற்றிடுங்கள் .வாழ்க வளமுடன் .கருத்துரைகள் எதிர்பார்க்கப்படுகிறது.

நட்புடன் குரு.பழ.மாதேசு. குருவரெட்டியூர்

Sunday, September 18, 2011

கைரேகை ஜோதிடத்தில் சாலமன் ரேகையின் சிறப்பு


அண்மையில் ஓர் கைரேகை ஜோதிடம் பார்க்கும் ஓர் நிபுணரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சாலமன் ரேகை என்ற ஒன்றைப்பற்றி சில விளக்கங்களை சொன்னார். அதைப்பகிரவே இந்தப்பதிவு.

கைரேகை சாஸ்திரத்தில் ஒர் மனிதனின் கைகேகையில் சாலமன் ரேகை என்ற ஒன்று இருந்தால் எதிர்காலத்தை முன் உணரும் சக்தி உடையவராக இருப்பார் என்றும். 26 உயிர்களின் உணர்வுகளை அறிந்தவராக அவர் இருப்பார் என்றும் ,புலனாய்வு துறையிலும் துப்பறியும் துறையிலும் சிறந்து விளங்குவார் என்றும், மனிதர்களை உற்று கவனித்து அவர்களுக்கு சில விஷயங்களை நடப்பதற்கு முன்பே கூறும் சக்தி உடையவராக இருப்பார் என்றும் கைரேகை ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதாம் சரி உங்களுக்கு சாலமன் ரேகை உள்ளதா என அறிய அருகில் உள்ள புகைப்படத்தை பாருங்கள்.


ஆண்கள் வலது கையையும் பெண்கள் இடது கையையும் பாருங்கள் .அதில் குருமேடு என்பது பெருவிரல் அருகிலுள்ள ஆள்காட்டி விரலில் கீழ்பகுதியில் உள்ள மேடாகும். (படத்தில் பேனாவில் குறித்துள்ள படி இருப்பது குருமேடு.அதில் கீழ் நோக்கியவாறு கோடுகள் இருப்பதே சாலமன் ரேகையாகும்) சாலமன் எனும் ஓர் அரசருக்கு முன் உணரும் சக்தி இருந்ததாகவும் அவர் பெயராலேயே சாலமன் ரேகை என அழைக்கப்பட்டதாம்.

சுவாரஷ்யத்திற்காக உங்கள் கையை சோதித்துப்பாருங்கள் , நீங்களும் சாலமனாக இருக்கலாம். சாலமன் ரேகைக்கு "சக்திரேகை" எற்று மற்றொரு பெயரும் உள்ளது. கருத்துரைகளில் குட்டலாம்.

Saturday, September 17, 2011

சீதேவி,பூதேவி உடனமர் பருவாச்சி பெருமாள் திருக்கோவில் ,மைலம்பாடிசீதேவி,பூதேவி உடனமர் பருவாச்சி பெருமாள் திருக்கோவில் ,மைலம்பாடி





சீதேவி,பூதேவி உடனமர் பருவாச்சி பெருமாள் திருக்கோவில்


ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் மைலம்பாடி அருகில் கொண்ரெட்டிபாளையம் அருகில் கோம்புக்காடு எனும் ஊரில் அமைந்துள்ள திருக்கோவிலாகும். அழகிய வைணவத்திருத்தலமான பருவாச்சி பெருமாள் திருக்கோவில் 400 வருடங்களுங்களுக்கு முந்தைய ஆலயமாகும். அதற்கு திருக்கோவில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள கோவில் கல்வெட்டே எடுத்துக்காட்டாகும்.

சுற்றிலும் பசுமையாக விவசாயம் நடைபெற ஒலகடத்திலிருந்து தொட்டிய பாளையம் செல்லும் வழியில் அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோவில் அருகில் பருவாச்சி பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.

கிழக்கு நோக்கி அமைந்த திருக்கோவில் கொடிமரத்தை வணங்கி விட்டு உட்பிரகாரத்திலிருந்து இடப்புரம் ஆஞ்சநேயர் சிலையை வணங்கலாம்.

திருக்கோவில் மூலவராக சீதேவி,பூதேவி உடனமர் பருவாச்சி பெருமாள் திருக்கோவில் காண்பதற்கு அழகான கற்சிலையாக நின்று அருள்பாலிக்கின்றார். உட்பிரகாரத்தை உற்று நோக்கினால் திருக்கோவில் பழங்கால கல்வெட்டு அழகு புரியும்.திருக்கோவில் பிரகாரத்தை சுற்றி வருகையில் வில்வ மரத்தடியில் நாகர் சிலை வணங்கத்தக்கது.

தினமும்பூஜைகள் நடைபெறுகிறது. சனிக்கிழமை ,புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

பழமையான வைணவத் திருக்கோவிலை தரிசித்த திருப்தியுடன் விடைபெறுகிறேன், நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் காக்கும் கடவுளாம் பருவாச்சி பெருமாளின் அருள் பெற்று உய்ய வேண்டுகிறேன்.

Thursday, September 15, 2011

யார் சித்தர்..?


பழங்காலத்தில் பல்வேறு யோகிகளும் சித்தர்களும் இந்து மதத்தை பின்பற்றி மக்களுக்கும் ஆன்மிகத்திற்கும் பல வகையான நன்மைகளைச் செய்தார்கள் .பெரும்பாலான சித்தர்கள் சிவ வழிபாடு செய்பவர்களாகவும், சிவன் வழித்தோன்றவாகவும் ,சிவாலயங்களில் இருக்கும் பகுதிகளில் இருந்து வந்தவர்களே அதிகம் இருக்கிறார்கள்.

திருவண்ணாமலையில் பகவான் ரமணர், யோகி ராம் சுரத்குமார் ,சதுரகிரியில் இன்றும் சித்தர்கள் வாழ்வதாக பெளர்ணமி நாட்களில் வலம் வருவதாக உணரப்படுகிறது. குறிப்பாக சைவத்தை பின்பற்றியவர்களாகவே சித்தர்கள் இருக்கிறார்கள். சிற்றின்பத்தை விட பேரின்பமே உயர்ந்ததெனக் கருதி யோக வாழ்வு மேற்கொண்டவர்கள் சித்தர்கள்.

யாம் கேள்விப்பட்ட வகையில் சித்தர்கள் ஒரு வேளை உணவோ ,தேங்காய்,பழங்களோ அல்லது தண்ணீர் ,சாப்பிட்டு மட்டும் உயிர் வாழ்ந்து வந்ததாகவும் பல படிப்பினைகளில் அறிகின்றோம்.ஆனால் இன்று இந்து மதத்தை தவறாக பயன்படுத்தி சித்தர்கள் உருவில் போலியாக நடித்து பணம் பறித்தும்,தாங்கள் யோகிகள் என்று நம்ப வைத்து பல தவறுகளை ஏற்க முடியவில்லை .சரி இதற்கு என்னதான் தீர்வு.

சித்தர்களை எப்படி அடையாளம் காண்பது? இதற்கு பதில் தேடல் தான்.ஆர்வமிருந்தால் தேடுங்கள் கண்டிப்பாக காட்சி தருவார்கள் எப்படி தேடுவது அனுதினமும் சிவ வழிபாடு மேற்கொண்டால் கண்டிப்பாக காணலாம்.


ஆனால் யாரெல்லாம் சித்தர் யோகியாக இருக்க முடியாது என எனக்கு தெரிந்தவற்றை முன் வைக்கின்றேன் 1. காவி உடையில் நான் பல வித்தைகளை செய்வேன் என்று சொல்பவர் 2. மாடமாளிகை பட்டு மெத்தையில் உறங்குபவர் 3. மூன்று வேளையும் நன்றாக உண்பவர் 4.பெண் சீடர்களை அருகில் வைத்துக்கொள்பவர் 5. ஆசிரம நிதிக்காக வெளிநாடுகளில் பணம் திரட்டுபவர் 6.பாத அபிஷேகம் செய்யச் சொல்பவர் 7.வாயிலிருந்து லிங்கம் எடுப்பவர் 8. பல வகையான நவின கார்களில் வலம் வருபவர் என இந்த 8 வகையான ஆட்களுக்கும் சித்தராகும் தகுதி இல்லை. இறைவன் அருகில் உட்கார்ந்திருப்பதால் மட்டும் சித்தர் ஆகும் ஞானம் கிட்டாது. எனவே சித்தர்கள் யோகிகள் பெயரில் போலிகளை மக்கள் தங்கள் அறியாமையில் இருந்து விலகி இனம் கண்டு கொள்ள வேண்டும் .


எல்லோரும் கூட்டமாக ஓர் ஆன்மீக வாதியை தேடிச் செல்கிறார்கள் .அவர்கள் பின்னே நாமும் செல்லாமல் அவரைப்பற்றி உணர்ந்து அறிந்து தெளிந்து ,சாக்கடையா சந்தனமா எனப் புரிந்து ஆசிர்வாதம் பெறுவது நமக்கும் குடும்பத்திற்கும் நல்லது. இன்றும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். காடுகளில், மலைகளில்,சூட்சம உருவங்களில் எளிமையாக ஒரு துளி திருநீற்றில் பலர் வாழ்வில் ஒளி ஏற்றுகிறார்கள். உண்மையான கடவுள் வழிபாடு செய்பவர்களுக்கு ஆபத்து, உதவிகள் தேவைப்படும்போது அருகே வந்து பல நன்மைகளைச் செய்கிறார்கள்.மனித வாழ்வில் சாதாரண மனிதனாய் உலக வாழ்வைக்கண்டு மெளனமாய் புன்னகைத்து வலம் வருகிறார்கள்.


சித்தர்களை நீங்கள் பார்த்தே ஆக வேண்டுமெனில் சிவ வழிபாடு அனு தினமும் மேற்கொள்ளுங்கள். முதல் சித்தர் சிவபெருமான் என்பதை உணருங்கள் . எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவபெருமானை வணங்குங்கள். சித்தர்கள் பற்றியும் சித்தர்கள் வாழ்வு பற்றியும் உங்களுக்கு புலப்படும். ஓம் நமச்சிவாயம். இந்த இடுகை சித்தர்கள் பற்றி யோகிகள் பற்றி அலசலே தவிர யாரையும் புண்படுத்தும் எண்ணமில்லை.மக்களை ஆன்மீகம் எனும் போர்வையில் ஏமாற்றக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட இடுகையாகும். கருத்துரைகளில் உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து


நட்புடன் குரு.பழ.மாதேசு

Thursday, September 8, 2011

அழகில் மயக்கும் கோபிசெட்டிபாளையம் அத்தாணி சாலை








கோபி(GOBI) என அழைக்கப்படும் கோபிச் செட்டியாபாளையம் (Gobichetty palayam) மினி கோடம்பாக்கம் என்று அழைப்பதில் அர்த்தம் இல்லாமல் இல்லை.பச்சை பச்சையாக வளர்ந்திருக்கும் நெற்பயிர்களும் வரிசையாக அமைந்த பனை மரங்களின் அழகும் அருகே ஓடும் பவானி ஆற்றின் பெரிய சிறிய வாய்கால்களும் மிக அழகானவை.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சையாக புல்வெளிகளும் மேற்குமலைத் தொடரின் அழகையும் இயற்கை நமக்களித்த கொடைகளாகும்.

கோபியிலிருந்து அத்தாணி வரும் இந்த அழகிய சாலையில் தான் பாரியூர் அம்மன் திருக்கோவிலும் ,கருங்கரடு முருகன் ஆலயமும்,கூகலூர் வயல் வெளிகளும் ,பவானி ஆறு கடந்து செல்லும் அழகும்,வளைந்து வளைந்து செல்லும்பாதைகளும் மனதை இளகுவாக்கும்.

ஒர் அற்புத பயணமாக இருக்கும். பல பிரபல திரைப்படங்களில் வந்து போகும் இடமாக கோபியும் அதைச்சுற்றியுள்ள இடங்களும் பார்க்கவேண்டிய இடமாகும்.

கருத்துரைகள் வரவேற்கப்படுகிறது.

ARULMIGU pathrakaliamman thiru kovil history ,ANTHIYUR





அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவில்



ஈரோடுமாவட்டம் பவானி வட்டத்தில் பிரசித்தி பெற்ற அந்தியூரில் ஆட்சி செய்யும் அன்னையின் ஆலயமாகும் . அருள்மிகு பத்ரகாளியமன் திருக்கோவில் அந்தியூர் பஸ் நிலையத்திற்கு அருகில் (100மீட்டர்) கோபி சாலையில் அமைந்த ஓர் அழகிய ஆலயமாகும்.


திருக்கோவில் முகப்பில் குண்டமும் அரசமரத்தடியில் பெரிய விநாயகர் சிலை தரிசிக்க வேண்டிய ஒன்றாகும்.

திருக்கோவில் இராஜகோபுரத்துடன் இணைந்த இரு நிலைக்கோபுரங்கள் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த ஓர் அழகிய முகப்பு நம்மை வரவேற்க உள்ளே சென்றால் அழகிய கொடிமரத்தையும் சிம்ம வாகனமும் தரிசித்து ஆண்,பெண் என இரு காவல் தெய்வங்களை வணங்கி திருக்கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தால் அழகிய உருவில் அம்பிகை அருள்மிகு பத்ரகாளியம்மன் அழகிய திருக்கோலம் பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தும்.

திருக்கோவில் வடக்குதிசை நோக்கி அமைந்துள்ளது. திருக்கோவில் பின்புறம் முத்துமினியப்பர் சன்னதி யும் அருகில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதிகளும் கண்டு தரிசிக்கவேண்டிய சன்னதிகளாகும் .

பழங்காலத்தில் இருந்து அந்தியூர் பகுதி வாழ் மக்களால் விரும்பி வணங்குகின்ற அந்தியூர் பத்ரகாளியம்மன் திருக்கோவில் அருகில் கோட்டை போன்ற அமைப்பு இருந்ததாக செவி வழிச்செய்திகள் இயம்புகின்றது.

பல ஊர்களில் இருந்து பக்தர்களால் அம்மாவசை, பௌர்ணமி நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது.திருக்கோவில் எல்லா நாட்களிலும் திறந்திருக்கிறது.

பலர் வாழ்வில் ஏற்றம் தந்த அன்னை அந்தியூர் பத்ரகாளியம்மனை வணங்கி நம் வாழ்வில் எல்லா நலன்களையும் பெற வாழ்த்தும்

அன்பன் குரு.பழ. மாதேசு.

நிறைகுறைகளை கருத்துரைகளில் இயம்பலாம்.

நன்றி

Arulmigu kariakalimman temple,mylampadi,bhavani taluk






அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோவில்


ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் அமைந்த ஓர் அற்புதமான ஆலயமாகும். ஒலகடத்தில் இருந்து தொட்டியபாளையம் செல்லும் வழியில் 5வது கி.மீட்டரில் அமைந்த அருள்மிகு கரியகாளியம்மன் ஆலயம் பார்க்கவேண்டிய ஆலயங்களில் ஒன்றாகும்.

பழங்காலமாக சுமார் 400ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த ஆலயத்தை ஆன்மீகப்பெரியோர்கள் முயற்சியினால் 26.1.04 ஆம் நாள் திங்கள் காலை 09.00 முதல் 10.00மணி வரை குடமுழுக்கு நடத்தி திருக்கோவிலை அழகாக்கி இருக்கிறார்கள்.


பழங்காலத்தில் மையிலம்பாடி எனும் இந்த ஊர் மயிலாபுரிபட்டணம் என அழைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கொண்ரெட்டிபாளையம்,சானார்பாளையத்திற்கு அருகில் உள்ள கரிய காளியம்மன் ஆலயம் 18கிராம மக்கள் வணங்கும் அம்பிகையாக அமைந்து அருளாட்சி வழங்குவது சிறப்பான ஒன்றாகும்.

திருக்கோவில் மூலவராக கரியகாளியம் மன் வரும் பக்தர்கள் துயர் தீர்க்கும் அம்பிகையாக அமைந்திருப்பது சிறப்பான ஒன்றாகும்.அருள்மிகு விநாயகர்,சுப்பிரமணியர் துர்க்கை அம்மன் சன்னதிகள் அமைந்திருப்பது சிறப்பாகும்.

திருக்கோவில் முன்பாக 75 அடிக்குண்டமும் பெரிய இரண்டு முனியப்பர் சிலைகளும் பிரமிக்க வைக்கின்றன.

உள் பிரகாரத்தை சுற்றி வரும்போது திருக்கோவில் எங்கும் காணாத அதியமாக நின்ற நிலையில் வன்னிமரத்தடியில் விநாயகர் அழகாக அமைந்திருப்பது வியப்பான ஒன்றாகும்.

ஒருநிலைக்கோபுரமும் அழகான குதிரைச்சிலைகளும் சிற்பக்கலை அழிந்து விடவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகும். எல்லா நாட்களிலும் திருக்கோவில் திறந்தே இருக்கின்றது.திருக்கோவில் திருமண மண்டபம் அருகிலேயே அமைந்துள்ளது.

பஸ் வசதி சரியாக இல்லை எனினும் பவானியில் இருந்து ஒலகடம் செல்லும் மினிபஸ்கள் கரியகாளியம்மன் திருக்கோவில் வழியாகவே செல்கின்றன .அம்மாவசை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

பழங்காலத்தில் மையிலாபுரிப்பட்டணம் என அழைக்கப்பட்ட மையிலம்பாடி எனும் ஊரில் அமைந்த அருள்மிகு கரியகாளியம்மனை தரிசித்து வேண்டிய எல்லாமும் பெற வாழ்த்துகிறேன்.

Monday, August 29, 2011

நீரிழிவு (அ) சர்க்கரை நோய்க்கு எளிய மருத்துவம்




நீரிழிவு நோய் எனப்படும் சக்கரை நோய் வந்துவிட்டால் மனிதர்கள் படுகின்ற கஷ்டம் சொல்லி மாளாதது. அதற்கு இந்த எளிய வைத்திய முறை பயன் அளிப்பதாக ஓர் கட்டுரையில் படித்ததை உங்களுக்குடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

தினமும் இரவு ஓர் வெண்டைக்காயை எடுத்து இரு முனைகளையும் அறுத்து விட்டு மீதமுள்ள வெண்டைக்காயை மூன்று பாகமாக கட் செய்து அரை டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் எழுந்து வெறும் வயிற்றில் தண்ணீரில் உள்ள வெண்டைக்காய் துண்டுகளை தூக்கி போட்டு விட்டு வெண்டைக்காய் ஊறிய அந்த தண்ணீரை குடித்து வந்தால் உடம்பில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறதாம்.

மாதம் ஒரு முறை மருத்துவரிடம் செக்கிங் செல்லும்போது உங்கள் சக்கரையின் அளவை பாருங்கள்.பின்பு இந்த டிப்ஸ்ஐ பயன்படுத்தி பாருங்கள். இதைப்பயன் படுத்தியவர்கள் ரத்ததில் சர்க்கரையின் அளவு குறைவதாக சொல்கிறார்கள்.

டாக்டர் தரும் மருந்தை எடுத்துக்கொண்டு மேற்கண்ட வெண்டைக்காய் நீரை குடித்து விட்டு உங்கள் சர்க்கரை நோயின் அளவு குறைந்தால் எமக்கு எழுதுங்கள்.

நான் படித்ததில் பிடித்த இடிகையை பகிரவே இவ்விடுகை .

மருத்துவர் ஆலோசனைப்படி பின்பற்றலாம்.

நன்றி

Sunday, August 28, 2011

திருஷ்டிபூசணிக்காயும் சாலை விபத்தும்




திருஷ்டி என்பது நம் பராம்பரியமாக செய்யப்படும் மூட நம்பிகைகளில் ஒன்று. கண்பட்டது ,அல்லது யாரோ ஒருவர் நம் வளர்ச்சியில் பொறமைகொண்டு பார்த்தால் நாம் நமக்கு கண்பட்டு விட்டதாக அலறுகிறோம். ஒருவர் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்பதை உணர மறுக்கிறோம்.

கண் வைத்து விட்டதாக சொல்லி எலுமிச்சம் பழத்தை நான்கு பாகமாக அறுத்து நான்கு திசைகளில் வீசுகின்றோம். அடுத்து தேங்காயை வாங்கி தலையை சுற்றி ரோட்டில் உடைத்து திருஷ்டியை போக்குவதாக சொல்லி சந்தோஷப்பட்டுக்கொள்கிறாம். அடுத்து இதை விட பெரிதாக பூசணிக்காயை நான்காக ஆக அறுத்து சிகப்பு தடவி ரோட்டில் உடைத்து போட்டு விடுவோம்.

கழிந்து விடுகிறதா நம் திருஷ்டி , !

சரி கழிந்து விட்டதாகவே நாம் வீட்டில் படுத்துக்கொள்வோம்..! நாம் ரோட்டில் உடைத்த சிதறு தேங்காய் என்ன செய்யும் ? எங்கேயோ பார்த்து ரோட்டில் கவனமில்லாமல் செல்கின்றவரினின் இருசக்கர வாகனத்தின் முன்பக்க டயர் பஞ்சர் ஆகி அவருக்கு ஏதேனும் விபரீதம் நடந்தால் நம் திருஷ்டி கழியுமா? பாவக்கணக்கு அதிகம் தானே ஆகும்.

திருஷ்டி பூசணிக்காய் மேல் இருசக்கர வாகனத்த விட்டு எத்தனையோ பேர் கை கால்கள் இழந்து தவிக்கிறார்கள் .நமது நம்பிக்கை நமக்கு மட்டுமே அடுத்தவர்களை அது பாதிக்கலாமா ?

திருஷ்டியை நம்பினால் நீங்கள் அடுத்தவர்களுக்கு செய்கின்ற துன்பத்தையும் ஏற்க வேண்டியது தானே உண்மை. நமது நம்பிக்கைகளை நான் குறை சொல்லவில்லை. அப்படி தேங்காயும் பூசணிக்காயும் உடைக்கும் பட்சத்தில் அது ரோட்டிற்கு வரக்கூடாது .

அப்படி உடைத்தால் அந்த இடத்தை சுத்தம் செய்கின்ற பொறுப்பு நமக்கு உண்டு என்பதை நினைவில் கொண்டு விபத்தில்லாத மனித சமுதாயத்தை எதிர்காலத்தை உருவாக்குவோம்.

சின்ன சின்ன விஷயங்களில் தான் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் போகின்றது என்பதை உணர்வோம் .

கருத்துரகளில் குட்டலாம்.

நட்புடன் குரு.பழ.மாதேசு

Friday, August 26, 2011

பார்வதி உடனமர் பரமேஸ்வரர் ஆலயம் அரசமரத்து வீதி குருவரெட்டியூர்பார்வதி உடனமர் பரமேஸ்வரர் ஆலயம் அரசமரத்து வீதி குருவரெட்டியூர்




பார்வதி உடனமர் பரமேஸ்வரர் ஆலயம் பவானி வட்டம் குருவரெட்டியூர் அரசமரத்து வீதியில் அமர்ந்த அழகான ஆலயமாகும். இத்திருக்கோவில் 30.08.1957 ல் செம்பண ஆசாரி மகனார் மன்னாத ஆசாரியார் அவர்களால் கட்டப்பட்ட இந்த சிவாலாயம் எல்லா சிவாலயங்களில் இருந்து சற்றே வேறுபட்டது.

இங்கு மூலவராக கிழக்கு திசை நோக்கிய சிவபெருமான் பார்வதி உடனமர் நந்தீஷ்வரராக அமைந்திருப்பது காண்பதர்க்கு அரிய காட்சி. வலப்பக்கம் விநாயகப்பெருமானும் இடப்பக்கம் வள்ளி தெய்வானை உடனமர் முருகப்பெருமான் சன்னதி அழகான ஒன்றாகும்.

எதிரே நவகிரகங்களும் அருகிலுள்ள ராகு கேகு சிற்பங்களும் அழகானது. தனிச்சிற்பமாக பெருமாள் சன்னதியும் உள்ளே அமைந்துள்ளது.

தற்போது திரு கார்த்திகேயன் அவர்களால் தற்போது பராமரிக்கப்பட்டு பிரதோஷ பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது. மாசி மகா சிவராத்திரி அன்று நடைபெறும் பூஜைகள் சிறப்பான ஒன்றாகும்.

இப்பகுதிக்கு வரும் போது மூலவரான பார்வதி உடனமர் சிவபெருமான் நந்தீஷ்வரர் மேல் அமர்ந்திருக்கும் அழகிய திருக்கோலத்தை கண்டு செல்லங்கள்.

ஓம் சிவாய நமஹ.

நட்புடன் குரு.பழ.மாதேசு

Saturday, August 20, 2011

Arulmigu mannatheswarar &semmuni ahandavar thirukkovil ,vellithirupur





அருள்மிகு மன்னாதீஸ்வரர் ,செம்முனி ஆண்டவர் திருக்கோவில்

ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் வெள்ளித்திருப்பூர் அருகில் வாழைக்குட்டை தோட்டத்தில் அமைந்துள்ள திருக்கோவிலாகும். இது வெள்ளித்திருப்பூரில் இருந்து குருவரெட்டியூர் செல்லும் வழியில் 2வது கி.மீட்டரில் அமைந்துள்ளத வனம் ஆகும் .

குருவரெட்டியூரில் இருந்து 6வது கி.மீட்டரில் உள்ளது இங்கு மூலவராக மன்னாதீஸ்வரரும் ,அம்பிகையாக பச்சை நாயகி அம்மன் காக்கும் கடவுள்களாக செம்முனி ஆண்டவர் உட்பட 13 முனிகள் வாதமுனி,பூமினி,முத்துமினி,லாடமுனி, குண்டுமுனி ,வேதமுனி,தவசி முனி,தன்னாசி முனி,கொடுமுனி,மகா முனி,கருமுனி ஆகியவைகளாகும்.


மன்னாதீஸ்வரர் திருக்கோவில் உட்பிரகாரத்தில் இடக்குமரர்,கருங்குமரர் ,சுப்பிரமணியர், சித்தேஷ்வரர், சொக்கநாதசாமி, குருபகவான் ,அரங்கநாதர், கன்னிமார், வேதாந்தி வேதியர்,ஆரியசாமி (பிரம்மா,காயத்திரி, சரஸ்வதி) பச்சைநாயகி (திருக்கோவில் அம்பிகை) வேங்கை மலை அம்மன் கங்கா, செம்மரளி அம்மன், பூமரளி அம்மன், குமாரசாமி,உமைகங்கா உடனமர் மன்னாதீஷ்வரர். முடியரசி அம்மன்,கார்த்தி அம்மன்,பூங்குமரர், வலக்குமரர், ஆகிய சிலைகள் வரிசைக்கிரமாக அமைந்துள்ளது.

பிரதி வார பூஜை வெள்ளிக்கிழமை இரவு 7மணி முதல் 8மணி வரை நடைபெறும்.ஆடி 15 நாள் வெள்ளிக்கிழமை முதல் வனத்திருவிழா நடைபெறும். அப்போது 2 கி.மீட்டர் அருகிலுள்ள குரும்பபாளையம் மடப்பள்ளியில் இருந்து சுவாமி தேரில் பவனி வந்து வாழைக்குட்டை தோட்டம் அருகிலுள்ள மன்னாதீஷ்வரர்,செம்முனி ஆண்டவர் வனத்தில் வருடாந்திர பூஜை நடைபெறும்.

மாசி சிவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெறும். திருக்கோவில் ஸ்தலமரமாக புளிய மரம் கிட்டத்தட்ட 500 வருடங்கள் பழமையானதாகும் .

திருக்கோவில் சுற்றிலும் கற்கட்டுகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட ஆலமரம் ஒன்றுள்ளது.. தம்மைத்தேடி வரும் பக்தர்களுக்கு குழந்தைவரம்,திருமணம்,போன்ற சுப காரியங்களை இறைவன் நல்லபடியாய் நடத்தி தருவதால் பக்தர்கள் மன நிறைவுடன் வழிபட்டுச்செல்கிறார்கள்.

குழந்தை வரம்,தாமத திருமணம், போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக விளங்குகின்ற இத்திருக்கோவிலுக்கு நீங்களும் இப்பகுதிக்கு வருகை புரிந்தால் இறைவனை தரிசித்து விட்டு எழுதுங்கள்.

நன்றி

Thursday, August 18, 2011

எம் துதி சிவாய நமஹ


சிவாய நமஹ எனச் சொல்லி - என்

சிறு மனதை சிதறாமல் கட்டி ,

சிவனருளே எல்லாமென சிந்தையுள் வைத்து

சிவனே உன் அருளுக்காய் - தவமிருப்பேன்

சிவ சிவா என்னுள்ளே கலந்தருள்வாயாக...!

கவிதை : தேடிக்களைக்கின்றேன் இறை "வா"


கவிதை




தேடிக்களைக்கின்றேன் இறை "வா" :

பரபரப்பான
ஓவ்வொரு நாளும்
உன்னால் படைக்கப்படுகிறது,.!
இருப்பினும்
உனக்காக
நான்
ஒதுக்கிய நாட்கள்
அளவில்லாதது...!

எங்கும்
நீர் நீக்கமற
நிறைந்திருக்கும் "சக்தி"
என்றுணர்ந்த
எமக்கு என்றேனும்
ஒருநாள் ஒதுக்கு...!

அன்று நாம்
கைகோர்ந்து நடந்து ..!

உன்னால் பிறப்பிக்கப்பட்ட
இப்பிரபஞ்சத்தில்
எமக்கென
எழுந்துள்ள
வினாக்களுக்களுக்கு
நீங்கள்
அப்போது
பதிலளிக்கவேண்டும்..!


கேட்டுத் தெளிந்த
நான்

உன்னையும்
உன் காட்சி
பிம்பத்தையும்
எல்லோருக்கும்
அறிவிப்பேன் ..

உன் புகழ் தன்னை
வீதியெங்கிலும்

ஆதலால்
இறை" வா"

முருகருக்காக என் துதி (அ) கவி



இறைவன் முருகருக்காக நான் எழுதிய துதி :


முருகா என்றிட முன்வினைஅகலும் ...!
முருகன் என்பதில் முக்திகள் கிடைக்குமெனில்.!
மூச்சென்ற ஒன்று இருக்கும் வரை.,!
முருகா முருகாவென்றே உன்னில் கரைவேன்..!



கவி 2 :

கந்தா உனைத்தொழுதேன் கவலைகள் போக்க..!

கந்தா உன்னில் கரைந்து -யாம் செய்யும்

நற் காரியங்கள் யாவிலும் கண்டவர் வியக்க.. !

கடம்பா நின் துணை வேண்டி நிற்பேன்..!

உடன் வருவாயாக.,




கவி எழுத வேண்டும் கேள்வி ஞானம் மட்டுமே எமக்கு உண்டு சந்திப்பிழையும் இலக்கணப்பிழையும் பாராமல் இறைவனுக்காக எழுத வேண்டும் என்கிற நினைப்பில் எழுதப்பட்ட இடுகை.
கருத்துரைகளில் குட்டலாம் .நட்புடன் குரு.பழ.மாதேசு

Tuesday, August 16, 2011

ஸ்ரீ குருநாதசாமி வனம் அந்தியூர் , ஈரோடு மாவட்டம்


அருள்மிகு குருநாதசாமி திருக்கோவில் வனம் :


அருள்மிகு குருநாதசாமி வனம் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசாமி கோவில் இருந்து 3கி.மீட்டர் தூரத்தில் உள்ள ஓர் அற்புதமான ஆலயமாகும்.



வனத்தில் மூலவராக வீற்றிருப்பது குருநாதசாமியாகும். உடன் பெருமாள் சாமியும்,காமாட்சி அம்மனும் அருள்புரிகின்றனர். அருகே நாகப்புற்று அமைந்துள்ளது. ஊஞ்சல் போன்ற அமைப்பும் உள்ளது.


சமதளத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக கீழிறங்கி தரிசனம் செய்ய பள்ளம் போன்ற அமைப்பில் குருநாதசாமி வனம் அமைந்துள்ளது.

சுமார் 500 மீட்டரில் இவ்வனத்தில் வேம்பு,தென்னை,ஆலமரம்,ஊஞ்சன்மரங்கள் மற்றும் பழங்கால மரங்கள் அமைந்து குளுமையாக உள்ளது.

வேண்டுதல் நிறைவேறிய பின் பல குடும்பங்கள் வந்து ஆடிமாத கோவில் திருவிழா நாட்களில் இங்கு பொங்கல் இட்டு ஆடு,கோழிகளை பலியிட்டு , செல்வது வழக்கம்.

அருள்மிகு குருநாதசாமி வனத்தில் இருந்து திருவிழாவின் போது மடப்பள்ளிக்கு புதுப்பாளையத்திற்கு தேரில் குருநாதசாமி,பெருமாள் சாமி,காமாட்சி அம்மன் ஆகியோர் திருவிழா நாளில் பக்தர்கள் வரமளிக்க தேரில் வருவார்கள்.இந்த வருடம் 2011 ன் திருவிழா சிறப்பாக லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தர 5 நாட்கள் நடந்தது .

திப்புசுல்தான் ஆட்சியில் தன் குதிரைப்படைக்கு தேவையான குதிரைகளை வாங்க அந்தியூரில் குதிரைச்சந்தை அமைத்ததாக வரலாறு இந்த வருடம் நொக்ரா,காட்டியவாடி ,கத்தியவார் போன்ற பல ரக குதிரைகளும் விற்பனைக்கு வந்திருந்தது.5லட்சம் வரை குதிரை விலை சொல்கிறார்கள்.


,மாட்டுச்சந்தையில் மலைமாடுகள் காங்கேயம் காளைகள்,சிந்து ,ஜெர்சி வந்திருந்தன. குஜராத்தில் இருந்து வந்த ஜாப்ரா இன எருமைமாடுகள் வித்தியாசமாய் இருந்தன.

காது நீண்ட ஜமுனாபாரிஆடுகள் பல வகையான வளர்ப்பு பிராணிகள் கொண்டு வரப்பட்டிருந்தது. பலவகையான ராட்டினங்கள்,கம்பி வளைக்குள் கார்,பைக் சர்க்கஸ் மற்றும் தூரிகள் குழந்தைகள் ரயில் கப்பல் தூரி, என அழகாய் நடந்தது. பேரிக்காய்,கொள்ளேகால் மிட்டாய், சோழக்கருது சாப்பிடாமல் வரமுடியாது.


மிக பிரமாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்வில் அடுத்த வருடம் ஆடிமாதமாவது வந்து கலந்துகொண்டு அருள்மிகு குருநாதர் அருள்பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்தும்

அன்பன் குரு.பழ.மாதேசு

Friday, August 12, 2011


வலைப்பூ தொடங்கி வருடம் ஒன்றாகி விட்டது. ஜுலை 12 ல் தொடங்கி இன்றுவரை 75 இடுகைகள் உலகமெங்கிலும் 1036 பேர் வந்து சென்றது மகிழ்ச்சியே. ஆனாலும் எம் எழுத்து உங்களுக்கு பயன்படுகிறதா ???என்ற கேள்வி இடையறாது எம்மை துளைக்கிறது. எமது வலைத்தளம் தரமானதாக வேண்டுமென்ற ஆர்வத்தில் உங்களின் கருத்துரைகளை ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றேன். முடிந்தால் இன்ட்லி தமிழ் மணத்தில் ஓட்டிப்போட்டுட்டு போங்க, இறை சித்தத்தால் இன்னும் பல கோவில் வரலாறுகளும் படைக்க உங்கள் கருத்துரைகளே எம்மை வழிப்படுத்தும் வலிமைப்படுத்தும் என நம்பி (டிரிட்டா ? வலைப்பூவின் இரண்டாம் வருட கொண்டாட்டத்தில் கண்டிப்பாக அழைப்பு வரும் ) நட்புடன் குரு.பழ.மாதேசு

தீரன் சின்னமலை எனும் வரலாற்று காவியம்



மாவீரன் தீரன் சின்னமலை ஓர் வரலாற்று காவியம் ; தீரன் சின்னமலை 1756 ல் பழைய கோட்டை பட்டக்காரர் மரபில் பிறந்தார். தீரன் சின்னமலை யின் இயற்பெயர் தீர்த்தகிரி கி.பி 18 நூற்றாண்டில் பிற்பகுதியில் ஈரோடு மாவட்டத்தின் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஓடாநிலைப்பகுதிகளில் வாழ்ந்து வந்தார்.

ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை மீட்க போராடிய சுதந்திர போராட்ட வீரர்களில் தமிழ் நாட்டில் தீரன் சின்னமலையின் பங்கு மகத்தானது.

வெள்ளையர்களை விரட்ட மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து போரிட்டார்.இளம் வயதிலேயே வீரம் செறிந்த வீரனாக பல தற்காப்புகலைகள் அறிந்து வலம் வந்து தம் நன்பர்களுக்கு போர்ப்பயிற்சி அளித்து ஓர் படையை திரட்டினார்.

கொங்கு நாட்டுவரியை மைசூருக்கு வசூலித்து சென்றவர்களை தடுத்தி நிறுத்தி கொங்கு நாட்டு மக்கள் யாருக்கும் அடிமையில்லை என்பதை முழக்கமிட்டு அறிவித்தார்."ஹைதர் அலியின் திவான் மீராசாகிப் கேட்டால் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஓர் சின்னமலை பிடுங்கி விட்டான் என கூறுங்கள் " எனக் கூறி ஆங்கிலேய வீரர்களை விரட்டி அடித்தார்.


அன்று முதல் தீர்த்தகிரி எனும் பெயர் மாறி சின்னமலை என அழைக்கப்பட்டார் . இவரின் வீரம் அறிந்த திப்பு சுல்தான் தூது அனுப்பி தீரன் சின்னமலையிடம் தமக்கு படை உதவிகள் மற்றும் ஆதரவுகளை ஆங்கிலேயர்களை எதிர்க்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு தீரன் சின்னமலையும் கொங்கு நாட்டில் தேவையான படைபல உதவிகளை தாராளமாக கேட்குமாறு கூறினார் .

இருவரும் படைபலத்தை இணைத்தனர். தீரன் சின்னமலையுடன் கூட்டு சேர்ந்து திப்புசுல்தான் மூன்றுமுறை போரில் 2500 வீரர்களை வைத்து கொண்டு ஆங்கிலேய வீரர்கள் 10,000 பேரை விரட்டி அடித்தனர். ஆங்கிலேயருக்கு கடும் சவாலாக இருந்த தீரன் சின்னமலை திப்புவின் மரணத்திற்கு பின் கி.பி 1799ல் கர்னாடாகதை ஆட்சி செய்த மராட்டிய மன்னர் தூந்தாஜிவாக்த் என்பவருடன் பாளையக்காரர்கள் படையை இணைத்து ஆங்கிலேயருக்கு எதிராக போர் செய்ய ஒப்பந்தம் போட்டார் தீரன் சின்ன மலை .

இரண்டு வருடங்கள் கழித்து கி.பி1801ல் கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலப்படையை பவானி காவிரிக்கரையில் வென்றார்.1802ல் சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையை துரத்தியதாக வரலாறு.


அரச்சலூரில் 1803ல் கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றிபெற்றார் இப்போரில் வெற்றி பெற்ற வெற்றிச்சின்னம் இன்றும் ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ளதென வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

போரில் வீரன் சின்னமலையை வெல்ல முடியாதென அறிந்த ஆங்கிலேயர்கள் சமையல்காரன் நல்லப்பனை பணம் தந்து தந்திரமாக தந்த ஆங்கிலேயர்களுக்கு தகவல் தந்தான் நல்லப்பன். உணவருந்திக்கொண்டிருந்த தீரன் சின்னமலை அவர் சகோதரர்கள் பெரியதம்பி,கிலேதார் தளபதி கருப்ப சேர்வை ஆகியோர்களை கைது செய்த ஆங்கிலப்படை கி.பி 1805ஆம் ஆண்டு 31ஆம் தேதி சங்ககிரி கோட்டையில் தூக்கிலிட்டு 4 பேரையும் கொன்று தன் கோபத்தை ஆங்கிலப்படை தீர்த்துக்கொண்டது.

ஆனால் தீரன் சின்னமலை மறைத்தாலும் அவர் விட்டுச்சென்ற புகழும் வீரமும் கொங்கு மண்ணில் எப்போதும் நிலைத்திருக்குமாறு அவர் வழி வந்த மக்களால் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஓடா நிலையில் மணிமண்டபம் கட்டி அவர்புகழ் தேயாதவாறு பாதுகாக்கப்படுகிறது.

ஈரோடு பக்கம் வந்தால் பார்த்துவிட்டு போகலாம். பவானியில் இருந்து சேலம் செல்லும் வழியில் சங்ககிரி என்னும் இடத்தில் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட சங்ககிரி கோட்டையும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் 200 வருடங்கள் கழித்து இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


அடுத்த தலைமுறைக்கு வரலாற்றுச்சிறப்புமிக்க இந்த இடங்களுக்கு உங்களால் முடிந்த நாட்களில் ஈரோடு வரும்போது சுற்றிக்காட்டலாமே?

Monday, August 8, 2011

துணுக்கு எழுத்தாளர் ஆவது எப்படி?

துணுக்கு எழுத்தாளர் ஆவது எப்படி?


ஜோக்,கவிதை,கதை எழுதுதும் திறமை பல பேருக்கும் இருந்தும் அதை எப்படி அனுப்புவது என தெரியாமல் இருப்பது தான் ஆச்சரியம் ,

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்து திறமையை ஜோக் என்றால் ஒரு அஞ்சல் அட்டையில் முகவரி எழுதம் பக்கத்தில் எந்த வார இதழ்களுக்கு அனுப்ப நினைக்கிறீர்களோ அந்த வார இதழின் முகவரி இட்டு அதன் இடப்பக்கத்தில் உங்கள் முகவரி இட்டு அதன் பின்பு முழு அஞ்சல் அட்டையின் முழு அளவுள்ள பக்கத்தில் ஜோக் என தலைப்பிட்டு தெளிவாக எழுதி



குமுதம்,ஆனந்தவிகடனுக்கு அல்லது ஜோக் பிரசுரமாகும் வார இதழ்களுக்கு அனுப்பினால் உங்கள் ஜோக்குகளை சம்பந்தப்பட்ட வார இதழ் ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமானால் அந்த ஜோக்குக்கு பரிசும் மணியார்டரில் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள்.

அல்லது முழு வெள்ளைதாளை இரண்டாக கட் செய்து ஜோக் தலைப்பிட்டு கவரில் வைத்தும் அனுப்பலாம்.

கவிதைகளையும் மேற்கண்டவாறு அனுப்பலாம். ஒருபக்க கதைகளை அனுப்பும் போது முழு வெள்ளைதாழின் ஒருபக்கம் மட்டும் எழுதி வெள்ளைதாளின் பின்பக்கம் ஏதும் எழுதாமல் முகவரி மட்டும் எழுதி அனுப்பலாம்.

பெரிய கதைகளை அனுப்பும் போது 5 பக்கம் வருமாறு வெள்ளைதாளின் ஒருபக்கம் மட்டும் எழுதி தங்கள் படைப்புகளை அனுப்பலாம். தங்களுக்கு எழுத்து திறமை இருப்பதாக கருதினால் முதலில் அஞ்சல் அட்டையில் வாசகர் கடிதம் எழுதிப்பழகுங்கள் ,

பின்பு குடும்ப மலர் வாரமலர் போன்றவற்றில் ஜோக்,கவிதை, கதைகளை அனுப்புங்கள்.பின்னர் பெரிய வார இதழ்களுக்கு அனுப்புங்கள். அதற்கு முன் எந்த மாதிரியான ஜோக்,கவிதைகள்,பிரசுரமாகின்றன என்பதை கவனியுங்கள்.

பின்பு தொடர்ந்து முயற்சியுங்கள்.

உங்களுக்குள் ஓர் எழுத்தாளன் இருந்தால்
கண்டிப்பாய் வெளிப்படுவான்.

வாழ்த்துக்கள்.

Friday, August 5, 2011

சாலை விபத்தில்லா பயணத்தை உறுதி செய்வோம்


வாகனம் ஓட்டும்போது கவனிக்க வேண்டிய விதிகள் :


அவசர உலகம் ., வாகனத்தின் பெருக்கம், இப்படி பல தடைகளை தாண்டி நாம் வீட்டை விட்டுச் சென்றால் திரும்பி வந்தால் போதும் என்கிற அளவில் சாலை விபத்துக்கள் நம் மனதை கரைக்கின்றன.



எத்தனையோ படித்த இளைஞர்களை சாலை விபத்துக்களில் பறிகொடுத்து மனித வளத்தை இழக்கலாமா?

சரி தனிமனிதனாக நம்மால் விபத்து ஏற்படுத்தாமல் எப்படிச் செல்வது ...?

செய்ய வேண்டியது :

1. வாகனத்தை எடுக்கும் போது டயரில் போதுமான காற்று ,எரிபொருள் உள்ளதா என பரிசோதிப்பது

2.ஹெல்மெட் போட்டுக்கொண்டு ஓட்டுவது

3.வாகனத்தின் இடப்புறம் வலப்புறம் திருப்பும் போது இன்டிக்கேட்டர்,கை சிக்னல் பயன்படுத்துவது.

4.முன்னால் செல்லும் வாகனத்தை முந்த நினைக்கும் போது நம் பின்னால் வரும் வாகனத்தை கண்ணாடியில் (side mirror ) கவனித்து முந்துவது

5.தரமான டயர் ,பிரேக் ஷுக்களை பயன்படுத்தல்

6.நல்ல தரமான ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் ஓட்டிப் பழகி ஓட்டுநர் உரிமம் வைத்துக்கொள்வது

7.சாலைவிதிகள் போக்குவரத்து காவலர் சைகை சிக்னல்களை மதிப்பது, அறிந்து கொள்வது
8.மிதவேகம்

9.இன்சூரன்ஸ் எப்போதும் நடப்பில் இருக்குமாறு வைத்துக்கொள்வது

10.இரவு பயணத்திற்கு ஏற்றவாறு நல்ல தரமான வெளிச்சம் தரும்
பல்புகள்,பேட்டரிகளை பயன் படுத்துதல்


செய்யக்கூடாதது :

1.செல்போன் பேசியபடி பணிப்பது நம் கவனத்தை சிதறவைக்கும்

2 மதுபோதையில் பயணம் செய்வது

3. அதிகப்படியான எடை,நிர்ணயிக்கப்பட்ட நபர்களை விட அதிகமான நபர்களை ஏற்றிக்கொண்டி செல்வது அல்லது இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்வது

4.வாகன ஓட்டும்போது சாகசம் செய்வது

5.நிர்ணயிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் செல்வது

6.அதிக ஒலி,ஒளியை பயன்படுத்துவது

7. சரியான தூக்கம் இல்லாமல் பயணிப்பது

8. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டுமென எண்ணுவது

9.நீண்ட பயணம் ஓய்வு எடுத்துக்கொள்ளாத பயணம்

10.வாகனத்தை நிறுத்தும் போது இடப்பக்கம் ஒரமாக நிறுத்தாமல் நடுரோட்டில் நிறுத்துவது இப்படி செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும் நிறைய இருந்தாலும் முக்கியமான வற்றை மற்றும் உங்களிடம் பகிர்ந்துள்ளேன்.


ஓரே அடிப்படையான விஷயம் என்ன வென்றால் 40கி.மீட்டர் வேகத்தில் மிதமான வேகத்தில் பயணித்தால் கண்டிப்பாக சாலை விபத்து ஏற்படாது.

மெடிக்கிளைம், மெடிக்கேர் பாலிசிகளை எடுத்து வைத்துக்கொள்வதும், அறிந்து கொள்வதும் சாலச்சிறந்தது. நாம் பயணிக்கும் சாலையில் விபத்து ஏற்பட்டால் எல்லோரையும் போல் வேடிக்கை பார்க்காமல் 108 க்கோ ,அவசர உதவி ஆம்புலன்ஸ்க்கும் முடிந்தால் அடிபட்டவரின் வீட்டிற்கும் தகவல் தாருங்கள்.


எத்தனையோ மனித உயிர்கள் உரிய நேரத்தில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இறக்கிறார்கள்.

தனிமனிதனாக விபத்தில்லாமல் வாகனம் ஓட்ட உறுதி கொள்வோம்.

வாழ்க்கை பயணத்தை இனிதே தொடர்வோம்.

குத்தம் குறையிருந்தா குட்டி சொல்லுங்க.
நன்றி

அருள்மிகு தன்னாசி முனியப்பர் ஆலயம் ,பூதப்பாடி .அம்மாபேட்டை பவானி வட்டம்



அருள்மிகு தன்னாசி முனியப்பன் திருக்கோவில் பவானி வட்டம் அம்மாபேட்டையில் இருந்து அந்தியூர் செல்லும் வழியில் 5வது கி.மீட்டரில் பூதப்பாடி என்னும் சிற்றூரில் அமைந்த அழகான ஆலயமாகும்.



பூதப்பாடி சந்தையில் இருந்து பருத்தி பல தமிழகத்தின் பல ஊர்களுக்கும் செல்லும் இடமாகும்(சனிக்கிழமை அன்று ஊஞ்சப்பாளையத்தில் பருத்தி டெண்டர் விடப்படும்). பூதப்பாடியில் இருந்து சிங்கம்பேட்டை ( 1 கி.மீட்டர் ) செல்லும் வழியில் தன்னாசி முனியபன் சன்னதி உள்ளது.



கோவில் அருகே பிரமாண்ட ஸ்தலமரமும் பிரமாண்ட முனியப்பர் சிலைகளும் அலகரிக்கிறது. திருக்கோவில் உள்ளே மூலவராக தன்னாசி முனியப்பர் காட்சி தருகிறார் .



திருக்கோவில் பின் புறம் சப்த கன்னிமார் சிலைகள் உள்ளது.

ஆடிமாத இறுதியில் வருடாந்திர பூஜை பிரமாண்டமாக நடைபெறுகிறது.


நீங்களும் இப்பகுதிக்கு வந்தால்

அருள்மிகு தன்னாசி முனியப்பரை வந்து

தரிசனம் செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துரைகளை எழுதுங்கள்.

நன்றி

Friday, July 29, 2011

Arulmigu gurunathaswamy temple anthiyur


குருநாதசாமி திருக்கோவில் அந்தியூர் திருப்பணி துவக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அந்தியூருக்கு வடக்கே 2 வது கி.மீட்டரில் அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் வழியில் உள்ள புதுப்பாளையத்தில் உள்ள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த குருநாதசாமி திருக்கோவிலுக்கு மகாமண்டபம்,சபாமண்டபம்.




பிரகார மண்டபம் கட்ட 50,50,000/ ரூபாய் ஐம்பது லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பீட்டில் கட்ட இறை அருள்வாக்கின் படி துவங்க இருப்பதால் நன்கொடைகளை மக்களிடம் எதிர்பார்க்கும் கோவில் நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்படுகிறது.



நன்கொடைகள் செக், D.D M.O அனுப்ப வேண்டிய முகவரி THE EXCUTIVE OFFICER AND THE HERIDITARY TRUSTEE, ARULMIGU GURUNATHASWAMY THIRUKKOIL THIRUPPANI, PUDUPPALAYAM, ANTHIYUR -638501


உங்களால் முடிந்த தொகையை அனுப்பி அருள்மிகு குருநாத சாமி அருள் பெற அன்புடன் அழைக்கப்படுகிறது. இந்த 2010 ஆண்டு ஆடி மாத இறுதியில் 10.8.2011 அன்று புதன் கிழமை தொடங்கி 4 நாட்கள் பிரமாண்டமாக மாட்டுச்சந்தை,குதிரைச்சந்தையுடன் அருள்மிகு குருநாதசாமி பண்டிகை தொடங்குகிறது.

நம் இணைய பிளாக்கர்களையும்,வாசகர்களையும் வருக வருக என வரவேற்கிறேன். வந்து விட்டு முடிந்தால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். வாய்ப்பு இருந்தால் சந்திப்போம். திருவிழா முடித்ததும் திருப்பணி துவங்கும்.

இந்த வருட குருநாத சாமி பண்டிகைய பார்த்து விட்டு நல்ல தகவல்களை பகிரலாம்.அந்தியூர் குருநாதசாமியை பற்றி மேலும் அறிய இதே பிளாக்கில் உள்ள குருநாதசாமி வரலாறு பாகம் 1,2,3, இடுகைகளை பார்க்கவும் நட்புடன் குரு.பழ.மாதேசு.

Wednesday, July 27, 2011

அருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T




அருள்மிகு தங்கம்மன் திருக்கோவில்

வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்துள்ளது.


திருக்கோவில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் தம்மரெட்டிபாளையத்தில் குடி கொண்டு கொங்கு வேளாளர் இனத்தில் சேரன்,பாண்டியன்,பனங்காடை குலத்தவர்களுக்கும், தேவர் குலத்தவரில் கணக்கன் கூட்டத்தாருக்கும் குலதெய்வமாகிய அருள் மிகு தங்கம்மன் கோவில் வரும் பக்தர்களின் குறை தீர்க்கும் அம்பிகையாக விளங்கி வருகிறது.


மூலவராக தங்கம்மன் சப்த கன்னிமார் வடிவில் அழகாக அமர்ந்திருக்கிறது.அருகிலேயே பிரமாண்டமான அக்கினீஷ்வரர் சன்னதியும் அலங்கரிக்கிறது. வெண்நாகப்புற்று சன்னதி தங்கம்மன் ஆலயத்தின் பின்புறம் அமைந்துள்ளது.


பூஜை விபரங்கள் ; பிரதி அமாவசை காலை 11.00 மணிக்கும் பிரதி பெளர்ணமி அன்று மாலை 06.00மணிக்கும் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். இந்த நாட்களில் வழிபாட்டுக்கு வரும் பக்தர்களுக்காக ஆலயத்தில் அன்னதானம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


அருகிலுள்ள அக்கினீஷ்வரருக்கு பிரதோஷ நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

போக்குவரத்து வசதி ;

தினமும் தங்கம்மன் கோவில் வழியாக செல்லும் பேருந்துகள் திருப்பூர் பழைய பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் நேரங்கள் ;


காலை 8.20 SRRBS பஸ் ஈரோடு ,8.45 ஆனந்த் பஸ் கொடிமுடி 0945 பஸ் நெம்பர் 47 கீரனூர் 10. 50 மணிக்கு 4B/47Bபஸ் படியூர்

மதிய நேரத்தில் திருப்பூரில் இருந்து செல்லும் பஸ்கள் 1.20 ஆனந்த் பஸ் கொடுமுடி 3.00 மணிக்கு 4B/47B படியூர் 3.15 SRRBS ஈரோடு ஆகியவையும்


மாலையில் திருப்பூரில் இருந்து தங்கம்மன் கோவிலுக்கு வர 6.20 ஆனந்த்பஸ் கொடுமுடி 6.50 பஸ் நெ 20 நால்ரோடு இரவு 9.10க்கு பஸ் நெ 20 நால்ரோடு ஆகிய பஸ் வசதிகள் உள்ளன.

வருடாந்திர பூஜை ; தமிழ்மாதம் ஆடிமாதக்கடைசியிலும் ஆகஸ்ட் முதல் வாரத்திலும் சிறப்பாக நடைபெறும். அது வருகிற கர வருடம் ஆடிமாதம் 25 ஆம் நாள் 10.08.2011 புதன் கிழமை அன்று சிறப்பாக பொங்கல் விழா நடைபெறும்.



அருள்மிகு தங்கம்மன் கோவிலுக்கு பூஜை, அன்னதானத்திற்கு நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும் ; கொடுமணல் அருள்மிகு தங்கம்மன் ஆலய நற்பணி சங்கத்தினர்,, தம்மரெட்டிபாளையம் அஞ்சல், காங்கேயம் வட்டம் திருப்பூர் வட்டம் .


தொலை தொடர்புக்கு ;-STD 04294

திருக்கோவில் 258252,293278,
செயலாளர் வீடு 258224 258101

செயலாளர் அழைபேசி -;9486047324

பொருளார் அழைபேசி -9360194485.

காங்கேயம் நால்ரோட்டில் இருந்து 10கி.மீட்டர் தொலைவில்
உள்ள அருள்மிகு தங்கம்மன் கோவிலுக்கு வாருங்கள்.

நம்பிக்கையுடன் வழிபடுங்கள்.
வாழ்வில் எல்லா உயர்வுகளும் பெறுங்கள் .

திரக்கோவில் ஸ்தல வரலாற்றுடன் இடுகை விரிவாக்கப்படும்.
நட்புடன் குரு.பழ.மாதேசு.
குருவரெட்டியூர்

Monday, July 25, 2011

Arulmigu balathantayuthapani temple,kanjikovil,perundurai


அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் காஞ்சிக்கோவிலில் இருந்து நசியனூர் செல்லும் வழியில் 1 கி.மீட்டரிலும் நசியனூரில் இருந்து சுமார் 5 கி.மீட்டர் தொலைவில் கனககிரி குமரன் மலை என்னும் இடத்தில் அழகிய குன்றில் அமர்ந்துள்ள அற்புதமான முருகர் ஆலயமாகும்.



அருகில் கொங்கு வேளாளர் மெட்குலேசன் பள்ளி அமைந்துள்ளது.

திருக்கோவில் அடிவாரத்தில் வைத்திய விநாயகர் சன்னதியும் ஸ்தலமரமாக 500 வருட பழமை வாய்ந்த நகப்பழமரமும் அதன் அடியே நாகர் அமர்ந்திருக்க அருகில் இடும்பன் சன்னதியும் யோகி அருளானந்த சுவாமிகளின் ஜீவசமாதியும் அவர்கென சன்னதியும் அதை "ஓம் கார மண்டபம் " என்று அழைகிறார்கள்.



இச்சன்னதியில் அமையாய் அமர்ந்து கேட்க ஓம் எனும் ஒலி கேட்பதை உணரலாம் .பின் சுமார் 50 நுட்பமாய் கருங்கல் மலையில் செதுக்கிய படிக்கட்டுகள் ஏறிச்சென்றால் திருமுருகப்பெருமான் பாலதண்டாயுதபாணியாக வரும் பக்தர்கள் குறைதீர்க்கும் குமரனாக அருள் புரிகிறார்.



முருகர் அழகுடன் அமர்ந்து அருள் தரும் அற்புதத்தை காண காஞ்சிக் கோவில் அருகிலுள்ள கனககிரி குமரன்மலை மலைக்கு வாருங்கள் .

வந்து தரீசனம் செய்து புதுப்பொலிவுடன் உருவாகிக் கொண்டிருக்கும் திருப்பணிக்கு தங்களால் இயன்ற உதவிகள் தாருங்கள்.

ஓம் முருகா சரணம் முருகா ...


நட்புடன் ஆன்மீகத்தேடலில்

குரு.பழ.மாதேசு

Sunday, July 24, 2011

அழகாய் முடிந்த கக்குவாய் மாரியம்மன் கும்பாபிஷேக விழா



கக்குவாய் மாரீயம்மன் கும்பாபிஷேகம் :




ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூர் (guruvareddiyur ) அரசமர வீதியில் அமர்ந்து ஆட்சி செய்யும்


அருள் நிறை கக்குவாய் மாரியம்மன் திருக்கோவில் (kakkuvai marriamman temple guruvareddiyur),அருள் நிறை சக்தி விநாயகர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா நிகழும் கர ஆண்டு ஆனித்திங்கள் 25 ஆம் நாள் (10.07.2011) ஞாயிற்றுக்கிழமை நாளில் விடியல் காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சரியாக 6.07 மணிக்கு மிதுன லக்கினத்தில் அமரர் திரு .G.G குருமூர்த்தி EX.MLA அவர்களின் ஆசியாலும்



ஊராட்சி மன்றத் தலைவர் திரு .தாயகம் சிவ நடராசன் அவர்கள் மற்றும் கொமராபாளையம் அங்கப்பன் சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகிக்க திருக்குட நன்னீராட்டு விழா தமிழ்வேதம் முழங்க வேள்விப்பணியில் பவானியை சேர்ந்த சிவ .மாரியப்பன் மற்றும் சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் முழங்க சிறப்பாக நடைபெற்றது.


பல சிவனடியார்கள் அடியார் பெருமக்களும், குருவரெட்டியூர் (guruvareddiyur) சுற்று வட்டார பெருமக்களும் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை கண்டுகளித்தனர்.

விழா நாள் இரவு ஆடுதுறை அழகு பன்னீர் செல்வம் அவர்களின் பட்டி மன்றம் சிறப்பாக நடந்தது. அதில் பேசிய அனைவரும் நன்றாக பேசினார்கள் . தாரமங்கலம் செந்தில் அவர்கனின் சிரிப்பில் மயங்க வைத்த பேச்சு அனைவரையும் கவர்ந்தது.


சிறியதாய் இருத்த கக்குவாய் மாரியம்மன் கோவிலை நேர்த்தியாக வடிவமைத்து கொடுத்த பொறியாளர் திரு. துரை.செல்வக்குமார் மற்றும் ஆலய சிற்பிகள் திரு.அத்தியப்பன்,திரு.வேலாயுதம், மற்றும் மங்கள இசை அமைத்த கொளத்தூர் அப்பு குழுவினர் அவர்களுக்கு கக்குவாய் மாரீயம்மன் அருள் கிடைக்கும் என்பது திண்ணம்.


எல்லா வற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல திருக்கோவில் கட்ட தன் ஒரு வருட உழைப்பை அற்பணம் செய்த திரு. அருள்சண்முகம் ஜோதிடர்,ப.அர்ச்சுணன், செ.முத்துராமலிங்கம். ஆசிரியர் தங்கவேல் ,தனசேகர் மற்றும் பலருக்கும் வாழ்த்துக்கள் கூறி


குருவரெட்டியூர் (guruvareddiyur) என்னும் சிற்றூரில் கட்டப்பட்டிருக்கும் அருள் நிறை கக்குவாய் மாரீயம்மன் திருக்கோவிலுக்கு வந்து அன்னையின் அருள் பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கும்


குரு.பழ.மாதேசு, (guru.pala.mathesu)

குருவரெட்டியூர். (guruvareddiyur)

Tuesday, July 12, 2011

சிவாலயத்தை வழிபட வேண்டிய முறைகள்




சிவாலயத்தை வழிபட வேண்டிய முறைகள் :

1.ஆலயத்தின் உள்ளே சென்று கை கால் முகம் கழுவி அல்லது ஆலயம் அருகிலுள்ள நதிகளிகளில் நீராடி முதலில் கோபுர தரிசனம் செய்ய வேண்டும்
2. பின் கொடிமரத்தை வணங்கி ஆண்கள் அஷ்டாங்கமாகவும்(நெடுசாண் கிடையாக கை,கால்கள் நீட்டி படுத்து வணங்குவது) பெண்கள் பஞ்சாங்கமாகவும் (முட்டியிட்டு வணங்குவது)விழுந்து வணங்க வேண்டும் ,பின்னர் பலிபீடத்தை வணங்கி ஆசை.காமம் ,குரோதம் ,கோபம் போன்ற தீய குணங்களை அற்பணிக்க வேண்டும்

3.தூய மனதுடன் துவார வினாயகர் துவார முருகர் ஆகியோரை வணங்கி பின் உள்ளே சென்று சூரிய சந்திரர்களை வணங்கி அடுத்து நந்தீஷ்வரரை (வில்வம் வைத்து )வணங்க வேண்டும் .

4.சிவனுக்கு பிடித்த வில்வம்,மற்றும் பூக்கள் கொண்டு சென்று அடுத்து மூலவரான சிவபெருமானை பார்த்து நம " பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா " எனச்சொல்லி வணங்கி வணங்குதல் வேண்டும்

5. இறைவனை நினைத்து தேவாரம் திருவாசகம் பாடல் பாடுதல் ,பாடல் பாடுவதன் இறைவன் அருகில் செல்லலாம்


6.அடுத்து குரு 63 மூவர் வள்ளி தெய்வானை ,துர்க்கை, நடராஜப்பெருமானை வணங்கி வரவும்

7. அடுத்து சிவாலயத்தின் அம்பிகையை அபிராமி அந்தாதி பாடி வணங்கவும்

8.நிறைவாக சண்டிகேஸ்வரர் காலபைரவர் நவகிரகங்களை வணங்குதல் வேண்டும்

9.அதன் பின் கொடி மரத்தை அடைந்து 1,3,5,7,9 என முறைப்படுத்தி பிரதக்ஷிணம் செய்ய வேண்டும் .பிரதக்ஷிணம் என்பது மெதுவாக நடத்தல் அடி அடியாக எனக்கொள்ளலாம் .அப்படி செய்தால் அஷ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும் என சாஸ்திரங்கள் சொல்லப்படுகின்றன.

10. பிரதட்க்ஷிணம் முடித்து 108 ,54,27 என்ற முறையில் ஜபம் செய்தால் மோட்சம் கிட்டும் 11.நிறைவாக நமஷ்காரம் செய்ய வேண்டும்.அப்படி செய்யும் போது நாம் செய்த பிழைகளும் விழுகின்றன. எழுப்போது பிழைகள் கூடவே வருவதில்லை. அப்போது எத்தனை தூசிகள் உடலில் ஓட்டி உள்ளனவோ அத்தனை வருடங்கள் மேலோகத்தில் சிறப்பாக விளங்குவான் (எழும்போது தூசிகள் தட்டக்கூடாது)


11. த்திரயங்க நமஷ்காரம் கைகளை தூக்கி தலையின் மேல் வைத்து வணங்குவது இதற்கு அஞ்சலி வந்தனம் என்று பெயர் 1,3,5,7,9 என்ற எண்ணிக்கையில் நமஸ்காரம் செய்ய வேண்டும்

12. சிவப்பிரசாதம் வாங்கி இடக்கையில் போடாமல் அப்படியே இட்டுக்கொள்ள வேண்டும் . திருக்கோவிலில் எங்காவது வைத்து அசுத்தப்படுத்தக்கூடாது.அர்சகர் கொடுக்கும் திருநீரு இறைவனே அளித்ததாக எண்ணி வீட்டில் அனைவருக்கும் தரவும்.


இம்முறை பின்பற்றி இறைவன வணங்குங்கள் .

எல்லா வளமும் நலமும் பெறுங்கள்.

இந்த இடுகையை பாராயணம் செய்த

உங்களுக்கு சிவனருள் கிட்ட வேண்டி விரும்பும்

குரு.பழ.மாதேசு

Friday, July 1, 2011





அருள்மிகு கக்குவாய் மாரியம்மன் அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேகத் திருவிழா நிகழும் கர ஆண்டு ஆனித்திங்கள் 25 ஆம் நாள் 10.07.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று விடியற்காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு விழா தமிழ்வேதம் முழங்க நடைபெற உள்ளது .

அனைத்து ஆன்மிக பெருமக்களும் ,பொது மக்களும் வருகை தருமாறு அழைக்கப்படுகிறது. விழா அன்று காலை 09.00
மணிக்கு அன்னதானம் நடைபெறும். அனைவரும் வருக

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...