ஜோக்,கவிதை,கதை எழுதுதும் திறமை பல பேருக்கும் இருந்தும் அதை எப்படி அனுப்புவது என தெரியாமல் இருப்பது தான் ஆச்சரியம் ,
உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்து திறமையை ஜோக் என்றால் ஒரு அஞ்சல் அட்டையில் முகவரி எழுதம் பக்கத்தில் எந்த வார இதழ்களுக்கு அனுப்ப நினைக்கிறீர்களோ அந்த வார இதழின் முகவரி இட்டு அதன் இடப்பக்கத்தில் உங்கள் முகவரி இட்டு அதன் பின்பு முழு அஞ்சல் அட்டையின் முழு அளவுள்ள பக்கத்தில் ஜோக் என தலைப்பிட்டு தெளிவாக எழுதி
குமுதம்,ஆனந்தவிகடனுக்கு அல்லது ஜோக் பிரசுரமாகும் வார இதழ்களுக்கு அனுப்பினால் உங்கள் ஜோக்குகளை சம்பந்தப்பட்ட வார இதழ் ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமானால் அந்த ஜோக்குக்கு பரிசும் மணியார்டரில் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள்.
அல்லது முழு வெள்ளைதாளை இரண்டாக கட் செய்து ஜோக் தலைப்பிட்டு கவரில் வைத்தும் அனுப்பலாம்.
கவிதைகளையும் மேற்கண்டவாறு அனுப்பலாம். ஒருபக்க கதைகளை அனுப்பும் போது முழு வெள்ளைதாழின் ஒருபக்கம் மட்டும் எழுதி வெள்ளைதாளின் பின்பக்கம் ஏதும் எழுதாமல் முகவரி மட்டும் எழுதி அனுப்பலாம்.
பெரிய கதைகளை அனுப்பும் போது 5 பக்கம் வருமாறு வெள்ளைதாளின் ஒருபக்கம் மட்டும் எழுதி தங்கள் படைப்புகளை அனுப்பலாம். தங்களுக்கு எழுத்து திறமை இருப்பதாக கருதினால் முதலில் அஞ்சல் அட்டையில் வாசகர் கடிதம் எழுதிப்பழகுங்கள் ,
பின்பு குடும்ப மலர் வாரமலர் போன்றவற்றில் ஜோக்,கவிதை, கதைகளை அனுப்புங்கள்.பின்னர் பெரிய வார இதழ்களுக்கு அனுப்புங்கள். அதற்கு முன் எந்த மாதிரியான ஜோக்,கவிதைகள்,பிரசுரமாகின்றன என்பதை கவனியுங்கள்.
பின்பு தொடர்ந்து முயற்சியுங்கள்.
உங்களுக்குள் ஓர் எழுத்தாளன் இருந்தால்
கண்டிப்பாய் வெளிப்படுவான்.
வாழ்த்துக்கள்.
2 comments:
தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் இன்னும் அஞ்சல் அட்டைதானா
மின்னஞ்சல் எல்லாம் வீண்தானா
இது பழைய பதிவு என்றாலும் இப்போதும் பல பத்ரிக்கை இதே முறையில் அனுப்ப படுகிறது
Post a Comment