Wednesday, October 12, 2011

ஆலய‌த‌ரிச‌ன‌ம்





ஈரோடு மாவட்ட கோவில்கள் ;

ஆலய தரிசனம் ;


மகாசக்தி திருக்கோவில், சித்தர்காடு, ஆதிரெட்டியூர் ,அந்தியூர் பவானி வட்டம் ,(mahasakthi thirukovil,sittharkadu, ahadireddiyur, anthiyur near , bhavani taluk )

அமைவிடம் ; அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் வழியில் 5 கி.மீ தொலைவில் உள்ளது. கொல்லபாளையம் ஏரி வழியாக செல்லவும்.


கோவில் உருவான வரலாறு ;



ஒரு ஏழ்மை குடும்பத்தில் பிறந்த அந்த பையன் ஆடு மேய்த்துக் கொண்டும் தனக்கு சொந்தமான காட்டில் தன் 18 வது வயதின் தை மாதத்தில் பெண் பணியாளர்களுடன் கொள்ளு அறுவடை செய்து கொண்டு இருக்கும் போது அப்பது தமக்கு சொந்தமான இடத்தில் முட்புதர்கள்


,பழமையான மரங்கள் அடங்கிய பாறை அருகில் சத்தம் கேட்க அங்கே வந்த அந்த பையன் பார்த்தபோது அங்கே தமக்கு சொந்தமான புதரின் அருகே உள்ள பாழியில்
(பாறையில் இயல்பாக தண்ணீர் தேங்கும் அமைப்பு . போட்டோ பாருங்க)




யாரோ ஒரு பெரியவர் பித்தன் போன்ற ஒருவர் குளித்து விட்டு நிற்க யாராக இருக்கும் என யோசித்தவாறு அந்தப்பையன் விழிக்க



சாப்பிட்டாயா..? என வினவி புதரை காட்டி இந்த "புதரில் பாம்பு இருக்கு தெரியுமா,..?
எனக்கேட்டு "போ" என அந்த பெரியவர் சொல்ல அந்தப்புதரில் இருந்து பாம்பு செல்லக்கூடிய சப்தம் உணர்ந்த அந்தப்பையன் அதிசயித்து நிற்க அப்போது அப்பெரியவர் போன்ற சித்தர் உருவம் கொண்ட அவர்


"இந்த இடத்தில் பறி எனச் சொல்ல அந்தப்பையனும் தன் அரிவாளால் மறுப்பு ஏதும் சொல்லாமல் தானும்

குனிந்தவாறு மெல்ல பறிக்க பின்னால் இருந்த பாழியில் இருந்து செம்மண் கலந்த பானையில் நீரை கலந்தவாறு தன்மேல் ஊற்ற திடுக்கிட்ட அந்தப் பையனிடம் இவ்விடத்தில்

"ஞான சித்தரும்,மகா சக்தியும் சிவனும் ஆட்சி செய்கிறார்கள் பூஜை செய்யப்பா"

...! எனக்கூற அந்தப்பையன் ஓடிச்சென்று பாழியில் தன் மேல் ஒட்டிய சேறை நீக்க குளித்து விட்டு வர அந்தப் பெரியவரை காணவில்லே,


சுற்றிலும் பார்த்து விட்டு அங்கே தன் பனைமரத்தில் மேல் இருந்த பனை தொழிலாளர்களிடமும், அங்கே இருந்த பெண்களிடமும் கேட்க அந்தப் பெரியவர் எங்கே சென்றார் என கூறிவிட்டனர்.


3 வருடம் கழித்து; அந்த சம்பவம் மனதை வருட ஒருநாள் தன் வயலின் அதே இடத்தில் தன் மதிய உணவை முடித்து தன் டிபன் பாக்ஸை மறந்த விட்டு வந்தவர் அடிக்கடி அவ்விடத்திற்கு செல்ல பையனக்கு மன நிலை சரியில்லை என கோவில்கள் .,மருத்துவமனை, போய் பார்த்தும் சரியாகமல்


அவரின் 22 வது வயதில் கோபியில் உள்ள சன்யாசியிடம் கூட்டிச்செல்ல இந்தப் பையன் நல்ல முறையில் உள்ளான் எனவும் இவர் காட்டில் ஒரு கோவில் உள்ளது அதற்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றி பூஜை வெள்ளிக் கிழமை அன்று செய்யுங்கள் எனச்சொல்ல கூட்டி வந்த அந்த பையன் இஷ்டம் போல பூஜை செய்ய சொன்னார்கள்.


அவ்விடம் பூஜை செய்ய நன்கு சுத்தம் செய்ய சுயம்பு லிங்கமாக சிவ லிங்கம் அங்கே தரிசனம் தருகிறது. தொடர்ந்து பூஜை நடை பெறுகிறது. அந்தப்பையன் தான் தற்போது பூசாரியாக ,ஞான சித்தர் அருள் பெற்றவராக பூஜை செய்து வருகின்றார் ,


அவ்விடத்தில் இடப் பற்றாக்குறையினால் மகா சக்திக்கு கோவில் தனி சன்னதியாக எழுப்பபட்டு திருப்பணிகள் நடை பெற்று வருகிறது.

ஆன்மீகப் பெரியோர்கள் ஆலோசனைப்படி மகாசக்தி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை வெள்ளி, அம்மாவசை,பெளர்ணமி நாட்களில் நடைபெறுகிறது.


இங்கு உள்ள சிலைகள் 1. மகாசக்தி சிலை சுதகையால் ஆனது,துவாரபாலகர்கள் நீலி,காளி 2. மகாசக்தி தனிபீடம் 3,துர்க்கை,பத்திரகாளி 4. சிவ லிங்க சுயம்பு சிலை (கோவில் வரலாறை சொல்லும் அமைதியான இடம் ) இங்கே மரங்களுக்கிடயே தியானம் செய்ய அமைதி யுடன் காணப்படுகிறது,


தரிசன நன்மைகள் 1. குழந்தை வரம். திருமணத்தடை நீங்கப் பெறுவதாக சொல்கிறார்கள்.


எம் அனுபவத்தில்; இங்கே அமைதி ஏற்படுவதை உணர்கிறேன்,


கோவில் சுவாமிகள் பற்றி;


முன்பு கதையில் அந்தப்பையன் தான் தற்போது வளர்ந்து 40 வயதை கடந்தவராக மாதப்பன், என்கிற முருகேச சுவாமிகள் ஆவார். அவர் மற்றும் புகைப்படங்கள் பாருங்கள்,நேரில் சென்று மகாசக்தியை யும் சுயம்பு சிவலிங்கத்தையும் பாருங்கள்.


உங்கள் மனம் அமைதி பெற வாழ்த்துக்கள் உங்கள்களின் ஆழமான கருத்துரைகளை எதிர்பார்க்கின்றேன்.

எம் இணையத்தை விஜயம் செய்தமைக்கு நன்றிகள் பல

கோட்டை முனியப்ப சாமி ஆலயம்





பெருந்துறை ஈரோடு மாவட்டம் (Kottai muniyappasamy temple, perundurai erode d.t) திருக்கோவில் அமைவிடம்:



பெருந்துறையில் இருந்து கோவை செல்லும் பெருந்துறை பஸ் நிலையம் அருகில். ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து 20கி.மீலும் பவானியில் இருந்து 30கி.மீலும் கோவில் உள்ளது.

மூலவர்: முனியப்ப சாமி.

வரலாறு:

திருக்கோவில் கீழ் பகுதியில் இடப்பகுதியில் விநாயகப்பெருமானை தரிசனம் செய்து வலப்பகுதியில் கருப்பராயரை தரிசனம் செய்து 25 படிக்கட்டுகளை ஏறி, (அக்காலத்தில் இந்த இடம் கோட்டையாக இருந்ததாம்.


அக்காலத்தில் விஜயநகரப் பேரரசு விஜயபுரி தற்போது விஜயமங்கலம் 10கி.மீ உள்ளது ) கோவில் உட்பிரகாரம் சென்று இடப்பக்கம் திரும்பினால் 3 முனியப்ப சாமிகள் பிரமாண்டமாய் வரவேற்க உற்றுப்பார்த்தால் பயமாய் நம்மை வரவேற்கிறார்கள்


அவர்களை தரிசனம் செய்து கோவிலை வலம் வந்தால் மூலவர் கோட்டை முனியப்பரை தரிசனம் செய்யலாம். மூலவர் குடமுழுக்கு செய்த மனதுக்கு அமைதி அளிக்கிறார்.


பழைய கோவில் மூலவர் கற்சிலையை பஸ்நிலையம் எதிரில் உள்ள கிணற்றில் பழங்காலத்தில் இருந்த எடுத்து வந்ததாகவும் அப்போது அக் கிணற்றில் அருகே அருள் வாக்கு சொல்லி வந்ததாகவும் அப்போது அருள் வந்த ஒருவர் அக்கிணற்றில் குதித்து ஒரு சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்ததாகவும் செவிவழிச்செய்திகள் கூறுகின்றன.



விழாக்காலம்: வருடத்தோறும் ஐப்பசி முதல் வாரத்தில்.

எம் அனுபவம் ; இங்கே சுற்றிப்பார்த்தில் பழங்காலங்கால கோவில் உணர்வும் மன அமைதியும் தென்படுகிறது.


சேலம், ஈரோட்டில்இருந்து கோவை செல்லும் போது

பெருந்துறை பஸ் நிலையம் அருகில் உள்ள இக்கோவிலை தரிசனம் செய்து

இக்கோவில் பற்றிய உங்கள் அனுபவங்களை

எமக்கு கருத்துரை இடுங்கள், நன்றி.

: அருள்மிகு பாலமலை சித்தேஸ்வர மலை.








கொளத்தூர், மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம். செல்லும் வழி: 1. மேட்டூரில் இருந்து கண்ணாமூச்சீ சென்று அங்கிருந்து மலை ஏறவேண்டும்.


வழி : 2. மேட்டூரில் இருந்து பவானி செல்லும் வழியில் நெரிச்சிப் பேட்டையில் இறங்கி அங்கிருந்து மலை ஏற வேண்டும்

வழி:3. பவானில் இருந்து குருவரெட்டியூர் வழியில் ஊமாரெடியூரில் இறங்கி செல்லலாம்.

சிறப்பான வழி :4 பவானியில் இருந்து குருவரெட்டியூர் பஸ் ( B5 , B10 ஜெயகிருஷ்ணா, முருகன்) ஏறி குருவரெட்டியூர் வந்தடந்து 2 கி.மீ கரடிப்பட்டியூர் (அ ) கொளத்தூர் வழியில் வலது பக்கம் மலை அடிவாரம் சென்று வினாயகரை தரிசனம் செய்து மலை ஏற வேண்டும்.


முக்கியமாக கவனிக்க வேண்டியது வேண்டியது:

1. மலைப்பாதைக்கு பஸ் வசதி கிடையாது, நடந்து தான் செல்ல வேண்டும்..

ஏற வேண்டிய மலைகள் 7 மலைகள்...

கொண்டு செல்ல வேண்டியது : டார்ச் லைட், கம்பளி.,

3 வேளை உணவு, தண்ணீர், அவசியம் ..

சிறப்புபலன்கள்:


1.சித்தேஸ்வரர் தரிசனம்
2.இயற்கை யான மலைப்பாதை

3.மலைவாழ் மக்களின் பலா, கொய்யா ,மாதுளை, நெல்லி பெறலாம்
4. சுத்தமான காற்று..

ஓய்வெடுக்க இடங்கள் :

வெற்றிலைப்பாறை, தும்பம்பதி . பெரியகுளம்,

மேல்மலை அடிவார விநாயகர் கோவில்.

அன்பான உங்களுக்கு :மலைப்பாதை 10 முதல் 15 கி.மீ அல்லது 7 மலைகள் இருக்கும், நல்ல உடற் தகுதி உடையவர்கள் மட்டும் செல்லாம் ..

செல்ல வேண்டிய மாதங்கள் : புரட்டாசி , சித்திரை (எல்லா சனிக்கிழமைகளும் ) மக்கள் கூட்டம் இருக்கும் மற்ற நாட்களில் செல்ல வேண்டாம்..

மலையில் 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மருத்துவ வசதி கிடையாது..! மற்றபடி விபரங்களுக்கு எமக்கு மெயில் செய்யுங்கள்.

சித்தேஸ்வரர் அருள் பெற்று வாழ்வாங்கு வாழ

இறை துணை வேண்டி குரு.பழ. மாதேசு,
குருவரெட்டியூர்


எமக்கு தெரித்த சிவாலய ஆலோசனைகள்

1.சிவாலயம் மற்றும் எவ்வாலயம் செல்லும் போதும் முதலில் முழுமுதற்கடவுள்
விநாயகரையும் பின் நந்தீஷ்வரரை வணங்கி விட்டே செல்ல வேண்டும்

2. சிவனுக்கு உகந்தது வில்வம் திங்கட்கிழமை. பிரதோஷ நாட்கள்

3. ஏதேனும் சிவநாமம் உச்சரிப்பது(ஓம் சிவாய நமஹ, ஓம் நமச்சிவாய ) அல்லது தேவரம்

திருவாசக பாடல் பாடுவது சிறப்பு

4.விநாயகருக்கு பிடித்து எருக்கன்., அருகம்பூ மாலை

5. வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை,மஞ்சள் ஆடை, முல்லை
மலர். குருவை நேருக்கு நேராக நின்று கும்பிடவும்

6 .செவ்வாய் கிழமை முருகருக்கு நெய் தீபம் செவ்வரளி

7. துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை எலுமிச்சை தீபம்

8. சனிஷ்வரர்க்கு சனிக்கிழமை .எள்.எள்தீபம். எள்முடிச்சு நல்லெண்ணெய் ,பக்க வாட்டில்
நின்றவாறு கும்பிட வேண்டும் என்பர் சிலர். கருங்குவளை பூ உகந்தது


9. இறைவனை நன்கு கைகளை மேல் உயர்த்தியே வணங்க வேண்டும்

10. கோவில் வலம் வந்த பின் கொடிமரத்தின் முன் நெடுசாண்கிடையாக விழுந்து வணங்கினால்
நம் ஊழ்வினைகள் தீர்ந்து நல்வினைகள் உருவாகும்.

நன்றி மேலும் தகவல்கள் ஞாபகம் வரும் போது இப்பகுதி நீட்டிக்கப்படும்,

ஆன்மீக நன்பர்களுக்கு இப்பகுதியில் தவறுகள் இருப்பின்
மன்னித்து சுட்டிக்காட்டவும்.
நன்றி


ஆலய தரிசனம்:

சோழீஸ்வரர் திருக்கோவில் பெருந்துறை ஈரோடு மாவட்டம் SOLIESWARAR temple perundurai erode district

திருக்கோவில் பெயர்:

அருள்மிகு சோழீஸ்வரர் மூலவர்: சிவன் அம்பாள் :வேதநாயகி

அமைவிடம் :

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பெருந்துறை 20கி.மீ பயணம் செய்து பெருந்துறை புதிய பஸ் நிலையத்தில் இருந்து 100மீட்டர் தொலைவில்.

திருக்கோவில் சிறப்பு:

அழகான உருவமாய் நகரின் மத்தியப் பகுதியில் உள்ள சோழீஸ்வரர் ஆலயத்தின் முன் பகுதியில் நம்மை வரவேற்பது கொடிமரம் இங்கே நின்று சிவ நினைப்பில் உள்ளே செல்ல அரசமரத்தின் கீழே அழகிய உருவில் விநாயகர் உடன் ராகு கேது களை தரிசித்து உள்நுழை வாயிலில் சென்றால் அங்கே நந்தீஸ்வரர் தரிசனம் செய்து மூலவர் தரிசனம் செய்ய உள்ளே சென்றால் அங்கே சோழீஸ்வரர் தரிசனம் அருமையாகவும் நல் சிவ தரிசனமும் பெற்ற உணர்வு நமக்கு கிடைக்கின்றது.

பின்னர் இடப்பக்கம் திரும்பினால் நால்வரையும் தரிசனம் செய்து அருகே வேதநாயகி அம்மன் சன்னதியில் வேதநாயகி அழகாகவும் அன்பாகவும் நமக்கு தரிசனம் தருகிறார்.

இடப்பக்க பின்புறம் வரசித்தி விநாயகரும் அருகே பழைய கோவிலில் இருந்த லிங்கமும் அருகே தட்சிணாமூர்த்தி சன்னதியில் நேராய் நின்று தரிசித்து


கோவில் இடப்பக்கம் சன்டிகேஸ்வரர் அருகே துர்க்கை ,முருகர் வள்ளி., தெய்வானை ,ஐய்யப்பன் ,பின்னர் சனிஷ்வரர் சன்னதியில் தரிசனம் செய்து காலபைரவர் கும்பிட்டு நவகிரகங்களை சுற்றி சந்திர சூரியர்களை வணங்கி வந்தால் நாம் முதலில் தரிசித்த நந்தீஷ்வரர் பின் வந்து நின்று தூரத்தில் உள்ள மூலவரை மறுபடி வணங்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி நம் வேண்டுதல்களை நியாபகபடுத்தி வேண்டுகையில் சோழீஸ்வரர் தரிசனம் செய்த திருப்தி நமக்கு நன்றாய் கிடைக்கிறது .
உப தகவல்: சிதிலமடைந்து இருந்த இக்கோவில் மக்களின் பேருதவியாலும் .சிவனடியார்களாலும்,

பெருந்துறை வேதநாயகி அம்மன் நற்பணி மன்றத்தாலும் ஒரு கோடி ரூபாய் செலவில் கடந்த சில வருடங்களுக்க முன் புதிப்பிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு; முடிந்தால் ஒரு முறை வந்து
சிவனருள் பெற்றுச் செல்லுங்கள்.

ஓம் நமச்சிவாய நமஹ்



விநாயகர் அகவல் ;

இயற்றியது அவ்வையார் (தொடங்கும் செயல் வெற்றி பெற இப்பதிகத்தை ஒரு முறை விநாயகர் ஆலயத்தில் படித்து விட்டு தொடங்குங்கள் உங்கள் காரியத்தில் வெற்றி கிடைக்கும்)



'சீதக் களம்பச் செந்தா மரைப்பூம்
பாதச்சிலம்பு பலவிசைப் பாட
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிரும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும்
திரண்ட முப்பரிநூல் திரளொழி மார்பும்

சொற்பதங் கடந்த துரிதமெய் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரு மூஷிக வாகன
இப்பொழு தென்னை ஆட்கொள்ள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயப்பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைத் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென துளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திரம் இது பொருளென

வாடா வகைதான் வந்தெனக் கருளிக்
கோட யுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணை இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங் கருத்தினை அறிவித்து
இருவின தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்குந் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் மறுத்தே

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத் தங்குச நிலையும்
பேரா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் கழுமுனைக் கபாலமுங் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவி லுணர்த்திக்

குண்டலி யதற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலா லெழுப்புங் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பயும் காட்டி

சணமுக தூலமுஞ் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக் கருளிப் புரியட்ட
காயம் புலப்பட எனககுத் தெரிஎட்டு நிலையுங்
கெரிசனப் படுத்திக் கருத்தினிற் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி இனிதெனக்கருளி
என்னை அறிவித் தெனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கு மனமு மில்லா மனோலயந்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி யிரண்டுங் கொன்றிட மென்ன
அருள் தரும் ஆனந்தத் தழுத்தியென் செவியில்
எல்லையில்லா ஆனந்தம் அளித்து

அல்லல் களைந்தே அருள் வழிக்காட்டிச்
சத்தத்தி னுள்ளே சதாசிவங் காட்டிச்
சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி
அணுவிற் கணுவா யப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமு நீறும் விளக்க நிறுத்திக்
கூடுமெயத்தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சுக் கரத்தினரும் பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே....

விநாயக அகவல் முற்றிற்று...
பதிகம் பற்றி; விநாயகருக்காக அவ்வையார் அருளிய
இப்பதிகம் மிகவும் பிரசித்தி பெற்றது..

பலன்; நாம் செய்யும் பல செயல்கள் இடையூருகள் ஏற்படுவது இயல்பு
ஆனால் தொடங்கும் செயல் இனிதே நடைபெற
இப்பதிகத்தை விநாயகர் கோவில் அல்லது விநாயகர் படம் முன்பு விளக்கேற்றி படியுங்கள் தொடங்கும்
உங்கள் நற் செயல்கள் வெற்றிபெற என் வாழ்த்துக்கள் .
இப்பதிகத்தின் கதை

பின்நாளிழ் வெளியிடப்படும்.

மங்களங்களை அள்ளித்தரும் ஸ்ரீ மங்களகிரி பெருமாள் திருக்கோவில், சூரியம்பாளையம் கிராமம் ,ஈரோடு வட்டம்



ஸ்ரீ பெருமாள் துதி :


ராகம் :நீலாம்புரி


தாளம் : சுத்தாங்கம்


பச்சைமா மலைபோல் மேனி,
பவளவாய் கமலச்செங்கண் ,
அச்சுதா! அமரர் ஏறே; ஆயர் தம்,
கொழுந்தே !என்னும் ,
இச்சுவை தவிரயான் போய் ,
இந்திரலோகம் ஆளும் ,
அச்சுவை பெறினும் வேண்டேன்,
அரங்கமா நகர் உளானே.

ஸ்ரீ மங்களகிரி பெருமாள் திருக்கோவில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய வைணவத்திருத்தலங்களில் ஒன்றாகும்.

ஸ்ரீ மங்களகிரி பெருமாள் திருக்கோவில் மலைமேல் அமர்ந்த அழகிய ஸ்தலமாகும்


மூலவர் : ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீமங்களகிரி பெருமாள்



செல்லும் வழி :

ஈரோட்டிலிருந்து பவானி செல்லும் (அக்ரஹாரம் வழி) வழியாக சுமார் 8 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. பெருமாள் மலை பஸ் நிறுத்ததில் அமைந்துள்ளது.

அமைவிடம் :

ஈரோடு வட்டம் சூரியம் பாளையம் கிராமத்தில் இறைவன் பெயரான "பெருமாள் மலை" என்னுமிடத்தில் அமைந்துள்ளது. கொங்கு நாட்டின் வற்றாத ஜீவநதியாம் காவேரி நதிக்கு தென்பக்கமாக அமைத்துள்ள மிகப்பெரிய பாறையால் அமர்ந்த அற்புதத் திருத்தலமாகும்.

புரட்டாசி மாதத்தில் வரும் நான்கு சனிக்கிழமைகளிலும் பெரும் திருவிழாவாக ஸ்ரீ மங்களகிரி பெருமாளை கொண்டாடுகின்றனர் .

விஷேச நாட்கள் :

ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை ஸ்ரீமங்களகிரி பெருமாள் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பெளர்ணமி பூஜைகள் நடைபெறும் .

புரட்டாசி மாதத்தில் ஸ்ரீமங்களகிரி பெருமாளை தரிசனம் செய்ய மலை ஏறி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.

700 வருட சரித்திரம் கொண்டவர் ஸ்ரீ மங்களகிரி பெருமாள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக இந்து அறநிலைய துறையால் அழகாக பராமரிக்கப்பட்டு வரும் திருக்கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.

கடந்த 9 ஆண்டுகளாக சிறப்பாக இறைவழிபாடு செய்யவும் அன்னதானம் ,போன்ற பல உதவிகள் செய்யும் விழாக்குழுவினர் மற்றும் பூசாரிகளை பாராட்டியாக வேண்டும்.

மலை என்று சொன்னாலும் மங்களகிரி என்பது சிறிய பாறை அமைப்பால் ஆன மலைக்குன்றுதான். அழகாக படி அமைத்துள்ளார்கள். எல்லா வயதினரும் தரிசிக்க ஏற்ற மலை .

ஏதேனும் ஓர் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் குடும்பத்துடன் வந்து ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீ மங்களகிரி பெருமானை வணங்கி

உங்கள் வாழ்வில் பல மங்களங்கள் உண்டாகவேண்டுமென விரும்பும்

அன்பன் குரு.பழ.மாதேசு

Sunday, October 9, 2011

இயற்கையின் அழகில் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை




மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகான மலைத்தொடரில் அமைந்துள்ள வனப்பகுதிகளில் அந்தியூர் வனப்பகுதியாக ஒன்றாகும். வரட்டுப்பள்ளம் அணை ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் வழியில் 10 கி.மீட்டரில் இடப்பக்கம் ஒரு கி.மீட்டர் சென்றால் அணையை பார்வையிடலாம்.


சாப்பிடவோ,தண்ணீரோ அணையில் கிடைக்காதென்பதால் வரும் போது வாங்கிக்கொண்டு வருவது நல்லது. வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கம் 28.1 .1980 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.


அழகிய முகப்பில் சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்க பெரிய நீர்பரப்பையும் , தூரத்தில் நீண்டு வளர்ந்து நிற்கின்ற மூங்கில் மரங்கள்,தூரத்தில் தெரியும் அணையின் ஒரங்களில் வளரும் புற்களை சாப்பிட வரும் பசுமாடுகள்,என பல அழகு காட்சிகள் அருமையானது.

அணையின் மேல் முகப்பு இரும்பு கம்பியால் தடுக்கப்பட்டுள்ளது. அணையின் மேல் இருக்கும் தார்சாலையில் நடந்துதான் செல்ல அனுமதிக்கப்படுகிறது. சுமார் 2 கி.மீட்டர் தூரமுள்ள அணையின் மேற்பரப்பில் இயற்கை சூழலில் நடக்க அழகாக இருக்கிறது.


வரட்டுப்பள்ளம் அணையின் மத்திய பகுதியில் பாசனத்திற்காக திறக்கப்படும் மதகு உள்ளது . அதைத்தாண்டி நடக்கலாம் யானைகள் அடிக்கடி பயணிக்கும் பாதை என்பதால் எச்சரிக்கை அவசியம்.நாங்கள் செல்லும் போது சிறிய மழை பெய்து வரவேற்றது.


அணையின் உயரம் மொத்தம் 46 அடி என்றும் தண்ணீரின் கொள்ளவு 33 அடி என்றும் கேள்விப்பட்டேன் . அணையின் பரப்பளவாக சுமார் 3000 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கின்றது.

அணையின் மேல் பகுதியில் ஸ்ரீகோட்டை மலை திருக்கோவில் இருக்கிறது. இங்கு பழங்காலத்து சுவடுகள் இருப்பதாக சொல்கிறார்கள் .மாலை நேரமானதால் செல்லமுடியவில்லை. யானைகள் நடமாட்டமுள்ள பகுதிகளாதலால் கோட்டை மலை ஆண்டவர் கோவிலுக்கு இந்த வழியாக செல்வது பாதகாப்பாக இருக்காது.


அணையின் முகப்பில் வீரப்பன் வாழ்ந்த காலத்தில் அதிரடிப்படை முகாம் இருந்துள்ளது. தமிழக அரசின் பொதுப்பணித்துறை யினர் கவனமாக வரட்டுப்பள்ளம் அணையை பாதுகாத்து வருகின்றனர். இங்கு சிறிய அளவில் ஸ்ரீ கருங்காளி அம்மன் திருக்கோவில் உள்ளது.


வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் ,நீர்காகம் ,சில வெளிநாட்டுப்பறவைகள் உடும்பு,மான்கள் இவைகளை மட்டுமே நாங்கள் செல்லும் போது காண முடிந்தது. ஆனால் இங்கு யானைகள் ,சிறுத்தைகள் போன்ற விலங்குகள் பார்த்துள்ளதாக சொல்கிறார்கள் .

அணையின் மேற்பகுதியில் இருந்து பார்த்தால் ஓர் கோடு போட்டதைப் போல ஒரே நேர் சாலையாக பல மலைகளில் செல்கிற பர்கூர் சாலை அழகான ஒன்றாகும். ஒருநாள் சுற்றுலாவுக்கு தகுந்த இடமாக தேர்வு செய்யலாம்.


பெரிய எதிர்பார்ப்புடன் வராமல் இயற்கையை ரசிக்கும் எண்ணமிருந்தால் வந்து ரசிக்க அழகான இடமாகும். மனதை இதமாக்கும் அற்புத இடம்,


வந்து பார்த்துவிட்டு எழுதுங்கள் .

நட்புடன்

குரு.பழ.மாதேசு

Monday, October 3, 2011

பாலமலை எனும் சொர்க்கபூமி




சேலம் மாவட்டம் கொளத்தூர்க்கு அருகில் பாலமலை உள்ளது. புகழ்பெற்ற பாலமலை ஸ்ரீ சித்தேஷ்வரர் இங்குதான் அமைந்துள்ளது. பாலமலையில் வாழும் மக்கள் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள் .

பல கிராமங்களில் பாலமலையில் மக்கள் வாழ்கிறார்கள்.மின்சார வசதி இல்லாமல் வாழும் இவர்களுக்கு சோலார் மின் விளக்கு வசதியில்தான் வாழ்க்கை நகருகிறது.

பாலமலை என அழைக்கப்படும் சித்தேஸ்வரமலையில் காணப்படும் ஊர்கள் தும்மம்பதி.,அணைக்காடு,பெரியகுளம்,ஈச்சங்காடு,நத்தக்காடு,நாகம்பதி, துவரங்காடு,கெம்மம்பட்டி,ராமன்பட்டி ,புள்ளம்பட்டி, நமன்காடு,கருகாமரத்தூக்காடு,தலைக்காடு,சாத்தன மடுவு,

எருக்களாங்காடு, சிங்காரதோப்பு, சோத்தாங்காடு,இடைமலைக்காடூ.பத்திரமடுவு, பெரியணக்காடு. ஆகிய ஊர்களில் மக்கள் அடிப்படை வசதிகளுக்கு சிரமப்பட்டு வாழ்ந்து வருகின்றனர் .

கல்விக்காக பள்ளிக்கூடம் பெரியகுளம் பகுதியில் இருந்தாலும் பாலமலை வாழ் மக்கள் குழந்தைகள் கல்வி தேடி குருவரெட்டியூர், சென்னம்பட்டி,கொளத்தூர், சேலம் பகுதிகளுக்கு படிக்கச்செல்கிறார்கள். பாலமலை வாழ் மக்களின் ஒரே நம்பிக்கை தற்போது அரசு அனுமதியுடன் சாலை உருவாக்கி கொண்டிருப்பதுதான் .

100 நாள் வேலைத்திட்டத்தில் தங்களுக்காக தாங்களே சாலை அமைத்து வருகிறார்கள் .சாலை உருவானால் பாலமலை சித்தேஸ்வரர் திருக்கோவில் செல்ல new சாலை உருவாகிவிடும் . பல மூலிகைகளும் உயர்ந்து வளர்ந்த மரங்களும், சுனைகளும் அழகானதாகும் .பாலமலையின் அடர்ந்த வனப்பகுதியாக சிங்காரத்தோப்பு அமைந்துள்ளத
ஸ்ரீ சித்தேஸ்வரமலை கீழ் பகுதியில் அமைந்த வனமாகும் .இங்கு கரடி. குரங்கு,மான்கள்,காட்டுப்பூனைகள் ,முயல்,காட்டுப்பன்றிகள் வாழ்கின்றன. பயப்படும்படியான விலங்குகள் எதுவும் இல்லை.

உரிக்கொடி போன்ற அபூர்வ மூலிகைகள் இருப்பிடமாக திகழ்கிறது.இயற்கை அழகு சூழ்ந்த பாலமலையை இரண்டுநாள் சுற்றுப்பயணமாக தேர்வு செய்யலாம்


. இயற்கையான பாலமலையில் கொய்யா,மாதுளை, பாலாபழம் ,சீதாப்பழம்,நகப்பழம் ,என பலவகையான பழங்கள் கிடைக்கிறது.


ஒரு முறை வந்து சுற்றிப்பார்த்து விட்டு எழுதுங்கள்..





Sunday, October 2, 2011

அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில், பாலமலை,. கொளத்தூர் , சேலம் மாவட்டம் Arulmigu palamalai sri sidheswaran temple,kolathur,mettur taluk






பாலமலை அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில்

palamalai sri sidheswara temple; kolathur,

mettur taluk salem district

இயற்கையின் அழகில் நம்மை மயக்கும் ஓர் அற்புத மலைக்கோவிலாகும் .

மூலவர் :- ஸ்ரீ சித்தேஷ்வரர்

அமைப்பு :-



சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் கொளத்தூரில் இருந்து தொடங்கும்
பாலமலை ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூர்
30கி.மீட்டர் வரையிலும் குருவரெட்டியூரில் இருந்து ஊமாரெட்டியூர்
நெரிஞ்சிப்பேட்டை வழியாக சென்று மேட்டூர் வரை 30கி.மீட்டர்
என பாலமலையின் எல்லைப்பகுதியாக அடந்த வனப்பகுதியாகவும்,

மேற்குத்தொடர்ச்சி மலையின் தனித்து விடப்பட்ட
7 மலைகள் அமைந்த தனிமலையாகவும் அமைந்துள்ளது.
மலையின் சுற்றளவு சுமாராக 80கி.மீட்டர் இருக்கும் .
உயரம் சுமார் 4000அடி முதல் 5000 அடி இருக்கும் ,

பாலமலை சித்தேஸ்வர மலை சேலம்.ஈரோடுமாவட்ட எல்லையில்
இருக்கின்ற ஒர் அழகிய மலையாகும்.
பாலமலை யின் 7 வது மலையின் உச்சியில்
ஸ்ரீ சித்தேஷ்வரர்க்கு அழகான திருக்கோவிலை உருவாக்கி இருக்கிறார்கள்.


திருக்கோவில் உட்பிரகாரத்தில் மூலராக சித்தேஸ்வரரும் உடன் ஸ்ரீவிஷ்ணுவும் ,ஸ்ரீமாதேஷ்வரர் அமர்ந்து வரும் பக்தர்கள் துபர் தீர்க்கின்றனர். திருக்கோவில் பிரசாதமாக திருநீரும் அழகிய மலைப்பூக்களையும் தருகிறார்கள் .
ஏழாவது மலையின் உச்சியில் சதுர வடிவில் திருக்கோவிலை
தரிசனம் செய்ய பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக
பாதுகாப்பாக திருக்கோவில் அமைந்திருக்கிறது.

திருக்கோவில் ஒருநிலைக் கோபுரமாகவும் வடக்கு நோக்கி அமைந்துள்ளது.
ஸ்ரீ சித்தேஷ்வரர் எதிரே நந்தீஸ்வரர் சிலை அழகானது.
ஸ்ரீசித்தேஸ்வரர் எதிரே உள்ள ஸ்ரீதிருக்கொடி அம்மன் ,
தேள்சாமி, ஸ்ரீஆஞ்சநேயர் சிலை, சிறு நந்திகளின் சிலைகள்
பக்தர்களால் வழங்கப்பெற்ற வேல்களும் அழகானதாகும்.

திருக்கோவில் தோன்றிய வரலாறு :-



பழங்காலத்தில் உணவுக்காக கிழங்கு பறிக்க சென்ற மலைவாழ் மக்கள் தற்போது ஸ்ரீசித்தேஸ்வரர் அமைந்துள்ள இடத்தில் கடப்பாறையால் குத்தும்போது
அங்கிருந்த சித்தேஷ்வரர் சுயம்பு மூர்த்தியின்
சிறிய லிங்க வடிவத்தின் மேல் பட்டு பால் வந்ததாகவும் பதற்றப்பட்டு ,
பின்னர் அந்த இடத்தை சுத்தம் செய்து பார்த்த போது அங்கே
தற்போதுள்ள ஸ்ரீ சித்தேஷ்வரர் சிலை இருந்ததாகவும் அன்றிலிருந்து
பாலமலைவாழ் மக்களால் விரும்பி வணங்கப்படும் தெய்வமாக
ஸ்ரீசித்தேஸ்வரர் உருவானதாக செவி வழிச்செய்திகள் இயம்புகின்றன.


திருக்கோவிலுக்கு செல்லும் வழிகள் :


1. மேட்டூரில் இருந்து அம்மாபேட்டை செல்லும் வழியில் நெரிஞ்சிப்பேட்டையில் இறங்கி (15 கி.மீட்டர் ) செல்வது

2. மேட்டூரில் இருந்து அம்மாபேட்டையில் இறங்கி (20கி.மீட்டர்) அங்கிருந்து ஊமாரெட்டியூர் வந்து அங்கிருந்து மலைப்பாதையை அடைந்து செல்வது.

3.பாலமலையின் மறுபக்கமான மேட்டூரில் இருந்நு கொளத்தூர் கண்ணாமூச்சியை அடைந்து அங்கிருந்து மலையேறுவது.

4.எளிமையான பாதுகாப்பான வழியாக அடிவாரம் வரை பஸ் வசதி உடைய வழியான பவானி வட்டம் குருவரெட்டியூர்- 638504வழியைப்பற்றி பார்ப்போம் .


பவானியில் இருந்து 30கி.மீட்டர் தூரத்திலுள்ள குருவரெட்டியூர் என்ற ஊரில் இருந்து சுமார் 1 கி.மீட்டர் தூரத்தில் பாலமலை சித்தேஷ்வரமலை அமைந்துள்ளது.அந்தியூரில் இருந்து 25 கி.மீட்டர் பயணித்தாலும் குருவரெட்டியூரை அடையலாம்.

பவானி யில் இருந்து B10,B5,ஜெயகிருஷ்ணா பஸ்களில் வரலாம்.அந்தியூரிலிருந்து A5,மாதேஷ்வரா. பஸ்களில் குருவரெட்டியூரை அடைந்து மலைப்பாதையை அடையலாம். குருவரெட்டியூர் பாலமலை அடிவாரத்தில் இருந்து ஸ்ரீசித்தேஸ்வரர் திருக்கோவிலை அடைய சுமார் 15 கி.மீட்டர் கரடு முரடான மலைப்பாதையில் நடந்து பயணிக்கவேண்டும்.

ஏழு மலைகள் அடங்கிய மலை தொகுதியான பாலமலையின் கடைசி முடிவில் ஸ்ரீசித்தேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது .

முதல் மலையின் முடிவில் வெற்றிலைப்பாறை எனும் ஒய்வெடுக்கும் இடமும், இரண்டாவது மலை யில் தும்மம்பொதி என்ற மலைவாழ் மக்கள் வாழும் ஊரும் உள்ளது. இங்கு புரட்டாசி மாதத்தில் வரும்போது டீக்கடைகள் அமைத்து வரும் பக்தர்களுக்கு கொடுக்கப்படும் . மலையில் விளைந்த கொய்யா,விளாம்பழம் இங்கு கிடைக்கும்.


அடுத்ததாகாக நாம் வருவது பெரியகுளம் முக்கியமான இடமாகும் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மொட்டை அடித்து இங்குள்ள பெரிய குளத்தில் நீரில் குளித்தும் ,சுடுதண்ணீரில் குளிக்கும் இடமாகவும். மலைவாழ் மக்களின் கடைகளும்,கொய்யா, மாதுளை ,நெல்லி விற்பனைக்கடைகள் உள்ளன.

வறடிக்கல் :

பெரிய குளத்தில் உள்ள இந்த கல்லை தூக்கி போட்டால் திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணம் நடக்கும் என்கிறாகர்கள்.வீரமாக பல இளைஞர்கள் வறடிக்கல்கல்லை தூக்கிப்போட்டு விளையாடுகிறார்கள்.

தேரோடு வீதி :

அடுத்த மலையில் நாம் காண்பது பூசாரியூர், அடிமலை விநாயகர் கோவில்வீதி என அழைக்கப்படுகிறது. இங்கு விநாயகப்பெருமான் அழகிய உருவில் அமர்ந்துள்ளார் . கடைசி மலையின் துவக்கத்தில் உள்ள விநாயகப்பெருமானை வணங்கிவிட்டு அமரலாம்.சுற்றிலும் நீண்ட பெரிய மரங்கள்,நகப்பழ மரங்கள் என அடர்தியாக இருக்க 200மீட்டர் சுற்றளவில் பக்தர்களுக்காக இளைப்பாற நல்ல அமைதியான இடம். இதில் இருந்து ஒரு மலை செங்குத்தாக சென்றால் ஸ்ரீ சித்தேஷ்வரர் திருக்கோவிலை அடையலாம்.


திருக்கோவில் திறப்பது :

சனிக்கிழமை மட்டும் வார பூஜை

வருட பூஜையாக : புரட்டாசி மாதத்தின் எல்லா சனிக்கிழமைகளிலும் விஷேசமாக திறக்கப்படும். குருவரெட்டியூர் வழியாக பக்தர்கள் கூட்டம் புரட்டாசி 3,4வது வாரங்களில் அதிகளவில் இருக்கும்.லட்சக்கணக்காண பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் தரிசனம் செய்வார்கள்.

அடுத்து சித்திரை மாதத்தில் ஊமாரெட்டியூர் வழியாக பக்தர்கள் ஸ்ரீசித்தேஷ்வரரை தரிசிக்க செல்வபலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியன :

திருக்கோவில் வரும்பக்தர்கள் கம்பளி ,டார்ச்லைட், 3 வேளை உணவு ,தண்ணீர் அவசியம் கொண்டு வரவும். மலைப்பாதைக்கு பஸ்வசதி கிடையாது ஏழு மலைகளும் கரடுமுரடானவை. புரட்டாசி மாதம் தவிர மற்ற நாட்களில் சென்றால் நீங்கள் மட்டும் தான் தனியாக செல்லவேண்டி இருக்கும்.

புரட்டாசி மாதத்தில் ஏதேனும் ஓர் சனிக்கிழமை நாளில்
பாலமலை சித்தேஷ்வரரை வந்து வணங்கி விட்டு நலம் பெறுங்கள்.
http://www.youtube.com/watch?v=xjAhpRZpTak

Wednesday, September 28, 2011

ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில். நாமக்கல்


அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில். நாமக்கல்



அஞ்சிலே ஒன்றைப்பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி அஞ்சிலே ஒன்றா றாக ஆரியர்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு அயலூரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக்காப்பான்..


தமிழகத்தின் வைணவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாகும். பெரிய ஆஞ்சநேயர் சிலையும் அதன் நேர்த்தியான வடிவமைப்பும்,காணற்கரிய ஒன்றாகும். திருக்கோவில் கும்பாபிஷேகம் 22.11.09 ல் அழகாய் செதுக்கியிருக்கிறார்கள் .சலவைக்கற்களால் உட்பிரகாரத்தை அழகு செய்துள்ளார்கள் . மூலவர் ஆஞ்சநேயர் உயரமும் அழகும் பிரமிக்க வைக்கின்றன. மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர்க்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.


அன்றைய தினம் நாமக்கல் நகரத்தில் மற்றுமல்லாது பல மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் ஏராளம்.ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் திறந்திருக்கும் நேரம் 06. 30 முதல் 0100 வரை 04.30 மணி 0900 வரை. ஸ்ரீ ஆஞ்சநேயர்க்கு துளசிமாலைகள் அணிவிக்கப்பட்டு அதை பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படுகிறது. திருக்கோவிலுக்காக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நன்கொடை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலுக்கு எதிரே மிக அருகே உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயரால் ஸ்தாபிக்கப்பட்ட "சாலக் ராம பர்வதம்" என்னும் மலை உள்ளது .மிகப் பெரிய பாறையாக உள்ள இந்த மலையின் இருபுறங்களிலும் ஸ்ரீநாமகிரி தாயார் உடனமர் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயமும் , ஸ்ரீ ரங்க நாயகி உடனமர் அரங்கநாதரும் அருள் பாலிக்கிறார்கள். ஸ்ரீநரசிம்ம சாமி திருக்கோவில் "குடைவரைக்கோவில்" கள் வகையை சார்ந்ததாகும் .கி.பி 8 ஆம் நூற்றாண்டில் உருவான ஸ்ரீநரசிம்மாசாமி திருக்கோவில்கள் கலைச்சிற்பங்கள் அழகானவை. பழங்காலத்தில் பல பாறைகளை மட்டும் வைத்து அழகான கோவிலை உருவாக்கிய உழைப்பும் மிக


நேர்த்தியானது
அருள்மிகு நாமகிரித்தாயார் உடனமர் ஸ்ரீநரசிம்மசாமி திருக்கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 0630 முதல் 0100 வரையிலும் மாலை 0430 முதல் இரவு 0900 மணி வரையிலும் காலை பூஜை 08.00மணிமுதல் 0930 மணிவரை இரவு பூஜை 0700 மணிக்கு தொடங்கி 0800 மணிக்கு முடியும் உச்சிகாலப்பூஜை காலை 1100 மணிக்கு துவங்கி 1230 மணிக்குமுடியும் திருமஞ்சன நேரம் காலை 1000 மணி முதல் 1130 வரை நடைபெறுகிறது.


தரிசன முறை :- முதலில் அருள்மிகு நாமகிரி தாயாரையும் வணங்கவேண்டும் ,இரண்டாவதாக அருள்மிகு லட்சுமி நரசிம்மரை வணங்கவேண்டும் மூன்றவதாக ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கவேண்டும் நான்காவதாக மலையின் மறுபக்கம் உள்ள ஸ்ரீ ரங்கநாயகி உடனமர் ஸ்ரீ அரங்கநாதர் (கார்கோட சயனம் ) வணங்க வேண்டும். முறையான தரிசனம் செய்ய விரும்புபவர்கள் மேற்கண்ட முறைப்படி தரிசனம் செய்வதே சாலச்சிறந்தது .


ஸ்ரீ நாமகிரி தாயாரை வணங்குவதால் கலை,கல்வி,ஞானம், செல்வங்கள் கிடைக்கப்பெறும். உலகம் போற்றும் கணித மேதை ராமனுஜரின் கனவில் தோன்றி கணக்குகளுக்கு விடை தந்தருளிய தெய்வமாக இறைவி போற்றப்படுகிறது."அனந்தசாயி" ஆலயமென அழைக்கப்பெறும் அருள்மிகு அரங்கநாதர் ஆலயம் மலையின் பின்பக்கமாக உள்ளது. இதுவும் ஓர் அற்புதக் குடவரைக்கோவிலாகும்.

ஸ்ரீ அரங்கநாதர் ஆலயம் திறந்திருக்கும் நேரங்கள் காலை 0900மணி முதல் 1100 வரையிலும் மாலை 0500 மணி முதல்0700 வரையிலும் திறந்திருக்கும் . எல்லா ஆலயங்களிலும் பழங்கால சிற்பங்கள் பாதுகாக்கும் பொருட்டு நெய் தீபம் மட்டுமே ஏற்றப்படுகிறது. இறைவனை துளசி மாலைகளால் அலங்கரியுத்து வாழ்வில் செல்வச்செழிப்புடன் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்.
பழங்கால சிற்பங்களையும் திருக்கோவில்களை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துங்கள். முடிந்தால் சிறப்பாக திருக்கோவிலை அலங்கரிக்கும் அறங்காலவர் குழுக்களிடம் நன்கொடைகளை அளித்து நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை கலைகளை உதவி செய்வோம் .
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் பற்றிய இந்த இடுகை மேலும் விரிவாக்கி 2வது பாகமாக்கி சமர்பிக்கிறேன் .நன்றிகளுடன் குரு.பழ.மாதேசு. குருவரெட்டியூர்

Monday, September 26, 2011

நீங்கள் பங்குச்சந்தைக்கு புதியவராஎன் அனுபவத்தை கேளுங்கள் !


நீங்கள் பங்குச்சந்தைக்கு புதியவரா? கண்டிப்பாக இந்த இடுகை உங்களுக்காத்தான். பங்குச்சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க என் நன்பர் அழைத்தார் ,என் முக்கியமான தேவைக்காக வைத்திருந்த பணம் ரூ 20,000 எடுத்துக்கொண்டு நாமும் அம்பானி மாதிரி பெரிய ஆளா வரணும்னு கனவோடு பான்கார்டு எடுத்து செக்புக் உடன் கிளம்பி ஓர் ஷேர் புரோக்கரிடம் தஞ்சம் ஆனேன்.

அவரும் எனக்காக ஓர் மிண்ணணு கணக்கு வங்கியை ஆரம்பித்துக்கொடுத்தார்,அப்போது சென்செக்ஸ் 21000 புள்ளிகளை தொட்டுக்கொண்டிருந்தகாலம் அது. 2007 ஆம் வருடத்தின் இறுதியில் என நினைக்கிறேன்.கேள்வி ஞானமும் சிறிதளவு பங்குச்சந்தை பற்றிய புத்தகங்கள் படித்ததின் ஞானத்தை (?) வைத்துக்கொண்டு எல்லா பணத்தையும் (20,000) ஒரே நேரத்தில் முதலீடு செய்து விட்டு ஐந்து மாதம் கழித்து அது 40,000 ரூபாய்க்கும் பக்கமாய் வளர்ந்திருந்தது. அட நம்ம டேலண்ட் தான் போலிருக்கு ! என சந்தோஷப்பட்டு நான் வேறு வேளைகளில் கவனத்தில் இருந்த நேரம் திடிரென உலகப்பொருளாதார மந்தம் என பங்கு வர்த்தகம் சுணக்கம் கண்டது. நான் சுதாரித்து பங்கை விற்றுவிடலாம் என நினைக்கையில் ஒரே வாரத்தில் சென்செக்ஸ் 6000 புள்ளிகளை இழந்து எனது பணம் ரூ10,000மட்டுமே இருந்தது. பணம் எனக்கு மட்டுமல்ல உலகம் முழுதும் பலகோடிகள் அந்த நாட்களில் காணமல் போனது.

சரி இழந்த பணத்தை எப்படி மீட்பதென தனியாய் உட்கார்ந்து யோசித்து இருந்த மொத்த பங்குகளையும் விற்று விட்டு ஒரே பங்கு மட்டும் தேர்வு செய்து 200 வாங்கி என் கணக்கில் வைத்து விட்டு 2 வருடம் காத்திருந்து என் அசல் 20,000ஐ எடுத்து விட்டு வந்துவிட்டேன்.! முழுவதுமாக வந்துவிடவில்லை.என் அனுபவம் உங்களுக்கு உதவும் என்பதால் பங்குச்சந்தையில் உள் நுழைய சில டிப்ஸ்களை தருகிறேன்.

பங்குச்சந்தையில் ஜெயிக்க இது உதவும் 1.பங்குச்சந்தை என்றால் என்ன என்று தெரியாமல் பங்குச் சந்தை பக்கம் போகக்கூடாது 2. அவசரத்தேவைக்கு என்று வைத்திருக்கும் பணத்தை கண்டிப்பாக முதலீடு செய்யக்கூடாது, 3.ஒரே நேரத்தில் அதிகளவு பணத்தை முதலிடு செய்யக்கூடாது. அதிகளவு பணம் என்பது தனிநபர்க்கு எவ்வளவு பணம் ரிஸ்க் என்பதை பொறுத்தது. 4.முழுக்க முழுக்க புரோக்கர்கள் டிப்ஸ்ஐ நம்பக்கூடாது .5.கடன் வாங்கி முதலீடு செய்யக்கூடாது. 6.இன்ராடே எனச்சொல்லுகின்ற தினசரி வர்த்தகத்தை டெக்னிக்ல் அனாலைஸ் தெரியாமல் அன்றே வாங்கி விற்க கூடாது.

சரி எப்படித்தான் பணத்தை பெருக்குவது ,பங்குச்சந்தையில் சம்பாதிப்பது ?1. தரமான பங்குச்சந்தை தொடர்பான புத்தகங்கள் படியுங்கள், திரு சோம வள்ளியப்பன் எழுதி கிழக்கு பதிப்பகத்தால் வெளிவந்துள்ள "அள்ள அள்ள பணம்" 5 தொகுதிகள் வாங்கிப் படியுங்கள். விகடன் குழுமத்தால் வெளிவரும் "நாணயம் விகடன் " படியுங்கள் . பங்குச்சந்தை ஆலோசகர்கள் திரு நாகப்பன்- புகழேந்தியின் கட்டுரைகள் கவனியுங்கள். மாதம் உங்கள் சேமிப்பாக ரூ 1000 ரூபாய்க்கு(ரிஸ்க் எடுக்கும் திறன் பொறுத்து )வாங்கி சேர்க்கலாம். அதிக லாபத்திற்கு ஆசைப்படாமல் 30% வளர்ந்தால் விற்று விட்டு நல்ல ஷேர்களை தேர்ந்தெடுக்கலாம்.

சென்செக்ஸ் குறைந்துள்ள போது உள்ளே சென்று பங்குச் சந்தை உயரும் போதும் தங்கள் பணம் உயரும் போதும் லாபத்துடன் வெளியே வரும் வித்தைகளை கற்றுக்கொள்ளுங்கள்.எம் அனுபவங்கள் உங்களுக்கு பயன் தந்ததா என கருத்துரையிடுங்கள். இந்த இடுகையின் நோக்கம் பங்குச்சந்தைக்கு வரக்கூடாது என பயமுறுத்த வேண்டும் என்பதல்ல. நன்றாக தெரிந்து,தெளிந்து ,படித்து, அறிந்து பங்குசந்தையில் பணத்தை இழக்கக்கூடாது என்ற நல்லெண்ணமே அன்றி வேறொன்றும் இல்லை. பங்குச்சந்தையும் ஒர் கடல் போலத்தான் நன்கு கற்று கொண்டு உள்ளே குதியுங்கள். பங்குச்சந்தை ஜாம்பவான் "வாரன் பெபட்" போல நீங்களும் வெற்றி பெற வாழ்த்துக்களுடன் குரு.பழ.மாதேசு.

Sunday, September 25, 2011

அருள்மிகு அர்த்தநாரீஷ்வரர் திருக்கோவில். திருசெங்கோடு



அருள்மிகு அர்த்தநாரிஸ்வரர் ஆலயம் திருச்செங்கோடு




திருக்கோவில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருச்செங்கோடு என்பதன் விளக்கம் : திரு என்றால் அழகு ,செங்கோடு என்றால் சிவந்த மலை . அழகு நிறைந்த சிவப்பான மலை திருச்செங்கோடு என பொருள் கொள்ளலாம். கொங்கு நாட்டில் மலை மீது அமைந்திருக்கும் சிவத்தலம் ,சிவன் அமைவிடமே ஊரின் பெயராக கொண்ட திருத்தலம்.பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட திருத்தலம் என பலவாறும் புகழ்பெற்ற மலைமேல் உயர்ந்த இடத்தில் உள்ள திருச்செங்கோடு அர்த்த நாரிஸ்வரரை ஸ்தல வரலாற்றையும், நான் பார்த்த திருக்கோவில் மகிமைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.கடல் மட்டத்திலிருத்து 2000அடி உயரத்தில் அமைந்திருக்கும் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் சுமார் 1200 படிக்கட்டுகளை உடையது.


படிக்கட்டில் ஏறத்தொடங்கும் முன் கிழுவன் மரத்தடியில் அமர்ந்துள்ள கஜமுக விநாயகரை வணங்குவோம். சைவத்திருத்தலமான இங்கு சிவபெருமான் " அர்த்தநாரீஷ்சுரர் " "மங்கை பங்கன் " "மாதிருக்கும் பாதியான்" என்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். அர்த்த நாரீஷ்வரர் என்பதற்கு விளக்கம் அர்த்தம் என்றால் பாதி என்றும். நாரி என்றால் பெண் (சக்தி அல்லது பார்வதி) ஈச்ஷரர் என்றால் சிவபெருமான யும் குறிக்கிறது. சிவன் பார்வதி இணைந்த திருவுருவம் எனவும் அறியலாம்.


திருச்செங்கோட்டிற்கு " கொடிமாடச்செங்குன்றூர்" என்ற பெயரில் சங்க காலத்தில் அழைக்கப்பட்டதாம். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் "செங்கோடு" என அழைத்துள்ளார். முருகர் ஸ்தலமும் சிவஸ்தலமும் ஒன்றாக அமைந்த திருக்கோவிலாக காணப்படுவது மிகச்சிறப்பான ஒன்றாகும்.சிவனும் சக்தியும் ஓரே வடிவில் திருவுருவம் கொண்டு ஒன்றாக நின்ற நிலையில் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் அற்புதக்காட்சி வேறு சிவாலயங்களில் காணமுடியாத ஒன்றாகும்.இடப்பக்கம் பெண் உருவமும் வலப்பக்கம் ஆண் உருவமும் கொண்ட சிலையாகும்,


மூலவரான அர்த்தநாரீஸ்வரரை வேண்டுவோர்க்கு திருமணத்தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற ஆவன செய்கிறார். நீங்கள் ஆலயத்தில் செல்லும்போது கூட மாலையும் கழுத்துமாக திருமணஜோடிகள் நேர்த்திக்கடன் செலுத்துவதைக் காணலாம். அருகே அருகிரிநாதரால் பாடப்பெற்ற "செங்கோட்டு வெற்பன்" முருகப்பெருமான் தனிச்சன்னதில் வீற்றிருக்கின்றார்.


திருச்செங்கோடு மலை நாககிரி,அரவாகிரி,நாகமலை ,என பல சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறது. நாகசர்பத்திற்கும் இந்த மலைக்கும் தொடர்பு உள்ளதற்கு எடுத்துக்காட்டாக படிக்கட்டில் வரும் வழியில் பெரிய பாம்புகள் உருவத்தை செதுக்கி வழிபடுகிறார்கள். திருக்கோவில் உட்பிரகாத்தில் நாகர் சிலை அமைந்துள்ளது. திருச்செங்கோட்டு மலையை தூரத்திலிருந்து பார்த்தால் சிவலிங்கம் திரு உருவம் போல ,ஓர் பெரிய நாக சர்ப்பம் படம் விரித்துள்ளது போல காட்சி அளிப்பது வியக்கும் ஒன்றாகும். திருசெங்கோட்டு மலையில் பல தீர்த்தச்சுனைகள் உள்ளது. அதில் முக்கியமானவை கணபதி தீர்த்தம் ,பாபநாசதீர்த்தம்,தேவதீர்த்தம் , சிவதீர்த்தம்,வைரவதீர்த்தம் ஆகியன முக்கிய மானவையாகும்.


சேலம் ரயில் நிலையத்திற்கும் ஈரோடு ரயில் நிலையத்திற்கும் இடையில் உள்ள சங்ககிரி ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சுமார் 10 கி.மீட்டர் தூரத்தில் திருச்செங்கோடு உள்ளது. எல்லா நாட்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
எல்லா நாட்களும் திருக்கோவில் திறந்திருக்கும். படிக்கட்டு அல்லாமல் ,இருசக்கர வாகனங்கள் ,திருக்கோவில் பேருந்துகள் செல்லும் வகையில் போக்குவரத்து வசதி உள்ளது.மலையில் பயணம் என்பதால் கவனமாக செல்வது நலம். சுற்றிலும் பாறையாக உள்ள மலையில் வாகனத்தில் செல்வது வித்தியாசமானது . இந்தப்பாதையை அமைக்க எவ்வளவு சிரமப்பட்டு அழகாய் முடித்திருக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்தால் புரியும்.


பல்வேறு சூட்சம சக்திகள் கொண்ட திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் பற்றி நான் எழுதியது சிறிதளவே. அர்த்தநாரீஸ்வரை ஆய்வு செய்ய நிறைய முறை செல்ல வேண்டியுள்ளதால் அடுத்தமுறை படிக்கட்டு வழியாக சென்று விரிவுபடுத்தலாம் என எண்ணி இடுகையை நிறைவு செய்கிறேன்.
1500 வருடம் முன்பாக உருவான பழங்கால சிவத்தலங்களில் ஒன்றான திருசெங்கோட்டு மலையில் அர்த்தநாரிஷ்வரரை தரிசனம் செய்து தடைகளை தாண்டி முன்னேற வாழ்த்துக்கள் கூறி இடுகையை முடிக்கிறேன் .


நட்புடன் குரு.பழ.மாதேசு

Saturday, September 24, 2011

அருள்மிகு மீனாட்சி உடனமர் சொக்கநாதர் ஆலயம் ,சொக்கநாத மலையூர் ,வெள்ளித்திருப்பூர், பவானி வட்டம்



அருள்மிகு மீனாட்சி உடனமர் சொக்கநாதர் ஆலயம்,


சொக்கநாத மலையூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ள மலைக்கோவிலாகும், ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் வழியில் சொக்கநாத மலையூர் என்னும் ஊரில் அமைந்திருக்கும் அழகிய திருக்கோவிலாகும் .சொக்கநாத மலையூரில் இருந்து சுமார் 1 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இத்திருக்கோவில் நந்தவனம் போல அழகிய தோற்றத்தில் அமைந்திருக்கிறது.

பழங்கால அரசமரங்கள் புளிய மரங்கள் என மரங்களின் வயதை யோசித்துப்பார்த்தாலே சுமார் 200 வருட பாரம்பரியம் புரியும் . சொக்கநாதர் மலையின் அடிவாரத்தில் உள்ள அரசமரத்தினடி விநாயகர் தரிசனம் செய்து மலையின் படிகள் ஏற ஆரம்பித்தால் அடிவார லிங்கத்தை தரிசனம் செய்யலாம். பழங்காலத்தில் அழகாய் செதுக்கிய படிக்கட்டுகள் இதமானவை. 50வது படிக்கட்டு அருகில் பெரிய தாமரைக்குளம் அமைந்துள்ளது. அதன் மேலே நடந்து சென்றால் அழகிய கற்களால் ஆன கொடிமரத்தை வணங்கி திருக்கோவிலை அடையலாம். சுமார் 200படிக்கட்டுகள் இருக்கும் .

திருக்கோவில் மலையே ஓர் பெரிய பாறையின் உச்சியில் அமைந்துள்ளது போன்ற உணர்வு நமக்கு . திருக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. திருக்கோவில் உள்ளே நுழையும் முன் பிரமாண்ட நந்தியும் உள்முகப்பில் சிறிய நந்தியும் கடந்து சென்றால் இடப்புறம் உள்ள கணபதியாரை வணங்கி மூலரான சொக்கநாதரை லிங்க வடிவில் தரிசனம் செய்யலாம்.அருகில் மீனாட்சி அம்மன் அழகுடன் காட்சி அளிக்க அருகே உள்ள பிரகாரத்தில் அமைந்திருக்கும் முருகர் சன்னதி பார்க்க தூண்டுவதாக அமைந்துள்ளது.



பழங்காலத்தில் சந்தனம் அரைக்கும் கட்டையில் சந்தனம் தருகிறார்கள் இதமான குளிர்ச்சியுடன் திருக்கோவிலில் பிரசாதமாக தரப்படும் சந்தனமும்,திருநீரும் "சிவாய நமஹ " எனச்சொல்லி இட்டுக்கொள்ளலாம். திருக்கோவில் வெளிப்பிரகாரத்தில் ஆஞ்சனேயர் சன்னதி,ஜயப்பர் சன்னதி, சூரிய மூர்த்தி,பின்புறம் விநாயகப்பெருமான் , குருபகவான், அண்ணாமலையார், சண்டிகேஸ்வரர் , நவகிரகங்கள் ,மஹீஸ்வர வர்த்தினி, விஷ்ணுதுர்க்கை ,கஜலட்சுமி சிலைகள் என திருக்கோவில் சுற்றி அமைந்துள்ள சிலைகள் அழகானவையாகும். மூன்று நிலைக்கோபுரங்களுடன் அமைதியான இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ள சொக்கநாதர் மலை பல சூட்சமங்களுடன் அமைந்துள்ளது,


திருக்கோவிலின் பழங்காலத்தை அறிய முடியவில்லை எனினும் முதல் திருப்பணி கி.பி 1920 ஆம் ஆண்டில் நடைபெற்றுள்ளதாகவும் ,சொக்கநாத மலையை அமைத்த பெரியவர் இங்கேயே வாழ்ந்து ஜீவசமாதி அடைந்ததாகவும் செவிவழிச்செய்திகள் தெரிவிக்கின்றன. பிரதோஷ வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகிறது. இயற்கை சூழலில் அமைந்த மீனாட்சி உடனமர் சொக்கநாதர் ஆலயம் பார்க்கவேண்டிய ஆலமாகும்.

பழங்காலத்தில் உருவான சிவத்தலமான சொக்கநாதரை வணங்கி வாழ்வில் நலங்கள் பெற்றிடுங்கள் .வாழ்க வளமுடன் .கருத்துரைகள் எதிர்பார்க்கப்படுகிறது.

நட்புடன் குரு.பழ.மாதேசு. குருவரெட்டியூர்

Sunday, September 18, 2011

கைரேகை ஜோதிடத்தில் சாலமன் ரேகையின் சிறப்பு


அண்மையில் ஓர் கைரேகை ஜோதிடம் பார்க்கும் ஓர் நிபுணரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சாலமன் ரேகை என்ற ஒன்றைப்பற்றி சில விளக்கங்களை சொன்னார். அதைப்பகிரவே இந்தப்பதிவு.

கைரேகை சாஸ்திரத்தில் ஒர் மனிதனின் கைகேகையில் சாலமன் ரேகை என்ற ஒன்று இருந்தால் எதிர்காலத்தை முன் உணரும் சக்தி உடையவராக இருப்பார் என்றும். 26 உயிர்களின் உணர்வுகளை அறிந்தவராக அவர் இருப்பார் என்றும் ,புலனாய்வு துறையிலும் துப்பறியும் துறையிலும் சிறந்து விளங்குவார் என்றும், மனிதர்களை உற்று கவனித்து அவர்களுக்கு சில விஷயங்களை நடப்பதற்கு முன்பே கூறும் சக்தி உடையவராக இருப்பார் என்றும் கைரேகை ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதாம் சரி உங்களுக்கு சாலமன் ரேகை உள்ளதா என அறிய அருகில் உள்ள புகைப்படத்தை பாருங்கள்.


ஆண்கள் வலது கையையும் பெண்கள் இடது கையையும் பாருங்கள் .அதில் குருமேடு என்பது பெருவிரல் அருகிலுள்ள ஆள்காட்டி விரலில் கீழ்பகுதியில் உள்ள மேடாகும். (படத்தில் பேனாவில் குறித்துள்ள படி இருப்பது குருமேடு.அதில் கீழ் நோக்கியவாறு கோடுகள் இருப்பதே சாலமன் ரேகையாகும்) சாலமன் எனும் ஓர் அரசருக்கு முன் உணரும் சக்தி இருந்ததாகவும் அவர் பெயராலேயே சாலமன் ரேகை என அழைக்கப்பட்டதாம்.

சுவாரஷ்யத்திற்காக உங்கள் கையை சோதித்துப்பாருங்கள் , நீங்களும் சாலமனாக இருக்கலாம். சாலமன் ரேகைக்கு "சக்திரேகை" எற்று மற்றொரு பெயரும் உள்ளது. கருத்துரைகளில் குட்டலாம்.

Saturday, September 17, 2011

சீதேவி,பூதேவி உடனமர் பருவாச்சி பெருமாள் திருக்கோவில் ,மைலம்பாடிசீதேவி,பூதேவி உடனமர் பருவாச்சி பெருமாள் திருக்கோவில் ,மைலம்பாடி





சீதேவி,பூதேவி உடனமர் பருவாச்சி பெருமாள் திருக்கோவில்


ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் மைலம்பாடி அருகில் கொண்ரெட்டிபாளையம் அருகில் கோம்புக்காடு எனும் ஊரில் அமைந்துள்ள திருக்கோவிலாகும். அழகிய வைணவத்திருத்தலமான பருவாச்சி பெருமாள் திருக்கோவில் 400 வருடங்களுங்களுக்கு முந்தைய ஆலயமாகும். அதற்கு திருக்கோவில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள கோவில் கல்வெட்டே எடுத்துக்காட்டாகும்.

சுற்றிலும் பசுமையாக விவசாயம் நடைபெற ஒலகடத்திலிருந்து தொட்டிய பாளையம் செல்லும் வழியில் அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோவில் அருகில் பருவாச்சி பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.

கிழக்கு நோக்கி அமைந்த திருக்கோவில் கொடிமரத்தை வணங்கி விட்டு உட்பிரகாரத்திலிருந்து இடப்புரம் ஆஞ்சநேயர் சிலையை வணங்கலாம்.

திருக்கோவில் மூலவராக சீதேவி,பூதேவி உடனமர் பருவாச்சி பெருமாள் திருக்கோவில் காண்பதற்கு அழகான கற்சிலையாக நின்று அருள்பாலிக்கின்றார். உட்பிரகாரத்தை உற்று நோக்கினால் திருக்கோவில் பழங்கால கல்வெட்டு அழகு புரியும்.திருக்கோவில் பிரகாரத்தை சுற்றி வருகையில் வில்வ மரத்தடியில் நாகர் சிலை வணங்கத்தக்கது.

தினமும்பூஜைகள் நடைபெறுகிறது. சனிக்கிழமை ,புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

பழமையான வைணவத் திருக்கோவிலை தரிசித்த திருப்தியுடன் விடைபெறுகிறேன், நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் காக்கும் கடவுளாம் பருவாச்சி பெருமாளின் அருள் பெற்று உய்ய வேண்டுகிறேன்.

Thursday, September 15, 2011

யார் சித்தர்..?


பழங்காலத்தில் பல்வேறு யோகிகளும் சித்தர்களும் இந்து மதத்தை பின்பற்றி மக்களுக்கும் ஆன்மிகத்திற்கும் பல வகையான நன்மைகளைச் செய்தார்கள் .பெரும்பாலான சித்தர்கள் சிவ வழிபாடு செய்பவர்களாகவும், சிவன் வழித்தோன்றவாகவும் ,சிவாலயங்களில் இருக்கும் பகுதிகளில் இருந்து வந்தவர்களே அதிகம் இருக்கிறார்கள்.

திருவண்ணாமலையில் பகவான் ரமணர், யோகி ராம் சுரத்குமார் ,சதுரகிரியில் இன்றும் சித்தர்கள் வாழ்வதாக பெளர்ணமி நாட்களில் வலம் வருவதாக உணரப்படுகிறது. குறிப்பாக சைவத்தை பின்பற்றியவர்களாகவே சித்தர்கள் இருக்கிறார்கள். சிற்றின்பத்தை விட பேரின்பமே உயர்ந்ததெனக் கருதி யோக வாழ்வு மேற்கொண்டவர்கள் சித்தர்கள்.

யாம் கேள்விப்பட்ட வகையில் சித்தர்கள் ஒரு வேளை உணவோ ,தேங்காய்,பழங்களோ அல்லது தண்ணீர் ,சாப்பிட்டு மட்டும் உயிர் வாழ்ந்து வந்ததாகவும் பல படிப்பினைகளில் அறிகின்றோம்.ஆனால் இன்று இந்து மதத்தை தவறாக பயன்படுத்தி சித்தர்கள் உருவில் போலியாக நடித்து பணம் பறித்தும்,தாங்கள் யோகிகள் என்று நம்ப வைத்து பல தவறுகளை ஏற்க முடியவில்லை .சரி இதற்கு என்னதான் தீர்வு.

சித்தர்களை எப்படி அடையாளம் காண்பது? இதற்கு பதில் தேடல் தான்.ஆர்வமிருந்தால் தேடுங்கள் கண்டிப்பாக காட்சி தருவார்கள் எப்படி தேடுவது அனுதினமும் சிவ வழிபாடு மேற்கொண்டால் கண்டிப்பாக காணலாம்.


ஆனால் யாரெல்லாம் சித்தர் யோகியாக இருக்க முடியாது என எனக்கு தெரிந்தவற்றை முன் வைக்கின்றேன் 1. காவி உடையில் நான் பல வித்தைகளை செய்வேன் என்று சொல்பவர் 2. மாடமாளிகை பட்டு மெத்தையில் உறங்குபவர் 3. மூன்று வேளையும் நன்றாக உண்பவர் 4.பெண் சீடர்களை அருகில் வைத்துக்கொள்பவர் 5. ஆசிரம நிதிக்காக வெளிநாடுகளில் பணம் திரட்டுபவர் 6.பாத அபிஷேகம் செய்யச் சொல்பவர் 7.வாயிலிருந்து லிங்கம் எடுப்பவர் 8. பல வகையான நவின கார்களில் வலம் வருபவர் என இந்த 8 வகையான ஆட்களுக்கும் சித்தராகும் தகுதி இல்லை. இறைவன் அருகில் உட்கார்ந்திருப்பதால் மட்டும் சித்தர் ஆகும் ஞானம் கிட்டாது. எனவே சித்தர்கள் யோகிகள் பெயரில் போலிகளை மக்கள் தங்கள் அறியாமையில் இருந்து விலகி இனம் கண்டு கொள்ள வேண்டும் .


எல்லோரும் கூட்டமாக ஓர் ஆன்மீக வாதியை தேடிச் செல்கிறார்கள் .அவர்கள் பின்னே நாமும் செல்லாமல் அவரைப்பற்றி உணர்ந்து அறிந்து தெளிந்து ,சாக்கடையா சந்தனமா எனப் புரிந்து ஆசிர்வாதம் பெறுவது நமக்கும் குடும்பத்திற்கும் நல்லது. இன்றும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். காடுகளில், மலைகளில்,சூட்சம உருவங்களில் எளிமையாக ஒரு துளி திருநீற்றில் பலர் வாழ்வில் ஒளி ஏற்றுகிறார்கள். உண்மையான கடவுள் வழிபாடு செய்பவர்களுக்கு ஆபத்து, உதவிகள் தேவைப்படும்போது அருகே வந்து பல நன்மைகளைச் செய்கிறார்கள்.மனித வாழ்வில் சாதாரண மனிதனாய் உலக வாழ்வைக்கண்டு மெளனமாய் புன்னகைத்து வலம் வருகிறார்கள்.


சித்தர்களை நீங்கள் பார்த்தே ஆக வேண்டுமெனில் சிவ வழிபாடு அனு தினமும் மேற்கொள்ளுங்கள். முதல் சித்தர் சிவபெருமான் என்பதை உணருங்கள் . எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவபெருமானை வணங்குங்கள். சித்தர்கள் பற்றியும் சித்தர்கள் வாழ்வு பற்றியும் உங்களுக்கு புலப்படும். ஓம் நமச்சிவாயம். இந்த இடுகை சித்தர்கள் பற்றி யோகிகள் பற்றி அலசலே தவிர யாரையும் புண்படுத்தும் எண்ணமில்லை.மக்களை ஆன்மீகம் எனும் போர்வையில் ஏமாற்றக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட இடுகையாகும். கருத்துரைகளில் உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து


நட்புடன் குரு.பழ.மாதேசு

Thursday, September 8, 2011

அழகில் மயக்கும் கோபிசெட்டிபாளையம் அத்தாணி சாலை








கோபி(GOBI) என அழைக்கப்படும் கோபிச் செட்டியாபாளையம் (Gobichetty palayam) மினி கோடம்பாக்கம் என்று அழைப்பதில் அர்த்தம் இல்லாமல் இல்லை.பச்சை பச்சையாக வளர்ந்திருக்கும் நெற்பயிர்களும் வரிசையாக அமைந்த பனை மரங்களின் அழகும் அருகே ஓடும் பவானி ஆற்றின் பெரிய சிறிய வாய்கால்களும் மிக அழகானவை.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சையாக புல்வெளிகளும் மேற்குமலைத் தொடரின் அழகையும் இயற்கை நமக்களித்த கொடைகளாகும்.

கோபியிலிருந்து அத்தாணி வரும் இந்த அழகிய சாலையில் தான் பாரியூர் அம்மன் திருக்கோவிலும் ,கருங்கரடு முருகன் ஆலயமும்,கூகலூர் வயல் வெளிகளும் ,பவானி ஆறு கடந்து செல்லும் அழகும்,வளைந்து வளைந்து செல்லும்பாதைகளும் மனதை இளகுவாக்கும்.

ஒர் அற்புத பயணமாக இருக்கும். பல பிரபல திரைப்படங்களில் வந்து போகும் இடமாக கோபியும் அதைச்சுற்றியுள்ள இடங்களும் பார்க்கவேண்டிய இடமாகும்.

கருத்துரைகள் வரவேற்கப்படுகிறது.

ARULMIGU pathrakaliamman thiru kovil history ,ANTHIYUR





அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவில்



ஈரோடுமாவட்டம் பவானி வட்டத்தில் பிரசித்தி பெற்ற அந்தியூரில் ஆட்சி செய்யும் அன்னையின் ஆலயமாகும் . அருள்மிகு பத்ரகாளியமன் திருக்கோவில் அந்தியூர் பஸ் நிலையத்திற்கு அருகில் (100மீட்டர்) கோபி சாலையில் அமைந்த ஓர் அழகிய ஆலயமாகும்.


திருக்கோவில் முகப்பில் குண்டமும் அரசமரத்தடியில் பெரிய விநாயகர் சிலை தரிசிக்க வேண்டிய ஒன்றாகும்.

திருக்கோவில் இராஜகோபுரத்துடன் இணைந்த இரு நிலைக்கோபுரங்கள் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த ஓர் அழகிய முகப்பு நம்மை வரவேற்க உள்ளே சென்றால் அழகிய கொடிமரத்தையும் சிம்ம வாகனமும் தரிசித்து ஆண்,பெண் என இரு காவல் தெய்வங்களை வணங்கி திருக்கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தால் அழகிய உருவில் அம்பிகை அருள்மிகு பத்ரகாளியம்மன் அழகிய திருக்கோலம் பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தும்.

திருக்கோவில் வடக்குதிசை நோக்கி அமைந்துள்ளது. திருக்கோவில் பின்புறம் முத்துமினியப்பர் சன்னதி யும் அருகில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதிகளும் கண்டு தரிசிக்கவேண்டிய சன்னதிகளாகும் .

பழங்காலத்தில் இருந்து அந்தியூர் பகுதி வாழ் மக்களால் விரும்பி வணங்குகின்ற அந்தியூர் பத்ரகாளியம்மன் திருக்கோவில் அருகில் கோட்டை போன்ற அமைப்பு இருந்ததாக செவி வழிச்செய்திகள் இயம்புகின்றது.

பல ஊர்களில் இருந்து பக்தர்களால் அம்மாவசை, பௌர்ணமி நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது.திருக்கோவில் எல்லா நாட்களிலும் திறந்திருக்கிறது.

பலர் வாழ்வில் ஏற்றம் தந்த அன்னை அந்தியூர் பத்ரகாளியம்மனை வணங்கி நம் வாழ்வில் எல்லா நலன்களையும் பெற வாழ்த்தும்

அன்பன் குரு.பழ. மாதேசு.

நிறைகுறைகளை கருத்துரைகளில் இயம்பலாம்.

நன்றி

Arulmigu kariakalimman temple,mylampadi,bhavani taluk






அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோவில்


ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் அமைந்த ஓர் அற்புதமான ஆலயமாகும். ஒலகடத்தில் இருந்து தொட்டியபாளையம் செல்லும் வழியில் 5வது கி.மீட்டரில் அமைந்த அருள்மிகு கரியகாளியம்மன் ஆலயம் பார்க்கவேண்டிய ஆலயங்களில் ஒன்றாகும்.

பழங்காலமாக சுமார் 400ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த ஆலயத்தை ஆன்மீகப்பெரியோர்கள் முயற்சியினால் 26.1.04 ஆம் நாள் திங்கள் காலை 09.00 முதல் 10.00மணி வரை குடமுழுக்கு நடத்தி திருக்கோவிலை அழகாக்கி இருக்கிறார்கள்.


பழங்காலத்தில் மையிலம்பாடி எனும் இந்த ஊர் மயிலாபுரிபட்டணம் என அழைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கொண்ரெட்டிபாளையம்,சானார்பாளையத்திற்கு அருகில் உள்ள கரிய காளியம்மன் ஆலயம் 18கிராம மக்கள் வணங்கும் அம்பிகையாக அமைந்து அருளாட்சி வழங்குவது சிறப்பான ஒன்றாகும்.

திருக்கோவில் மூலவராக கரியகாளியம் மன் வரும் பக்தர்கள் துயர் தீர்க்கும் அம்பிகையாக அமைந்திருப்பது சிறப்பான ஒன்றாகும்.அருள்மிகு விநாயகர்,சுப்பிரமணியர் துர்க்கை அம்மன் சன்னதிகள் அமைந்திருப்பது சிறப்பாகும்.

திருக்கோவில் முன்பாக 75 அடிக்குண்டமும் பெரிய இரண்டு முனியப்பர் சிலைகளும் பிரமிக்க வைக்கின்றன.

உள் பிரகாரத்தை சுற்றி வரும்போது திருக்கோவில் எங்கும் காணாத அதியமாக நின்ற நிலையில் வன்னிமரத்தடியில் விநாயகர் அழகாக அமைந்திருப்பது வியப்பான ஒன்றாகும்.

ஒருநிலைக்கோபுரமும் அழகான குதிரைச்சிலைகளும் சிற்பக்கலை அழிந்து விடவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகும். எல்லா நாட்களிலும் திருக்கோவில் திறந்தே இருக்கின்றது.திருக்கோவில் திருமண மண்டபம் அருகிலேயே அமைந்துள்ளது.

பஸ் வசதி சரியாக இல்லை எனினும் பவானியில் இருந்து ஒலகடம் செல்லும் மினிபஸ்கள் கரியகாளியம்மன் திருக்கோவில் வழியாகவே செல்கின்றன .அம்மாவசை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

பழங்காலத்தில் மையிலாபுரிப்பட்டணம் என அழைக்கப்பட்ட மையிலம்பாடி எனும் ஊரில் அமைந்த அருள்மிகு கரியகாளியம்மனை தரிசித்து வேண்டிய எல்லாமும் பெற வாழ்த்துகிறேன்.

Monday, August 29, 2011

நீரிழிவு (அ) சர்க்கரை நோய்க்கு எளிய மருத்துவம்




நீரிழிவு நோய் எனப்படும் சக்கரை நோய் வந்துவிட்டால் மனிதர்கள் படுகின்ற கஷ்டம் சொல்லி மாளாதது. அதற்கு இந்த எளிய வைத்திய முறை பயன் அளிப்பதாக ஓர் கட்டுரையில் படித்ததை உங்களுக்குடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

தினமும் இரவு ஓர் வெண்டைக்காயை எடுத்து இரு முனைகளையும் அறுத்து விட்டு மீதமுள்ள வெண்டைக்காயை மூன்று பாகமாக கட் செய்து அரை டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் எழுந்து வெறும் வயிற்றில் தண்ணீரில் உள்ள வெண்டைக்காய் துண்டுகளை தூக்கி போட்டு விட்டு வெண்டைக்காய் ஊறிய அந்த தண்ணீரை குடித்து வந்தால் உடம்பில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறதாம்.

மாதம் ஒரு முறை மருத்துவரிடம் செக்கிங் செல்லும்போது உங்கள் சக்கரையின் அளவை பாருங்கள்.பின்பு இந்த டிப்ஸ்ஐ பயன்படுத்தி பாருங்கள். இதைப்பயன் படுத்தியவர்கள் ரத்ததில் சர்க்கரையின் அளவு குறைவதாக சொல்கிறார்கள்.

டாக்டர் தரும் மருந்தை எடுத்துக்கொண்டு மேற்கண்ட வெண்டைக்காய் நீரை குடித்து விட்டு உங்கள் சர்க்கரை நோயின் அளவு குறைந்தால் எமக்கு எழுதுங்கள்.

நான் படித்ததில் பிடித்த இடிகையை பகிரவே இவ்விடுகை .

மருத்துவர் ஆலோசனைப்படி பின்பற்றலாம்.

நன்றி

Sunday, August 28, 2011

திருஷ்டிபூசணிக்காயும் சாலை விபத்தும்




திருஷ்டி என்பது நம் பராம்பரியமாக செய்யப்படும் மூட நம்பிகைகளில் ஒன்று. கண்பட்டது ,அல்லது யாரோ ஒருவர் நம் வளர்ச்சியில் பொறமைகொண்டு பார்த்தால் நாம் நமக்கு கண்பட்டு விட்டதாக அலறுகிறோம். ஒருவர் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்பதை உணர மறுக்கிறோம்.

கண் வைத்து விட்டதாக சொல்லி எலுமிச்சம் பழத்தை நான்கு பாகமாக அறுத்து நான்கு திசைகளில் வீசுகின்றோம். அடுத்து தேங்காயை வாங்கி தலையை சுற்றி ரோட்டில் உடைத்து திருஷ்டியை போக்குவதாக சொல்லி சந்தோஷப்பட்டுக்கொள்கிறாம். அடுத்து இதை விட பெரிதாக பூசணிக்காயை நான்காக ஆக அறுத்து சிகப்பு தடவி ரோட்டில் உடைத்து போட்டு விடுவோம்.

கழிந்து விடுகிறதா நம் திருஷ்டி , !

சரி கழிந்து விட்டதாகவே நாம் வீட்டில் படுத்துக்கொள்வோம்..! நாம் ரோட்டில் உடைத்த சிதறு தேங்காய் என்ன செய்யும் ? எங்கேயோ பார்த்து ரோட்டில் கவனமில்லாமல் செல்கின்றவரினின் இருசக்கர வாகனத்தின் முன்பக்க டயர் பஞ்சர் ஆகி அவருக்கு ஏதேனும் விபரீதம் நடந்தால் நம் திருஷ்டி கழியுமா? பாவக்கணக்கு அதிகம் தானே ஆகும்.

திருஷ்டி பூசணிக்காய் மேல் இருசக்கர வாகனத்த விட்டு எத்தனையோ பேர் கை கால்கள் இழந்து தவிக்கிறார்கள் .நமது நம்பிக்கை நமக்கு மட்டுமே அடுத்தவர்களை அது பாதிக்கலாமா ?

திருஷ்டியை நம்பினால் நீங்கள் அடுத்தவர்களுக்கு செய்கின்ற துன்பத்தையும் ஏற்க வேண்டியது தானே உண்மை. நமது நம்பிக்கைகளை நான் குறை சொல்லவில்லை. அப்படி தேங்காயும் பூசணிக்காயும் உடைக்கும் பட்சத்தில் அது ரோட்டிற்கு வரக்கூடாது .

அப்படி உடைத்தால் அந்த இடத்தை சுத்தம் செய்கின்ற பொறுப்பு நமக்கு உண்டு என்பதை நினைவில் கொண்டு விபத்தில்லாத மனித சமுதாயத்தை எதிர்காலத்தை உருவாக்குவோம்.

சின்ன சின்ன விஷயங்களில் தான் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் போகின்றது என்பதை உணர்வோம் .

கருத்துரகளில் குட்டலாம்.

நட்புடன் குரு.பழ.மாதேசு

Friday, August 26, 2011

பார்வதி உடனமர் பரமேஸ்வரர் ஆலயம் அரசமரத்து வீதி குருவரெட்டியூர்பார்வதி உடனமர் பரமேஸ்வரர் ஆலயம் அரசமரத்து வீதி குருவரெட்டியூர்




பார்வதி உடனமர் பரமேஸ்வரர் ஆலயம் பவானி வட்டம் குருவரெட்டியூர் அரசமரத்து வீதியில் அமர்ந்த அழகான ஆலயமாகும். இத்திருக்கோவில் 30.08.1957 ல் செம்பண ஆசாரி மகனார் மன்னாத ஆசாரியார் அவர்களால் கட்டப்பட்ட இந்த சிவாலாயம் எல்லா சிவாலயங்களில் இருந்து சற்றே வேறுபட்டது.

இங்கு மூலவராக கிழக்கு திசை நோக்கிய சிவபெருமான் பார்வதி உடனமர் நந்தீஷ்வரராக அமைந்திருப்பது காண்பதர்க்கு அரிய காட்சி. வலப்பக்கம் விநாயகப்பெருமானும் இடப்பக்கம் வள்ளி தெய்வானை உடனமர் முருகப்பெருமான் சன்னதி அழகான ஒன்றாகும்.

எதிரே நவகிரகங்களும் அருகிலுள்ள ராகு கேகு சிற்பங்களும் அழகானது. தனிச்சிற்பமாக பெருமாள் சன்னதியும் உள்ளே அமைந்துள்ளது.

தற்போது திரு கார்த்திகேயன் அவர்களால் தற்போது பராமரிக்கப்பட்டு பிரதோஷ பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது. மாசி மகா சிவராத்திரி அன்று நடைபெறும் பூஜைகள் சிறப்பான ஒன்றாகும்.

இப்பகுதிக்கு வரும் போது மூலவரான பார்வதி உடனமர் சிவபெருமான் நந்தீஷ்வரர் மேல் அமர்ந்திருக்கும் அழகிய திருக்கோலத்தை கண்டு செல்லங்கள்.

ஓம் சிவாய நமஹ.

நட்புடன் குரு.பழ.மாதேசு

Saturday, August 20, 2011

Arulmigu mannatheswarar &semmuni ahandavar thirukkovil ,vellithirupur





அருள்மிகு மன்னாதீஸ்வரர் ,செம்முனி ஆண்டவர் திருக்கோவில்

ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் வெள்ளித்திருப்பூர் அருகில் வாழைக்குட்டை தோட்டத்தில் அமைந்துள்ள திருக்கோவிலாகும். இது வெள்ளித்திருப்பூரில் இருந்து குருவரெட்டியூர் செல்லும் வழியில் 2வது கி.மீட்டரில் அமைந்துள்ளத வனம் ஆகும் .

குருவரெட்டியூரில் இருந்து 6வது கி.மீட்டரில் உள்ளது இங்கு மூலவராக மன்னாதீஸ்வரரும் ,அம்பிகையாக பச்சை நாயகி அம்மன் காக்கும் கடவுள்களாக செம்முனி ஆண்டவர் உட்பட 13 முனிகள் வாதமுனி,பூமினி,முத்துமினி,லாடமுனி, குண்டுமுனி ,வேதமுனி,தவசி முனி,தன்னாசி முனி,கொடுமுனி,மகா முனி,கருமுனி ஆகியவைகளாகும்.


மன்னாதீஸ்வரர் திருக்கோவில் உட்பிரகாரத்தில் இடக்குமரர்,கருங்குமரர் ,சுப்பிரமணியர், சித்தேஷ்வரர், சொக்கநாதசாமி, குருபகவான் ,அரங்கநாதர், கன்னிமார், வேதாந்தி வேதியர்,ஆரியசாமி (பிரம்மா,காயத்திரி, சரஸ்வதி) பச்சைநாயகி (திருக்கோவில் அம்பிகை) வேங்கை மலை அம்மன் கங்கா, செம்மரளி அம்மன், பூமரளி அம்மன், குமாரசாமி,உமைகங்கா உடனமர் மன்னாதீஷ்வரர். முடியரசி அம்மன்,கார்த்தி அம்மன்,பூங்குமரர், வலக்குமரர், ஆகிய சிலைகள் வரிசைக்கிரமாக அமைந்துள்ளது.

பிரதி வார பூஜை வெள்ளிக்கிழமை இரவு 7மணி முதல் 8மணி வரை நடைபெறும்.ஆடி 15 நாள் வெள்ளிக்கிழமை முதல் வனத்திருவிழா நடைபெறும். அப்போது 2 கி.மீட்டர் அருகிலுள்ள குரும்பபாளையம் மடப்பள்ளியில் இருந்து சுவாமி தேரில் பவனி வந்து வாழைக்குட்டை தோட்டம் அருகிலுள்ள மன்னாதீஷ்வரர்,செம்முனி ஆண்டவர் வனத்தில் வருடாந்திர பூஜை நடைபெறும்.

மாசி சிவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெறும். திருக்கோவில் ஸ்தலமரமாக புளிய மரம் கிட்டத்தட்ட 500 வருடங்கள் பழமையானதாகும் .

திருக்கோவில் சுற்றிலும் கற்கட்டுகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட ஆலமரம் ஒன்றுள்ளது.. தம்மைத்தேடி வரும் பக்தர்களுக்கு குழந்தைவரம்,திருமணம்,போன்ற சுப காரியங்களை இறைவன் நல்லபடியாய் நடத்தி தருவதால் பக்தர்கள் மன நிறைவுடன் வழிபட்டுச்செல்கிறார்கள்.

குழந்தை வரம்,தாமத திருமணம், போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக விளங்குகின்ற இத்திருக்கோவிலுக்கு நீங்களும் இப்பகுதிக்கு வருகை புரிந்தால் இறைவனை தரிசித்து விட்டு எழுதுங்கள்.

நன்றி

Thursday, August 18, 2011

எம் துதி சிவாய நமஹ


சிவாய நமஹ எனச் சொல்லி - என்

சிறு மனதை சிதறாமல் கட்டி ,

சிவனருளே எல்லாமென சிந்தையுள் வைத்து

சிவனே உன் அருளுக்காய் - தவமிருப்பேன்

சிவ சிவா என்னுள்ளே கலந்தருள்வாயாக...!

கவிதை : தேடிக்களைக்கின்றேன் இறை "வா"


கவிதை




தேடிக்களைக்கின்றேன் இறை "வா" :

பரபரப்பான
ஓவ்வொரு நாளும்
உன்னால் படைக்கப்படுகிறது,.!
இருப்பினும்
உனக்காக
நான்
ஒதுக்கிய நாட்கள்
அளவில்லாதது...!

எங்கும்
நீர் நீக்கமற
நிறைந்திருக்கும் "சக்தி"
என்றுணர்ந்த
எமக்கு என்றேனும்
ஒருநாள் ஒதுக்கு...!

அன்று நாம்
கைகோர்ந்து நடந்து ..!

உன்னால் பிறப்பிக்கப்பட்ட
இப்பிரபஞ்சத்தில்
எமக்கென
எழுந்துள்ள
வினாக்களுக்களுக்கு
நீங்கள்
அப்போது
பதிலளிக்கவேண்டும்..!


கேட்டுத் தெளிந்த
நான்

உன்னையும்
உன் காட்சி
பிம்பத்தையும்
எல்லோருக்கும்
அறிவிப்பேன் ..

உன் புகழ் தன்னை
வீதியெங்கிலும்

ஆதலால்
இறை" வா"

முருகருக்காக என் துதி (அ) கவி



இறைவன் முருகருக்காக நான் எழுதிய துதி :


முருகா என்றிட முன்வினைஅகலும் ...!
முருகன் என்பதில் முக்திகள் கிடைக்குமெனில்.!
மூச்சென்ற ஒன்று இருக்கும் வரை.,!
முருகா முருகாவென்றே உன்னில் கரைவேன்..!



கவி 2 :

கந்தா உனைத்தொழுதேன் கவலைகள் போக்க..!

கந்தா உன்னில் கரைந்து -யாம் செய்யும்

நற் காரியங்கள் யாவிலும் கண்டவர் வியக்க.. !

கடம்பா நின் துணை வேண்டி நிற்பேன்..!

உடன் வருவாயாக.,




கவி எழுத வேண்டும் கேள்வி ஞானம் மட்டுமே எமக்கு உண்டு சந்திப்பிழையும் இலக்கணப்பிழையும் பாராமல் இறைவனுக்காக எழுத வேண்டும் என்கிற நினைப்பில் எழுதப்பட்ட இடுகை.
கருத்துரைகளில் குட்டலாம் .நட்புடன் குரு.பழ.மாதேசு

Tuesday, August 16, 2011

ஸ்ரீ குருநாதசாமி வனம் அந்தியூர் , ஈரோடு மாவட்டம்


அருள்மிகு குருநாதசாமி திருக்கோவில் வனம் :


அருள்மிகு குருநாதசாமி வனம் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசாமி கோவில் இருந்து 3கி.மீட்டர் தூரத்தில் உள்ள ஓர் அற்புதமான ஆலயமாகும்.



வனத்தில் மூலவராக வீற்றிருப்பது குருநாதசாமியாகும். உடன் பெருமாள் சாமியும்,காமாட்சி அம்மனும் அருள்புரிகின்றனர். அருகே நாகப்புற்று அமைந்துள்ளது. ஊஞ்சல் போன்ற அமைப்பும் உள்ளது.


சமதளத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக கீழிறங்கி தரிசனம் செய்ய பள்ளம் போன்ற அமைப்பில் குருநாதசாமி வனம் அமைந்துள்ளது.

சுமார் 500 மீட்டரில் இவ்வனத்தில் வேம்பு,தென்னை,ஆலமரம்,ஊஞ்சன்மரங்கள் மற்றும் பழங்கால மரங்கள் அமைந்து குளுமையாக உள்ளது.

வேண்டுதல் நிறைவேறிய பின் பல குடும்பங்கள் வந்து ஆடிமாத கோவில் திருவிழா நாட்களில் இங்கு பொங்கல் இட்டு ஆடு,கோழிகளை பலியிட்டு , செல்வது வழக்கம்.

அருள்மிகு குருநாதசாமி வனத்தில் இருந்து திருவிழாவின் போது மடப்பள்ளிக்கு புதுப்பாளையத்திற்கு தேரில் குருநாதசாமி,பெருமாள் சாமி,காமாட்சி அம்மன் ஆகியோர் திருவிழா நாளில் பக்தர்கள் வரமளிக்க தேரில் வருவார்கள்.இந்த வருடம் 2011 ன் திருவிழா சிறப்பாக லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தர 5 நாட்கள் நடந்தது .

திப்புசுல்தான் ஆட்சியில் தன் குதிரைப்படைக்கு தேவையான குதிரைகளை வாங்க அந்தியூரில் குதிரைச்சந்தை அமைத்ததாக வரலாறு இந்த வருடம் நொக்ரா,காட்டியவாடி ,கத்தியவார் போன்ற பல ரக குதிரைகளும் விற்பனைக்கு வந்திருந்தது.5லட்சம் வரை குதிரை விலை சொல்கிறார்கள்.


,மாட்டுச்சந்தையில் மலைமாடுகள் காங்கேயம் காளைகள்,சிந்து ,ஜெர்சி வந்திருந்தன. குஜராத்தில் இருந்து வந்த ஜாப்ரா இன எருமைமாடுகள் வித்தியாசமாய் இருந்தன.

காது நீண்ட ஜமுனாபாரிஆடுகள் பல வகையான வளர்ப்பு பிராணிகள் கொண்டு வரப்பட்டிருந்தது. பலவகையான ராட்டினங்கள்,கம்பி வளைக்குள் கார்,பைக் சர்க்கஸ் மற்றும் தூரிகள் குழந்தைகள் ரயில் கப்பல் தூரி, என அழகாய் நடந்தது. பேரிக்காய்,கொள்ளேகால் மிட்டாய், சோழக்கருது சாப்பிடாமல் வரமுடியாது.


மிக பிரமாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்வில் அடுத்த வருடம் ஆடிமாதமாவது வந்து கலந்துகொண்டு அருள்மிகு குருநாதர் அருள்பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்தும்

அன்பன் குரு.பழ.மாதேசு

Friday, August 12, 2011


வலைப்பூ தொடங்கி வருடம் ஒன்றாகி விட்டது. ஜுலை 12 ல் தொடங்கி இன்றுவரை 75 இடுகைகள் உலகமெங்கிலும் 1036 பேர் வந்து சென்றது மகிழ்ச்சியே. ஆனாலும் எம் எழுத்து உங்களுக்கு பயன்படுகிறதா ???என்ற கேள்வி இடையறாது எம்மை துளைக்கிறது. எமது வலைத்தளம் தரமானதாக வேண்டுமென்ற ஆர்வத்தில் உங்களின் கருத்துரைகளை ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றேன். முடிந்தால் இன்ட்லி தமிழ் மணத்தில் ஓட்டிப்போட்டுட்டு போங்க, இறை சித்தத்தால் இன்னும் பல கோவில் வரலாறுகளும் படைக்க உங்கள் கருத்துரைகளே எம்மை வழிப்படுத்தும் வலிமைப்படுத்தும் என நம்பி (டிரிட்டா ? வலைப்பூவின் இரண்டாம் வருட கொண்டாட்டத்தில் கண்டிப்பாக அழைப்பு வரும் ) நட்புடன் குரு.பழ.மாதேசு

தீரன் சின்னமலை எனும் வரலாற்று காவியம்



மாவீரன் தீரன் சின்னமலை ஓர் வரலாற்று காவியம் ; தீரன் சின்னமலை 1756 ல் பழைய கோட்டை பட்டக்காரர் மரபில் பிறந்தார். தீரன் சின்னமலை யின் இயற்பெயர் தீர்த்தகிரி கி.பி 18 நூற்றாண்டில் பிற்பகுதியில் ஈரோடு மாவட்டத்தின் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஓடாநிலைப்பகுதிகளில் வாழ்ந்து வந்தார்.

ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை மீட்க போராடிய சுதந்திர போராட்ட வீரர்களில் தமிழ் நாட்டில் தீரன் சின்னமலையின் பங்கு மகத்தானது.

வெள்ளையர்களை விரட்ட மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து போரிட்டார்.இளம் வயதிலேயே வீரம் செறிந்த வீரனாக பல தற்காப்புகலைகள் அறிந்து வலம் வந்து தம் நன்பர்களுக்கு போர்ப்பயிற்சி அளித்து ஓர் படையை திரட்டினார்.

கொங்கு நாட்டுவரியை மைசூருக்கு வசூலித்து சென்றவர்களை தடுத்தி நிறுத்தி கொங்கு நாட்டு மக்கள் யாருக்கும் அடிமையில்லை என்பதை முழக்கமிட்டு அறிவித்தார்."ஹைதர் அலியின் திவான் மீராசாகிப் கேட்டால் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஓர் சின்னமலை பிடுங்கி விட்டான் என கூறுங்கள் " எனக் கூறி ஆங்கிலேய வீரர்களை விரட்டி அடித்தார்.


அன்று முதல் தீர்த்தகிரி எனும் பெயர் மாறி சின்னமலை என அழைக்கப்பட்டார் . இவரின் வீரம் அறிந்த திப்பு சுல்தான் தூது அனுப்பி தீரன் சின்னமலையிடம் தமக்கு படை உதவிகள் மற்றும் ஆதரவுகளை ஆங்கிலேயர்களை எதிர்க்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு தீரன் சின்னமலையும் கொங்கு நாட்டில் தேவையான படைபல உதவிகளை தாராளமாக கேட்குமாறு கூறினார் .

இருவரும் படைபலத்தை இணைத்தனர். தீரன் சின்னமலையுடன் கூட்டு சேர்ந்து திப்புசுல்தான் மூன்றுமுறை போரில் 2500 வீரர்களை வைத்து கொண்டு ஆங்கிலேய வீரர்கள் 10,000 பேரை விரட்டி அடித்தனர். ஆங்கிலேயருக்கு கடும் சவாலாக இருந்த தீரன் சின்னமலை திப்புவின் மரணத்திற்கு பின் கி.பி 1799ல் கர்னாடாகதை ஆட்சி செய்த மராட்டிய மன்னர் தூந்தாஜிவாக்த் என்பவருடன் பாளையக்காரர்கள் படையை இணைத்து ஆங்கிலேயருக்கு எதிராக போர் செய்ய ஒப்பந்தம் போட்டார் தீரன் சின்ன மலை .

இரண்டு வருடங்கள் கழித்து கி.பி1801ல் கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலப்படையை பவானி காவிரிக்கரையில் வென்றார்.1802ல் சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையை துரத்தியதாக வரலாறு.


அரச்சலூரில் 1803ல் கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றிபெற்றார் இப்போரில் வெற்றி பெற்ற வெற்றிச்சின்னம் இன்றும் ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ளதென வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

போரில் வீரன் சின்னமலையை வெல்ல முடியாதென அறிந்த ஆங்கிலேயர்கள் சமையல்காரன் நல்லப்பனை பணம் தந்து தந்திரமாக தந்த ஆங்கிலேயர்களுக்கு தகவல் தந்தான் நல்லப்பன். உணவருந்திக்கொண்டிருந்த தீரன் சின்னமலை அவர் சகோதரர்கள் பெரியதம்பி,கிலேதார் தளபதி கருப்ப சேர்வை ஆகியோர்களை கைது செய்த ஆங்கிலப்படை கி.பி 1805ஆம் ஆண்டு 31ஆம் தேதி சங்ககிரி கோட்டையில் தூக்கிலிட்டு 4 பேரையும் கொன்று தன் கோபத்தை ஆங்கிலப்படை தீர்த்துக்கொண்டது.

ஆனால் தீரன் சின்னமலை மறைத்தாலும் அவர் விட்டுச்சென்ற புகழும் வீரமும் கொங்கு மண்ணில் எப்போதும் நிலைத்திருக்குமாறு அவர் வழி வந்த மக்களால் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஓடா நிலையில் மணிமண்டபம் கட்டி அவர்புகழ் தேயாதவாறு பாதுகாக்கப்படுகிறது.

ஈரோடு பக்கம் வந்தால் பார்த்துவிட்டு போகலாம். பவானியில் இருந்து சேலம் செல்லும் வழியில் சங்ககிரி என்னும் இடத்தில் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட சங்ககிரி கோட்டையும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் 200 வருடங்கள் கழித்து இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


அடுத்த தலைமுறைக்கு வரலாற்றுச்சிறப்புமிக்க இந்த இடங்களுக்கு உங்களால் முடிந்த நாட்களில் ஈரோடு வரும்போது சுற்றிக்காட்டலாமே?

Monday, August 8, 2011

துணுக்கு எழுத்தாளர் ஆவது எப்படி?

துணுக்கு எழுத்தாளர் ஆவது எப்படி?


ஜோக்,கவிதை,கதை எழுதுதும் திறமை பல பேருக்கும் இருந்தும் அதை எப்படி அனுப்புவது என தெரியாமல் இருப்பது தான் ஆச்சரியம் ,

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்து திறமையை ஜோக் என்றால் ஒரு அஞ்சல் அட்டையில் முகவரி எழுதம் பக்கத்தில் எந்த வார இதழ்களுக்கு அனுப்ப நினைக்கிறீர்களோ அந்த வார இதழின் முகவரி இட்டு அதன் இடப்பக்கத்தில் உங்கள் முகவரி இட்டு அதன் பின்பு முழு அஞ்சல் அட்டையின் முழு அளவுள்ள பக்கத்தில் ஜோக் என தலைப்பிட்டு தெளிவாக எழுதி



குமுதம்,ஆனந்தவிகடனுக்கு அல்லது ஜோக் பிரசுரமாகும் வார இதழ்களுக்கு அனுப்பினால் உங்கள் ஜோக்குகளை சம்பந்தப்பட்ட வார இதழ் ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமானால் அந்த ஜோக்குக்கு பரிசும் மணியார்டரில் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள்.

அல்லது முழு வெள்ளைதாளை இரண்டாக கட் செய்து ஜோக் தலைப்பிட்டு கவரில் வைத்தும் அனுப்பலாம்.

கவிதைகளையும் மேற்கண்டவாறு அனுப்பலாம். ஒருபக்க கதைகளை அனுப்பும் போது முழு வெள்ளைதாழின் ஒருபக்கம் மட்டும் எழுதி வெள்ளைதாளின் பின்பக்கம் ஏதும் எழுதாமல் முகவரி மட்டும் எழுதி அனுப்பலாம்.

பெரிய கதைகளை அனுப்பும் போது 5 பக்கம் வருமாறு வெள்ளைதாளின் ஒருபக்கம் மட்டும் எழுதி தங்கள் படைப்புகளை அனுப்பலாம். தங்களுக்கு எழுத்து திறமை இருப்பதாக கருதினால் முதலில் அஞ்சல் அட்டையில் வாசகர் கடிதம் எழுதிப்பழகுங்கள் ,

பின்பு குடும்ப மலர் வாரமலர் போன்றவற்றில் ஜோக்,கவிதை, கதைகளை அனுப்புங்கள்.பின்னர் பெரிய வார இதழ்களுக்கு அனுப்புங்கள். அதற்கு முன் எந்த மாதிரியான ஜோக்,கவிதைகள்,பிரசுரமாகின்றன என்பதை கவனியுங்கள்.

பின்பு தொடர்ந்து முயற்சியுங்கள்.

உங்களுக்குள் ஓர் எழுத்தாளன் இருந்தால்
கண்டிப்பாய் வெளிப்படுவான்.

வாழ்த்துக்கள்.

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...