Monday, October 3, 2011

பாலமலை எனும் சொர்க்கபூமி




சேலம் மாவட்டம் கொளத்தூர்க்கு அருகில் பாலமலை உள்ளது. புகழ்பெற்ற பாலமலை ஸ்ரீ சித்தேஷ்வரர் இங்குதான் அமைந்துள்ளது. பாலமலையில் வாழும் மக்கள் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள் .

பல கிராமங்களில் பாலமலையில் மக்கள் வாழ்கிறார்கள்.மின்சார வசதி இல்லாமல் வாழும் இவர்களுக்கு சோலார் மின் விளக்கு வசதியில்தான் வாழ்க்கை நகருகிறது.

பாலமலை என அழைக்கப்படும் சித்தேஸ்வரமலையில் காணப்படும் ஊர்கள் தும்மம்பதி.,அணைக்காடு,பெரியகுளம்,ஈச்சங்காடு,நத்தக்காடு,நாகம்பதி, துவரங்காடு,கெம்மம்பட்டி,ராமன்பட்டி ,புள்ளம்பட்டி, நமன்காடு,கருகாமரத்தூக்காடு,தலைக்காடு,சாத்தன மடுவு,

எருக்களாங்காடு, சிங்காரதோப்பு, சோத்தாங்காடு,இடைமலைக்காடூ.பத்திரமடுவு, பெரியணக்காடு. ஆகிய ஊர்களில் மக்கள் அடிப்படை வசதிகளுக்கு சிரமப்பட்டு வாழ்ந்து வருகின்றனர் .

கல்விக்காக பள்ளிக்கூடம் பெரியகுளம் பகுதியில் இருந்தாலும் பாலமலை வாழ் மக்கள் குழந்தைகள் கல்வி தேடி குருவரெட்டியூர், சென்னம்பட்டி,கொளத்தூர், சேலம் பகுதிகளுக்கு படிக்கச்செல்கிறார்கள். பாலமலை வாழ் மக்களின் ஒரே நம்பிக்கை தற்போது அரசு அனுமதியுடன் சாலை உருவாக்கி கொண்டிருப்பதுதான் .

100 நாள் வேலைத்திட்டத்தில் தங்களுக்காக தாங்களே சாலை அமைத்து வருகிறார்கள் .சாலை உருவானால் பாலமலை சித்தேஸ்வரர் திருக்கோவில் செல்ல new சாலை உருவாகிவிடும் . பல மூலிகைகளும் உயர்ந்து வளர்ந்த மரங்களும், சுனைகளும் அழகானதாகும் .பாலமலையின் அடர்ந்த வனப்பகுதியாக சிங்காரத்தோப்பு அமைந்துள்ளத
ஸ்ரீ சித்தேஸ்வரமலை கீழ் பகுதியில் அமைந்த வனமாகும் .இங்கு கரடி. குரங்கு,மான்கள்,காட்டுப்பூனைகள் ,முயல்,காட்டுப்பன்றிகள் வாழ்கின்றன. பயப்படும்படியான விலங்குகள் எதுவும் இல்லை.

உரிக்கொடி போன்ற அபூர்வ மூலிகைகள் இருப்பிடமாக திகழ்கிறது.இயற்கை அழகு சூழ்ந்த பாலமலையை இரண்டுநாள் சுற்றுப்பயணமாக தேர்வு செய்யலாம்


. இயற்கையான பாலமலையில் கொய்யா,மாதுளை, பாலாபழம் ,சீதாப்பழம்,நகப்பழம் ,என பலவகையான பழங்கள் கிடைக்கிறது.


ஒரு முறை வந்து சுற்றிப்பார்த்து விட்டு எழுதுங்கள்..





6 comments:

''இறைவனடி யுவராஜா'' said...

வாழ்க வளமுடன்...

ஜீ, பாலமலை சித்தேஸ்வர மலை
கோவிலை பற்றிய நல்ல தகவல்
தந்தமைக்கு நன்றி ஜீ .

மேலும் உங்கள் முயற்சிகள் தொடர
இறைவனிடம் இறைஞ்சும்.


நட்புடன்
இறைவனடி யுவராஜா

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

நன்றி நன்பர் யுவராஜா அவர்களே , சிவனைத் தேடி எப்போதும் என் தேடல் தொடரும், பல கண்ணுக்கு தெரியாத பழங்கால ஆலயங்களை உங்களுக்கு அளிக்க வேண்டும் என்கிற எண்ணம் உருவாகி உள்ளது. கோவில் ஆராய்சிகள் செய்து ஸ்தலங்களின் பெருமைகளை அளிக்க ஆவலாக உள்ளேன் நட்புடன் குரு.பழ.மாதேசு

Ashok said...

அடிவாரம் to உச்சிமலை தொலைவு..

Ashok said...

Distance from bottom to top of hill

Anonymous said...

Distance from bottom to top of the hill

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

7 கி.மீ அதிகபட்சம் இருக்கலாம் நட்பு

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...