ஸ்ரீ பெருமாள் துதி :
ராகம் :நீலாம்புரி
தாளம் : சுத்தாங்கம்
பச்சைமா மலைபோல் மேனி,
பவளவாய் கமலச்செங்கண் ,
அச்சுதா! அமரர் ஏறே; ஆயர் தம்,
கொழுந்தே !என்னும் ,
இச்சுவை தவிரயான் போய் ,
இந்திரலோகம் ஆளும் ,
அச்சுவை பெறினும் வேண்டேன்,
அரங்கமா நகர் உளானே.
ஸ்ரீ மங்களகிரி பெருமாள் திருக்கோவில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய வைணவத்திருத்தலங்களில் ஒன்றாகும்.
ஸ்ரீ மங்களகிரி பெருமாள் திருக்கோவில் மலைமேல் அமர்ந்த அழகிய ஸ்தலமாகும்
மூலவர் : ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீமங்களகிரி பெருமாள்
செல்லும் வழி :
ஈரோட்டிலிருந்து பவானி செல்லும் (அக்ரஹாரம் வழி) வழியாக சுமார் 8 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. பெருமாள் மலை பஸ் நிறுத்ததில் அமைந்துள்ளது.
அமைவிடம் :
ஈரோடு வட்டம் சூரியம் பாளையம் கிராமத்தில் இறைவன் பெயரான "பெருமாள் மலை" என்னுமிடத்தில் அமைந்துள்ளது. கொங்கு நாட்டின் வற்றாத ஜீவநதியாம் காவேரி நதிக்கு தென்பக்கமாக அமைத்துள்ள மிகப்பெரிய பாறையால் அமர்ந்த அற்புதத் திருத்தலமாகும்.
புரட்டாசி மாதத்தில் வரும் நான்கு சனிக்கிழமைகளிலும் பெரும் திருவிழாவாக ஸ்ரீ மங்களகிரி பெருமாளை கொண்டாடுகின்றனர் .
விஷேச நாட்கள் :
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை ஸ்ரீமங்களகிரி பெருமாள் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பெளர்ணமி பூஜைகள் நடைபெறும் .
புரட்டாசி மாதத்தில் ஸ்ரீமங்களகிரி பெருமாளை தரிசனம் செய்ய மலை ஏறி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.
700 வருட சரித்திரம் கொண்டவர் ஸ்ரீ மங்களகிரி பெருமாள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக இந்து அறநிலைய துறையால் அழகாக பராமரிக்கப்பட்டு வரும் திருக்கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.
கடந்த 9 ஆண்டுகளாக சிறப்பாக இறைவழிபாடு செய்யவும் அன்னதானம் ,போன்ற பல உதவிகள் செய்யும் விழாக்குழுவினர் மற்றும் பூசாரிகளை பாராட்டியாக வேண்டும்.
மலை என்று சொன்னாலும் மங்களகிரி என்பது சிறிய பாறை அமைப்பால் ஆன மலைக்குன்றுதான். அழகாக படி அமைத்துள்ளார்கள். எல்லா வயதினரும் தரிசிக்க ஏற்ற மலை .
ஏதேனும் ஓர் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் குடும்பத்துடன் வந்து ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீ மங்களகிரி பெருமானை வணங்கி
உங்கள் வாழ்வில் பல மங்களங்கள் உண்டாகவேண்டுமென விரும்பும்
அன்பன் குரு.பழ.மாதேசு
4 comments:
வாழ்க வளமுடன் ...
ஜீ வணக்கம்,
ஸ்ரீ மங்களகிரி பெருமாள் திருக்கோவில்
பற்றிய உங்களின் பதிவு ஆன்மீகம் அன்பர்களுக்கு,
மிக பயனுள்ள பதிவு ஜீ மேலும் உங்கள் முயற்சி தொடர இறைவனிடம்
இறைஞ்சும் தொண்டன்!!
என்றும் நட்புடன்
'இறைவனடி யுவராஜா''
முயற்சி தொடர வாழ்த்துக்கள் தல
மிகவும் நல்ல பகிர்வு......
தொடர்ந்து எழுதுங்கள்......
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Post a Comment