📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.
Saturday, July 19, 2025
பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்
பைகாரா டேம் : ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 22 கிலோமீட்டர் தொலைவில் பைகாரா டேம் உள்ளது. சுமார் 60 மீட்டர் உயரம் உடைய இந்த டேம் அழகிய சூழலில் அமைந்துள்ளது. அணை, ஏரி, படகு பயணம் என்பது இங்குள்ள முக்கிய அம்சங்கள் ஆகும். இங்கு அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை சீசன் டைம் ஆகும்.எப்போதும் இன்று குளிர்ந்த சூழ்நிலையே நிலவும். மைசூர் சாலையில் உள்ள ரோட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் அணை நீர்வீழ்ச்சி ஆகியவை அமைந்துள்ளது. இங்கு பெட்டிக்கடைகள், அமைந்துள்ளது. காலை 8.30 முதல் மாலை 17.30 வரை திறந்திருக்கும். படகு சவாரியில் பயணிக்க நேரம் 10.00 to 17.30 மணி வரை ஆகும். இங்கே உள்ளே சென்று பார்க்க கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும். படகு கட்டணம் 700 முதல் 1250 வரை பெறப்படும்.தமிழ்நாடு சுற்றுலா கழகம் மூலம் பேட்டரி கார்கள் வாடகைக்கு விடப்படுகிறது மோட்டார் படகு, ஸ்பீடு போட் (ரெண்டு பேர் மட்டும் பயணிக்க கூடியது) இந்த நீர்வீழ்ச்சி இருந்தாலும் அதில் குளிக்க முடியாது அவ்வளவு குளிராக இருக்கும். ஊட்டியில் இருந்து மைசூர் சாலையில் சூட்டிங் ஸ்பாட் பார்த்துவிட்டு அடுத்ததாக பைகார அணையை பார்த்துவிட்டு வரலாம். மறுபடியும் ஒரு அழகிய பதிவில் சந்திப்போம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment