Sunday, January 27, 2013

ஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு

                   SRI MASANI AMMAN TEMPLE HISTORY.ANAIMALAI                                                                      


பழங்காலத்தில் நன்னன் என்கிற மன்னன் ஆனை மலைப்பகுதியை ஆட்சி செய்து வந்தார் . அவரைச்சந்திக்க ஒரு துறவி வந்தார் .அவரை வரவேற்று பல உபசரிப்புகள் நன்னன் செய்தாராம்
.
அரசனின் உபரசரிப்பில் ஆனந்தமான துறவி அவருக்கு ஓர் மாங்கனியை கொடுத்து

" மன்னா இது அதிசய மாங்கனி இதை எனது குருநாதர் பரிசாக அளித்தார் .
உன்னால் மகிழ்வுற்ற நான் இந்த மாங்கனியை பரிசளிக்கிறேன் ,முக்கியமான
ஒன்று இதை உண்டபின் இந்த மாங்களி கொட்டையை ஆற்றில் விட்டு விடு .
இல்லையெனில் இது ஆபத்தாக முடிந்து விடும்''' .


 மன்னர் சரி என்றவாறு துறவியை வழியனுப்பி விட்டு மாங்கனியை சுவைக்கத்துவங்கினார் .சுவை நன்றாக இருக்கவே
அந்த மாங்கொட்டையை துறவி சொன்னதை அலட்சியப்படுத்தி தமது நந்தவனத்தில்ஆற்றோரம் நட்டு பராமரித்து வந்தார் .


 மரம்பெரியதாகி பழம் விடும் நேரம்
வந்ததும் அரண்மணைக் காவலாளிகள் வைத்து மாங்கனியை யாரும் பறிக்ககூடாது .அப்படி சாப்பிட்டால் மரண தண்டனை என அறிவித்தார் . இதைக்கேள்லிப்பட்டதுறவி மன்னரிடம் வந்து

''மன்னா நீங்கள் அந்த மாங்கனி கொட்டையை நான்
சொன்னதை கேளாமல் மரமாக்கி விட்டீர்கள் . நீங்கள் நினைப்பது போல் அந்த
மரத்தில் ஓரே பழம் மட்டுமே பழுக்கும் அதையும் நீங்கள் சாப்பிடக்கூடாது
. அதை தெய்வீகப்பெண்மணி ஒருவரே சாப்பிடுவார் . நீங்கள் சாப்பிட
நினைத்தால் இந்த தேசம் அழிவுறும் '''

என உரைத்து கிளம்பினார் துறவி. மன்னர்
நன்னன் அதை அலட்சியப்படுத்தி இந்த மாமரத்தில் பழுக்கும் பழத்த
மாம்பழத்தை யாரேனும் சாப்பிட்டால் மரண தண்டணை என அறிவித்தான். தாரகன் என்பவர் வியாபார விஷயமாக தன்மகள் தாரணி உடன் ஆனைமலைக்கு வந்திருந்தார் .


அப்போது அவர்கள் வீட்டின் அருகில் இருந்த தோழிகளுடன் தாரணி ஆற்றில்
குளிக்கச்சென்றார் . அங்குதான் அரசனின் நந்தவனமும் அதிசயமாமரமும்
இருந்தது . தாரணி நீராடும்போது அந்த மாமரத்தில் இருந்து தன் அருகே
விழுந்த மாங்கனியை எடுத்து சாப்பிட்டார் .

 மற்ற பெண்கள் இது அரசகட்டளை
இதை சாப்பிட்டு விட்டாயே ராஜ தண்டனை கிடைக்குமே என பதறினார்கள் .
பயத்தில் உடனடியாக கிளம்பினார் . தாரணின் அப்பாவிடம் இந்த விஷயத்தை
கூறினார்கள் .

அதற்குள் இந்தவிஷயம் மன்னர் காதுக்கு எட்டியது .காவலாளிகளை
விட்டு தாரணியை கைது செய்து அரண்மனைக்கு கூட்டிச்சென்றார்கள் .குற்றம் சாட்டப்பட்டது .தாரணி அழுது புலம்பினால் அரசரின் அறிவிப்பு அறியாமல்பிழையாகி விட்டது ,மன்னிக்கவேண்டினாள் .

அரசனோ இரக்கில்லாமல் மரணதண்டனையை அறிவித்தான் . ஒரு மாங்கனிக்காக என் உயிர் பிரிந்தாலும் என்
ஆத்மா இந்த மண்ணிலிருக்கும் .

 என்புகழ் ஓங்கும் . உன் ஆட்சி அழியும் என
சூளூரைத்து கொலைகளம் சென்று உயிர் பிரிந்தாள் . அவள் உடல் மயானம்
எடுத்துச்செல்லப்பட்டது .அவள் உருவத்தைப்போலவே மண்ணால் செய்து வைத்து,மாங்கனிக்காக இறந்த கன்னியை மாங்கன்னியாக மாசானி அம்மனாக தொழுதுசென்றார்கள் '

 அரசரால் கொல்லப்பட்ட தாரணி தெய்வீக பெண் அவரே மாசாணி அம்மனாக சிறிதளவில் அவர் சமாதியில் துவங்கிய வழிபாடு அந்த ஆத்மா நம்பி
வரும் பக்தர்களை காத்து அருள்பாலிக்கிறது.

 பல்வேறு அவதாரங்களில் ஈஸ்வரி
அவதாரம் எடுத்து பல அம்மனாக அற்புதங்களை தந்திருக்கிறார் . மாசாணி அம்மன் உக்கிர தெய்வம் .

 நீண்டவாக்கில் படுத்திருக்கும் அன்னை.பிற்காலத்தில் கொடுங்கோல் மன்னன் எதிரிகளிடம் இறந்தான் . கன்னி தெய்வத்தை பலியிட்ட இடம்
பிங்கொணம்பாறை என அழைக்கப்படுகிறது.

மாசாணி அம்மனிடம் குறைகளை எழுதி
பூசாரியிடம் பக்தர்கள் தர அதை அம்மன் நிவர்த்தி செய்கிறார் . பில்லி
சூனியம் போன்ற அமானூஷ்ய சக்திகளிடம் இருந்து காக்க உக்கிரதெய்வமான மாசாணிஅம்மன வணங்கினால் நலம் பயக்கும்.

உப்பாறு படுகையில் பொள்ளாச்சியில்
இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஆனைமலையில் உள்ள மிக பிரமாண்டமாண   ஸ்ரீமாசாணி அம்மன் திருக்கோவில் அம்பிகையை வந்து வணங்கி தங்கள் வாழ்வில்
வளம் பெறுங்கள் நன்றி,

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...