Sunday, November 3, 2013

தீபாவளிப் பயணம்

தீபாவளிக்காக மனைவியை பார்க்க பயணத்தை ஓர் குக்கிராம ரோட்டில்
துவக்கினேன் . 40 கி.மீட்டர் செல்ல மெதுவாக இருசக்கர வாகனத்தில்
பயணித்துக்கொண்டிருந்தேன் .

 ஆங்காங்கே பட்டாசு வெடிச்சத்தம் பயமுறுத்திக்கொண்டிருக்க காலை 7 மணிக்கு துவங்கிய பயணமது . கிட்டத்தட்ட 5 கி.மீட்டர் பயணித்த பின் லிப்ட் கேட்டபடி ஒரு 14 வயது பையன் நின்றிருக்கு ஆள் அரவமற்ற ரோட்டில் இருசக்கர வாகனத்தில் அந்த பையனையும் ஏற்றிக்கொண்டு பயணம் தொடர்ந்தது .

 வெள்ளை வேட்டி வெள்ளைச்சட்டையுடன் இருந்த  அந்த பையன் கைரேகை பார்க்கிற சிறுவனாகத்தான் இருக்குமென கணித்து ஜோதிடம்
பார்ப்பாயா ? என கேட்டு ஆரம்பித்தேன் . ஆமாம் அண்ணா ஸ்கூல் லீவு அதான் கிளம்பிட்டேன் .

அப்பா நம்ப கணிப்பு கரெக்ட்தான் . தம்பி இன்னைக்கு தீபாவளி இன்னிக்குமா என்றவாறு எங்கிருந்து நடந்து வருகிறாய் எனக்கேட்க அண்ணா அப்பாவுக்கு போன வருஷம் விபத்து ஆயிடுச்சி நல்லா ஜோதிடம்
பார்த்திட்டிருந்த அப்பா படுத்திட்டார் .

 1 லட்சம் செலவாயிடுச்சி . அண்ணா வெளியூர்ல படிக்கிறான் . அக்கா வீட்ல இருக்காங்க , நான் லீவ்ல கேரளா போய் எங்க குல குருகிட்ட முறைப்படி ஜோதிடம் கத்துகிட்டேன் ஊரு கவுந்தப்பாடி பக்கத்துல சலங்க பாளையம் ஸ்கூல்ல +1 படிச்சிட்டிருக்கேன் .

நேத்து மதியம் 2 மணிக்கு கிளம்பினேன் எங்க மாமா கூட வந்து குருநாதசாமி
கோவில்ல தங்கிட்டேன் . நைட் சாப்பிடல குருநாதசாமி கோவில தங்கிட்டேன் .காலையில கிளம்பிட்டேன் 5 கி.மீ நடந்துட்டேன் அண்ணா . ! யாரும் கைரேகை பார்க்க கூப்பிடல .

பேசிக் கொண்டே வந்தான் .

 மனம் சிவ சிவா என கதறிக்கொண்டே வந்தது . ஏழ்மை கொடிது அதுவும் இளமையில் வறுமை மிகக்கொடியதென அவ்வையார் வரை வந்நு விட்டு சென்றார்கள் . தீபாவளி அன்று கூட புதுத்துணி இல்லாமல் பட்டாசு இல்லாமல் இனிப்பில்லாமல் இச்சிறுவனைப் போல் எத்தனை பேரோ?

கனத்த இதயத்துடன் தீபாவளிப்பயணம் கடந்து கொண்டிருந்தது
. சோறில்லாமல் தீபாவளி அன்று ஓர் சிறுவனா ? வழியெங்கும் ஹோட்டல் கடையை தேடி பவானி வந்து விட்டது .

 பவானி வந்ததும் பர்சில் கிடந்த ஐம்பது ரூபாயை எடுத்து சாப்பிட்டு விட்டு ஊருக்கு செல் எனக்கூறி செல்லும் வழியில் லட்டு வாங்கி தந்து சுவைக்கச்சொல்லி மேலும் பணம் வேண்டுமா எனக்கேட்க

மறுத்து கவுந்தப்பாடி செல்லுகிற பஸ்ஸ்டாப்பில் இறக்கி விட்டால் போதுமென நன்றி கூறி பயந்த கலந்த விழிகளுடன் கிளம்ப, நானும்
உன்னைப்போலிருந்து வந்தவன்தான் உயர்ந்த நிலைக்கு வருவாயென வாழ்த்தி குமாரபாளையம் கிளம்பி விட்டேன் .

இறைவா இக்குழந்தையை காப்பாற்று மனம் இறைஞ்சி வேண்டிக்கொண்டிருக்கிறது . அச்சிறுவனைப்பார்த்து இரண்டு
நாளாகியும் அவன் சொன்ன வாசகம் நினைவில் வந்து கொண்டே இருக்கிறது
அச்சிறுவன் சொன்னது

 " அப்பாக்கு மட்டும் ஏக்சிடென்ட் ஆகலேன்னா ஊர்ல புது
துணி போட்டுட்டு பட்டாசு வெடிச்சிட்டிருப்பேன்."

 அப்போதைக்கு என்னால்
உதவ முடிந்தது . ஓர் வேளை உணவோ அல்லது கண்டீப்பாக பட்டாசு வெடித்து கொண்டாடி இருப்பான் .

மனம் வலித்தாலும் பின் சந்தோஷப்பட்ட தருணம் இது .
சரியான மனிதர்க்கு போய் சேர்ந்ததில் தீபாவளி கொண்டாடின திருப்தி .

எத்தனையோ தீபாவளிகள் கொண்டாடி இருப்பினும் கூட இது மறக்க முடியாத தீபாவளி

தலை தீபாவளியும் கூட

நன்றி

அன்பில் கரைத்த பயணம்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தீபாவளிக்காக சொந்த ஊர் செல்ல பயணத்தை துவங்கினேன் .

பேஸ்புக்கில் பகிர்ந்ததைப்போல ஏதேனும் மாற்றுத்திறனாளிகள் மையத்தில் பண்டிகை நாளில் கழிக்க வேண்டும் என்ற ஆவலுடன் தீபாவளிக்கு முந்தைய நாள் மதியம் பயணித்து 2 கிலோ ஜிலேபியுடன்

 கொமராபாளையத்தில் இருந்து எடப்பாடி வழியில் அமைந்துள்ள கண்பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை தொழிற்பயிற்சி மையம் சென்று அவர்களுக்கு இனிப்பைக் கொடுத்து தீபாவளி வாழ்த்துக்கள் சொன்னது நெகிழ்வான நிமிடங்கள்.

 பெரிய அளவில் 25 வருடமாக நடந்து வருகிற இந்த மையம் 165 மனித இதயங்களுடன் நடந்து வருகிறது . ஆறு விதமான பிரிவினர்கள் இங்கு பாதுகாக்கப்படுகிறார்கள் ,


 உதவ விரும்புகிறவர்கள்=


 k.கோவிந்தராஜன் 1/285
பரிசல்துறை ,புளியம்பட்டி ,
புள்ளாக்கவுண்டன்பட்டி அக்ரஹாரம் அஞ்சல்
சங்ககிரி வட்டம் சேலம் மாவட்டம்

 தொடர்புக்கு : 04288260157 ,
9362060157, 9842295560
 web :www.bfdc-trust.in

mait i.d : bftc.trusu@gamail.com

என்ற தொடர்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 மன நிறைவான சிறு உதவி . முதல் தடவையாக இப்படி ஓர் இடத்தில் நேரம் கழித்ததும் இனிப்பு தந்ததும் அவர்களுக்கு வாழ்வில் உறவுகளாக யாரோ ஒருவர் இருக்கிறார்களென்ற அர்த்தம் புரிய வைத்திருக்கும்,
 நமக்கும் கூட

முடிவுரை :

நீண்ட பயணத்தில் முக்கிய தருணமாக இதைக் கருதுகிறேன் , இனி
இவ்விடம் அடிக்கடி செல்வேன் .

 வாய்ப்பும் வளமையும் கிட்டும் வரை

நன்றி

Friday, November 1, 2013

மகான் ஸ்ரீ பட்டினத்தார் திருக்கோவில் இறைவன் ஆட்கொண்ட ஸ்தலம்

பட்டினத்தார் திருக்கோவில் சென்னையில் உள்ள திருவெற்றியூரில் இறங்கி
அருகே மார்க்கெட் வழியாக சிறிது தூரம் நடைப்பயணத்தில் அடையலாம் .


பட்டினத்தாரின் இயற்பெயர் சுவேதரண்யர்

 தந்தை பெயர் சிவநேசன்

 தாய் ஞானக்கலை


 பிறப்பு காவிரி பூம்பட்டினம் பூம்புகார் மயிலாடுதுறை
திருக்கடையூர் ஆகும் . மக்களால் அழைக்கப்பட்ட பெயரே பட்டினத்தார்
என்பதாகும் . பட்டினத்தாரின் மனைவி சிவகலை என்பதாகும் . 10ஆம்
நூற்றாண்டில் மருதவானர் சிவனாக வந்து ஆட்கொண்டதாக வரலாறு . இவர் சீடர் பத்ரகிரியார் .

சிவனிடம் திருவிடைமருதூர் பேய்கரும்பு பெற்ற இடமாகும்
.அக்கரும்பு இனித்த இடமே திருவெற்றியூராகும் .

 இறைவனுடன் கலத்தல் :

ஆடிமாதம் உத்திர நட்ஷத்திர திருநாளில் சென்னை அருகேயுள்ள
திருவெற்றியூரில் சிவனிடம் இரண்டறக்கலந்தார் . அவ்வாறு கலந்த இடமே
திருவெற்றியூராகும் . பட்டினத்தார் வள்ளலார் ஆகியோர்களுக்கு ஜீவசமாதி
கிடையாது . இவர்கள் இருவரும் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு சிவபெருமானுடன் கலந்தவர்கள்.

பட்டினத்தார் திருவாரூரில் பாடிய பாடல் :

 ஆருரார்இங்கிருக்க அவ்வூர் திருநாளென்று
 ஊருர்கள் தோறும் உழல்வீர் -நேரே ,
உளக்குறிப்பை நாடாத ஊர்மக்காள் நீவீர்,
விளக்கிருக்க தீத்தேடுவீர் .


பொருள் :

திருவாருர் உடையாரகிய சிவன் இங்கிருக்க அந்த ஊரில் திருநாள்
என்று ஊர்கள் தோறும் அலைவோரே நேராக மனக்கருத்தை ஆராயத மூடர்களே நீங்கள் தீபமிருக்க நெருப்பை தேடுகிறீர்கள் .

 பொன்மொழி :

 "காதற்ற ஊசியும்வாராது கடைவழிக்கே "
இறந்த பின் காது உடைந்த ஊசியை கூட எடுத்துச்செல்ல
முடியாது அப்படியிருக்க பொன் ,
பொருள் மேல் ஆசை விலக்கி துறவறம் பூண்டவர்
மகான் ஸ்ரீ பட்டினத்தார் ஆவார் .

 பட்டினத்தார் பற்றி பதிவை நீண்டதாக
எழுதலாம் . மகா சித்தர் .

 முடிவுரை :

இறைவன் பட்டினத்தாரை ஆட்கொண்ட
இடமான திருவெற்றியூர் வந்து வணங்குங்கள் .
 மிக அருமையான இடமாகும்.
தரிசியுங்கள் நன்றி.

Saturday, October 19, 2013

கண் கண்ட சித்தமருத்துவரும் சித்த மருத்துவமும்

திருக்கோவில் வரலாற்றை மட்டும் நமது வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கிற இந்நேரத்தில் சற்றே விலகி சித்த மருத்துவரும் சித்த மருத்துவமும் என்கிற தலைப்பில் நீண்ட நாட்களாய் எழுத வேண்டும் என்கிற ஆவல் .    பல வேலைப்பளுவின் காரணமாக எழுத முடியாமல் போனது . மரங்களைப்பற்றியும் அவைகளைப் பற்றிய மருத்துவ குணங்களையும் அறிய ஆவல் .

யார் புண்ணியமோ ?
சித்தர்களின் ஆசிர்வாதமோ! விட்டகுறை தொட்ட குறையோ ! நன்பர் ஒருவரின்உதவியால் 3 மாதங்களுக்கு முன் ஓர் சித்தமருத்துவரை சந்தித்தேன் . அவரை  கண்ட  பின்  சித்த மருத்துவம் என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டேன் . அவரிடம் பழகிய பின் சித்த மருத்துவம் பற்றியும் சித்த வைத்தியர்கள் மேலும் அதிக மரியாதையை ஏற்படுத்தியது . அலோபதி வளர்ந்த பின் நம் பாரம்பரிய சித்த மருந்துவத்தையும் , மருத்துவர்களையும் மறந்து அலட்சியபடுத்திவிட்டோம் .


18 சித்தர்களும் நமக்கு கிடைத்த வரம் . அவர்கள் சொல்லிவிட்டு சென்ற
மருந்துகள் மிக ஆச்சர்யமானது . அலோபதி மருந்துவர்களால் கைவிடப்பட்ட
காமாலை ,புற்றுநோய் , ஆஸ்துமா போன்ற கடுமையான நோய்கள் கூட சாதாரணமாக சரி  செய்துவிட்டுச்செல்கிற சித்த மருத்துவர்கள் உள்ளார்கள் . அந்த வகையில் நான் சந்தித்த சித்த மருத்துவர் ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது  போல சில தெரியாத மூலிகை பற்றியும் விளக்கி சொல்ல

 அலோபதியை விட்டு நல்ல மருந்து நல்ல மருத்துவ மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுகிற , தீர்க்கின்ற திறமை கொண்ட வைத்தியரை
நம் வலைப்பூ வழியாக அறிமுகப்படுத்த வேண்டுமென்பது என் ஆவல் . அவர் பெயர்

திரு  k. ஜோதி மணி பரம்பரை சித்த வைத்தியர் ,

பழைய  எண் =730 புதிய   எண் = 829 

 ஜோதி டீ  ஸ்டால் ,, மாட்டாஸ்பத்திரி பிரிவு, 

காளிங்கராயன் பாளையம் அஞ்சல் .

பவானி வட்டம் ,

 ஈரோடு மாவட்டம் 

அவரின் தொடர்பு எண் :

 9842985473  

                                   
               
    தொடர்பு கொள்ளுங்கள் . சரி எமக்கு தெரிந்த சித்த
வைத்தியரை அறிமும் செய்து விட்டேன் அவர் கீழ்கண்ட நோய்களால் பாதிக்கபட்ட நோயாளிகளை தீர்க்கிறார் .

 மஞ்சள் காமாலை b, c வகைகள் ,தலைவலி, அல்சர்,பக்கவாதம் ,ஜீரணக்கோளாறு , தோல் நோய்கள் ,வாய்வுக்கோளாறு, கட்டி இல்லாத பெரும்பாடு ,மலச்சிக்கல் , சக்கரைநோய்அக்கி, மூத்திர எரிச்சல் ,                         உடல் பலம் அதிகரிக்க,சளி,இருமல் ,உடல் தேற இளைக்க,சோரியாசிஸ்,ஆண்மைக்குறைவு எந்த நிலையாயினும் ,குழந்தையின்மை,வீ.டி.ஆர் .எல் ,மூத்திர எரிச்சல்

 இப்படி 20 விதமான நோய்களை தீர்க்க தன் 35 வருட ஆய்வில் கண்டுணர்ந்து பல நோயாளிகளை தீர்த்துள்ளார்.


 தினமும் இடைவிடாது விஷ்ணு பூஜை செய்கிற சித்த மருத்துவர் . உங்களுக்கோ நன்பர்களுக்கோ உறவினர்களுக்கோ மேற்கூறிய நோய்களில் ஏதேனும் ஒன்றில் இருப்பின் தொடர்பு கொண்டு சித்த வைத்திய முறையில் பல தலைமுறையாக சித்தமருத்துவம் செய்கிற இவரை நாடி நலம் பெறுங்கள்.

 மேற்கூறிய நோய்கள் அல்லாத நோயாக இருந்தாலும் தொடர்பு கொண்டு கேளுங்கள் .நான் பார்த்த சித்த மருத்துவர்களில் நியாயமானவர் என்பதாலேயே அவருக்காக இந்த
பதிவை எழுதினேன் .

 அவசர உலகில் அலோபதியில் ஊசியை போட்டுக்கொண்டு
ஓடிக்கொண்டிருக்கிறோம் . சித்தமருத்துவம் அல்லது சித்தம் என்றால்
முடிவு பெற்றது என பொருள் கொள்ளலாம் . சித்த மருத்துவத்தால் நோய்
முற்றுப்பெறுகிறது என்பதே உண்மை .

 நோயின்றி மனிதன் வாழ வேண்டும் என்று சதா விரும்புகிற நல்ல மனிதர் . 


பல மூலிகைகளை ஆய்வு செய்தவர் . என்னளவில்
நான் பார்த்த அருமையான சித்த வைத்தியர் . மருந்துகள் தேவைப்படின்
அவரின் தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு வரும் முன் கூறிவிட்டு வாருங்கள்.நன்றி

 முடிவுரை : 


 சித்த வைத்தியம் மிக உயர்வானது , மக்கள் அதன்
அருமை கண்டு கொள்ளாமல் அலோபதியை ஓடுகிறார்கள் . 18 சித்தர்கள்
பல்லாயிரக்கணக்கான மருந்துகள் தயாரித்து நம் முன்னோர்களை காத்தனர்
. இன்றோ அலோபதியை மட்டும் நம்புகிறோம் ,

அலோபதியை விட சித்த மருத்துவம் சிறந்த மருத்தெனக் கொண்டு பலரும் பல நோய்களுக்கு இன்று சித்த மருத்துவத்தையும் சித்தர்களை தேடியும் பயணிக்கிறார்கள் . அவ்வகையில்எமக்கு தெரிந்த சித்த வைத்தியரை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன் .
நோயின்றி மனிதன் வாழ வேண்டும் ,

 வலியில்லாமல் நோயை  தீர்க்க சித்த மருத்துவம்  தேர்வு செய்ய வேண்டும் .
 அதனால் சித்தர்கள் சொல்லிச் சென்ற மருத்துவம்
புகழ்பெற வேண்டும் .

அதுவே என் ஆர்வமும் கூட ,நன்றி

Tuesday, October 15, 2013

ஸ்ரீ நவபிருந்தாவனம் என்னும் சந்தியாசிமடம் ,பள்ளி பாளையம் பாகம் 2

அண்மையில் கண்ட பள்ளிபாளையத்திலிருந்து சேஷாயி பேப்பர் மில் செல்லும் வழியில் வசந்த நகரில் அருகில் 9 தீர்த்தர்களின் 9 மூல பிருந்தாவனம்   என்கிற பாதராஜ மடம் அவர்களைப்பற்றிய ஜீவசமாதியான நிலை ஆகியவற்றை இதற்கு முந்தைய பதிவில் பார்த்தோம் .

 இங்கு

1. ஸ்ரீ லஷ்மி மனோகர தீர்த்தர்
 2.ஸ்ரீ லஷ்மிபதி தீர்த்தர்
3. ஸ்ரீ நிதி தீர்த்தர்
4. ஸ்ரீ வித்யாநிதிதீர்த்தர்
5. ஸ்ரீ சுதிநிதி தீர்த்தர்
6. ஸ்ரீ மேதாநிதி தீர்த்தர்
7.ஸ்ரீ தேஜோ நிதி தீர்த்தர்
8. ஸ்ரீ தபோநிதி தீர்த்தர்
9. ஸ்ரீ யசோநிதி தீர்த்தர்

 ஆகியோர்களின் ஜீவசமாதியை இங்கு தரிசனம் செய்யலாம்இவர்களைப்பற்றி முந்தைய பதிவிலேயே எழுதப்பட்டுள்ளது
இவர்கள்அல்லாமல்

 2ஜீவசமாதிகள் வெளிப்புறத்தில் 

அமையப்பெற்றுள்ளது . அவர்கள் ஸ்ரீ நாகமகா
தீர்த்தர் மற்றும் ஸ்ரீ ராமதீர்த்தர் ஆகியோராவர் .

 ஸ்ரீ நாகமகாதீர்த்தர் : 


 நவபிருந்தாவனத்திற்கு வெளியில் நுணா மரத்தடியில் உள்ள
தீர்த்தர் ஸ்ரீ நாக மகா தீர்த்தர் . இவரும் கர்நாடக மாநிலம்
மங்களுருக்கு அருகில் உள்ள நேத்ராவதி நதி அருகிலுள்ள பகுதியிலிருந்து
இங்கு வந்து ஊழியம் செய்து இங்கேய பிருந்தாவனம் ஆகிவிட்டதாக வரலாறு .


பெரிய நாகம் ஒன்று ஸ்ரீ நாக மகா தீர்த்தருக்கு காவலாக உள்ளதை பலரும்
பார்த்துள்ளார்கள் . ஸ்ரீ நாகமகா தீர்த்தருக்கு 12வாரங்கள் நெய்
தீபமிட்டு பூஜித்து வந்தால் விரைவில் நம்கோரிக்கை நிறைவேறும் . நாகதோஷநிவர்த்தியாகிறது . இவரின் ஜீவ சமாதி 10வதாக இங்கே தரிசிக்கலாம்

ஸ்ரீ ராமதீர்த்தர் : 


நவபிருந்தாவனத்தில் மதில் சுவர்க்கு வெளியே வாயிற்கதவருகே
அமைந்துள்ள பிருந்தாவனத்தை அலங்கரிப்பவர் ஸ்ரீ ராமதீர்த்தர் ஆவார் .
கருங்கல்பாளையம் பாறை விநாயகர் கோவில் தெருவில் வசித்து சித்த வைத்தியம்செய்தவர் , ஏழைகளுக்காக இலவச மருத்துவம் செய்தவர் .

 சமஸ்கிருத புலமையும் ஆன்மீக அறிவும் கொண்டவர் 1990 ல் ஆசிரமம் மேற்கொண்டு 9 மத்வ நவமியன்று நவபிருந்தாவனத்தில் 11 வது பிருந்தாவனஷ்தராகி விட்டார்.

 திறப்பு நேரம்:


 காலை 7 .00மணி முதல் 12 வரையும்
திறந்திருக்கும். வியாழக்கிழமை விஷேச பூஜைகள் மதியம்
வரை நடைபெறுகிறது.

 கும்பாபிஷேகம் 5.7.1989 ல் மடாதிபதி ஸ்ரீ விக்ஞான நிதி தீர்த்த
சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது .

 திருவாளர் நவ பிருந்தாவனம்  பழனிச்சாமி ;

9750265865 


பல ஆண்டுகாலமாக பலருக்கு தெரியாமல் இருந்த இந்த
அரிய பிருந்தாவனத்தை 25 வருடமாக பல ஆன்மீகப்பணிகள் செய்து அனைத்து மக்களுக்கும் இந்த நவ பிருந்தாவனத்தின் பெருமைகளை பலருக்கும் நோட்டீஷ்கள் துண்டு பிரசுரங்களால் பல மக்களை இந்த பிருந்தாவனத்தின் பெருமைகளை கொண்டுசென்றவர் .

 இந்த அரிய பதிவை உருவாக்க பல குறிப்புகள் அளித்த அவர்க்கு
நம் மனமுவந்த பாராட்டுகள். மேலும் அழகிய பிருந்தாவனத்தை பற்றிய
தகவல்களுக்கு மேற்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம் .



முடிவுரை : 


 அழகிய அமையான அரிய சந்நியாசி மடம் என்னும் நவபிருந்தாவனத்தை
பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் , பல பக்திமலர்களில் பல கட்டுரைகள் இந்த பிருந்தாவனத்தை ஆன்மீகப் புகழ் சேர்க்கின்றன . இங்கு வருகிற பக்தர்
தியானம் செய்ய ஏற்ற அமைதிச்சூழல் நிலவுகிறது .

பல பக்தர்கள் தீர்த்தர்கள்முன் அமர்ந்து தியானிக்கும் போது புதிய அனுபவங்கள் பலன் பெற்றதாக வரலாறு.ஒரு முறை சென்றால் மறுபடியும் செல்லத்தூண்டுகிற அற்புத ஜீவசமாதியாகும் ,பசு நெய் தீபங்களுடன் செல்லுங்கள் . இங்கு பிருந்தாவனத்தில்  விளக்கேற்றி வழிபடுங்கள் .

 மன அமைதியும் மகான்கள் ,ஜீவன் முக்தர்கள்,
சித்தர்களான இந்த அழகிய பிருந்தாவனத்தை அலங்கரிக்கின்ற தீர்த்தர்களின்
அருள் பெறுங்கள். உங்கள் அனுபவங்களை பகிருங்கள் . மற்றபடி எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்க

 ஸ்ரீ நவபிருந்தாவன தீர்த்தங்களை வேண்டி நிற்கிறேன். 


நன்றி

ஸ்ரீ நவபிருந்தாவனம் ( ஸ்ரீ பாதராஜமடம் ) சந்நியாசிமடம் ,பள்ளிபாளையம் ,

              sri  nava birunthavanam    & sanyasimadam        &         sribatharajamadam,pallipalayam,namakkal(d.t)



எத்தனையோ சித்தர்களும் மகான்களும் , யோகிகள் வாழ்ந்த புண்ணிய பூமி நம்பாரத பூமி . அந்தவகையில் அண்மை கண்ட அழகிய அமையான ஜீவசமாதியை உங்களுடன்பகிர்வதில் பெருமகிழ்வுருகிறேன் .

 அமைவிடம் : 


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இருந்து சேசாயி பேப்பர் மில் செல்லும் சாலையில்வசந்தநகர் என்ற இடத்தில் இருந்து காவிரிக்கரையின் கிழக்கு புறத்தில்கரைகாண முடியாத பல அற்புதங்கள் கொண்ட நவ பிருந்தாவனம் ஸ்ரீ பாதராஜ மடம்அமைந்துள்ளது . இப்பகுதிமக்களால் சந்தியாசி மடம் என்றும் முளபாகல் மடம்என்றும் அழைக்கப்படுகிறது .

காலம் : 


கி.பி 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது
அல்லது 300வருடங்களுக்கு முற்பட்டது என்பது ஆய்விற்குரியது .

 ஸ்ரீபாதராஜர் : 


 ஸ்ரீ பாதராஜ மடத்தின் நிறுவனர் ஸ்ரீ பாதராஜர் ஆவார் ,இவர்கர்நாடக மாநிலம் அப்பூரை சேர்ந்தவர் , லட்சுமி நாராயணன் என்பது இவர் இயற்பெயராகும் . சேஷகிரியாச்சார் கிரியம்மா தம்பதிகளின் மகனாக பிறந்த
இளம்வயதிலேயே தெய்வ அருட் குழந்தையாக வளர்ந்தார் .

 கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முளுபாகல் என்ற இடத்தில் இவரின் மூல பிருந்தாவனம்அமைந்துள்ளது கி.பி 1486 ல் பிருந்தாவனஸ்தரானார் . இவ்விடம் நரசிம்மதீர்தம் என அழைக்கப்படுகிறது . இந்த முளபாகல்மடம் தான் நாம் பார்க்கஉள்ள நவபிருந்தாவனத்தின் தலைமை இடமாக கருதப்படுகிறது .

 பாதராஜமடத்தின் 36 வது மடாதிபதியாக 1987 முதல் 23 ஆண்டுகாலம் நிர்வாகம் செய்தவர் ஸ்ரீவிக்ஞான நிதி தீர்த்தர் ஆவார் . இவர் பொறுப்பேற்ற பின்னரே நவபிருந்தாவனத்தில் அன்றாட பூஜைகள் துவங்கப்பட்டு சிறப்புற நடைபெறுகிறது.ஸ்ரீ விக்ஞான தீர்த்த சுவாமிகள் 95வது வயதில் கர்நாடக மாநிலம்முளுபாகலில் உள்ள நரசிம்ம தீர்த்ததில் பிருந்தாவனஸ்தராகி (ஜீவசமாதி)விட்டார் . 

பள்ளிபாளையத்தில் நவபிருந்தாவனத்தில் அருள்பாலிக்கிற

நவநாயகர்கள் :



 1. ஸ்ரீ லட்சுமி மனோகர தீர்த்தர் : 


 கர்நாடகாவில் பிறந்த இவர் கி.பி 1670முதல் 1708 வரை வாழ்ந்தவர். ஸ்ரீ பாதராஜர் மடத்தின் 8வது பீடாதிபதியாவார் . பாரதம் முழுவதும் சஞ்சாரம் செய்து வேததர்மம் , ஒழுக்கம் பக்தி ஆகியவற்றை மக்களுக்கு போதித்தவர் .

 இவர் ஒசூர் பகுதி யாத்திரையின் போது கடும் பஞ்சம் நிலவுதை கண்டு மக்கள்
குறையால் மனமுருகி ஸ்ரீ ஆஞ்சநேயவிக்கிரகத்துடன் ஓர் ஆலயத்தை அமைத்து ஸ்ரீ ஆஞ்சநேய விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து பூஜிக்க கடும் மழை பெய்து அப்பகுதி மக்களின் பஞ்சம் தீர்ததாக வரலாறு . சர்வதாரி வருடம் தைமாதம் பெளர்ணமி தினத்தில் முதல் ஜீவசமாதியாக நவ பிருந்தாவனத்தில் முதல்பிருவனஸ்தராகிவிட்டார்..

 2. ஸ்ரீ லஷ்மிபதி தீர்த்தர் : 


இவர் ஸ்ரீ லஷ்மி மனோகர தீர்த்தரின் சீடர் ஆவார் . திரிகால ஞானி ஸ்ரீ ஹரி கீர்த்தனைகள் பாடி பக்தர்கள் வியாதிகளில் இருந்து காத்து அருளியவர் . இவர்
பிருந்தாவனத்திற்கு அருகில் இருந்த சுண்டைக்காய் உண்ட பலரும் சாகும்
தருவாயில் பிழைத்துள்ளதாக வரலாறு .

 இவர்க்கு சுண்டைகாய் தீர்த்தர் என்றும் கூறுவர் . இவர் வைத்தியராக வாழ்ந்த மகான் . தனக்காக பிருந்தாவனம் நிர்மாணிக்க சிற்பிக்கு உத்திரவிட்டார் . அப்படி இம்மகானின் பிருந்தாவனம் தயார் செய்த போது பாம்பு தீண்டி சிற்பியின் மகன் இறந்துவிட்டாதாக கேள்விப்பட்டு பதற மகான் சிற்பியை கூப்பிட்டு உன் மகன் சற்று நேரத்தில் உயிர்பெற்று வருவான் என கூறி கருட மந்திரத்தைதியானித்து காப்பாற்றினாராம் .

 மந்திரப்பிரயோகம் . யந்திரப்பிரதிஷ்டை,தாந்திரிகம் ஆகிய கலைகளில் நிபுணராவார் . பல அற்புதங்கள் புரிந்து நவ
பிருந்தாவனத்தில் 2வதாக ஆஷாட சுத்தி ஆடி ஏகாதசியில்
பிருந்தாவனஸ்தரானார் .

 3. ஸ்ரீ நிதி தீர்த்தர் : 


ஸ்ரீ பாதராஜ
அஷ்டாகம் என்ற ஹ்தோத்திரத்தை உலகிற்கு உணர்த்திய மகான்மகாவிஷ்ணுவிடம்அதீத பக்தி கொண்டவர்
temple kopuram

 4. ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தர் : 


 ஜபதவ அனுஷ்டானங்களை செய்து கொண்டிருந்தவர் இவர் தியானத்தை மெச்சி இறைவனேஸ்ரீ பாண்டுரங்க விட்டல சுவாமி தம்பதி சமேதாராக காட்சி அளித்தவர் , 14வது பீடாதிபதியானவர் வித்வான் , எழுத்தாளர் , இலக்கியவாதியாவார் ,மைசூர் மகாராஜவிற்கு தர்மநெறிப்படி மன்னர் ஆட்சி செய்யும் நெறிமுறைகளை உபதேசித்த மகான் இவரை வணங்குபவர் கல்வியில் சிறப்பர்

5. ஸ்ரீ சுதிநிதிதீர்த்தர்: 


23வது மடாதிபதியாவார் . மத்வ சிந்தாந்தத்தின் உயர்ந்த
கிரதமான ஸ்ரீ மந்நியாயசுதா என்ற கடினமான கிரந்தத்தை மிக எளிய முறையில்அநேகர்க்கு கற்பித்த மகான் .

தன் வாழ்நாழ் முழுவதும் சூரிய உதயத்திற்கு முன் நீராடி ஸ்ரீ கிருஷ்ணபகவானை பூஜித்து வந்த திவ்ய புருஷர் .

இவரின் முக்கிய உபதேசம் ஏகாதசி அன்னம் உண்பதை தவிர் , தினமும்
மத்வாச்சாரியாரின் கிரந்தங்களை படித்து பகவானை பூஜிக்கவேண்டும் .
கடன் வாங்கி எக்காரியமும் செய்யக்கூடாது . இவர் திருச்சனூரில் வேத வியாசபகவானை பிரதிஷ்டை செய்து பூஜித்தவர்

 6. ஸ்ரீ மேதாநிதி தீர்த்தர் : 


 இவர்ஸ்ரீ சதிநிதி தீர்த்தரிடம் சந்நியாசம் பெற்றவராவார் . மகான் ஸ்ரீ
வியாசராஜ தீர்த்தர் அருளிய சந்திரிகா என்ற கிரந்தத்தின் மூலப்பிரதியை
கைப்பட எழுதியவர் , விலைமதிக்க முடியாத இவரின் கையெழுத்துப்பிரதி மைசூர் ஓரியண்டல் நூலகத்தில் அமைந்துள்ளது .

 ஆந்திராவில் யாத்திரையின் போது புலி வர பயப்படாமல் அபிஷேக தீர்த்தம் கொடுத்து மந்திர அட்சத்தையால்புலியை ஆசிர்வதித்தாக வரலாறு


 7. ஸ்ரீ தேஜோ நிதி தீர்த்தர் :


இராமநாதபுரம் மாவட்டம் இளையான் குடி வட்டத்தை சேர்ந்தவராவார் . துவைத சிந்தாந்த கொள்கையை கடைபிடிப்பதே     உண்மையான முக்கிநிலை என்றுஉணர்ந்தவர் .இவர் ஸ்ரீ   லட்சுபதி தீர்த்தர் காலத்தில்   சேவை புரிந்தவராவார்

8.ஸ்ரீ தபோநிதி தீர்த்தர்:   


 ஸ்ரீதோஜோநிதி தீர்த்தரின் சீடர் தம் 37   வது வயதில் துறவறம்      பூண்டு
கி.பி  1806 முதல்1838 வரை ஓடப்பள்ளி    ஸ்ரீ பாதராஜ   மடத்தை  நிர்வாகம்
செய்தவராவார்

9.ஸ்ரீயசோநிதி தீர்த்தர் : 

                                                                                                                                                      கி.பி1840ஆம் ஆண்டு   தை மாதம் வளர்பிறை தசமியன்று   தம் குரு ஸ்ரீ தபோநிதி தீர்த்த மகான் அருகில்   பிருந்தாவனம் ஆனார்.இப்பதிவின் நீளம்கருதி  

 2ஆம்பதிவில்   பதிந்துள்ளேன்  

 படித்து கருத்துரையிடுங்கள்    
  நன்றி

Saturday, October 12, 2013

ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்த சுவாமிகள் மூல பிருந்தாவனம் ,சத்திய மங்கலம்

ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்த சுவாமிகள் பிருந்தாவனம் சத்தியமங்கலத்திலிருந்து
பண்ணாரி செல்லும் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலுக்கு அருகில் சிருங்கேரி மடம் ஒட்டிய பாதையில் இடப்புறம் திரும்பி சென்றால் பவானி ஆற்றின் அருகே அமைந்துள்ளது.

 ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்த சுவாமிகள் ஸ்ரீமத் அட்சுத ப்ரேட்சார்யா சமஸ்தான ஸ்ரீ பீமசேது முனிவிருந்த மடத்தை சார்ந்தவர் .இம்மடம் பீமன கட்டே மடம் என்றும் அழைக்கப்படுகிறது.

பீமன கட்டே இடம் கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி வட்டம் துர்வாசபுரம் என்னுமிடத்தில் அமையப்பெற்றுள்ளது . ஸ்ரீ ரகோத்வஜ தீர்தத சுவாமிகளின் தற்போதைய சீடர் தீர்த்தஹள்ளி மடத்தை நிர்வாகம் செய்கிறார் .

சத்தியமங்கலத்தில் பிருந்தாவனம் ஆன வரலாறு :


ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்த சுவாமிகள் கர்நாடகத்தில் மடாதிபதியாக 300ஆண்டுகளுக்கு முன்பு இருந்தபோது திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்பி பண்ணாரி வந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட சத்தியமங்கலம் வந்து பவானி ஆற்றங்கரை அருகில் தாம் பிருந்தாவனம்  ஆக தனது விருப்பத்தை சீடர்களிடம் தெரிவித்து அவ்வாறே இங்கு பிருந்தாவனம் (ஜீவசமாதி )ஆகிவிட்டார் .

 பிருந்தாவனம் தற்போது : 


 ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்தர் தேச சஞ்சாரத்தின் ஸ்ரீ ஆஞ்சநேய விக்கிரகம் ஒன்றை கொண்டு வந்திருந்தார் .அவர் ஜீவசமாதி ஆனவுடன் ஸ்ரீ ஆஞ்சநேய விக்கிரகம் ஜீவசமாதி அருகிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது . இது தவிர ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்தர் தம் வாழ்நாளில் பயன்படுத்திய சாளக்கிராமம் ,சங்கு பாதகுறடுகள் ஆகியவையும்  பூஜையில் வைக்கப்பட்டுள்ளன .

 ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்தரின் மகிமைகள் :


சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் நடுநிசியில் திருமதி ராஜலட்சுமி
அனந்தராமன் கனவில் சுவாமிகள் தோன்றி "எம் இடம் பல ஆண்டுகளாக இருள்சூழ்ந்து கிடக்கிறது . நீ வந்து விளக்கேற்று " எனக்கூறி
மறைந்துவிட்டார் . அதன் பிறகு புதர்மிகுந்த அப்பகுதி சுத்தம் செய்து
அவர்கள் விளக்கேற்றி வழிபட்டு வந்தனர் .

சில வருடங்களுக்கு முன் மீண்டும்கனவில் வந்த சுவாமிகள் தம் பிருந்தாவனத்தில் அன்னதானம் செய்யச்சொல்ல பிறகு அத்தம்பதிகளால் அவ்வப்போது ஸ்ரீ ரகோத்வஜரின் அதிஷ்டானத்தில் வைத்து பூஜை அன்னதானங்கள் செய்து உயர்வு பெற்றதாகவும்.,,

 24.4.09 ல் கும்பாபிஷேகம் முடிந்த பின்பு மறுபடி கனவில் தோன்றி தாம் மிகதிருப்தியாக உள்ளதாக கனவில் கூறினார் . இங்கு சலவை தொழிலாளி அதிகாலை3.00 மணிக்கு பவானி ஆற்றில் துணி துவைக்க பிருந்தாவனம் அருகே வந்தபோது,,

5 அடி உயரத்தில் இடுப்பில் துண்டுடன் கையில் கமண்டலத்துடன் ஓர் மனிதஉருவம் கம்பை ஊன்றியபடி பூட்டிய கதவுகளிடேயே வந்தும் பின் பவானி ஆற்றில்நீராடி விட்டு அதிஷ்டானத்தின் கதவுகளின் வழியே ஊடுருவிச் சென்றது கண்டு பிரமிப்படைந்து பல முறை மகானின் தரிசனத்தை அதிகாலை 3 மணிக்குதரிசித்துள்ளார் .

இந்நிலையில் அவர்க்கு கண்பார்வை மங்கி விடசிகிச்சைக்காக மருத்துவர்களிடம் சென்று முடியாதென கைவிரித்துவிட இறுதியாக சுவாமிகளிடமே கேட்டு விடலாமென தீர்மானித்து ஓர் நாள் அதிகாலையில் வந்துசுவாமிகளிடம் கேட்க கேரட் பீட்ரூட் , கீரை உணவை சாப்பிடு என்றாராம் .

அவரின் ஆலோசனைப்படி கண்பார்வை திரும்ப சில நாட்களில் கிட்டியதாம் .
காணமல் போன மகன் கிடைக்க 21 நாள் தீபமிட அவர்களின் மகன் ஆபத்தின்றி
திரும்பி வந்துள்ளான் .

 சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரியை சேர்ந்தவர்
திரு. வெங்கட்ராமன் தியானத்திலிருந்த போது சுவாமிகள் என்
மூர்த்தத்தை நீ செய் எனக்கட்டளையிட அதன்படி ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்த
சுவாமிகளின் பஞ்சலோக சுவாமிகள் திரு உருவத்தை படைத்து
புணஷ்காரங்காரங்கள் செய்து 10.10.09 அன்று ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்தம் மூல
பிருந்தாவன நற்பணி மன்றத்தார் வசம் ஒப்படைத்தார் .
சிலருக்கு வயோதிகராக5 அடி உயரம் கொண்டவராக காட்சி அளித்துள்ளார் .

 விஷேசம் : 


 தினமும்
அதிகாலை 3 மணிக்கு இங்கு ஜீவசமாதி அடைந்துள்ள ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்தர்
பவானி நதியில் நீராடியும் பின் செல்கிற காலடிச்சத்தம் கேட்பதுமாக மக்கள்
கூறுவது பிரமிப்பதாக உள்ளது . தினமும் அதிசயிக்க தக்க வகையில் ஓர்
பெருமாள் கருடன் மதியம் 12 மணி அளவில் சுவாமிகளின் பிருந்தாவனத்தை
தரிசிப்பதாக இன்றும் காணக்கூடிய ஒன்றாகும் .

 முடிவுரை : 


 ஸ்ரீரகோத்வஜ தீர்த்த சுவாமிகளின் மகிமை சிறப்பை சொல்லிக் கொண்டே போகலாம் . மகான்களைஅளக்க முடியாது , இந்த அரிய ஜீவசமாதியை தரிசனம் செய்தது எம் பாக்கியம்அவ்வகையில் இந்த அரிய அதிஷ்டானத்தை உலகிற்கும் எமக்கும் காட்டிய ஆன்மீக அன்பர்

திரு நவ பிருந்தாவனம் பழனிச்சாமி 9750265865 அவர்கள்
மேலும் பல ஆன்மீக சாதனைகள் செய்யவும் ,பாராட்டவதும் நம் கடமையாகும் .அண்ணாரின் பணி சிறக்கட்டும் . மிக அமைதியான நல் அதிர்வுகள் கொண்ட ஜீவசமாதி சத்தியமங்கலத்தில் பார்க்க வேண்டிய அதிஷ்டானம் .

 ஸ்ரீ
ரகோத்வஜ தீர்த்த சுவாமிகள் அருள் இதைப்படிக்கிற அனைவர்க்கும் கிட்ட
வேண்டுகிறேன் .நன்றி .

Sunday, September 22, 2013

சிவயோக பூசை பலன் , அறம் செய்வதின் பலன் ,பாவத்தின் பலன்

குருமுனி என புகழப்படுகிற ஸ்ரீ அகத்திய சித்தர் பல்வேறு                       சித்துக்களையும்   அற்புதங்களை பல புத்தகப்படிப்பினைகளையும்
மனிதர் வாழ்விற்கு வழிகாட்டிய    சித்தராவார் .


 அகத்தியர் பூஜா விதி -200 தீட்சா விதி - 200 வழிபாடுகள்
தியானம் யோகம் என பூஜை தீட்சை விதிகளை ஆராய்ந்துள்ளார் . இதற்கு
யாரேனும் மொழி பெயர்த்துள்ளார்களா எனில் பல இடங்களில் பரிபாசைகளாகவும்  நுணுக்கமாகவும் கூறியுள்ளதால் பல பாடல்கள் ஆய்விலேயே உள்ளது .

 சிவயோகம்அறம் பாவம் செய்வதின் பலனை பின்வருமாறு கூறுகிறார்

 " காணுகிற தர்மமதுசெய்வாகிற

 காசியினி லவனுக்கா மவன் பிதிர்குமாகும் "


 இந்த வரிக்கு பொருள்  ;

உலகில் தர்மம் செய்பவர்களுக்கு அவர்களுக்கும் அவர்கள்
சார்ந்தவர்களுக்கு உயர்வாகும் என்றும் ,

 அடுத்தவரியில்

 " தோணவே  பாவத்தைச் செய்வானாகிற் 

 சொன்னவர்க்கா மல்லாட்டால் சுற்றத்தார்க்காம்"


இதன் பொருள்    ;;

பாவமென்று தெரிந்தே செய்பவர்கள் பாவம் செய்வரல்லாமல்
சுற்றத்தையும் பாதிக்கும் என்கிறார் .


அடுத்தவரியில்

" ஊணவே சிவயோகஞ் செய்வானாகில் உயிரதுதான் 

மோஷமெய்து முண்மையுண்மை, 

பூணவே பூசைசெய்தால்சிவத்துக்காகும் 

பூசையென்ன மனங் கனிந்தால் புகழுமாச்சே ".


 இதன் பொருள்  ;;


நன்றாக சிவனை பூசை செய்பவர்கள் உயிர் மோட்சத்தை அடைவது உண்மை என்றும் அப்படி சிவ பூஜை செய்பவர்கள் புகழ் உண்டாகுமென ஸ்ரீஅகத்திய பெருமான் சிவ பூஜையின் மேன்மையான பலனை உரைக்கிறார் . ஆக சிவ பூஜை செய்யுங்கள் ,புகழையும் மோட்சத்தையும் அடையுங்கள் .

ஆதாரப் பாடல் : 


அகத்தியர் பூரண சூத்திரம் 216 புத்தகத்தின் 206 ஆவது பாடல்

 பின்குறிப்பு : 


 இப்பகுதி அனுபவம் இல்லாதவரால் மொழிபெயர்க்கப்பட்டது , பாடலில் திருந்தங்கள் யார்வேண்டுமெனிலும் பின்னூட்டமாக சேர்க்கலாம் . இப்பக்கத்தில் அகத்தியர்  படம் ஒன்றை கூகுள் தேடலில் இணைக்கப்பட்டுள்ளது . அந்த வலைத்தள நன்பருக்கு
நன்றிகள் மற்றபடி வோறொரு சித்தர் பாடலுடன் சந்திப்போம் .

ஓம்  அகத்தீஸாய நமஹ

Tuesday, September 10, 2013

தேடிக்கொண்டிருக்கிறேன் நாம் தொலைத்து விட்ட ஓலைச்சுவடிகளும் ,அரிய புத்தகங்களையும்

கடினமான பணிகளுக்களுக்கிடையே ஆன்மிக தேடலில் சிவாலயங்கள் , சித்தர்கள் ஜீவசமாதி , சித்தர்களின் அரிய புத்தகங்கள் மற்றும் சித்த மருத்துவம் பற்றிய ஆய்வும் தொடர்கிறது . தற்போது ஒர் சித்த வைத்தியரிடம் அவ்வப்போது சித்த வைத்தியம் கற்று வருகிறேன் .

அவ்வகையில் பல சித்தர்களின் நூல்கள்வெளிவந்து பல பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன அவைகளை சேகரித்தும் வருகிறேன.;

ஓலைச்சுவடி 


நம் முன்னோர்களான சித்தர்கள் எல்லாநோய்களுக்கும் மருந்துகளை ஓலைச்சுவடிகளிலும் பல அரிய புத்தகங்களிலும்கூறி விட்டனர் . பரிபாஷைகளான பல புத்தகங்கள் மறைத்தும்
அருளிச்சென்றுவிட்டனர் .

 சில ஓலைச்சுவடிகள் புத்தகங்கள் ஆகி விட்டன . சில நூல்கள் எல்லாம் காலப்போக்கில் சிலரிடம் மட்டுமே வம்ஷா வழியாக பாதுகாக்கப்பட்டு வருகிறது . சில ஓலைச்சுவடிகள் சில நன்பர்கள் புரியாமல்
வைத்திருக்கிறார்கள் .

சிலருடைய வீட்டில் பயன்படாமல் பழைய மரப்பெட்டியில்
உறங்கிக்கொண்டு இருக்கிறது . யாருக்கும் பயனில்லாமல் அரிய புத்தகமோ
ஒலைச்சுவடிகளோ இருப்பதாலேயே நம் சித்த மருத்துவம் அழித்து ஆங்கிலேயர்கள் மருத்தவத்தில் மோகங்கொண்டு தீர்க்க முடியாத சில வியாதிகளை எடுத்துக்காட்டாக சக்கரை வியாதி போன்றவற்றை வைத்துக்கொண்டு ஆயுள் முழுக்க கஷ்டப்படுகிறோம் .

சிலருக்கு சித்த வைத்திய மருந்துகள் தன் சந்ததிக்கு
சொல்லாமல் மரித்தும் விட்டனர் . இப்போதைய நம் வேண்டுதல்கள் எல்லாம்
எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும் . மக்கள் நலமுடன்
இருக்கவேண்டும் .

 உங்களிடமோ ,உங்கள் நன்பர்களிடோமோ பழங்கால
ஓலைச்சுவடிகளோ சித்தர்கள் பற்றியும் சித்த மருத்தும்
,மருத்துவம்பற்றியும் அரிய நூல்கள் இருக்குமாயின் எனக்கு ஓர் நகல்
அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன் .

எம்மால் முடிந்த தொகை அனுப்பி வைக்கிறேன் . அதிக பணம் அளிக்க முடியாத நிலையால் எம் நிதித்துறை பழுதடைந்துள்ளது . எமது தேடலின் பெரிய முயற்சியில் எமக்கு தேவையான சில
புத்தகங்கள் கிடைத்தால் மகிழ்வுறுவேன் .


எம் தேடலுக்கு உதவ விரும்புகிற நன்பர்கள் புத்தகங்களை என் முகவரிக்கு அனுப்பலாம் '

 ப.மாதஸ்வரன்
 த/ பெ   பழனிச்சாமி
 755 -அரசமரத்து வீதி ,
குருவரெட்டியூர் அஞ்சல் 638504,
பவானிவட்டம்
 ஈரோடு மாவட்டம் .

 மெயில் செய்யலாம் .

palamathesu@gmail.com

மற்றும்

pala.mathesu@ymail.com 

 தொடர்பு எண்    ;

9750155005



சித்தர்களின் ஆசிர்வாதமிருப்பின் அரிய புத்தகங்கள் கிடைக்குமென
நம்புகிறேன் . இ மெயில் மூலமாக ஒலைச்சுவடி நகல் விபரங்கள் கிடைக்குமெனஎதிர்நோக்கி ,

நட்புடனும் ஆவலுடனும் குரு.பழ.மாதேசு.

ஆறுமுக சித்தரின் அற்புத ஜீவசமாதி

நீண்ட இடைவெளிக்கு பின் 75 பின்தொடர்பவர்கள் 15000 பார்வையாளர்கள் என 250 பதிவுகள் கடந்து 1000 பதிவுகளையாவது தொட்டு விட வேண்டுமென்கிறஆர்வத்தில் சற்றே ஓய்வெடுத்து மறுபடியும் உற்சாகமாக கிளம்பி இருக்கிறேன்.


 இதற்கு உதவியாக பிள்ளையார் சுழியிட்டு இந்த பிளாக்கை உருவாக்கி தந்த என் மனம் கவர் நன்பர் பிரகாஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு அண்மையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டியபாளையத்தில் நன்பர் வெங்கடேஷ் உதவியால் ஓர் அற்புத ஜீவசமாதியை கண்டுபெருமகிழ்வுற்றேன் .


                                 ஸ்ரீ ஆறுமுகசித்தர் ஜீவசமாதி 



ஈரோடு மாவட்டம் கோபி செட்டிய பாளையம் சுமார் 40 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது .கோபி பஸ் நிலையத்தில் இருந்து மார்க்கெட் சென்று சிறிய பாலம் ஒன்று அமைந்துள்ளது .

அதன் வழியாக சென்றால் துரையப்பா காம்பிளக்ஸ் பின்புறம் ஸ்ரீ ஆறுமுக சித்தரின் ஜீவசமாதி அமைந்துள்ளது . திருவண்ணாமலையில் ஜீவசமாதியான ஸ்ரீ குகை நமச்சிவாயரை அல்லது குகநாதரை குருவாக கொண்டு பூஜித்து வந்த ஸ்ரீ ஆறுமுக சித்தர் தாந்தீரிக வல்லுனராக இருந்தவர் .

ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில் இவரின் வம்சாவழிக்கோவிலாகும் . ஸ்ரீ
ஆறுமுக சித்தர் ஜீவசமாதி நெரிசல் மிக்க நகரில் அமைதியாய்
அமைந்திருக்கிறது .

எம் அனுபவத்தில் சில ஜீவசமாதிகள் கண்டுற்ற போதிலும்
அதிக ஈர்ப்புடைய மறுபடி செல்லத்தூண்டுகிற அற்புத இடம் .

 விஷேசநாட்கள் :

 பெளர்ணமி நாளில் காலைமுதல் இரவு 7.30மணி வரை
திறக்கப்பட்டிருக்கும் . அன்று விஷேச பூஜைகள் நடைபெறுகிறது . மற்ற
நாட்களில் மாலை 05.30 07.30 மணி வரை திறந்திருக்கும் பூஜைகள் நடைபெறும் ..

நம் ஆர்வமெல்லாம் ஸ்ரீ ஆறுமுகசித்தரின் ஜீவசமாதியை எல்லோரும்
கண்டுற்று வணங்கி நல்வாழ்வு பெற வேண்டுமென்பதே . மேலும் ஸ்ரீ ஆறுமுக
சித்தர் ஜீவசமாதி பற்றி விபரங்கள் தெரிந்தவர்கள் , வம்சாவழியினர்
விபரங்கள் அனுப்பினால் கட்டுரை விருவாக்கப்படும் .

தற்காலிக விபரங்கள்அவ்வளவே , மறுபடியும் ஒர் அற்புத பதிவில் உங்களை சந்திக்கிறேன் .ஜீவசமாதியை தரிசிக்க வேண்டுவோர் விபரங்களுக்காக தொடர்பு கொள்ளலாம் .இப்பதிவை காண வந்த உங்களுக்கு ஸ்ரீ ஆறுமுக சித்தரின் அருளாசி கிடைக்கவேண்டி விரும்புகிறேன் .

 பதிவை படித்து கருத்துரையிடுக்கள் நன்றி .

ஒம்சிவ சிவ ஓம்

Tuesday, September 3, 2013

ஸ்ரீ முத்துமரகதவல்லி உடனமர் ஸ்ரீ மூவேந்திரசாமி திருக்கோவில்

அமைவிடம் :

 சேலத்திலிருந்து சோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்
பவானியில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் நசியனூர் பிரிவில்
நசியனூரில் திருக்கோவில் அமைந்துள்ளது

 ஈரோட்டில் இருந்து நசியனூர் 8 வதுகி. மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது .

மூலவர் :ஸ்ரீ மூவேந்திர ஈஸ்வரர்

இறைவி :ஸ்ரீ முத்து மரகத வல்லி


 புராணமும் வரலாறும் :

சேர சோழ பாண்டியமன்னர்களால் ஆளப்பட்ட தமிழகத்தின் ஓர் பகுதியாக கொங்குநாடு விளங்கியது. அது 24 சிறிய நாடுகளை கொண்டதாக பழங்காலத்தில் விளங்கியது .

மூவேந்தர்களால் காவிரி கரையில் மேற்கரையில் கரூர் பசுபதீஷ்வரர் திருக்கோவில் கட்டி குடமுழுக்கு செய்ய கலசம் வைக்க முற்பட்டபோது கலசம் நிற்காமல் போக அப்போது எதிர்பட்ட சாதுவின் ஆலோசனைப்படி கொங்கு நாட்டு வேளாண் மக்களை அழைத்துச்சென்று கலசத்தை கொடுத்து நிற்க வைக்க அதுநின்றதாம் .

 ஆதலால் மூவேந்தர்கள்களை விடபூந்துறைநாடுமேன்மையுடையதெனக்கருதி மூவேந்தர்கள் யாத்திரையின் போது பூந்துறை,எழுமாத்தூர், வெள்ளோடு ,நசியனூர் ஆகிய இடங்களுக்கு வந்து பல சிவாலயங்கள்திருப்பணி செய்தும்

 பல வைணவத்திருக்கோவில்கள் பிரதிஷ்டை செய்தும்சேர.சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்களும் வணங்கி வந்ததாக வரலாற்று
இலக்கியங்கள் நமக்கு உணர்த்தும் உண்மையாகும் .


 பழங்காலத்தில் நசையாபுரி  என்றும் இன்று நசியனூர் என்றும் அழைக்கப்படுகிற நசியனூரிலே மூவேந்தர்களாலும் திருப்பணிகள் செய்து வணங்கப்பட்டதாக வரலாறு  இயம்புகின்ற ஸ்ரீ மூவேந்திர ஈஸ்வரர் திருக்கோவில் மிக பிரசித்தி பெற்றபெரிய ஆலயமாகும் .

சிவபெருமான் கொங்கு நாட்டில் பல இடங்களில்
வீற்றிருந்தாலும் இங்கே மேற்கு நோக்கிய லிங்கமாக வீற்றிருப்பது மிக
விஷேசமாக கூறப்படுகிறது.

 உப திருக்கோவில்களான ஆதிநாரயணப்பெருமாள்
திருக்கோவிலும் அமைந்துள்ளது . சற்று தூரத்தில் ஸ்ரீ மதுரகாளியம்மன்
மற்றும் ,மாகாளி அம்மன் திருக்கோவில் அமைப்பெற்றுள்ளது .

 இங்கே
சிவாலயத்தில் மேற்கு நோக்கிய நிலையில் அருள்பாலிக்கிற அம்பிகை முத்து
மரகதவல்லியின் கனிவான பார்வை கண்டு பெறும் பேறு பெறலாம்.

 ஸ்ரீ
மாகாளியம்மன் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது . கொங்கு
வேளார்ளர்களில் கண்ணன் ,பூச்சந்தை,கூறை,செம்பன் ,ஈஞ்சன் ,கீரை,பாண்டியன்ஆகிய ஏழு குலத்திற்கும் காக்கும் கடவுளாகவும் குலதெய்வமாகவும் வணங்கி வருகிறார்கள் .

திருக்கோவில் வளாகத்தில் தெய்வச்சேக்கிழார் ,நால்வர் ,
வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர் ,சூரிய,சந்திரர்கள் ஸ்ரீ தேவி
பூதேவி அம்பிகைகள் சன்னதீ ,ஸ்ரீ ஆதிநாராயணப்பெருமாள் சன்னதி . ஸ்ரீ
ஆஞ்சநேயர் சன்னதிகள் கருடாழ்வார்,நாகர் சன்னதிகள் மற்றும்
திருக்கோவில் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் செய்து பழமைமாறாமல்
புதுமையாக்கி இருக்கிறார்கள் .

 சைவ வைணவ ஒற்றுமை கலந்த
இத்திருக்கோவில்கள் கடந்த 15.7.13 மகா கும்பாபிஷேகம்
ஆன்மீகப்பெரீயோர்களால் நிகழ்த்தப்பெற்றது .

திருக்கோவில் பழங்காலத்தியஅரசமரம் ஸ்தலமரமாக விளங்கிவருகிறது .

முடிவுரை :

 ஸ்ரீ மூவேந்திரர்களால் வணங்கப்பெற்றதால் இது 1000வருடங்கள் கடந்த சிவாலயங்களில் ஒன்றாக பெருமையும் சிறப்பையும் பெறுகிறது . ஈரோடு மாவட்டத்தில் அமைந்த பழமையான சிவாலயங்களில் ஒன்றாகவும் ,சைவ,வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகவும்
விளங்குகின்ற இப்பகுதிமக்களால் விரும்பி வணங்கப்படுகிற

மேற்கு பார்த்தஅமைப்பில் நிறைய விஷேசங்கள் கொண்ட நசியனூர் ஸ்ரீ முத்து மரகதவல்லி உடனமர் ஸ்ரீ மூவேந்திர ஈஸ்வர சுவாமியை வணங்கி எல்லா வளங்களும் நலங்களும்
பெற விழைகிறேன் .

 ஓம் சிவ சிவ ஓம்

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...