குருமுனி என புகழப்படுகிற ஸ்ரீ அகத்திய சித்தர் பல்வேறு சித்துக்களையும் அற்புதங்களை பல புத்தகப்படிப்பினைகளையும்
மனிதர் வாழ்விற்கு வழிகாட்டிய சித்தராவார் .
அகத்தியர் பூஜா விதி -200 தீட்சா விதி - 200 வழிபாடுகள்
தியானம் யோகம் என பூஜை தீட்சை விதிகளை ஆராய்ந்துள்ளார் . இதற்கு
யாரேனும் மொழி பெயர்த்துள்ளார்களா எனில் பல இடங்களில் பரிபாசைகளாகவும் நுணுக்கமாகவும் கூறியுள்ளதால் பல பாடல்கள் ஆய்விலேயே உள்ளது .
சிவயோகம்அறம் பாவம் செய்வதின் பலனை பின்வருமாறு கூறுகிறார்
இந்த வரிக்கு பொருள் ;
உலகில் தர்மம் செய்பவர்களுக்கு அவர்களுக்கும் அவர்கள்
சார்ந்தவர்களுக்கு உயர்வாகும் என்றும் ,
அடுத்தவரியில்
இதன் பொருள் ;;
பாவமென்று தெரிந்தே செய்பவர்கள் பாவம் செய்வரல்லாமல்
சுற்றத்தையும் பாதிக்கும் என்கிறார் .
அடுத்தவரியில்
நன்றாக சிவனை பூசை செய்பவர்கள் உயிர் மோட்சத்தை அடைவது உண்மை என்றும் அப்படி சிவ பூஜை செய்பவர்கள் புகழ் உண்டாகுமென ஸ்ரீஅகத்திய பெருமான் சிவ பூஜையின் மேன்மையான பலனை உரைக்கிறார் . ஆக சிவ பூஜை செய்யுங்கள் ,புகழையும் மோட்சத்தையும் அடையுங்கள் .
அகத்தியர் பூரண சூத்திரம் 216 புத்தகத்தின் 206 ஆவது பாடல்
இப்பகுதி அனுபவம் இல்லாதவரால் மொழிபெயர்க்கப்பட்டது , பாடலில் திருந்தங்கள் யார்வேண்டுமெனிலும் பின்னூட்டமாக சேர்க்கலாம் . இப்பக்கத்தில் அகத்தியர் படம் ஒன்றை கூகுள் தேடலில் இணைக்கப்பட்டுள்ளது . அந்த வலைத்தள நன்பருக்கு
நன்றிகள் மற்றபடி வோறொரு சித்தர் பாடலுடன் சந்திப்போம் .
ஓம் அகத்தீஸாய நமஹ

" காணுகிற தர்மமதுசெய்வாகிற
காசியினி லவனுக்கா மவன் பிதிர்குமாகும் "
இந்த வரிக்கு பொருள் ;
உலகில் தர்மம் செய்பவர்களுக்கு அவர்களுக்கும் அவர்கள்
சார்ந்தவர்களுக்கு உயர்வாகும் என்றும் ,
அடுத்தவரியில்
" தோணவே பாவத்தைச் செய்வானாகிற்
சொன்னவர்க்கா மல்லாட்டால் சுற்றத்தார்க்காம்"
இதன் பொருள் ;;
பாவமென்று தெரிந்தே செய்பவர்கள் பாவம் செய்வரல்லாமல்
சுற்றத்தையும் பாதிக்கும் என்கிறார் .
அடுத்தவரியில்
" ஊணவே சிவயோகஞ் செய்வானாகில் உயிரதுதான்
மோஷமெய்து முண்மையுண்மை,
பூணவே பூசைசெய்தால்சிவத்துக்காகும்
பூசையென்ன மனங் கனிந்தால் புகழுமாச்சே ".
இதன் பொருள் ;;
நன்றாக சிவனை பூசை செய்பவர்கள் உயிர் மோட்சத்தை அடைவது உண்மை என்றும் அப்படி சிவ பூஜை செய்பவர்கள் புகழ் உண்டாகுமென ஸ்ரீஅகத்திய பெருமான் சிவ பூஜையின் மேன்மையான பலனை உரைக்கிறார் . ஆக சிவ பூஜை செய்யுங்கள் ,புகழையும் மோட்சத்தையும் அடையுங்கள் .
ஆதாரப் பாடல் :
அகத்தியர் பூரண சூத்திரம் 216 புத்தகத்தின் 206 ஆவது பாடல்
பின்குறிப்பு :
இப்பகுதி அனுபவம் இல்லாதவரால் மொழிபெயர்க்கப்பட்டது , பாடலில் திருந்தங்கள் யார்வேண்டுமெனிலும் பின்னூட்டமாக சேர்க்கலாம் . இப்பக்கத்தில் அகத்தியர் படம் ஒன்றை கூகுள் தேடலில் இணைக்கப்பட்டுள்ளது . அந்த வலைத்தள நன்பருக்கு
நன்றிகள் மற்றபடி வோறொரு சித்தர் பாடலுடன் சந்திப்போம் .
ஓம் அகத்தீஸாய நமஹ
No comments:
Post a Comment