Saturday, October 12, 2013

ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்த சுவாமிகள் மூல பிருந்தாவனம் ,சத்திய மங்கலம்

ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்த சுவாமிகள் பிருந்தாவனம் சத்தியமங்கலத்திலிருந்து
பண்ணாரி செல்லும் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலுக்கு அருகில் சிருங்கேரி மடம் ஒட்டிய பாதையில் இடப்புறம் திரும்பி சென்றால் பவானி ஆற்றின் அருகே அமைந்துள்ளது.

 ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்த சுவாமிகள் ஸ்ரீமத் அட்சுத ப்ரேட்சார்யா சமஸ்தான ஸ்ரீ பீமசேது முனிவிருந்த மடத்தை சார்ந்தவர் .இம்மடம் பீமன கட்டே மடம் என்றும் அழைக்கப்படுகிறது.

பீமன கட்டே இடம் கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி வட்டம் துர்வாசபுரம் என்னுமிடத்தில் அமையப்பெற்றுள்ளது . ஸ்ரீ ரகோத்வஜ தீர்தத சுவாமிகளின் தற்போதைய சீடர் தீர்த்தஹள்ளி மடத்தை நிர்வாகம் செய்கிறார் .

சத்தியமங்கலத்தில் பிருந்தாவனம் ஆன வரலாறு :


ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்த சுவாமிகள் கர்நாடகத்தில் மடாதிபதியாக 300ஆண்டுகளுக்கு முன்பு இருந்தபோது திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்பி பண்ணாரி வந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட சத்தியமங்கலம் வந்து பவானி ஆற்றங்கரை அருகில் தாம் பிருந்தாவனம்  ஆக தனது விருப்பத்தை சீடர்களிடம் தெரிவித்து அவ்வாறே இங்கு பிருந்தாவனம் (ஜீவசமாதி )ஆகிவிட்டார் .

 பிருந்தாவனம் தற்போது : 


 ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்தர் தேச சஞ்சாரத்தின் ஸ்ரீ ஆஞ்சநேய விக்கிரகம் ஒன்றை கொண்டு வந்திருந்தார் .அவர் ஜீவசமாதி ஆனவுடன் ஸ்ரீ ஆஞ்சநேய விக்கிரகம் ஜீவசமாதி அருகிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது . இது தவிர ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்தர் தம் வாழ்நாளில் பயன்படுத்திய சாளக்கிராமம் ,சங்கு பாதகுறடுகள் ஆகியவையும்  பூஜையில் வைக்கப்பட்டுள்ளன .

 ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்தரின் மகிமைகள் :


சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் நடுநிசியில் திருமதி ராஜலட்சுமி
அனந்தராமன் கனவில் சுவாமிகள் தோன்றி "எம் இடம் பல ஆண்டுகளாக இருள்சூழ்ந்து கிடக்கிறது . நீ வந்து விளக்கேற்று " எனக்கூறி
மறைந்துவிட்டார் . அதன் பிறகு புதர்மிகுந்த அப்பகுதி சுத்தம் செய்து
அவர்கள் விளக்கேற்றி வழிபட்டு வந்தனர் .

சில வருடங்களுக்கு முன் மீண்டும்கனவில் வந்த சுவாமிகள் தம் பிருந்தாவனத்தில் அன்னதானம் செய்யச்சொல்ல பிறகு அத்தம்பதிகளால் அவ்வப்போது ஸ்ரீ ரகோத்வஜரின் அதிஷ்டானத்தில் வைத்து பூஜை அன்னதானங்கள் செய்து உயர்வு பெற்றதாகவும்.,,

 24.4.09 ல் கும்பாபிஷேகம் முடிந்த பின்பு மறுபடி கனவில் தோன்றி தாம் மிகதிருப்தியாக உள்ளதாக கனவில் கூறினார் . இங்கு சலவை தொழிலாளி அதிகாலை3.00 மணிக்கு பவானி ஆற்றில் துணி துவைக்க பிருந்தாவனம் அருகே வந்தபோது,,

5 அடி உயரத்தில் இடுப்பில் துண்டுடன் கையில் கமண்டலத்துடன் ஓர் மனிதஉருவம் கம்பை ஊன்றியபடி பூட்டிய கதவுகளிடேயே வந்தும் பின் பவானி ஆற்றில்நீராடி விட்டு அதிஷ்டானத்தின் கதவுகளின் வழியே ஊடுருவிச் சென்றது கண்டு பிரமிப்படைந்து பல முறை மகானின் தரிசனத்தை அதிகாலை 3 மணிக்குதரிசித்துள்ளார் .

இந்நிலையில் அவர்க்கு கண்பார்வை மங்கி விடசிகிச்சைக்காக மருத்துவர்களிடம் சென்று முடியாதென கைவிரித்துவிட இறுதியாக சுவாமிகளிடமே கேட்டு விடலாமென தீர்மானித்து ஓர் நாள் அதிகாலையில் வந்துசுவாமிகளிடம் கேட்க கேரட் பீட்ரூட் , கீரை உணவை சாப்பிடு என்றாராம் .

அவரின் ஆலோசனைப்படி கண்பார்வை திரும்ப சில நாட்களில் கிட்டியதாம் .
காணமல் போன மகன் கிடைக்க 21 நாள் தீபமிட அவர்களின் மகன் ஆபத்தின்றி
திரும்பி வந்துள்ளான் .

 சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரியை சேர்ந்தவர்
திரு. வெங்கட்ராமன் தியானத்திலிருந்த போது சுவாமிகள் என்
மூர்த்தத்தை நீ செய் எனக்கட்டளையிட அதன்படி ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்த
சுவாமிகளின் பஞ்சலோக சுவாமிகள் திரு உருவத்தை படைத்து
புணஷ்காரங்காரங்கள் செய்து 10.10.09 அன்று ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்தம் மூல
பிருந்தாவன நற்பணி மன்றத்தார் வசம் ஒப்படைத்தார் .
சிலருக்கு வயோதிகராக5 அடி உயரம் கொண்டவராக காட்சி அளித்துள்ளார் .

 விஷேசம் : 


 தினமும்
அதிகாலை 3 மணிக்கு இங்கு ஜீவசமாதி அடைந்துள்ள ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்தர்
பவானி நதியில் நீராடியும் பின் செல்கிற காலடிச்சத்தம் கேட்பதுமாக மக்கள்
கூறுவது பிரமிப்பதாக உள்ளது . தினமும் அதிசயிக்க தக்க வகையில் ஓர்
பெருமாள் கருடன் மதியம் 12 மணி அளவில் சுவாமிகளின் பிருந்தாவனத்தை
தரிசிப்பதாக இன்றும் காணக்கூடிய ஒன்றாகும் .

 முடிவுரை : 


 ஸ்ரீரகோத்வஜ தீர்த்த சுவாமிகளின் மகிமை சிறப்பை சொல்லிக் கொண்டே போகலாம் . மகான்களைஅளக்க முடியாது , இந்த அரிய ஜீவசமாதியை தரிசனம் செய்தது எம் பாக்கியம்அவ்வகையில் இந்த அரிய அதிஷ்டானத்தை உலகிற்கும் எமக்கும் காட்டிய ஆன்மீக அன்பர்

திரு நவ பிருந்தாவனம் பழனிச்சாமி 9750265865 அவர்கள்
மேலும் பல ஆன்மீக சாதனைகள் செய்யவும் ,பாராட்டவதும் நம் கடமையாகும் .அண்ணாரின் பணி சிறக்கட்டும் . மிக அமைதியான நல் அதிர்வுகள் கொண்ட ஜீவசமாதி சத்தியமங்கலத்தில் பார்க்க வேண்டிய அதிஷ்டானம் .

 ஸ்ரீ
ரகோத்வஜ தீர்த்த சுவாமிகள் அருள் இதைப்படிக்கிற அனைவர்க்கும் கிட்ட
வேண்டுகிறேன் .நன்றி .

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...