Monday, January 21, 2013

நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சித்துக்கள்

                                       ஓம் ஸ்ரீ ஸதாசிவ ப்ரஹ்மணே நம;



 கரூர் அருகே 12 கி.மீ தொலைவில் உள்ள
நெரூரில் ஸ்ரீ சதாசிவபிரம்மேந்திராள்ஜீவசமாதியை பற்றி சென்ற பதிவில்
பார்த்தோம் . அந்த பதிவை படிக்காதவர்கள் அதையும் படித்து வரவும் .

 ஸ்ரீ
சதாசிவ பிரம்மம் கொடுமுடி அருகேயுள்ள அகத்தியம்பாறை என்னும் இடத்தில் தவம் செய்து கொண்டு இருந்தபோது காவிரியின் திடீர் வெள்ளம் இவரை உருட்டிச்சென்று மண்ணில் புதைத்து விட்டது .

காவிரியின் சீற்றம்
அடங்கியதும் சதாசிவ பிரம்மத்தை சீடர்களும் ,மக்களும் தேட கிடைக்கவில்லை.

 பல காலம் கழித்து கட்டிடம் கட்ட மணல் தோண்ட வந்தவர்கள் ஆழமாக தோண்ட மண்வெட்டி புதைந்திருந்த சதாசிவ பிரம்மத்தின் தலையில் பட்டு காயமாகி ரத்தம் வந்ததும் மணல் எடுக்க வந்தவர்கள் ஓடிப்போய் ஊர் பெரியவர்களைகூட்டி வந்து சுற்றிலும் மணலை எடுத்து சதாசிவ பிரம்மத்தை உடம்பு சுத்தம் செய்து விட யாரிடமும் பேசாமல் அமைதியாக நடந்து சென்றாராம் .

அடுத்ததாக புதுக்கோட்டை பகுதியில் சதாசிவபிரம்மம் நெற்கதிர் நிலங்களுக்கிடையே நடந்து சென்று கொண்டு இருந்தாராம் . அப்போது வைக்கோல் போர்அடுக்கும் வேலை நடந்து கொண்டிருக்க , அடுக்கிக்கொண்டிருந்த வைக்கோல் போர்களுக்கிடையே சதாசிவ பிரம்மம் விழுந்து விட்டாராம் .

 வைக்கோல் போர்
அடிப்பவர் சதாசிவ பிரம்மத்தை கவனிக்காது அவர் மேலேயே வைக்கோல் போரைஅடுக்கி பெரிய வைக்கோல் போர் ஆகி விட்டது.

 சதாசிவ பிரம்மம் கீழே கிடக்க பல அடி உயரத்திற்கு வைக்கோல் போட்டு விட்டனர் .ஒரு வருடமாக பசுக்களுக்கு  வைக்கோல் போட படிப்படியாக குறைந்த வைக்கோல் போரில் இருந்து சதாசிவ பிரம்மம் எழுந்து நடக்க அப்பகுதி மக்கள் ஆச்சர்யமாக பார்த்தனர் .

இந்த விஷயம் மந்திரியின் காதுக்கு சென்று பின் அரசன் விஜயரகுநாத தொண்டைமானிடம் சென்றது.

அவரும் சதாசிவ பிரம்ம் இருக்குமிடத்தை வந்து 8 வருடமாக மன்னர் காத்திருந்து பின் மன்னரின் பொறுமையை அறிந்துசதாசிவ பிரமம் மணலிலேமந்திரத்தை எழுதிக்காண்பிக்க அதை மனனம் செய்து அந்த மணலை தன் அங்கவஸ்திரத்தில் எடுத்துச்சென்று அரண்மனையில் பூஜை செய்யதொடங்கினாராம் .


அந்த பூஜை இன்றும் புதுக்கோட்டை அரண்மனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.கரூர் தான் தோன்றிமலையில் ஸ்ரீ வெங்கடாசலபதி சிலையை வணங்கி ஜன ஆகர்ஷ்ண
சக்கரம் எழுதி பூஜை செய்து அங்கு அமைத்து

 "வறுமையால் திருப்பதி
செல்லமுடியாத பக்தர்கள் தான்தோன்றி மலையப்பரை வணங்கினால் திருப்பதி சென்று வந்ததிற்கு ஈடாகுமென அருளிச்சென்றார் .

 தன் நிலை மறந்தவாறு உடையில்லாமல் இறை தியானத்தில் அரசன் கொலு பட்டறையின் வழியே நடந்து செல்ல கோபப்பட்டு மன்னர் சதாசிவ பிரமத்தை அறிந்திராமல் அவரின் கையை வெட்டி விடகை துண்டானது கண்டு கொள்ளாமல் திரும்பி நடக்க மன்னர் மன்னிக்க வேண்டி
கேட்டு நிற்க வெட்டிய கையை ஒட்ட வைத்து நடந்து சென்றாராம் .

 இப்படி பல அற்புத சித்துக்களை நிகழ்திய ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் கடைசியாக நெரூர் வந்து ஜீவசமாதி அடைந்து தம்மை நாடி வருகிறவர்களுக்கு ஆசியையும்
நன்மையையும் அளிக்கிறார் .

ஸ்ரீசதாசிவம் ஜீவசமாதி அடைந்த அதே நாளில்
மானாமதுரையில் வைகை ஆற்றங்கரையில் மானாமதுரை சிவன் கோவில் பின்புறம் ஸ்ரீ சதாசிவர் சூட்சமசரிரமாகவூம் , கராச்சியில் காரணசரீரமாகவும் ,நர்மதா நதி ஓம்காரம் என்ற இடத்தில் அங்கேயும் ஜீவசமாதியானதாக கருதப்படுகிறது.


காசியிலும் ஸ்ரீ சதாசிவம் ஜீவசமாதி ஆகியுள்ளதாக அறியப்படுகிறது.
சித்தர்கள் பலர் பல முகமாக காட்சி கொடுத்து ஒருவரே பல இடங்களில்
ஜீவசமாதியானதாக அறிகிறோம் .

அவ்வகையில் பல அற்புதங்கள் செய்த ஸ்ரீ
சதாசிவ பிரம்மேந்திராள் மட்டும் விதிவிலக்கன்று. வாய்ப்பு கிடைக்கும்
போது தரிசனம் செய்யுங்கள் .

நன்றி

நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் (அதிஷ்டானம் )ஜீவ சமாதி

ஓம் ஸ்ரீஸதாசிவ பிரஹ்மணே நம; நம் நாட்டில் பல யோகிகளும்
சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் பல பெற்ற புண்ய பூமியாகும்.
கரூர் மாவட்டம் கரூர் பஸ் நிலையத்தில் இருந்து 12 கி.மீட்டர் தொலைவில்
காவிரிக்கரையின் அருகே உள்ள நெரூர் என்னும் ஊரில் ஸ்ரீ சதாசிவ
பிரம்மேந்திராள் அவர்களின் அற்புத ஜீவசமாதி அமைந்துள்ளது.

 நெரூர்சதாசிவம் திருக்கோவில் என்று கேட்டால் கருர் பஸ் நிலையத்தில் இருந்தே பஸ்கள் உள்ளன. பரமசிவேந்திராள் என்ற குருநாதர் சிவராமகிருஷ்ணன் என்ற இயற்பெயரை மாற்றி சதாசிவம் என்னும் பெயர் சூட்டி சந்நியாசம் கொடுத்துஅனுப்பி வைக்க குருவின் உபதேசப்படி அதிகம் யாரிடமும் பேசாமல் நெரூரில் நீண்ட காலம் வாழ்ந்து வந்துள்ளார் .

பல அற்புதங்களை சித்துகளை செய்த அற்புதமான மகான் . ஸ்ரீ சதாசிவ பிரம்மம் தமது ஜீவசமாதி அமைக்க சீடர்களான தஞ்சாவூர்,புதுக்கோட்டை, மைசூர் மகாராஜாக்களை அழைத்து "குகை அமைத்து சாமக்கிரியைகளால் மறைத்து விடுங்கள்" என்றார் .

அவர் சொன்னமுறைப்படி ஜீவசமாதி குகை அமைக்கப்பட்டது.ஸ்ரீ சதாசிவ பிரம்மம்அங்கிருந்த சீடர்களை அழைத்து "நான் ஜீவசமாதி ஆக இந்த குகையில்இறங்கிய பின்பு விபூதி,உப்பு,மஞ்கள் ,செங்கற்பொடி போட்டு குகையை மூடிவிடச்சொன்னார் .

பின் 9 ஆம்நாள் எம் சிரசின் மேல் வில்வமரம்
முளைக்குமென்றும் ,1 2 ஆம் நாள் காசியில் இருந்து சிவலிங்கம் வரும் அதை
எம் ஜீவசமாதியில் இருந்து12 அடிக்கு முன்னதாக கிழக்கில் கோவில்
கட்டசொல்லிவிட்டு ஜீவ சமாதி அடைய குகைக்குள் சென்று அமர்ந்து விட்டார் .

சீடர்கள் குருவின் உபதேசம் கேட்டு பின் குகையை மூடிவிட 8 ஆம் நாளில்
வில்வம் துளிர்விட 12 ஆம் நாள் காசியிலிருந்து சாது ஒருவரின் மூலம்
சிவலிங்கமும் வந்து சேர்ந்த அற்புதம் நடந்தது .

 திருக்கோவில் 220ஆண்டுகாலமாக பலரால் மெருகேற்றப்பட்டு ஸ்ரீ சதாசிவபிரம்மத்தின் ஜீவசமாதியுடன் அமைதியாய் இன்றும் வரும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம்அளித்துக்கொண்டிருக்கிறது.

 சித்தர்களை தேடி சித்தர்களின் ஜீவசமாதிகளை
தேடி பயணிக்கும் ஆன்மீக அன்பர்களுக்கும் அமைதியையும் , இருட்டிலே
பயணிக்கும் வாழ்க்கையை வெளிச்சமாக்கும் அருமையான ஸ்தலம் . ஸ்ரீ
சதாசிவபிரம்மேந்திராளை தேடி வாருங்கள் .

கண்டிப்பாக உங்களுக்கும் ஆசிகள்வழங்க காத்திருக்கிறார் .பதிவின் நீளம் கருதி அடுத்த பதிவில்   ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திராளின் சித்துக்களை பகிர்கிறேன் . நன்றி

Friday, January 18, 2013

ஸ்ரீ செட்டி தம்பிரான் ஜீவ சமாதி

கொங்கு நாட்டில் பழம் பெருமை வாய்ந்த யோகிகளும் ,சித்தர்கள் வாழ்ந்த
பூமியாகும் . 18 சித்தர்களில் ஒருவரான கொங்கணர் ஊதியூர் மலையில் தவம்
இருந்தார் . பின் ஸ்ரீ உத்தண்ட வேலாயுதசாமி திருக்கோவில் பிரதிஷ்டை
செய்தார் என்றும்

சிலகாலம் வாழ்ந்து தம் சீடரான செட்டி தம்பிரானுக்கு ஆசிர்வாதமளித்து திருப்பதி சென்று ஜீவசமாதியாகி விட்டதாக வரலாறு . கொங்கண
சித்தரின் திருக்கோவிலும் ,பொன் செய்ய ஊதிய பாறைகளின் ஓட்டைகளும்
தற்போதும் உள்ளன.

 இரசவாதக்கலைகளை அறிந்த கொங்கணர் இரும்பை தங்கமாக்கும்
சித்துகளை அறிந்தவர் .

 ஸ்ரீ செட்டி தம்பிரான் ஜீவசமாதி :

 காங்கோயத்தில்
இருந்து தாராபுரம் (அ)பழனி சாலையில் 12 கி.மீட்டர் தொலைவில் ஊதியூர் மலைஎன்றும் கொங்கணகிரி , என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சாமி திருக்கோவில் அமைந்துள்ள குன்றில் முதலில் வேலாயுதசாமி திருக்கோவில்அமைந்துள்ளது.

நாங்கள் சென்றபோது திருக்கோவில் பூட்டப்பட்டு இருந்தது
.(காலை 6 முதல்10 வரையிலும் மாலை 4 மணி முதல் 6 வரை திறக்கப்படுமாம் )
சற்று தூரம் மலைப்பாதையில் நடந்தால் ஸ்ரீ செட்டி தம்பிரான் ஜீவசமாதி இரு

பெரிய பாறைகளுக்கிடையே அமைந்துள்ளது. இங்கே அமாவசை,பெளர்ணமி நாட்களில்நிறைய கூட்டம் வருகிறது .

அருட்சக்தி அற்புதமாய் அமைந்துள்ள
ஜீவசமாதியாகும் . சுமார் 3000 ஏக்கர் மூலிகை வளம் பொருந்திய குன்றாகும்
.பெளர்ணமி நாட்களில் இங்கு வழங்கப்படும் மூலிகைச்சாறு விஷேசமாகும் .
இங்கிருந்து மேலே சென்றால் ஸ்ரீ கொங்கண சித்தரின் திருக்கோவிலை காணலாம் .

ஊதியூர் மலை சிவனும் சித்தர்களும் வாசம் செய்யும் அற்புதமான மலை என்பதை ஆங்காங்கு காணப்படும் வில்வமரங்கள் உறுதி செய்கின்றன. சித்தர்களின் தேடல் உங்களுக்கு இருந்தால் கண்டிப்பாக பார்க்க,தெளிய அறிய, அற்புதமானஇடம் . அரிய இவ்விடத்தின் சூட்சமங்களையும் விரிவாக தேடலுடன்
சந்திக்கிறேன் நன்றி,

கொடநாடு காட்சி முனையின் அழகு

நீலகிரி மாவட்டத்தில் அழகிய இடங்களில் கொடநாடு காட்சி முனையும் ஒன்றாகும்.சுற்றிலும் தேயிலை தோட்டங்கள் மலைச்சரிவை கண்டு களித்துக் கொண்டேசென்றால் கோத்தகிரியில் இருந்து 19 கி.மீட்டர் தொலைவில் உள்ள கொடநாடு
காட்சிமுனையை அடையலாம் .

 கொடநாடு வியூ பாயிண்டில் ஹோட்டல் எதுவும்
கிடையாது .சிற்றுண்டி கடை ஒன்றும் மேலே மகளீர் சுய உதவிக் குழுவின்
பல்பொருள் அங்காடி ஒன்றும் உள்ளது. இங்கே நீலகிரி தைலம் டீத்தூள்கள்
கிடைக்கின்றது.

 கொடநாடு காட்சி முனையில் இருந்து பார்த்தால் வலப்புறம்
தூரத்தில் பவானி சாகர் அணைக்கட்டு தெரிகிறது. காட்சி முனையின் அருகே
வலப்புறமாக தெரிவது ரங்கசாமி குன்று ஆகும் .நடுவிரல்,
மோதிரவிரல்,ஆட்காட்டி விரல் போல ரங்கசாமி பில்லர் தெரிகிறது.

40வருடங்களுக்கு மேக மூட்டத்தின் காரணமாக ரங்கசாமி குன்றில் மோதி விமான விபத்து ஒன்று நடந்ததாக இங்குள்ள நன்பர் கூறினார் , ரங்கசாமி குன்றின் கீழே அழகான நீண்ட அருவி ஓடுகிறது . இடப்புறமாக மாயாறு U வடிவில்ஓடுகிறது.

அருகே தெங்குமரஹடா என்னும் கிராமம் அழகாக தெரிகிறது. கொடநாடு
காட்சி முனையின் கீழ் இறங்கி நடந்தால் இன்னோரு வியு பாய்ண்ட் வருகிறது . இங்கே இருந்து பார்த்தால் தெங்குமரஹடா கிராமம் சற்று அருகே தெரிகிறது.


ஊட்டியில் இருந்து 50கி.மீட்டருக்குள்ளே வரும் கொடநாடு காட்சி முனை
பார்க்கவேண்டிய சுற்றுலா ஸ்தலமாகும் . கொடநாடு காட்சிமுனை ஈரோடு
மாவட்டத்தின் பல இடங்களை மேக மூட்டம் இல்லாமல் இருந்தால் காணலாம் .
வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள் . நன்றி

Friday, January 11, 2013

நாகதோஷம் நீக்கும் திருநாகேஷ்வரர்

                                    ராகுதோஷம் போக்கும் திருநாகேஸ்வரம்
                                                                                                    

" நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம்
நண்ணுவார் கோளும் நாளும்
தீயவேணும் நன்காம் குறிகொண்மினே"

-(திருஞான
சம்பந்தர்)


மூலவர் : செண்பகராண்யேஸ்வர் \

அம்பாள் : கிரிகுஜாம்பாள்
(குன்று முலையம்மை) \

திருநாகேஸ்வரம் முன்காலத்தில் செண்பகப்பூ தோட்டமாக
இருந்தமையால் செண்பகாராண்யம் என்றும்
ஸ்ரீநாகநாதர், ஸ்ரீநாகேஸ்வரர் என
இறைவனை அழைத்தும் , இறைவிக்கு கிரிகுஜாம்பாள் ,பிறையணிவாள் நூதல் அம்மை
என்றும் பொருளுண்டு.


 செல்லும் வழி : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில்
இருந்து வடகிழக்கே 7 கி.மீட்டர் தொலைவில் காரைக்கால் செல்லும் வழியில்
திருநாகேஸ்வரம் திருக்கோவில் அழகே அமையப்பெற்றுள்ளது.

நவகிரகங்களில்   ஒன்றான ஸ்ரீ ராகு பகவான் இங்குள்ள ஈசனை வழிபட்ட சாப நிவர்த்தி பெற்றதாக
வரலாறு,கெளமர் வழிபட்டு தன் மனைவி அகலியைப் பெற்றதும் பாண்டவர் தாம்
இழந்த நாட்டைப்பெற்றதும் ,திருநாகேஸ்வரத்தில் வணங்கியதால் பலன்
ஏற்பட்டதாம்

 நாகராஜர் திருக்கோவில் :நாகராஜர் தனது தேவியர்களான சிம்ஹி
,சித்ரலேகா உடன் தனி சன்னதியாக தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. ரூ 500
கொடுத்தால் இருவர் பாலாபிஷேம் செய்து வரலாம் .

ஞாயிற்றுக்கிழமை 4.30
மணிக்கு திருநாகேஸ்வரத்தில் ராகுகால பூஜை துவங்குகிறது 04.30 மணி முதல்
06 .00 மணி வரை நடைபெறும் .நாகராஜருக்கு பாலாபிஷேகம் செய்யும் போது
பால் நீல நிறமாக மாறுவது இங்குள்ள அற்புதமான விஷயமாகும்

.ஞாயிற்றுக்கிழமை
பாலாபிஷேகம் செய்வது சிறப்பு என்பதால் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு
பாலாபிஷேகம் செய்தால் நாகதோஷம் ,காலசர்ப்பதோஷம் , ஆகிய பல நாக தோஷங்கள்
நிவர்த்தி ஆகுமென்பது கண்கூடாகும் .

 திருக்கோவில் திறப்பு நேரம் : காலை
5மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஆலயம்
திறந்திருக்கிறது. ''

திருக்கோவிலில் சூரியனால் உண்டாக்கபெற்ற சூரிய
தீர்த்தம் ,மற்றும் திரிசூல தீர்த்தம் உட்பட 12 தீர்த்தங்கள்
அமைந்துள்ளது.

முடிவுரை : ஜோதிடம் கூறும் நாகர் சம்பந்தமான அனைத்து
கிரகதோஷங்களையும் திருநாகேஸ்வரம் வந்து ஸ்ரீ நாகநாதர்க்கு பாலபிஷேகம்
செய்தால் நீங்குவது தெளிவான உண்மையாகும் .

 தோஷ காரணங்களால்
திருமணமாகதவர்கள் கூட திருநாகேஷ்வரத்தில் ஞாயிறுக்கிழமை பாலபிஷேகம்
செய்து பின் திருமணஞ்சேரி வந்தால் திருமணம் கைகூடுகிறது .
அற்புதமான
பழங்கால திருக்கோவில் சென்று வாருங்கள் நன்றி

Thursday, January 10, 2013

2012 my Important year

                                              ஓம் சிவாய நமஹ
                                                                                                                         
நீண்டதோர் இடைவெளிக்கு பின் பதிவிற்கு திரும்பி   இருக்கிறேன் .
 நமது பிளாக்கர் பயணத்தில் 203 இடுகைகளுக்கும்  பிளாக்கர்                                                                                                          
தனது டாஷ்போர்டு இடைமுகத்தை மாற்றியவுடன்    

 எமது நோக்கியா 5130 செல்போனில்
இருந்து பதிவு எழுத முடியாத சூழல் ஏற்பட்டது.

லேப்டாப்பில் தமிழில் டைப்
செய்ய அறியாததால் பெரிய பின்னடைவை சந்தித்தேன் .                                                          

இப்போது இமெயில் மூலம்
பதிவிடலாம்என அறிந்து

தற்போது செட்டிங் உள்ளே சென்று     இமெயில்
முகவரியை பதிவு செய்து இமெயில் மூலம் பதிவிடுகிறேன் .


 கடந்த3மாதங்களுக்கு முன் எமக்கு திருமணமாகத சூழலில்        
  பல திருக்கோவில் வரலாறு
எழுதிய பின் நன்பர்களுடன் திருப்பதி சென்று விட்டு வந்து

பின் கல்யாண
மாகாத ஆண்கள் பெண்கள் இருபாலரும் சென்று வணங்க கூடிய
திருமணஞ்சேரிப்பெருமானை வணங்கி வந்த குறுகிய காலத்தில்

26.11. 12 அன்று
காலை பழ.மாதேஸ்வரன் ஆகிய எமக்கும் கிரு.சத்யாவிற்கும் கூடுதுறை ஸ்ரீ
சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் நால்வர் சன்னதில் ஸ்ரீ மணிகண்டன் அய்யர்
அவர்கள் நடத்தி வைக்க இனிதே திருமணம் நடைபெற்றது.

இது இறைவனின் கிருபை.
ஆன்மீகமும் இறைவழிபாடும் உண்மையானதென்பதையும் எமது வேண்தலின் பேரில்
திருமணம் நடந்ததை உறுதிபடுத்தியுள்ளது.

 ஆக இறைதேடல் ஓர் மனிதனை
வலுவாக்குமென்பது உண்மையே, கொங்கு நாட்டில் பல திருக்கோவில்கள் மேலும்
எழுதவுள்ளேன் .

நான் பெற்ற சித்தர் ஆசீர்வாதம் பற்றியும் எழுத ஆவல் ,
மேலும் அற்புதமான பகிர்வுகள் உள்ளன .

மறுபடி நல்லதோர் திருக்கோவில்
பதிவுகளுடன் சந்திப்போம் .

நட்புடன் குரு.பழ,மாதேசு
அன்பே.. !                                                                                                                                     எத்தனை முறை                                                                                                         முயற்சித்தும் எழுதவே                                                                                                         முடியவில்லை......?
உன்னைப்                                                                                                                                 போன்றதொரு                                                                                                                                அழகான      கவிதை...!  

Wednesday, September 12, 2012

எம பயம் நீக்கும் ஸ்ரீ மங்களாம்பிகை உடனமர் ஸ்ரீ வாஞ்சி நாதர் திருக்கோவில் .திருவாஞ்சியம்





" புற்றில் ஆடரவோடு புனல்மதி தெற்று செஞ்சடை
தேவர் பிரான்பதி சுற்றுமாடங்கள் சூழ் திருவாஞ்சியே "

திருநாவூக்கரசர்

"ஆலயம் பற்றிப் பாடுவோர்க்கு பாவமில்லையே "
என திருக்குறுந்தொகையில் பாடியுள்ளார் .


மூலவர்:

ஸ்ரீ வாஞ்சிநாதர் ,ஸ்ரீவாஞ்சீஸ்வரர் ,
ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி என அழைக்கப்டும் சுயம்பு லிங்கமாவார்.

அம்பாள் :

ஸ்ரீ மங்களாம்பிகை எனவும் மருவார் குழலி (மாறாத மணத்தை கொண்ட கூந்தலை உடைய நாயகி ) அம்பிகை எனவும் சிறப்புப்பெயரால் வழங்கப்பெறுகிறார் .

திருக்கோவில் அமைவிடம் :

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் ஸ்ரீ வாஞ்சியம் கிராமத்தில் அமைந்துள்ளது.

செல்லும் வழி :

கும்பகோணத்திலிருந்து நன்னிலம் வழியாக நாகப்பட்டினம் செல்லும் மார்க்கத்தில் அச்சுதமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் ஸ்ரீ வாஞ்சியம் கிராமம் அமைந்துள்ளது.

தீர்த்தம் :

999 அம்சங்களுடன் ரகசியமாக உரையும் புனித குளம் குப்தகங்கை (முனி தீர்த்தம் ) இது திருக்கோவில் உட்புறத்தில் உள்ளது. திருக்கோவில் சுற்றிலும் 23 தீர்த்தங்கள் உள்ளது.

ஸ்தல விருட்ஷம் :

சந்தன மரம் விஷேச தெய்வங்கள் : ஸ்ரீ எமதர்மராஜா -யோக பைரவர் (அமர்ந்த நிலை ) அஷ்ட பூஜ மகிஸாசுரமர்தினி ,ராகுகேது ஒரே மூர்த்தியாக அமர்ந்துள்ளார்கள்

திருக்கோவில் சிறப்புகள்:

நாயன்மார்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலம் . அருணகிரிநாதர் ,இராமலிங்கசுவாமிகள் ,முத்துச்சாமி தீட்சிதர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம் .

திருக்கோவில் காலம் :

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான பழைய ஆலயமாகும் .கி.பி 946 ல் மூன்றாம் நரசிம்மன் மகன் வீரபாண்டியன் திருவாஞ்சியம் ஆலய கருவரை அமைத்ததாக கல்வெட்டின் மூலம் அறியலாம் .

ஸ்தலத்தின் மேன்மிக்க சிறப்புகள் :

மகாலட்சுமி திருமணம் செய்ய வேண்டி திருமால் ஸ்ரீ வாஞ்சிநாதரை வணங்கி தவம் இருந்ததால் ஸ்ரீ வாஞ்சியம் எனப்பெயர் பெற்றது. மூர்த்தி.தலம் ,தீர்த்தம் மூன்றும் பெற்றது , பிரம்மன் ,சூரியன் ,பெருமாள் , தேவர்கள் சிவனருள் பெற்ற ஸ்தலம் காசியை விட பன்மடங்கு மேலானது .

எமர்தர்மராஜா ஸ்ரீ வாஞ்சிநாதருக்கு வாகனமாக உள்ளார் . தனி சந்நதியில் எமதர்மராஜா அருள்பாலிக்கிறார் ,எமபயம் பைரவ உபாதை நீக்கும் ஸ்தலம் கங்காதேவி 999 கலைகளுடன் குப்த கங்கையாக உறையும் ஸ்தலம் .மகிஷாசுரமர்த்தினியை 108 தாமரை மலர்களால் அர்ச்சித்தால் அனைத்து தோஷ நிவர்த்தி . நால்வரால் பாடல் பெற்ற ஸ்தலம்

கார்த்திகை ஞாயிறு வழிபாடு :

ஸ்ரீ வாஞ்சியத்தில் குப்தகங்கை எனப்படும் முனி தீர்த்தத்தில் நீராடி கார்த்திகை மாதம் முழுதும் வழிபட்டால் மன உடன்தூய்மையுடன் சிவதுரோக பாவம் போகும் . சூரிய பகவானுக்கே பாவம் கார்த்திகை மாதம் நீராடியதால் நீங்கியதாம் .

கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடியவர்களுக்கு பஞ்சமாபாவங்களும் மன்னிக்கப்படும் என்பது சிவபெருமானின் வாக்காகும் . திருவாஞ்சிய மகாத்மியத்தில் குப்த கங்கையில் குளிக்கும் கால பலன்கள் சொல்லப்பட்டுள்ளது அதன்படி

காலை : நாற்கடல் சூழ்ந்த பூமிதானம் செய்த பலன்
மதியம் :ஆயிரம் கோடி காறாம் பசு தானம் செய்த பலன்
மாலை :கோடி பசுதானம் செய்த பலன்
இரவு : அஸ்வமேத யாகம் செய்த பலன் .

இங்கு உழவாரப்பணி செய்வது மிக உயர்ந்த புண்ணியத்தை அளிக்கிறது, கூப்பிட்டால் துயர்தீர்க்க ஓடி வருவார் : ஒவ்வொரு திருக்கோவிலுக்கும் ஓர் தனிச்சிறப்பு உண்டு ,

அந்த வகையில் சுயம்பு லிங்கமான வாஞ்சிநாதரை காசியிலும் 1000 மடங்கு பெருமை கொண்ட ஈசனை " ஸ்ரீ வாஞ்சிநாதா" அபயம் ஏற்படுகையில் கூப்பிட்டால் ஓடி வந்து துயர் தீர்ப்பார் .யாரெல்லாம் ஸ்ரீ வாஞ்சிநாதர் புராணம் வாசிக்கிறார்களோ அவர் முக்தி அடைவார் என ஸ்கந்தபுராணம் சனத்குமார ஸம்ஹிதை 58 அத்தியாயம் விளக்குகிறது.

திருவாஞ்சிய திவ்ய தீர்த்தங்கள் :

1.கிழக்கில் -பிரம்ம தீர்த்தம்
2.அக்னி திக்கில் -நாரக தீர்த்தம்
3 தெற்கில் -விஸ்வாமித்திர தீர்த்தம்
4 நிருதி திக்கில் - ஸர்வ தீர்த்தம்
5 பரத்வாஜ தீர்த்தம்
6ஷேச தீர்த்தம் வேண்டியன அளிக்கும்
7நாராயண தீர்த்தம்
8 ராம தீர்த்தம்
9 இந்திர தீர்த்தம்
10 திருக்கோவில் ஆனந்தக்கிணறு ஆகியன வாகும் .

கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வழிபட மிகப்பெரிய தோஷங்கள் விலகுமென்பது திருவாஞ்சிய மகிமைகளில் ஒன்றாகும் .

பூஜை முறைகள் :
ஆறுகால பூஜைகள் தினசரி நடைபெறுகிறது காலை 0500மணி முதல் 1200மணி வரையிலும் மாலை 0300மணி முதல்0830மணி வரையிலும் திறந்திருக்கும் .

பூஜை நேரங்கள் :காலை உஷத்காலபூஜை 0600மணிக்கும் காலசந்தி 8.30மணிக்கும் உச்சி கால பூஜை 1200மணிக்கும் சாயரட்சை0500மணிக்கும் 2ஆம் கால பூஜை 700மணிக்கும் அர்த்தசாம பூஜை 8.30மணிக்கும் நடைபெறுகிறது

ஸ்ரீ வாஞ்சிநாதரை வழிபடும் முறே :

முதலில் திருக்கோவில் புனித தீர்த்தக்குளம் குப்த கங்கையில் நீராடி அங்குள்ள விநாயகரை தரிசித்து பின் ஸ்ரீ எமதர்மராஜாவை வழிபட்டு பின் அபயங்கர விக்னேஷ்வரரை வணங்கி பின் மூலவர் ஸ்ரீ வாஞ்சிநாதர் வணங்கவும்

முடிவுரை :

ஸ்ரீ வாஞ்சிநாதா என்றால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அபயங்களில் காப்பாற்றும் வாஞ்சிநாதர் அளப்பரிய சக்தியுடையவர் . எமபயம் சாவு பயம் கொண்டவர்கள் பயத்தை நீக்கி ஆயுள் நீட்டிப்பு ஸ்தலமான ஸ்ரீ வாஞ்சியத்தில் குடிகொண்டுள்ள ஸ்ரீ வாஞ்சிநாதரை வணங்கு மிக மேலான பலன்பெற்றிடுங்கள்

" க்ரீங்கர பீஜ மிக்யுக்தம் ஸ்வாஹவசக்திரத; பரம் .

ஸ்ரீ வாஞ்சி நாதர் புராணம் படிக்க வந்த உங்களும் நன்மைகள் கிட்ட

ஸ்ரீ வாஞ்சிநாதரை வணங்கி பதிவை முடிக்கிறேன்

.நன்றி

ஸ்ரீ வாடாமுலையம்மை உடனமர் ஸ்ரீ பிரம்மபுரிஷ்வரர் திருக்கோவில் திருமயானம் .திருக்கடவூர்


திருக்கடவூர் மயானம்

மூலவர் : ஸ்ரீ பிரம்மபுரிஷ்வரர்
அம்பாள் : ஸ்ரீ வாடா முலையாள்

திருக்கோவில் அமைவிடம் : நாகை மாவட்டம் தரங்கம்பாடிவட்டம் திருக்கடவூருக்கு அருகே திருமயானம் என சிறப்பிக்கப்படும் ஸ்ரீ பிரம்மபுரிஷ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது

.அபிராமி பட்டர் பாடிய புகழ் பெற்ற ஸ்ரீ அபிராமி அம்பாள் திருக்கோவிலுக்கு பின்புறமாக 1 கி.மீட்டர் தூரத்தில் ஆட்டோ பயணத்தில் அமைந்துள்ளது. நடந்தும் செல்லலாம் . திருக்கடவூர் வந்து அம்பிகையை தரிசனம் செய்து அருகே உள்ள திருக்கடவூர் மயானத்திற்கு சென்று வரலாம் .

சைவ சமயத்தில் உள்ள மயானங்கள் ஐந்து ஆகும்

1 .காசிமயானம்
2.கச்சி
3.காழி
4.நாலூர்

5. கடவூர் மயானம் ( இதில் ஐந்தாவது திருத்தலமாக திருமயானம் அழைக்கப்படுகிறது ).

பெயர்காரணம் :

பிரம்மதேவரை எரித்து நீராக்கி மீண்டும் சிவபெருமான் உயிர்பித்த ஸ்தலம் .அதனால் இங்குள்ள சிவபெருமானுக்கு பிரம்மபுரிஷ்வரர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

திருமயானத்தின் சிறப்புகள் :
திருஞானசம்பந்தர் ,திருநாவூக்கரசர் , சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம் .

மார்க்கண்டேயருக்கு காசி தீர்த்தத்தை வரவழைத்து அருளிய ஸ்தலம் .
அன்று இருந்து இன்று வரை திருமயானத்தில் இருந்து தான் திருக்கடையூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ அபிராமி சமேத அமிர்தகடேஷ்வரருக்கு தினமும் புனிதநீர் எடுத்து சென்று அபிஷேகிக்கப்படுகிறது.

இங்கு தனிசன்னதியில் சிங்காரவேலர் . 3 ஆம் நூற்றாண்டில் மெளரியர் படைக்கு சிங்கார வேலர் தலைமைதாங்கி அழித்தார் . அதனால் மெளரிய அரசன் சிங்காரவேலி எனும் 53ஏக்கர் நிலத்தை காணிக்கையாக்கியதாக வரலாறு.

சேக்கிழார் திருக்கடவூர் மயான சிறப்பை

" காசியினும் மீறிய சீர் மண்ணு திருக்கடையூர் மயானம் வணங்கி"

என வர்ணிக்கையில் திருக்கடவூர் மயானச்சிறப்பை அழைக்கிறார் .1928 ல் கடைசியாக குடமுழுக்கு நடந்து 83 ஆண்டுகள் ஆகிறது . திருக்கோவில் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. முடிந்தால் நேரில் சென்று தரிசித்து உதவுங்கள்

முடிவுரை :

தமிழகத்தில் உள்ள முக்கிய சிவாயங்களில் புகழ்பெற்ற திருக்கோவில்கள் பல உள்ளன. அவற்றில் மிக நுட்பமானது திருக்கடவூர் மயானமாகும் . நல்லதோர் சிவாலயம் ஏதோ ஓர் காரணத்தால் மக்களுக்கு தெரியாமல் போய் விட்டது .

திருக்கோவில் சென்று ஸ்ரீ வாடாமுலையாள் உடனமர் பிரம்ம புரிஷ்வரரை சென்று வணங்குங்கள். ஸ்ரீபிரம்மபுரிஷ்வரர் திருமேனியில் அபிஷேகித்த திருநீற்றை தருகிறார்கள் . அற்புதமணம் . திருக்கடவூர் திருமயானம் வந்து இறைவன் இறைவியை தரிசித்து நலன்கள் பெறுங்கள்.

Sunday, August 19, 2012

ஸ்ரீ அபிராம வள்ளி உடனமர் ஸ்ரீ அமிர்த கடேஷ்வரர் திருக்கோவில் .திருக்கடவூர் .


ஸ்ரீ அபிராமியம்பிகை உடனமர் ஸ்ரீ அமிர்த கடேஸ்வரர்
திருக்கடவூர்




விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன ,
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப் ,
பழிக்கே சுழன்றும்வெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக் ,
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடுஎன்ன கூட்டினியே.

அபிராமி அந்தாதி (பாடல்79) அபிராமி பட்டர்

திருக்கோவில் மூலவர் :

ஸ்ரீ அமிர்தகடேஷ்வரர், என்றும்
அமுதகடோற்பவர் ,அமுதகடேசர் ,கடவூர் வீரட்டேஸ்வரர் என பல திருநாமங்கள் உண்டு.


அம்பாள் :
ஸ்ரீ அபிராமி அம்பிகை ஸ்தலம் சரஸ்வதி தேவி அபிராமியை
பூஜித்து அருள் பெற்ற ஸ்தலம் ஆகும்

அமைவிடம் :
நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் திருக்கடவூர் அமைந்துள்ளது. சீர்காழி,பொறையாறு ,மயிலாடுதுறைக்கு பஸ் வசதி உண்டு. வில்வ வனம், பிஞ்சில வனம் என திருக்கடவூர் வேறு பெயர்களும் உண்டு.

ஞான உபதேசம் பெற விரும்பிய பிரம்மன் சிவபெருமானை வணங்கி நின்ற போது சிவன் ஓர் வில்வ விதையினை பிரம்மனிடம் கொடுத்து இது இட்ட இடத்தில் எங்கு முளைக்கிறதோ அங்கு தங்கி என்னை வழிபடுங்கள் எனக்கட்டளையிட திருக்கடவூரில் வில்வ விதையை இட்ட போதே அது குறித்தகாலத்தில் முளைக்க மனம் முருகி பிரம்மன் தங்கி வழிபட்டு ஞான உபதேசம் பெற்ற இடமாகும் .

முதலில் திருக்கடவூர் ஸ்தலத்திற்கு வில்வவனம் என்றும் ஸ்ரீ வில்வனேஷ்வரர் என்றும் அழைத்ததாக புராணங்கள் இயம்புகின்றன.

கடவூர் பெயர்காரணம் :

தேவர்களும் அசுரகர் அமுதத்திற்காக கடைலைக்கடையும் போது உண்டான அமுதத்தை கடத்தில் அடைத்து நீராடச்சென்று திரும்பிய போது அது சுயம்பு மூர்த்தியாக சிவலிங்கமாக இருக்க கண்டனர் . கடத்தில் இருந்த அமிர்தமே லிங்கமானதால் அமிர்தகடேசர் அமுதலிங்கம் என அழைக்கப்பட்டதாகவும் , கடத்தில் உண்டானதால் கடவூர் எனவும் ஆதியில் அழைக்கப்பட்டும் பின் திருக்கடவூர் ,திருகடையூர் என பெயர் மாறியதாம் .

பிஞ்சிலம் என்றால் சாதி மல்லிக்கொடியாகும் .இதுவே இங்கு ஸ்தல விருட்சமாகும் .ஆண்டு முழுவதும் பூக்கும் சாதிமல்லியை சுவாமிக்கு அலங்காரம் செய்ய மட்டுமே பயன்படுகிறது.

திருக்கோவிலில் கள்ளவாரணப்பிள்ளையார் வணங்குதல் சிறப்பு . தேவர்கள் அமிதம் சிவலிங்கமாய் சுயம்பு மூர்த்தியாய் நிற்க கண்டு அதிசயித்து நிற்க ஸ்ரீ கள்ளவாரணப்பிள்ளையாரை வணங்கி அமுதம் பெற்று தேவர்கள் அருந்தியது புராண வரலாறு

. ஸ்தலத்தின் சிறப்புகள் :

அப்பர் ,சுந்தரர் ,திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம் .
குங்கிலியக்கலயர் ,காரிநாயனார் போன்ற அடியார்கள் தொண்டாற்றி முக்தி பெற்ற ஸ்தலம். பட்டரால் அபிராமி அந்தாதியை பாடிய போது அபிராமி அம்பாள் அமாவசையை பெளர்ணமியாக்கி அற்புதம் நிகழ்த்திய ஸ்தலம் .

பாற்கடலை கடைந்து எடுத்த அமுதக்குடமே அமிர்தகடேசராக சுயம்பு மூர்த்தியாக விளங்கும் ஷ்தலமாகும் . மார்கண்டேயர் அமிர்தலிங்கத்தினை வணங்கி காலனை வென்ற ஸ்தலமாகும் .இப்படி பல அற்புதங்களை பெருமானும் அம்பாளும் நிகழ்திய ஸ்தலமாகும் .

தீர்த்தங்கள் :

அமிர்தபுஷ்கரணி ,காலதீர்த்தம் , மார்க்கண்டேய தீர்த்தம்

ஸ்தலமரம் : வில்வமரம் ,சாதிமல்லிக்கொடி எனப்படும் பிஞ்சிலம் பூஜைகள் :ஆறுகாலப்பூஜைகள் நடைபெறுகிறது.

திருவிழா:

சித்திரைமாத பிரமோற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. கி.பி 600 ன் காலத்தில் இருந்து கல்வெட்டுக்கள் காணப்பெறுகிறது. கொழும்பு அரசனால் திருக்கடவூர் கோவில் கட்டப்பட்டதாக வரலாறாகும் .

முடிவுரை :
அண்மையில் கும்பகோணம் சென்று நாங்கள் தரிசித்த ஸ்ரீ அமிர்தகடேஷ்வரும் அன்னை அபிராமியும் வியக்க வைத்தனர் . கூட்டம் நிரம்பி வழிகின்றது. பல சிறப்புகளை உடைய திருக்கோவில் குடும்பத்துடன் வந்து தரிசியுங்கள் .

வரலாற்றுச்சிறப்பு மிக்க ஸ்ரீ அமிர்த கடேஸ்வரரையும்,அன்னை அபிராமியையும் தரிசியுங்கள். நல்லன எல்லாம் அருளும் அன்னை அவள் . தீமைகள் நெருங்காதிருக்க அவ்வப்போது மனதால் நினையுங்கள் .

"முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே " என அபிராமி பட்டர் மொழிந்த கருத்துக்கள் புலப்படும். கட்டயாகமாக தரிசிக்க வேண்டிய அழகான ஸ்தலம் . நன்றி

Tuesday, August 14, 2012

நட்பூ ( நட்புக்காக 200 வது பதிவை சமர்பிக்கிறேன் )


நட்பே..!
வறண்டு கிடந்த நிலம் போன்ற
எம் எழுத்துக்கு விதையிட்ட
முதல் வித்து நீ ....!!

எமக்குள்ளே மறைந்து
கிடந்த எழுத்துக்களை
வரிகளாக்கி வாசித்து
மகிழ்ந்தது நீ ...!

யாம் அறியாத இணையம்
என்னும் பிரமாண்ட இருக்கையில்
உட்காரச் செய்து
உலகைச்சுற்றி வரச் செய்தவன் நீ ...!

உன் நட்பூவால் படைக்கப்பட்டதோர்
ஓர் அழகிய வலைப்பூ ...!!

பூக்கள் அழகழகாய் கோர்த்து
வலைப்பூ உலகெங்கும் பூத்துக்குழுங்குகிறது...!
அவ்வப்போது வந்து பூக்களின்
சாரலில் நனைந்து செல்லுங்கள் ...!
ஏனெனில் இந்த பூந்தோட்டத்தை
உருவாக்கிய உன்னமதான நட்பூ நீ ...!!

நட்புக்கு சமர்பணம் :
எமது 200 இடுகையான இந்த பதிவும் வலைப்பூவும்
ஓர் சிறிய முயற்சியே என்றாலும் கூட
41 பின் தொடர்பவர்கள்
8500 பார்வையாளர்கள் என சந்தோஷமாக ஓடிக்கொண்டிருக்கிறது
என்னைப்போலவே என் வலைப்பூவும் . சற்றே திரும்பி பார்க்கையில் ஓர் மழைக்கால நாளில் பணிக்காக ரயில் ரோட்டில் பேசிக்கொண்டிருக்கையில் எம் எழுத்தார்வத்தை அறிந்த எம் நன்பர் பிரகாஷ் சென்னிமலை அவர்கள் இந்த வலைப்பூவை உருவாக்கித்தந்தார் .

இணையத்தை பற்றி அறிந்திராத எனக்கு பிரகாஷ் நட்பாய் கிடைத்தது வரம் ,
அந்த அன்பு நட்புக்காய் எம் 200 வது படைப்பை சமர்பணம் செய்வதில் பெருமிதம் அடைகிறேன் . நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...