Wednesday, October 10, 2018

ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் திருக்கோவில், பெருமுகை, கோபி வட்டம்

சமீபத்துல ஒரு அழகிய ஒரு பெருமாள் கோவில் தரிசனம் எனக்கு கிடைத்தது அதைப் பற்றி சொல்ல தான் இந்த பதிவு. இந்த திருக்கோயில் எங்கு இருக்குன்னா பெரு முகை கிராமம் கோபி வட்டம், ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் சத்தியமங்கலம் to அத்தாணி செல்லும் வழியில் உள்ளது ,

அத்தாணியிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் மலையடிவாரத்தில் உள்ளது. இந்தக் கோயிலோட அமைப்பு எப்படின்னு கேட்டீங்கன்னா மேற்கு தொடர்ச்சி மலையின் அழகிய சூழலில் மலையடிவாரத்தில் இயற்கையாக ரம்மியமான அழகான ஒரு மலைக்குன்றில் அமைந்துள்ளது. இங்கு திருப்பதி திருமலை சீனிவாச பெருமாள் மற்றும் அருள்மிகு சஞ்சீவிராய பெருமாள் திருக்கோயில் ஆகிய சன்னதிகள் அமைந்துள்ளது.

இந்த கோவில் கடந்த 17. 8 .2018 தேதி வெள்ளிக்கிழமை ஆவணி ஒன்றாம் நாள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மிக அழகிய வேலைப்பாடுகளுடன் இவ்வளவு அழகான ஒரு பெருமாள் ஆலயம் காணக்கிடைப்பது அரிது, அவ்வகையில் இந்தத் திருக்கோவில் இப்பகுதியில் மிக பிரமாண்டமான அமைப்புடன் அமைந்துள்ளது.


கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் போது இந்த ஆலயத்தை சென்று அல்லது வழியில் பயணிக்கும் போது இந்த ஆலயத்தை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். பெருமாள் தரிசனம் மிக அழகாக திருப்பதி ஏழுமலையானை பார்ப்பது போன்ற ஒரு அழகிய அமைப்புடன் மிகுந்த வேலைப்பாடுடன் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலை தரிசனம் செய்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...