கொங்கு நாட்டில் பழம் பெருமை வாய்ந்த யோகிகளும் ,சித்தர்கள் வாழ்ந்த
பூமியாகும் . 18 சித்தர்களில் ஒருவரான கொங்கணர் ஊதியூர் மலையில் தவம்
இருந்தார் . பின் ஸ்ரீ உத்தண்ட வேலாயுதசாமி திருக்கோவில் பிரதிஷ்டை
செய்தார் என்றும்
சிலகாலம் வாழ்ந்து தம் சீடரான செட்டி தம்பிரானுக்கு ஆசிர்வாதமளித்து திருப்பதி சென்று ஜீவசமாதியாகி விட்டதாக வரலாறு . கொங்கண
சித்தரின் திருக்கோவிலும் ,பொன் செய்ய ஊதிய பாறைகளின் ஓட்டைகளும்
தற்போதும் உள்ளன.
இரசவாதக்கலைகளை அறிந்த கொங்கணர் இரும்பை தங்கமாக்கும்
சித்துகளை அறிந்தவர் .
ஸ்ரீ செட்டி தம்பிரான் ஜீவசமாதி :
காங்கோயத்தில்
இருந்து தாராபுரம் (அ)பழனி சாலையில் 12 கி.மீட்டர் தொலைவில் ஊதியூர் மலைஎன்றும் கொங்கணகிரி , என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சாமி திருக்கோவில் அமைந்துள்ள குன்றில் முதலில் வேலாயுதசாமி திருக்கோவில்அமைந்துள்ளது.
நாங்கள் சென்றபோது திருக்கோவில் பூட்டப்பட்டு இருந்தது
.(காலை 6 முதல்10 வரையிலும் மாலை 4 மணி முதல் 6 வரை திறக்கப்படுமாம் )
சற்று தூரம் மலைப்பாதையில் நடந்தால் ஸ்ரீ செட்டி தம்பிரான் ஜீவசமாதி இரு
பெரிய பாறைகளுக்கிடையே அமைந்துள்ளது. இங்கே அமாவசை,பெளர்ணமி நாட்களில்நிறைய கூட்டம் வருகிறது .
அருட்சக்தி அற்புதமாய் அமைந்துள்ள
ஜீவசமாதியாகும் . சுமார் 3000 ஏக்கர் மூலிகை வளம் பொருந்திய குன்றாகும்
.பெளர்ணமி நாட்களில் இங்கு வழங்கப்படும் மூலிகைச்சாறு விஷேசமாகும் .
இங்கிருந்து மேலே சென்றால் ஸ்ரீ கொங்கண சித்தரின் திருக்கோவிலை காணலாம் .
ஊதியூர் மலை சிவனும் சித்தர்களும் வாசம் செய்யும் அற்புதமான மலை என்பதை ஆங்காங்கு காணப்படும் வில்வமரங்கள் உறுதி செய்கின்றன. சித்தர்களின் தேடல் உங்களுக்கு இருந்தால் கண்டிப்பாக பார்க்க,தெளிய அறிய, அற்புதமானஇடம் . அரிய இவ்விடத்தின் சூட்சமங்களையும் விரிவாக தேடலுடன்
சந்திக்கிறேன் நன்றி,

No comments:
Post a Comment