Wednesday, September 12, 2012

எம பயம் நீக்கும் ஸ்ரீ மங்களாம்பிகை உடனமர் ஸ்ரீ வாஞ்சி நாதர் திருக்கோவில் .திருவாஞ்சியம்





" புற்றில் ஆடரவோடு புனல்மதி தெற்று செஞ்சடை
தேவர் பிரான்பதி சுற்றுமாடங்கள் சூழ் திருவாஞ்சியே "

திருநாவூக்கரசர்

"ஆலயம் பற்றிப் பாடுவோர்க்கு பாவமில்லையே "
என திருக்குறுந்தொகையில் பாடியுள்ளார் .


மூலவர்:

ஸ்ரீ வாஞ்சிநாதர் ,ஸ்ரீவாஞ்சீஸ்வரர் ,
ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி என அழைக்கப்டும் சுயம்பு லிங்கமாவார்.

அம்பாள் :

ஸ்ரீ மங்களாம்பிகை எனவும் மருவார் குழலி (மாறாத மணத்தை கொண்ட கூந்தலை உடைய நாயகி ) அம்பிகை எனவும் சிறப்புப்பெயரால் வழங்கப்பெறுகிறார் .

திருக்கோவில் அமைவிடம் :

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் ஸ்ரீ வாஞ்சியம் கிராமத்தில் அமைந்துள்ளது.

செல்லும் வழி :

கும்பகோணத்திலிருந்து நன்னிலம் வழியாக நாகப்பட்டினம் செல்லும் மார்க்கத்தில் அச்சுதமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் ஸ்ரீ வாஞ்சியம் கிராமம் அமைந்துள்ளது.

தீர்த்தம் :

999 அம்சங்களுடன் ரகசியமாக உரையும் புனித குளம் குப்தகங்கை (முனி தீர்த்தம் ) இது திருக்கோவில் உட்புறத்தில் உள்ளது. திருக்கோவில் சுற்றிலும் 23 தீர்த்தங்கள் உள்ளது.

ஸ்தல விருட்ஷம் :

சந்தன மரம் விஷேச தெய்வங்கள் : ஸ்ரீ எமதர்மராஜா -யோக பைரவர் (அமர்ந்த நிலை ) அஷ்ட பூஜ மகிஸாசுரமர்தினி ,ராகுகேது ஒரே மூர்த்தியாக அமர்ந்துள்ளார்கள்

திருக்கோவில் சிறப்புகள்:

நாயன்மார்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலம் . அருணகிரிநாதர் ,இராமலிங்கசுவாமிகள் ,முத்துச்சாமி தீட்சிதர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம் .

திருக்கோவில் காலம் :

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான பழைய ஆலயமாகும் .கி.பி 946 ல் மூன்றாம் நரசிம்மன் மகன் வீரபாண்டியன் திருவாஞ்சியம் ஆலய கருவரை அமைத்ததாக கல்வெட்டின் மூலம் அறியலாம் .

ஸ்தலத்தின் மேன்மிக்க சிறப்புகள் :

மகாலட்சுமி திருமணம் செய்ய வேண்டி திருமால் ஸ்ரீ வாஞ்சிநாதரை வணங்கி தவம் இருந்ததால் ஸ்ரீ வாஞ்சியம் எனப்பெயர் பெற்றது. மூர்த்தி.தலம் ,தீர்த்தம் மூன்றும் பெற்றது , பிரம்மன் ,சூரியன் ,பெருமாள் , தேவர்கள் சிவனருள் பெற்ற ஸ்தலம் காசியை விட பன்மடங்கு மேலானது .

எமர்தர்மராஜா ஸ்ரீ வாஞ்சிநாதருக்கு வாகனமாக உள்ளார் . தனி சந்நதியில் எமதர்மராஜா அருள்பாலிக்கிறார் ,எமபயம் பைரவ உபாதை நீக்கும் ஸ்தலம் கங்காதேவி 999 கலைகளுடன் குப்த கங்கையாக உறையும் ஸ்தலம் .மகிஷாசுரமர்த்தினியை 108 தாமரை மலர்களால் அர்ச்சித்தால் அனைத்து தோஷ நிவர்த்தி . நால்வரால் பாடல் பெற்ற ஸ்தலம்

கார்த்திகை ஞாயிறு வழிபாடு :

ஸ்ரீ வாஞ்சியத்தில் குப்தகங்கை எனப்படும் முனி தீர்த்தத்தில் நீராடி கார்த்திகை மாதம் முழுதும் வழிபட்டால் மன உடன்தூய்மையுடன் சிவதுரோக பாவம் போகும் . சூரிய பகவானுக்கே பாவம் கார்த்திகை மாதம் நீராடியதால் நீங்கியதாம் .

கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடியவர்களுக்கு பஞ்சமாபாவங்களும் மன்னிக்கப்படும் என்பது சிவபெருமானின் வாக்காகும் . திருவாஞ்சிய மகாத்மியத்தில் குப்த கங்கையில் குளிக்கும் கால பலன்கள் சொல்லப்பட்டுள்ளது அதன்படி

காலை : நாற்கடல் சூழ்ந்த பூமிதானம் செய்த பலன்
மதியம் :ஆயிரம் கோடி காறாம் பசு தானம் செய்த பலன்
மாலை :கோடி பசுதானம் செய்த பலன்
இரவு : அஸ்வமேத யாகம் செய்த பலன் .

இங்கு உழவாரப்பணி செய்வது மிக உயர்ந்த புண்ணியத்தை அளிக்கிறது, கூப்பிட்டால் துயர்தீர்க்க ஓடி வருவார் : ஒவ்வொரு திருக்கோவிலுக்கும் ஓர் தனிச்சிறப்பு உண்டு ,

அந்த வகையில் சுயம்பு லிங்கமான வாஞ்சிநாதரை காசியிலும் 1000 மடங்கு பெருமை கொண்ட ஈசனை " ஸ்ரீ வாஞ்சிநாதா" அபயம் ஏற்படுகையில் கூப்பிட்டால் ஓடி வந்து துயர் தீர்ப்பார் .யாரெல்லாம் ஸ்ரீ வாஞ்சிநாதர் புராணம் வாசிக்கிறார்களோ அவர் முக்தி அடைவார் என ஸ்கந்தபுராணம் சனத்குமார ஸம்ஹிதை 58 அத்தியாயம் விளக்குகிறது.

திருவாஞ்சிய திவ்ய தீர்த்தங்கள் :

1.கிழக்கில் -பிரம்ம தீர்த்தம்
2.அக்னி திக்கில் -நாரக தீர்த்தம்
3 தெற்கில் -விஸ்வாமித்திர தீர்த்தம்
4 நிருதி திக்கில் - ஸர்வ தீர்த்தம்
5 பரத்வாஜ தீர்த்தம்
6ஷேச தீர்த்தம் வேண்டியன அளிக்கும்
7நாராயண தீர்த்தம்
8 ராம தீர்த்தம்
9 இந்திர தீர்த்தம்
10 திருக்கோவில் ஆனந்தக்கிணறு ஆகியன வாகும் .

கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வழிபட மிகப்பெரிய தோஷங்கள் விலகுமென்பது திருவாஞ்சிய மகிமைகளில் ஒன்றாகும் .

பூஜை முறைகள் :
ஆறுகால பூஜைகள் தினசரி நடைபெறுகிறது காலை 0500மணி முதல் 1200மணி வரையிலும் மாலை 0300மணி முதல்0830மணி வரையிலும் திறந்திருக்கும் .

பூஜை நேரங்கள் :காலை உஷத்காலபூஜை 0600மணிக்கும் காலசந்தி 8.30மணிக்கும் உச்சி கால பூஜை 1200மணிக்கும் சாயரட்சை0500மணிக்கும் 2ஆம் கால பூஜை 700மணிக்கும் அர்த்தசாம பூஜை 8.30மணிக்கும் நடைபெறுகிறது

ஸ்ரீ வாஞ்சிநாதரை வழிபடும் முறே :

முதலில் திருக்கோவில் புனித தீர்த்தக்குளம் குப்த கங்கையில் நீராடி அங்குள்ள விநாயகரை தரிசித்து பின் ஸ்ரீ எமதர்மராஜாவை வழிபட்டு பின் அபயங்கர விக்னேஷ்வரரை வணங்கி பின் மூலவர் ஸ்ரீ வாஞ்சிநாதர் வணங்கவும்

முடிவுரை :

ஸ்ரீ வாஞ்சிநாதா என்றால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அபயங்களில் காப்பாற்றும் வாஞ்சிநாதர் அளப்பரிய சக்தியுடையவர் . எமபயம் சாவு பயம் கொண்டவர்கள் பயத்தை நீக்கி ஆயுள் நீட்டிப்பு ஸ்தலமான ஸ்ரீ வாஞ்சியத்தில் குடிகொண்டுள்ள ஸ்ரீ வாஞ்சிநாதரை வணங்கு மிக மேலான பலன்பெற்றிடுங்கள்

" க்ரீங்கர பீஜ மிக்யுக்தம் ஸ்வாஹவசக்திரத; பரம் .

ஸ்ரீ வாஞ்சி நாதர் புராணம் படிக்க வந்த உங்களும் நன்மைகள் கிட்ட

ஸ்ரீ வாஞ்சிநாதரை வணங்கி பதிவை முடிக்கிறேன்

.நன்றி

4 comments:

''இறைவனடி யுவராஜா'' said...

-/\-om sivaya nama -/\-

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

நன்றிகள் ஜீ

Unknown said...

திருகோவில் பற்றிய விளக்கம் மிக அருமை. நன்றி வணக்கம்!!!

Unknown said...

திருகோவில் பற்றிய விளக்கம் மிகவும் அருமை நன்றி வணக்கம்!!!!

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...