
நட்பே..!
வறண்டு கிடந்த நிலம் போன்ற
எம் எழுத்துக்கு விதையிட்ட
முதல் வித்து நீ ....!!
எமக்குள்ளே மறைந்து
கிடந்த எழுத்துக்களை
வரிகளாக்கி வாசித்து
மகிழ்ந்தது நீ ...!
யாம் அறியாத இணையம்
என்னும் பிரமாண்ட இருக்கையில்
உட்காரச் செய்து
உலகைச்சுற்றி வரச் செய்தவன் நீ ...!
உன் நட்பூவால் படைக்கப்பட்டதோர்
ஓர் அழகிய வலைப்பூ ...!!
பூக்கள் அழகழகாய் கோர்த்து
வலைப்பூ உலகெங்கும் பூத்துக்குழுங்குகிறது...!
அவ்வப்போது வந்து பூக்களின்
சாரலில் நனைந்து செல்லுங்கள் ...!
ஏனெனில் இந்த பூந்தோட்டத்தை
உருவாக்கிய உன்னமதான நட்பூ நீ ...!!
நட்புக்கு சமர்பணம் :
எமது 200 இடுகையான இந்த பதிவும் வலைப்பூவும்
ஓர் சிறிய முயற்சியே என்றாலும் கூட
41 பின் தொடர்பவர்கள்
8500 பார்வையாளர்கள் என சந்தோஷமாக ஓடிக்கொண்டிருக்கிறது
என்னைப்போலவே என் வலைப்பூவும் . சற்றே திரும்பி பார்க்கையில் ஓர் மழைக்கால நாளில் பணிக்காக ரயில் ரோட்டில் பேசிக்கொண்டிருக்கையில் எம் எழுத்தார்வத்தை அறிந்த எம் நன்பர் பிரகாஷ் சென்னிமலை அவர்கள் இந்த வலைப்பூவை உருவாக்கித்தந்தார் .
இணையத்தை பற்றி அறிந்திராத எனக்கு பிரகாஷ் நட்பாய் கிடைத்தது வரம் ,
அந்த அன்பு நட்புக்காய் எம் 200 வது படைப்பை சமர்பணம் செய்வதில் பெருமிதம் அடைகிறேன் . நன்றி
1 comment:
Thank u Thala.....
Varthaikal Varavillai Nanri thala...
Post a Comment