Monday, January 21, 2013

நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சித்துக்கள்

                                       ஓம் ஸ்ரீ ஸதாசிவ ப்ரஹ்மணே நம;



 கரூர் அருகே 12 கி.மீ தொலைவில் உள்ள
நெரூரில் ஸ்ரீ சதாசிவபிரம்மேந்திராள்ஜீவசமாதியை பற்றி சென்ற பதிவில்
பார்த்தோம் . அந்த பதிவை படிக்காதவர்கள் அதையும் படித்து வரவும் .

 ஸ்ரீ
சதாசிவ பிரம்மம் கொடுமுடி அருகேயுள்ள அகத்தியம்பாறை என்னும் இடத்தில் தவம் செய்து கொண்டு இருந்தபோது காவிரியின் திடீர் வெள்ளம் இவரை உருட்டிச்சென்று மண்ணில் புதைத்து விட்டது .

காவிரியின் சீற்றம்
அடங்கியதும் சதாசிவ பிரம்மத்தை சீடர்களும் ,மக்களும் தேட கிடைக்கவில்லை.

 பல காலம் கழித்து கட்டிடம் கட்ட மணல் தோண்ட வந்தவர்கள் ஆழமாக தோண்ட மண்வெட்டி புதைந்திருந்த சதாசிவ பிரம்மத்தின் தலையில் பட்டு காயமாகி ரத்தம் வந்ததும் மணல் எடுக்க வந்தவர்கள் ஓடிப்போய் ஊர் பெரியவர்களைகூட்டி வந்து சுற்றிலும் மணலை எடுத்து சதாசிவ பிரம்மத்தை உடம்பு சுத்தம் செய்து விட யாரிடமும் பேசாமல் அமைதியாக நடந்து சென்றாராம் .

அடுத்ததாக புதுக்கோட்டை பகுதியில் சதாசிவபிரம்மம் நெற்கதிர் நிலங்களுக்கிடையே நடந்து சென்று கொண்டு இருந்தாராம் . அப்போது வைக்கோல் போர்அடுக்கும் வேலை நடந்து கொண்டிருக்க , அடுக்கிக்கொண்டிருந்த வைக்கோல் போர்களுக்கிடையே சதாசிவ பிரம்மம் விழுந்து விட்டாராம் .

 வைக்கோல் போர்
அடிப்பவர் சதாசிவ பிரம்மத்தை கவனிக்காது அவர் மேலேயே வைக்கோல் போரைஅடுக்கி பெரிய வைக்கோல் போர் ஆகி விட்டது.

 சதாசிவ பிரம்மம் கீழே கிடக்க பல அடி உயரத்திற்கு வைக்கோல் போட்டு விட்டனர் .ஒரு வருடமாக பசுக்களுக்கு  வைக்கோல் போட படிப்படியாக குறைந்த வைக்கோல் போரில் இருந்து சதாசிவ பிரம்மம் எழுந்து நடக்க அப்பகுதி மக்கள் ஆச்சர்யமாக பார்த்தனர் .

இந்த விஷயம் மந்திரியின் காதுக்கு சென்று பின் அரசன் விஜயரகுநாத தொண்டைமானிடம் சென்றது.

அவரும் சதாசிவ பிரம்ம் இருக்குமிடத்தை வந்து 8 வருடமாக மன்னர் காத்திருந்து பின் மன்னரின் பொறுமையை அறிந்துசதாசிவ பிரமம் மணலிலேமந்திரத்தை எழுதிக்காண்பிக்க அதை மனனம் செய்து அந்த மணலை தன் அங்கவஸ்திரத்தில் எடுத்துச்சென்று அரண்மனையில் பூஜை செய்யதொடங்கினாராம் .


அந்த பூஜை இன்றும் புதுக்கோட்டை அரண்மனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.கரூர் தான் தோன்றிமலையில் ஸ்ரீ வெங்கடாசலபதி சிலையை வணங்கி ஜன ஆகர்ஷ்ண
சக்கரம் எழுதி பூஜை செய்து அங்கு அமைத்து

 "வறுமையால் திருப்பதி
செல்லமுடியாத பக்தர்கள் தான்தோன்றி மலையப்பரை வணங்கினால் திருப்பதி சென்று வந்ததிற்கு ஈடாகுமென அருளிச்சென்றார் .

 தன் நிலை மறந்தவாறு உடையில்லாமல் இறை தியானத்தில் அரசன் கொலு பட்டறையின் வழியே நடந்து செல்ல கோபப்பட்டு மன்னர் சதாசிவ பிரமத்தை அறிந்திராமல் அவரின் கையை வெட்டி விடகை துண்டானது கண்டு கொள்ளாமல் திரும்பி நடக்க மன்னர் மன்னிக்க வேண்டி
கேட்டு நிற்க வெட்டிய கையை ஒட்ட வைத்து நடந்து சென்றாராம் .

 இப்படி பல அற்புத சித்துக்களை நிகழ்திய ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் கடைசியாக நெரூர் வந்து ஜீவசமாதி அடைந்து தம்மை நாடி வருகிறவர்களுக்கு ஆசியையும்
நன்மையையும் அளிக்கிறார் .

ஸ்ரீசதாசிவம் ஜீவசமாதி அடைந்த அதே நாளில்
மானாமதுரையில் வைகை ஆற்றங்கரையில் மானாமதுரை சிவன் கோவில் பின்புறம் ஸ்ரீ சதாசிவர் சூட்சமசரிரமாகவூம் , கராச்சியில் காரணசரீரமாகவும் ,நர்மதா நதி ஓம்காரம் என்ற இடத்தில் அங்கேயும் ஜீவசமாதியானதாக கருதப்படுகிறது.


காசியிலும் ஸ்ரீ சதாசிவம் ஜீவசமாதி ஆகியுள்ளதாக அறியப்படுகிறது.
சித்தர்கள் பலர் பல முகமாக காட்சி கொடுத்து ஒருவரே பல இடங்களில்
ஜீவசமாதியானதாக அறிகிறோம் .

அவ்வகையில் பல அற்புதங்கள் செய்த ஸ்ரீ
சதாசிவ பிரம்மேந்திராள் மட்டும் விதிவிலக்கன்று. வாய்ப்பு கிடைக்கும்
போது தரிசனம் செய்யுங்கள் .

நன்றி

1 comment:

Katie said...

Hi Friends,

Happy to inform you all that K.Vivekshankar's Prayatna is coming out with a new Tamil stage play, "Brahmendrar" and the same will be inaugurated on 24th February 2018 followed by another show on the 25th at Narada Gana Sabha, Chennai.

Join us and team Prayatna on a spiritual quest on #SadasivaBrahmendrar.

Thanks

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...