📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.

Tuesday, July 29, 2025

பத்ரகாளியம்மன் திருக்கோவில் அந்தியூர் ஈரோடு மாவட்டம் Sri Pathrakaliyamman Temple Anthiyur

அந்தியூர் பத்ரகாளியம்மன் திருக்கோவில்                    மூலவர் : பத்ரகாளி  அம்மன்    .அந்தியூர் வட்டம்                   ஈரோடு மாவட்டம்            செல்லும் வழி : ஈரோட்டில் இருந்து சுமார் 32 கிலோமீட்டரில் அந்தியூர் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஒரு வட்டத்தில் (Taluk)  அமைந்துள்ளது.   அந்தியூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் வலது புறம் பெரிய அரச மரத்துடன் கூடிய விநாயகர் அடுத்ததாக ராஜ கோபுரம் அதைக் கடந்து உள்ளே சென்றால்  கொடிமரம் உள்ளது.  அங்கே ஆண் பெண் சுதகையால் இரண்டு மிணியப்பா சுவாமி  வரவேற்கிறது, அவர்களை தரிசனம் செய்து பின் உள்ளே நுழைந்தால் மூலவராக பத்ரகாளியம்மன் காட்சி அளிக்கிறது.


அதன் பின்னே கோயில் வெளிவளாகத்தில் பரிவார தெய்வங்களாக மினியப்ப சாமி, கருப்பணசாமி, கன்னிமார் சாமிகள், சன்னதி தனியாக உள்ளது,


அதை பின் கோவிலை சுற்றி வந்து நடந்து  சென்றால் ஆஞ்சநேயர் சன்னதி  இடது புறமாக அமைந்துள்ளது.  விசேஷ நாட்கள் :  வெள்ளிக்கிழமைகளில்  சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது, அமாவாசை , ,பௌர்ணமி நாட்களில் கூட்டம் அலைமோதும்.  வருட பண்டிகையாக பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா, சித்ரா பௌர்ணமி தீர்த்த குட விழா,துர்காஷ்டமி சங்க அபிஷேக பூஜை,கார்த்திகை தீப விழா நவராத்திரி விழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவிலின் சிறப்பு: கருவறையில் பத்ரகாளியம்மன் எட்டு கைகளுடன் அருள் பாலிக்கிறார். திறக்கும் நேரம் : காலை 6:00 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.00 மணி முதல் 8 .00 மணி வரை திறந்து இருக்கும் 


 முடிவுரை :.  அந்தியூர் என்றால் அந்தி சாயும் நேரத்தில் கடைசியான ஊர் என்று கருதலாம், மேற்கு தொடர்ச்சி மலையின் எல்லையில் உள்ள ஒரு ஊர் அந்தியூர் ஆகும். அதுபோல காலையில் தொடங்கி மாலையில் முடிவடையும் பிரச்சினை போல அந்தியூர் பத்ரகாளியை வணங்கினால் நிம்மதி கிடைக்கும் என்று நம்புவோம்..

வசதிகள் அருகே சிறிய அளவிலான 2 லாட்ஜ்கள் உள்ளது. நல்ல அளவிலான ஹோட்டல்களும் உள்ளது. பவானியில் சௌகரியமான தங்கும் விடுதிகள்



உள்ளது.  நீங்களும் வந்து தரிசித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் இந்த பதிவில் இடுங்கள் நன்றி.

No comments:

எனது இடுகை பதிவுகள்

பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்