Sunday, April 24, 2011

அருள்மிகு கக்குவாய் மாரியம்மன் திருக்கோவில் , குருவரெட்டியூர்-638504 , Arulmigu kakkuvaai mariamman temple guruvareddiyur




அருள்மிகு கக்குவாய் மாரியம்மன் திருக்கோவில்

(Arul migu kakkuvaai mariamman temple)

(GURUVAREDDIYUR)

ஈரோடு(Erode) மாவட்டம் பவானி (Bhavani)வட்டம் அம்மாபேட்டையில் (Ammapet)இருந்து 10 வது கி.மீட்டரில் குருவரெட்டியூர் (Guruvareddiyur) அரசமரத்து வீதியில் அமர்ந்து பக்தர்கள் குறை தீர்க்கும் தாயாக ,அம்மாவாக நோய்பிணி தீர்க்கும் அம்பிகையாக வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் அன்னையாக திகழ்வது சிறப்பு.

திருக்கோவில் முன்பாக ஏறக்குறைய 400 வருட பழமை வாய்ந்த பிரமாண்ட அரசமரமும் செல்வ விநாயகர் கோவிலும் அமர்திருப்பது மற்றோர் சிறப்பு . செல்வ விநாயகர் திருக்கோவில் முன்பாக பார்வதி உடனமர் ஈஸ்வரன்கோவில் அமைந்திருப்பதும் இத்திருக்கோவில் அனைத்தும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.

திருக்கோவில் வடகிழக்கில் பாலமலை (2 கி.மீ )அமைந்திருக்கிறது.


கக்குவாய் மாரியம்மன் 50 வருடங்களுக்கு முன் கற்சிலையாக சிறிய இடத்தில் வழிபட்டு வர அச்சிலையை சிலர் அப்புறப்படுத்த முயற்சித்து அவர்கள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டதாகவும்,

பின் பிடுங்கி போடப்பட்ட சிலையை கண்டெடுக்கப்பட்டு பின் வைத்து பூஜை செய்த பின் அம்மன் சிலையை பிடுங்கி எறிந்தவர்கள் மன்னிப்பு கேட்டு அவர்கள் உடல் சரியானதாகவும் ,பின் ஒரு முறை கோவில் உண்டி திருட்டு போனது.


பின் 2 நாள் கழித்து இரவில் திருடனை ஏதோ ஒரு சக்தி துரத்த அவன் ஓடி வந்து கோவில் கிணற்றில் விழுந்து கத்தும்போது ஊர் மக்கள் அந்த நடுநிசியில் யார் என்று கேட்க

"நான் தான் கோவில் உண்டியல் திருடினேன் "

என திருடன் ஓப்புக்கொண்டதாக செவிவழி ஆதாரச் செய்திகள் கூறுகின்றன,பல பேர் வாழ்கை உயர அம்பிகை உதவியது ஏராளம்.

கக்குவாய் மாரியம்மன் உண்மையாக வேண்டுவோர்க்கு செய்த அற்புதங்கள் பல.நான் சிறுவனாக இருந்த காலத்தில் விளையாடிய கோவில் அது. தற்போது நல்ல பணியில் இருப்பதற்க்கும் கக்குவாய் மாரியம்மன் அருளாசியால்தான். இவ்வாறு பல அற்புதங்கள் செய்து வரும் கக்குவாய் மாரீயம்மனுக்கு பழைய ஆலயத்தை இடித்து விட்டு புது ஆலயம் அமைக்க ஆலோசித்து

இப்பகுதி ஆன்மீக அன்பரும் ஜோதிடருமான திரு. சண்முகம் (9965286666) அவர்களின் முயற்சியால் அவரின் நன்பர்கள் தம்புகடை முத்து (9976466007),சிவா சினி மூவீஸ் அர்ஜுனன் (9788294760), ஆகியோர்களுடன் 32 லட்சம் மதிப்பீட்டில் கக்குவாய் மாரீயம்மன் திருக்கோவில் புதிய கோவிலாக பிரமாண்ட வேலைப்பாடுகளுடன் தயாராகி வருகிறது.

வெளியூர் வெளிநாட்டில் வசிக்கும் குருவரெட்டியூர் பகுதிமக்கள் தாங்களால் இயன்ற நிதி பொருள் உதவியை திருக்கோவில் வளாகத்தில் கொண்டு வந்து தருமாறு பணிவுடன் வேண்டப்படுகிறது. ஸ்ரீ கர வருடம் ஆனி மாதம் 25 ஆம் நாள் 10.07.2011 ஞாயிற்றுக்கிழமை கக்குவாய் மாரியம்மன் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறப்போகிறது.

தவறாமல் கலந்து கொண்டு கக்குவாய் மாரியம்மன் அருள் பெற அழைக்கும் அன்பன் குரு.பழ.மாதேசு (guru.pala.mathesu)

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...