வெள்ளோடு பறவைகள் சரணாலயம் ஈரோடு மாவட்டம்
ஈரோடு மாவட்டத்தில் அழகிய சிறிய சுற்றுலா தலம். ஈரோட்டில் இருந்து சென்னிமலை செல்லும் வழியில் வெள்ளோடு என்ற ஊரில் இந்த இடம் அமைந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து 5 கிலோமீட்டர் இந்த இடம் அமைந்துள்ளது. ஈரோட்டில் இருந்து சென்னிமலைக்கு செல்லும் பஸ்ஸில் வெள்ளோட்டில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம்.
சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடத்தில் ஏராளமான பறவைகள் வந்து செல்கின்றன.குறிப்பாக ஆஸ்திரியா ஆஸ்திரேலிய போன்ற நாடுகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட பறவைகள் வந்து செல்வதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இங்கு இந்திய பறவைகளான கூழைக்கெடா , கரண்டிவாயன், வெள்ளைய அரிவாள் மூக்கன், நத்தை குத்தி நாரை, ஆகிய பறவை இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது, ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் பெலிக்கன் பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. ஒரு நாள் பயணக ஏற்ற ஒரு அழகிய பிக்னிக் இடமாக அமைந்துள்ளது. இங்குள்ள அலுவலகத்தில் பைனாகுலர் வாடகை கொடுத்து பெற்று துள்ளியமாக பறவைகளை அடையாளம் காணலாம்,
அல்லது கொண்டும் வரலாம். புதிய இடங்களை தேர்வு செய்பவர்கள் பிற மணி நேரங்கள் தங்கி குடும்பத்துடன் செல்ல ஒரு அழகிய இடமாக இது அமைந்துள்ளது. அவசியம் சென்று வாருங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் நன்றி
No comments:
Post a Comment