📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.

Saturday, July 19, 2025

இயற்கையின் சொக்க பூமி ஊட்டி தொட்டபெட்டா 0oty " thotta betta "

தொட்டபெட்டா (thotta betta) : இயற்கையின் சொர்க பூமி யான தொட்டபெட்டா பனிச்சரிவு மலை ( hill Peak )என்று அழைக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிரபலமானது ஏற்றது. தொட்டபெட்டா என்றால் தொட்ட மலை சிகரம் என்று பொருள். நீலகிரி மலைத்தொடரில் உயரமான மலைச் சிகரங்களில் இதுவும் ஒன்று. சுமார் 2623 மீட்டர் உயரம் (8600 அடி )  கொண்டது. ஊட்டி நகரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில்  தொட்டபெட்டா  அமைந்துள்ளது.பசுமை நிறைந்த மலைக்காடுகள் காபி தோட்டங்கள், பனிமலை மூடிய மலைகள், தேயிலை தோட்டங்கள்,இந்த இடத்திற்கு மேலும் அழகு சேர்க்கும். இங்குள்ள வியூ பாயிண்ட் இல் இருந்து பார்த்தால், ஊட்டி நகரம் கோத்தகிரி, குன்னூர், ஆகிய இடங்கள் தெரியும். ஊட்டியில் இருந்து கார் ஜீப் பைக் ஆகியவை செல்லலாம். மழைக்காலங்கள் குளிர்காலங்களில் பயணத்தை தவிர்ப்பது நல்லது.  அவசியம் ஜெர்கின் கோட் தேவைப்படும் சென்று பார்த்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை பகிரவும் நன்றி. 

No comments:

எனது இடுகை பதிவுகள்

பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்