Monday, December 26, 2011
இயற்கையில் அழகில் பாலமலை ஸ்ரீ கவ்விய பெருமாள் திருக்கோவில்
அருள்மிகு கவ்வியப்பெருமாள் திருக்கோவில் .பாலமலை . கொளத்தூர்.
சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லையிலும், ஈரோடு மாவட்டத்தின் வடக்கு எல்லையான பாலமலை என்னும் அழகிய சூட்சமமலை அமைந்துள்ளது. பாலமலையின் உச்சியில் அருள்மிகு சித்தேஷ்வரர் திருக்கோவில் ஸ்தல வரலாறு நம் வலைப்பூவில் எழுதியுள்ளோம் . பாலமலையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பழங்காலமாக வெளித்தெரியாத பழங்கால திருக்கோவிலாக ஸ்ரீ கெவ்வியப்பெருமாள் temple அமைந்துள்ளது.
கெவ்விய பெருமாள் திருக்கோவில் மூலவர் :
ஸ்ரீ பாமா ருக்மணி உடனமர் ஸ்ரீ கிருஷ்ணர் (கெவ்வியப் பெருமாள் )
அழகான வடிவமைக்கப்பில் ஸ்ரீ அர்ஜீனர் சிலைகள் அமைந்துள்ளன.
திருக்கோவில் முகப்பில் விநாயகப்பெருமானின் சிலை இருக்க கடந்த 2 வருடம் முன்பாக திருக்கோவில் மதிப்பை அறிந்து புதிதாக சிலைகள் பிரதிஷ்டை செய்து அழகு செய்துள்ளார்கள் .பழங்கால மூலவர் சிலையும் அருகே அமைந்துள்ளது. திருக்கோவில் அமைந்துள்ள இடம் முற்றிலும் இயற்கையின் குழுமைக்கு நம்மை இழுத்துச்செல்கிறது. சற்று தூரத்தில் ஆஞ்சனேயர் தனிச்சன்னதியாக அமைந்துள்ளார் .
பயண விபரம் :
திருக்கோவிலுக்கு செல்ல மூலமெத்தையில் இருந்து மலைப்பாதையில் நடக்க வேண்டும் இது குருவரெட்டியூர் கண்ணாமூச்சி செல்லும் வழியில் அமைந்துள்ளது . இரண்டாவது வழியாக குருவரெட்டியூரில் இருந்து கொளத்தூர் செல்லும் வழியில் கண்ணாமூச்சி எல்லைபோர்டுக்கு முன்பாக வலப்பக்கம் திரும்பி மலைப்பாதையில் நடந்தால் ஸ்ரீ கெவ்வியப்பெருமாளை தரிசனம் செய்யலாம் .
திருக்கோவில் நிலமட்டத்தில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் மலைப்பாதையில் உள்ளது.ஒற்றையடிப் பாதையில் பயணித்து மலை ஏற வேண்டும் . பாலமலையில் பயப்படும் படியான மிருகங்கள் இல்லாததால் பயமின்றி பயணத்தை தொடரலாம் . அவ்வப்போது இடையில் பயணத்தில் பாம்புபுற்றுகள் இருக்கின்றன. அதைத்தாண்டி பயணித்தால் இரண்டு இடத்தில் உட்கார்ந்து செல்ல ஏதுவாக பெரிய பாறைகள் உள்ளன.
சுமார் 2மணி நேரப்பயணத்தில் அழகிய திருக்கோவிலை அடையலாம் . உணவு ,தண்ணீர் எடுத்து செல்வது நல்லது. அங்கு கடைகளோ மக்களோ இல்லாத மலைப்பாங்கான இடமாகும் . திருக்கோவில் பூஜை பிரதி மாதம் அம்மாவசை நாட்களில் மட்டும் நடைபெறுகிறது. அம்மாவசை அன்று சென்றால் இறைவனை நன்றாக தரிசித்து வரலாம் . வருடத்திய சிறப்பு பூஜையாக கோகுலாஷ்டமி அன்று சிறப்பாக நடைபெறுகிறது.
பழங்காலமாக திருக்கோவில் பூஜை செய்து வரும்
பூசாரி 97157- 69559
அவர்களிடம் தொடர்பு கொண்டு விபரங்கள் பெற்று திருக்கோவிலுக்கு செல்லலாம் .
திருக்கோவில் வரலாறு :
பழங்காலத்தி ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா குழந்தை உருவம் கொண்டு தற்போது திருக்கோவில் அமைந்துள்ள இடத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுவின் மடியில் பால் அருந்திக்கொண்டு இருந்ததாகவும் , அப்போது பசுவைக்காணாது வந்த பசுவின் சொந்தக்காரர் பசுவின் மடியில் பால் சாப்பிட்டுக்கொண்டிருந்த குழந்தையைக்கண்டு ஆச்சர்யம் கொள்ள ,
பின் அக் குழந்தை பாம்பு உருவமாகி தற்போது திருக்கோவில் அமைந்துள்ள இடத்திலுள்ள சிறு குகையில் உள்ளே சென்று விட்டதாகவும் , பின்னர் அதை பலரிடமும் இயம்பி விபரம் சொல்லி திருக்கோவில் பூஜை செய்து வருவதாகவும் ,ஸ்ரீகிருஷ்ணர் குழந்தையாக வந்து நாகசர்பமாக மாறி குகைகுள் சென்றதால் "கவ்விய" பெருமாள் கோவில் என்று அழைக்கப்படுவதாகவும் பழங்கால செவிவழிச்செய்திகள் இயம்புகின்றன.
இயற்கை நீருற்று(சுனை) :
திருக்கோவில் வலப்புறம் இயற்கை நீர் ஊற்று வேர்களைப்பிடித்து இடைவிடாது வந்து கொண்டிருக்கிறது. கோவிந்தா கோவிந்தா எனக்குரல் எழுப்ப சுனையில் வருகின்ற நீரின் அளவு அதிகரிக்கிறது. சுனையின் நீர் தொடங்கும் இடத்தையும் முடியும் இடத்தையும் காண முடியாதது ஓர் ஆச்சர்யமே.
பாலமலையின் அதிக குளுமையான பகுதியாக திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கோவில் அமைவிடமே பெரிய குகை போன்ற அமைப்பில் பெரிய பாறைக்கு அடியில் உள்ளது சற்று பயத்தை தந்தாலும் இங்கு இறைவன் இருப்பதை அருமையாக உணரலாம் . ஸ்ரீகவ்விய பெருமாள் திருக்கோவிலை கெவ்வியப் பெருமாள் திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
திருக்கோவில் அமைவிடத்தில் ஸ்ரீஅர்ஜீனர் தவசிக்கு புறப்பட்ட இடமாகவும் கருதப்படுகிறது. பாலமலையில் அமைந்துள்ள ஸ்ரீ கவ்வியப் பெருமாள் தரிசிக்க வேண்டிய ஆலயமாகும் . வழிகாட்டி இல்லாமல் செல்லமுடியாதென்பதால் திருக்கோவில் செல்ல ஆர்வமிருப்பவர் எமது செல்லிடப் பேசியில் அழைக்கலாம் .
மற்ற திருக்கோவில் போல் அல்லாமல் முற்றிலும் வித்யாசமாக இயற்கை எழில் கொஞ்சும் அழகிய ஸ்ரீ கெவ்வியப்பெருமாளை தரிசித்து தரித்திரங்கள் போக்கி செல்வநிலை மேலோங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட அழைக்கிறேன் .
நட்புடன் குரு.பழ.மாதேசு
Subscribe to:
Post Comments (Atom)
பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை
நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...
-
மனித வாழ்வில் எத்தனோயோ வரங்கள் கிடைக்கப்பெற்றாலும் குழந்தை வரம் முக்கியமானது. அதுவே நம் அடுத்த தலைமுறையின் சொத்தாகும் . குழந்தையில்லா பெண...
-
பாலமலை அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில் palamalai sri sidheswara temple; kolathur, ...
2 comments:
கோவிந்தா கோவிந்தா எனக்குரல் எழுப்ப சுனையில் வருகின்ற நீரின் அளவு அதிகரிக்கிறது. சுனையின் நீர் தொடங்கும் இடத்தையும் முடியும் இடத்தையும் காண முடியாதது ஓர் ஆச்சர்யமே.
ஆச்சரியமளிக்கும் அரிய பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
very very useful information,
i wish for your health &wealth
sir so for i visited the balamalai four times by varies way.
1. kuruvaretiure
2.umaretiyure
3.neerenchi petai.
i feel neerenchipetai via is more
comfortable to reach the temple.
this year we plan to reach the top temple by kannamuchiyure via
pls suggest the month for the trip.
with regards.
ramaswamy
9791902822.
Post a Comment