Monday, December 26, 2011

SRI ULAGEASHWARAR tirukkovil, olagadam ,bhavani taluk




அருள்மிகு உலகேஸ்வரி உடனமர் உலகேஷ்வரர் திருக்கோவில் ,ஒலகடம்


திருக்கோவில் அமைவிடம் :

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் ஒலகடம் என்ற அழகிய ஊரில் அமைந்துள்ளது.

செல்லும் வழி :

பவானியில் இருந்து சுமார் 16 கி.மீட்டர் தொலைவில் வெள்ளித்திருப்பூர் செல்லும் வழியில் ஒலகடம் என்ற சிற்றூர் உள்ளது . அங்கு இறங்கி 500 மீட்டர் கிழக்கு நோக்கி நடந்தால் திருக்கோவில் வருகின்றது .

ஒலகடம் என்ற ஊர் பழங்காலத்தில் "உலகடம் " என்று ஸ்ரீ உலகேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருப்பதால் பெயர் வந்திருக்கும் என்றும் .காலப்போக்கில் பேச்சுவழக்கில் மருவி ஒலகடம் என்றும் பெயர் மாறி இருக்கும் என்பது நம் ஆய்வு .

திருக்கோவில் மூலவர் :

ஸ்ரீ உலகேஸ்வரர்



அம்பாள் :


ஸ்ரீ உலகேஸ்வரி

மூலவர் ஸ்ரீ உலகேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக லிங்க உருவில் அழகாக அமர்ந்துள்ளது தனிச்சிறப்பாகும் .பழங்கால சிவாய திருக்கோவில்களில் இதுவும் ஒன்றாகும் . திருக்கோவில் முகப்பில் இராஜகோபுரம் அழகானது . உள்ளே நந்தீஷ்வரர் தொழுது மூலவர் ஸ்ரீ உலகேஷ்வரரை தரிசனம் செய்து அம்பிகை ஸ்ரீ உலகேஸ்வரி தனிச்சன்னதியில் தரிசிக்க அழகான ஒன்றாகும் . திருக்கோவில் வளாகம் பெரியது.


திருக்கோவில் "பன்னிருகரத்தாய் போற்றி " என்னும் பாடலுக்கு இணங்க ஸ்ரீ முருகப்பெருமான் பன்னிருகரங்களுடன் அழகாய் ஸ்ரீவள்ளி தெய்வானை உடன் நிற்க அழகன் முருகன் என்னும் சொல்லிற்கு ஏற்ப அழகான சிற்பமாய் இறைவன் முருகர்அமர்ந்திருக்கிறார். எல்லா சிவலயங்களைப் போலவே திருக்கோவில் சண்டிகேஷ்வரர் ,காலபைரவர் ,துர்க்கை ,நவகிரகங்கள் அழகாய் அமர்ந்துள்ளார்கள் .

அழகுடன் அமைந்த ஸ்ரீ உலகேஷ்வரி உடனமர் உலகேஷ்வரர் திருக்கோவிலை தரிசனம் செய்து நலன்கள் பல பெற்றிடுங்கள் . பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெறுகின்றது. மாசி மகா சிவராத்திரி பூஜை வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.

திருக்கோவில் காலத்தை அறிய முடியவில்லை எனினும் சுயம்பு மூர்த்தியாய் லிங்க உருவில் சிவபெருமான் அருள்பாலிக்கின்ற காரணத்தால் திருக்கோவிலை ஓர் முறையேனும் வாழ்வில் தரிசித்து இறையருள் பெற அன்புடன் அழைக்கிறேன்

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...