


அருள்மிகு ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் திருக்கோவில் குருவரெட்டியூர்
ARULMIGU SRI KALYANA SUBRAMANIYAR THIRUKKOVIL GURUVAREDDIYUR
ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பல திருக்கோவில்களை நம் வலைப்பூவில் எழுதப்பட்டிருந்தாலும் நம்மை சுற்றி நமக்கருகே உள்ள கோவிலைப்பற்றி எழுதுவதில் தனிச்சுகம் உண்டு. அப்படி இன்றைய தினம் தரிசித்த பவானி வட்டம் குருவரெட்டியூரில் (GURUVAREDDIYUR)அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனமர் கல்யாண சுப்பிரமணியர் திருக்கோவில் சுவாரஷ்யமானது .
குருவரெட்டியூர்(GURUVAREDDIYUR) உட்பகுதியில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் திருக்கோவில் எனவும் மக்களால் அழைக்கப்படுகிறது.
ஸ்ரீ முருகர் துதிப்பாடல் :
விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள்,
மெய்மைகுன்றா மொழிக்குத்துணை முருகா என்னும்
நாமங்கள் முன்பு செய்த பழிக்குத் துணை
அவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணை
வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.
மூலவர் :
வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர்
திருக்கோவில் பழங்காலத்திய கோவிலாகும் .முலவர் ஸ்ரீ முருகப்பெருமானின் சிலை அழகும் சிறப்பும் தன்னகத்தே கொண்டு தம்மை நாடி வரும் பக்தர்களை குறைதீர்த்து அருள்பாலிக்கிறார் .திருக்கோவில் வளாகத்தில் அமைந்த வன்னி மரம் அழகானது.
திருக்கோவில் முன்மண்டபமும் ,கல்யாணமண்டபமும் தற்போது பெரும் முயற்சியால் உருவாகியுள்ளது .திருக்கோவிலுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் நம் குருவரெட்டியூர் (GURUVAREDDIYUR)பகுதிவாழ் நண்பர்கள் திருக்கோவிலுக்கு உதவ விரும்பினால் திருக்கோவில் நன்பர்கள் குழுவை (75022-19348) தொடர்பு கொள்ளலாம் .
மார்கழி மாதத்தில் சிறப்பான பஜனைக்குழுவால் அழகான திருவாசகம் ,கந்தர் அநூபூதி,கந்தர் அலங்காரம் ,தேவாரம் இசைக்க அழகான பாடல்கள் பாடி ஊருக்கே ஆன்மீகத்தால் இறைவனை இழுக்கின்ற பஜனைக்குழு போற்றுதலுக்குரியது.
அமைதியான அழகாக அமைந்துள்ள குருவரெட்டியூர்(GURUVAREDDIYUR) ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியரை தரிசனம் செய்து எல்லா வளமும் நலமும் பெறுங்கள் . குருவரெட்டியூர் (GURUVAREDDIYUR-638504)பவானியில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
No comments:
Post a Comment