Saturday, December 31, 2011

ஸ்ரீ திருமண்மலை கல்யாண லஷ்மிநாராயணப்பெருமாள் திருக்கோவில் ஒட்டப்பாளையம் . ஒலகடம்



திருமண்மலை
ஸ்ரீ திருமண் கல்யாண லஷ்மி நாராயணப்பெருமாள் ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் .
.ஒலகடம்


திருக்கோவில் செல்லும் வழி : ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் ஒட்டப்பாளையம் கிராமம் ஒலகடத்தில் இருந்து பருவாச்சி செல்லும் சாலையில் வெடிக்காரன்பாளையம் .தாண்டாம்பாளையம் என்னும் கிராமத்தில் உள்ளது. ஒலகடம் பவானியில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் வழியில் உள்ளது.

திருக்கோவில் மூலவர் :
ஸ்ரீ திருமண் கல்யாண லஷ்மி நாராயணப்பெருமாள் திருக்கோவில் சிறப்புகள் :

திருக்கோவில் மூலவர் ஸ்ரீ கல்யாண லஷ்மி நாராயணப்பெருமாள் முற்றிலும் திருமண்ணால் திருமேனி கொண்டும் தாயாரை வலப்புறம் கொண்டு திருமண் கல்யாண லஷ்மி நாராயணராக திருமணக்கோலத்தில் திருமண்பெருமளாக காட்சி அளிக்கிறார். ஈரோடு மாவட்டத்தில் குன்றின் மேல் பெருமாள் திருக்கோவில் . சில நேரங்களில் இப்பெருமாள் உக்கிரமாகி நரசிம்ம மூர்த்தியாக மாறுவதால் இவர் "திருமண் லஷ்மி நரசிம்ம பெருமாளாக அழைக்கப்படுகிறார் . திருப்பதியைப் போன்று வேங்கடவன் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார் . திருமண் என்றால் நாமக்கட்டி எனபொருள் . மூலவர் நாமக்கட்டியால் ஆனவர் என்பதே விஷேசம் . திருமண் எனப்படும் நாமக்கட்டியே இங்கு பிரசாதமாக பக்தர்களுக்கு தரப்படுகிறது. இறைவனுக்கு பழமையான ஆலயம் என பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட அழகான வைணவத்திருத்தலம் என போற்றப்படுகிறது. திருக்கோவில்
பலன்கள் : தனது வலப்புறத்தில் அன்னை பத்மாவதி தாயாரோடு இறைவன் திருமணகோலத்தில் காட்சி தருவதால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு ஜாதகத்தை வைத்து வேண்டிக்கொண்டால் நல்லபடியாய் திருமணம் நடைபெறுகிறது .
திருக்கோவில் ஒலகடத்தில் இருந்து பருவாச்சி செல்லும் வழியில் 3வது கி.மீட்டரில் அமைந்துள்ளது. திருக்கோவில் மேல் செல்ல பழங்காலத்தில் அமைக்கப்பட்ட 50 படிகட்டுகளும் ,

தற்போது அமைக்கப்பட்ட பாதைகள் சிறிய வாகனங்கள் செல்ல ஏதுவான பாதையும் உள்ளது. முகப்பில் உள்ள பெரிய ஸ்ரீ ஆஞ்சனேயர் சிலையும் ,அழகிய கொடிமரமும் வணங்கத்தக்கது. பூஜைகள் : பிரதிமாதம் ஏகாதசி திதி அன்று திருமண்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் . பிரதி மாதம் பெளர்ணமி மாலை 06.00 மணி முதல் 08.00 மணிவரை சத்திய நாராயண பூஜையும் ,சுதர்சண ஹோமமும் ,திருவிளக்கு பூஜையும் நடைபெறும் . பிரதிமாதம் பஞ்சமி திதி அன்று மகாலட்சுமிக்கு சிறப்பு சகஸ்கர நாமவளி பூஜை நடைபெறும் . பிரதி மாதம் முதல் ஞாயிறு காலை 11.00 முதல் மதியம் 1 மணி வரை ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனமும் ,சஹஸ்ரநாமாவளியும் ,தீபாரதனையும் நடைபெறும் . பிரதிமாதம் மூல நட்சத்திரத்தி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெறும் . திருக்கோவில் பற்றிய விரிவான ஆராய்வுகள் தேவைப்படுவதால் விரிவுபடுத்தப்படும் .

1 comment:

கற்பதை கற்பிப்போம் said...

nice post nanba
come to my blog www.suncnn.blogspot.com

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...