



ஸ்ரீ செளந்திர நாயகி உடனமர் வாகீஷ்வரர் திருக்கோவில் ,பட்லூர் .வெள்ளித்திருப்பூர்
ஈரோடு மாவட்டத்தில் பல சிவாலயங்கள் புகழ் பெற்ற பழங்கால சிவாலயங்கள் அமைந்துள்ளன. அவற்றில் பழமையான ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ வாகீஷ்வரர் திருக்கோவில் முக்கியமான ஒன்றாகும் .
திருக்கோவில் செல்ல வழி :
பவானியில் இருந்து வெள்ளித்திருப்பூர் சென்னம்பட்டி செல்லும் வழியில் 20கி.மீட்டர் தொலைவில் பட்லூர் என்னும் அழகிய ஊரில் குடிகொண்டு மக்களுக்கு அருள் பாலிக்கிறார் . அந்தியூரில் இருந்து நால்ரோடு வந்து (8 கி.மீட்டர் ) பட்லூரை அடையலாம் .
பவானி வட்டம் அம்மாபேட்டையில் இருந்து அந்தியூர் செல்லும் வழியில் நால்ரோட்டில் இறங்கி சுமார் 1 கி.மீட்டர் வடக்கில் பயணித்தால் திருக்கோவிலை அடையலாம் . திருக்கோவில் தோன்றிய காலம் 1000 ஆண்டுகள் இருக்குமென இங்குள்ள ஸ்தல மரமான வில்வமும் ,அருகேயுள்ள அரசமரங்களும் இயம்புகின்றன.
திருக்கோவில் மூலவர் :
ஸ்ரீ வாகீஷ்வரர்(தாமரை பீடத்தில் சிவ லிங்கமாக அமைந்துள்ளார் )
அம்பாள் :
ஸ்ரீ செளந்திர நாயகி
மூலவர் :
திருக்கோவில் சாமி லிங்க உருவில் தாமரை மேல் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ வாகீஷ்வரர் காட்சி அளிக்கிறார் .திருக்கோவில் சிவலிங்கம் கிழக்கு பார்த்தவாறு அழகாக அமைக்கப்பட்டுள்ளது.
வெளிப்புறம் பழங்காலத்தில் சிறுகற்களால் வெளிப்பிரகாரம் கட்டப்பட்டுள்ளது. திருக்கோவில் பிரதோஷ பூஜை நடைபெறுகிறது. திருக்கோவில் எப்போதும் திறந்திருக்கும் . அமைதியான சூழலில் சிவதரிசனத்திற்கு ஸ்ரீ வாகீஷ்வரர் திருக்கோவில் ஏற்புடையது.
திருக்கோவில் பெரிய அளவில் எடுத்துச்செய்ய யாரேனும் வருங்காலத்தில் வரக்கூடும் . எளிமையாக இருந்தாலும் கம்பீரமாக காட்சிதரும் சிவாலயம் . ஸ்ரீ செளந்திரவல்லி அம்பாள் தனிச்சன்னதியாக அழகாக நேர்த்தியான வடிவமைப்பில் அமர்ந்திருக்கிறார் . முகப்பில் உள்ள நந்தீஷ்வரர் உயிர்புடையவர் ,
திருக்கோவில் பின்புறமுள்ள ஸ்ரீ கணபதி, பன்னிருகரம் கொண்ட ஸ்ரீமுருகப்பெருமான் .ஸ்ரீ சண்டிகேஷ்வரர் , ஸ்ரீ காலபைரவர் என ஓர் பழங்கால சிவாலயத்தை வழிபட்ட திருப்தி ஏற்படுகிறது. வாய்ப்புகள் கிடைத்தால் சிவாலயத்தை தேடி வழிபடுபவர்களாக இருந்தால் வந்து வணங்கி செல்லுங்கள் .
ஸ்ரீ வாகீஷ்வரர் உங்களுடன் இருக்க வேண்டுகிறேன் .
No comments:
Post a Comment