Wednesday, December 14, 2011

கி.பி 1300 ல் தோன்றிய ஸ்ரீ விஜயகிரி வேலாயுதசாமி திருக்கோவில் .சீனாபுரம் .பெருந்துறை





ஸ்ரீ விஜயகிரி வேலாயுதசாமி திருக்கோவில்.மலைச்சீனாபுரம்


திருக்கோவில் அமைவிடம் :

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சீனாபுரம் என்னும் ஊரில் அமைந்த பழமைஅற்புத ஸ்ரீ முருகப்பெருமான் ஆலயமாகும் .

முருகப்பெருமான் துதிப்பாடல் :

கந்த சஷ்டி கவசம் நேரிசை வெண்பா

துதிப்போர்க்கு வல்வினைபோம் :துன்பம்,
போம் : நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம்
பலித்துக் கதித்து ஓங்கும் நிஷ்டையு ங்கை
கூடும் : நிமலரருள் கந்தசஷ்டி கவசந்தனை.


திருக்கோவிலுக்கு எப்படிச்செல்வது :

ஈரோட்டில் இருந்து பெருந்துறை வந்து பெருந்துறையில் இருந்து குன்னத்தூர் செல்லும் வழியில் சுமார் ஐந்தாவது கி.மீட்டரில் ஆயிக்கவுண்டம் பாளையம் பிரிவில் மலைச்சீனாபுரத்தில் ஆலயம் அமைந்துள்ளது.

திருக்கோவில் அமைப்பும் சிறப்பும் :

"குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்குமிடம்" என்பது பெரியோர்கள் வாக்கு .ஆனால் இங்கு குன்று இல்லை. ஆனால் குன்று ஒன்றை உருவாக்கி ஸ்ரீ முருகரை சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு விஜயகிரி வேலாயுதசாமி திருக்கோவில் எழுப்பப்பட்டுள்ளது . கி.பி 1300ஆண்டுகளில் நன்னூலை இயற்றிய பவணநந்தி முனிவரால் திருக்கோவில் எழுப்பப்பட்டதாக வரலாற்று ஆய்வு.

நன்னூலை எழுதி வெளியிடப்பட்ட காலமும் கி.பி 1300 அல்லது 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதால் திருக்கோவில் 700 ஆண்டுகளுக்கு மேலாக பழமைவாய்ந்தது என்பது உறுதியாகிறது.

பவனந்தி முனிவர் சமண மதத்தை சார்ந்தவர் என்றும் சில கருத்துக்கள் உண்டு . அதை ஏற்கும் வண்ணம் அக்காலத்தில் விஜயநகர பேரரசின் தலைமையிடமாக இருந்த விஜயபுரி தற்போது விஜயமங்கலமாக திகழும் இடத்தில் சமணர் கோவிலில் பவணந்தி முனிவருக்கு சிலை இருக்கிறது .

அதேபோல திங்களுர் செல்லும் வழியில் உள்ள கோவில்களிலும் பவணந்தி முனிவர் வணங்கிய ஷ்தலம் பற்றிய புனைவுகள் உள்ளதால் சீனாபுரத்தில் பவணந்தி முனிவர் வாழ்ந்த இடமாகும் .

முருகப்பெருமானின் மேல் கொண்ட பற்றின்பால் பவணந்திமுனிவர் ஸ்ரீ முருகருக்காக ஓர் திருக்கோவிலை உருவாக்கி பலகாலம் பூஜைசெய்தார் . அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த ஸ்ரீ முருகர் ஆலயமே விஜயகிரி வேலாயுதசாமி திருக்கோவிலாகும் .


திருக்கோவில் தற்போதைய அமைப்பு :

பெருந்துறை அருகேயுள்ள மலைச்சீனாபரம் என்னும் அழகிய ஊரின் துவக்கத்தில் அமைந்த திருக்கோவில் அடிவாரத்தில் முருகப்பெருமானின் வாகனமான மயிலை தொழுது படிக்கட்டின் முகப்பில் யானைச்சிலையை ரசித்து நான்கு படிக்கட்டுகள் ஏறினால் வலப்புறம் அரசமரத்தடி விநாயகரை வணங்கிவிட்டு மேலே படிக்கட்டில் நடக்கவேண்டும் . அருகே வில்வமும் ,பாலை மரமும் அமைந்துள்ளது .

சமதளத்தில் உருவாக்கப்பட்ட சிறிய குன்றில் சுமார் 25 படிக்கட்டுகள் மட்டுமே ஏறினால் திருக்கோவில் முகப்பை அடைந்து கொடிமரம் தரீசித்து உள்ளே சென்றால் மூலவரான ஸ்ரீ வேலாயுதசாமியை தரிசனம் செய்யலாம் . அழகாக நேர்த்தியாக வடிவமைக்கபட்ட ஸ்ரீ முருகப்பெருமான் சிலை எங்கும் காணக்கிடைக்காத ஒன்றாகும் . நம்மை பார்த்து அடிக்கடி வரச்சொல்கிற சக்தியுடையவர் .

திருக்கோவில் சுற்றிலும் சிவாலயங்களைப்போல நவகிரக சன்னதிகள் ,தட்சிணாமூர்த்தி சன்னதி,சனீஷ்வரர் சன்னதி. என நிறைய சன்னதிகள் விஷேசமானது. நிறவான தரிசனத்திற்கு ஏற்ற கோவில் . விழாக்காலங்களில் ,சஷ்டி,தைபூசம் , செவ்வாய் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் . இப்பகுதிக்கு வந்தால் ஸ்ரீ முருகப்பெருமானின் அருள் பெற்றுச்செல்லுங்கள் .

நன்னூல் பற்றியும் பவணந்திமுனிவர் பற்றியும் சிலகுறிப்புகள் :

நன்னூல் கி.பி 13 ஆம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் இலக்கணத்தை தெளிவாக சுருக்கமாக கூறும் நூலாகும். "அருங்கலை விநோதன்" என்ற பட்டம் வாங்கிய சீயங்கன் என்னும் அரசனின் வேண்டிக்கொண்டதற்கு இணங்க நன்னூலை பவணநந்தி முனிவரால் இயற்றப்பட்டதாக வரலாறு.

தற்போதும் எழுத்து .சொல் இலக்கணத்தை கற்க நல்ல நூல் நன்னூலகும் .பவநந்தி முனிவர் முனிவரால் உருவாக்கப்பட்ட பழம் பெருமை வாய்ந்த ஸ்ரீவிஜயகிரி வேலாயுதசாமி திருக்கோவிலை வந்து வணங்கி எல்லா வளமும் நலமும் பெறுங்கள் .

பவணந்தி முனிவரின் இறுதிக்காலம் அறிய இயலாததால் தேடல் தொடரும் .

நட்புடன் குரு.பழ.மாதேசு. குருவரெட்டியூர்

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...