Friday, February 1, 2013

திருப்பங்கள் தரும் திருபாம்புரம் வழிபாடு

திருப்பாம்புர தரிசனம் தழழும் மேனியன்
தையல் ஓர்பாகம் அமர்ந்தனன் .
தொழலும் தொல்வினை தீர்க்கின்ற சோதி - சோற்றுத்துறை ,
கழலும் கோவை உடையவன்காதலிக்கும் இடம் ,
பழனம்,பாம்பணி,பாம்புரம் தஞ்சை தஞ்சாக்கையே.

 ஸ்ரீ
சுந்தரரின் நாட்டுத்தொகை


 மூலவர் : பாம்புரநாதர்
என்றும்
,ஷேசபுரிஸ்வரர் ,பாம்பீசர் , பாம்புரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார் .


அம்பிகை- வண்டு சேர் குழலி
 என்றும் பிரமராம்பிகை ,வண்டார் பூங்குழலி
என அழைக்கப்படுகிறார் .

 ஸ்தல அமைவிடம் :

 கும்பகோணத்தில் இருந்து
காரைக்கால் செல்லும் வழியில் கொல்லுமாங்குடிக்கு மேற்கே கற்கத்தி எனும்
ஊரில் இருந்து தென் திசையில் திருப்பாம்புரம் என்னும் அழகிய ஊர்
அமைந்துள்ளது.

 செல்லும் வழி :

1. கும்பகோணத்தில் இருந்து கொல்லுமாங்குடி
வழியாக காரைக்கால் செல்லும் பேருந்தின் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி
வரலாம் .மயிலாடுதுறை திருவாரூர் சாலையும் குடந்தைசாலையும் ,காரைக்கால் சாலையும் சந்திக்கும் இடமான கொல்லுமாங்குடி பேராளம் ஆகிய ஊர்களுக்குஅருகே திருபாம்புரத்தை மினி பஸ் மூலம் அடையலாம்.


 ஸ்தல மரம் : வன்னிமரம்

 தீர்த்தம் : ஆதிசேட தீர்த்தம்

 சன்னதியின் சிறப்பு :

இராகு கேது ஏக சரீர சன்னதி

 ஸ்தல சிறப்பு:

காவிரி ஆற்றின் உள்ள பாடல் பெற்ற
ஸ்தலங்களில் 59 வது ஸ்தலம் .திருஞானசம்பந்தரால், திருநாவுக்கரசர் ,
சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும் .

காலம் : 1200 ஆண்டுகள்
பழமையானது .கி.பி 1178முதல் 1218 வரை ஆண்ட 3 ஆம் குலோத்துங்க சோழன் காலத்திய கால்வெட்டே முதல் கல்வெட்டாகும் ,அதற்கு முந்தையகாலம் அறிய இயலாதது .

 ஸ்தல வரலாறு:

சிவனின் சாபம் நீங்க ஆதிசேடன் சிவராத்திரி
முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும் இரண்டாம் சாமத்தில்
திருநாகேஸ்வரம் நாகநாதர் மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் வந்து
வழிபட்டு விமோச்கனம் பெற்றதாக வும் ,திருப்பாம்புரத்தில் வாழும்
பாம்புகள் அனைத்தும் சிவனடியார்களாக விளங்குவதால் யாரையும்
தீண்டுவதில்லை.

 ஆதிஷேகட தீர்த்தம் :

 திருக்கோவில் முன்பாக அழகிய
தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. இங்கே வரும் பக்தர்கள் குளித்து
ஆனந்தமடைகிறார்கள். ஆச்சர்யம் : திருக்கோவில் உள்ளே இறைவன் இறைவியின் மேல் நல்லபாம்பு சட்டை உரித்தது 2002ல் நடந்த அற்புத நிகழ்வாகும் .

முடிவுரை:

 கடந்த ஆறுமாதத்திற்கு முன்பூ சென்ற அற்புத திருக்கோவிலில்
திருப்பாம்புரமும் ஒன்றாகும் . பல தோஷங்கள் மற்றும் ஜோதிடத்தில்
கூறப்படும் நாகதோஷங்களை நீக்கும் அருமருந்தாக திருப்பாம்புரம்
விளங்குகிறது.

 இராகுவும் கேதும் ஓரே உடலாக விளக்கும் அற்புத பாடல்
பெற்ற ஸ்தலமாகும் . எனது இந்த குடந்தை பயணத்தில் சில மாற்றங்கள் எம்
வாழ்வில் ஏற்பட்டன. திருக்கோவில் உள்ளே கணீர் குரலில் பாடலுடன் பாடி
பூஜிக்கின்ற திருக்கோவில் சிவாச்சாரியாரை பார்த்து அதிசயித்து நின்றேன்
.
 நிறைவான திருக்கோவில் வந்து வணங்கி ஸ்ரீ திருப்பாம்புரநாதர்
அருளைப்பெற்று உய்யுங்கள் . நன்றி

Wednesday, January 30, 2013

கருவூரார் சித்தர்

கருவூரார் என அழைக்கப்ப்படும் கருவூர்ச்சித்தர் பதிணென் சித்தர்களில்
ஒருவராவார் . கருர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாணபசுபதிஷ்வரர்
திருக்கோவில் தென்மேற்கு மூலையில் தனி சன்னதி அமைந்துள்ளது.

இவர் தஞ்சை பெரிய கோவில் உள்ளே ஜீவசமாதியாகி உள்ளதாகவும் சில குறிப்புகள்  உள்ளன.அதேபோல கரூர் சிறப்பு மிக்க வெண்ணெய்மலை (நவநீதகிரி) ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோவிலில் திரு உருவச்சிலையாக கருவூரார் அமர்ந்துள்ளார் .

 இராஜராஜசோழன் காலத்தில் வாழ்ந்த இவர் பல அற்புத
சித்துக்களை அறிந்தவர் . பழனி சித்தர் போகரின் சீடராக மாணக்கராக இருந்து
பல சித்துக்கள் அறித்தவர் .

 கருவூரார் செய்த சில அற்புத சித்துக்கள்:

கருவூரார் ஒரு முறை திருநெல்வேலி சென்று நெல்லையப்பரை வணங்கி
நெல்லையப்பா வருக வருகவென அழைக்க ஈசன் வராது போகவே கோபங்கொண்ட கருவூரார் ஈசன் நான் அழைத்து வராததால் இங்கில்லாமல் போகட்டுமென சபித்து நெல்லையை விட்டு வெளியேறினார் .

 ஈசன் அடியார்களை உடனடியாக அழைத்து
கருவூரார் நான் வர காலம் தாழ்த்தியதால் எம்மை சபித்து செல்கிறார் .
வாருங்கள் நாம் அழைத்து வருவோம் எனக்கூறி கருவூரார் முன் அடியார்களுடன் தோன்றி சமாதானம் செய்து ஈசனே காட்சி கொடுத்ததாக வரலாறு ,

பின்
திருவிடைமருதூரில் ஈசனை சென்று வணங்கிய கருவூரார் சித்தருக்கு, சிவன்
காட்சி தந்து கரூர்க்கு வருக என அழைத்ததார் . சிதம்பரம் நடராஜர்
உருவச்சிலை போகரின் ஆணையால் கருவூரார் உருவாக்கியதாகும் . இவர் எழுதிய கெவுன சாஸ்திரம் ,சித்த மருத்துவம் நூல்கள் புகழ்பெற்றது.

மழைவாரத காலத்தில் இவர் வாக்கால் மழை பொழிந்ததாம் . ஒருமுறை சிவபெருமான்திருக்கோவில் கதவு திறக்காதபோது கவிபாடியே திறந்தாராம் . சிவத்தல யாத்திரையாக சென்ற இவர் வராகிரி ,திருக்குருகூர் ,திருச்செந்தூர்
,திருநெல்வேலி ஆகிய ஆடங்களில் பல அற்புதங்கள் செய்துள்ளார் .

 இராஜ இராஜசோழன் தஞ்சைபெரிய கோவில் கட்டியபோது இராஜ இராஜ சோழன் தஞ்சை பெரிய கோவில்வடிமைக்க பல ஆலோசனைகளை வழங்கினார் .

 தஞ்சைப்பெரிய கோவில்கட்டிக்கொண்டிருந்த இராஜ இராஜ சோழன் மற்ற சிலரின் ஆலோசனையின் படி கருவூராரின் சில ஆலோசனைகளை மதியாது சில செயல்கள்களை செய்ய மூலவரான
தஞ்சாவூர் பெரிய கோவில் லிங்கத்தை சரியாக பொருத்த முடியாமல் பொறியாளர்கள் அவஷ்தைப்பட,,,

 இராஜ இராஜன் கருவூராரின் அருமையை உணர்ந்து மன்றாடி கேட்டுக்கொள்ள மூலஷ்ஸ்தான கட்டுமான பகுதிக்கு வெற்றிலையை வாயில் மென்றபடி வந்த கருவூரார் சரியாக பிடிக்கும் படி கூறி தன்
வெற்றிலைச்சாற்றை மென்று உமிழ்தாராம் . மூலவர் சிலை ஆடாமல் அசையாமல் பிடித்துக்கொண்டது.

 போகரின் சீடாரான கருவூரார்க்கு இரசவாதக்கலை தெளிவாய்
தெரிந்தற்கு இது ஓர் சான்றாகும் . தஞ்சை பெரிய கோவில் ஆண்டு கி.பி 1000
ஆகும் .

இராஜ இராஜ சோழன் காலத்தே வாழ்ந்த கட்டுமானம் பற்றி அறிந்திராத அந்த காலத்தில் சுற்றிலும் களிமண் பூமியாக உள்ள தஞ்சாவூரில் பெரியகோவில் கட்ட உதவியாக இருந்த ஸ்ரீ மத் கருவூரார் நாம் வணங்கவேண்டியசித்தர் .

 முடிவுரை :

கருவூராரை வணங்க கொங்கு நாட்டில் அற்புத சன்னதி
கருர் ஸ்ரீ பசுபதீஷ்வரர் திருக்கோவிலில் வந்து வணங்கி விட்டு செல்லுங்கள்


. ஓம் சிவாய நமஹ

Sunday, January 27, 2013

ஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு

                   SRI MASANI AMMAN TEMPLE HISTORY.ANAIMALAI                                                                      


பழங்காலத்தில் நன்னன் என்கிற மன்னன் ஆனை மலைப்பகுதியை ஆட்சி செய்து வந்தார் . அவரைச்சந்திக்க ஒரு துறவி வந்தார் .அவரை வரவேற்று பல உபசரிப்புகள் நன்னன் செய்தாராம்
.
அரசனின் உபரசரிப்பில் ஆனந்தமான துறவி அவருக்கு ஓர் மாங்கனியை கொடுத்து

" மன்னா இது அதிசய மாங்கனி இதை எனது குருநாதர் பரிசாக அளித்தார் .
உன்னால் மகிழ்வுற்ற நான் இந்த மாங்கனியை பரிசளிக்கிறேன் ,முக்கியமான
ஒன்று இதை உண்டபின் இந்த மாங்களி கொட்டையை ஆற்றில் விட்டு விடு .
இல்லையெனில் இது ஆபத்தாக முடிந்து விடும்''' .


 மன்னர் சரி என்றவாறு துறவியை வழியனுப்பி விட்டு மாங்கனியை சுவைக்கத்துவங்கினார் .சுவை நன்றாக இருக்கவே
அந்த மாங்கொட்டையை துறவி சொன்னதை அலட்சியப்படுத்தி தமது நந்தவனத்தில்ஆற்றோரம் நட்டு பராமரித்து வந்தார் .


 மரம்பெரியதாகி பழம் விடும் நேரம்
வந்ததும் அரண்மணைக் காவலாளிகள் வைத்து மாங்கனியை யாரும் பறிக்ககூடாது .அப்படி சாப்பிட்டால் மரண தண்டனை என அறிவித்தார் . இதைக்கேள்லிப்பட்டதுறவி மன்னரிடம் வந்து

''மன்னா நீங்கள் அந்த மாங்கனி கொட்டையை நான்
சொன்னதை கேளாமல் மரமாக்கி விட்டீர்கள் . நீங்கள் நினைப்பது போல் அந்த
மரத்தில் ஓரே பழம் மட்டுமே பழுக்கும் அதையும் நீங்கள் சாப்பிடக்கூடாது
. அதை தெய்வீகப்பெண்மணி ஒருவரே சாப்பிடுவார் . நீங்கள் சாப்பிட
நினைத்தால் இந்த தேசம் அழிவுறும் '''

என உரைத்து கிளம்பினார் துறவி. மன்னர்
நன்னன் அதை அலட்சியப்படுத்தி இந்த மாமரத்தில் பழுக்கும் பழத்த
மாம்பழத்தை யாரேனும் சாப்பிட்டால் மரண தண்டணை என அறிவித்தான். தாரகன் என்பவர் வியாபார விஷயமாக தன்மகள் தாரணி உடன் ஆனைமலைக்கு வந்திருந்தார் .


அப்போது அவர்கள் வீட்டின் அருகில் இருந்த தோழிகளுடன் தாரணி ஆற்றில்
குளிக்கச்சென்றார் . அங்குதான் அரசனின் நந்தவனமும் அதிசயமாமரமும்
இருந்தது . தாரணி நீராடும்போது அந்த மாமரத்தில் இருந்து தன் அருகே
விழுந்த மாங்கனியை எடுத்து சாப்பிட்டார் .

 மற்ற பெண்கள் இது அரசகட்டளை
இதை சாப்பிட்டு விட்டாயே ராஜ தண்டனை கிடைக்குமே என பதறினார்கள் .
பயத்தில் உடனடியாக கிளம்பினார் . தாரணின் அப்பாவிடம் இந்த விஷயத்தை
கூறினார்கள் .

அதற்குள் இந்தவிஷயம் மன்னர் காதுக்கு எட்டியது .காவலாளிகளை
விட்டு தாரணியை கைது செய்து அரண்மனைக்கு கூட்டிச்சென்றார்கள் .குற்றம் சாட்டப்பட்டது .தாரணி அழுது புலம்பினால் அரசரின் அறிவிப்பு அறியாமல்பிழையாகி விட்டது ,மன்னிக்கவேண்டினாள் .

அரசனோ இரக்கில்லாமல் மரணதண்டனையை அறிவித்தான் . ஒரு மாங்கனிக்காக என் உயிர் பிரிந்தாலும் என்
ஆத்மா இந்த மண்ணிலிருக்கும் .

 என்புகழ் ஓங்கும் . உன் ஆட்சி அழியும் என
சூளூரைத்து கொலைகளம் சென்று உயிர் பிரிந்தாள் . அவள் உடல் மயானம்
எடுத்துச்செல்லப்பட்டது .அவள் உருவத்தைப்போலவே மண்ணால் செய்து வைத்து,மாங்கனிக்காக இறந்த கன்னியை மாங்கன்னியாக மாசானி அம்மனாக தொழுதுசென்றார்கள் '

 அரசரால் கொல்லப்பட்ட தாரணி தெய்வீக பெண் அவரே மாசாணி அம்மனாக சிறிதளவில் அவர் சமாதியில் துவங்கிய வழிபாடு அந்த ஆத்மா நம்பி
வரும் பக்தர்களை காத்து அருள்பாலிக்கிறது.

 பல்வேறு அவதாரங்களில் ஈஸ்வரி
அவதாரம் எடுத்து பல அம்மனாக அற்புதங்களை தந்திருக்கிறார் . மாசாணி அம்மன் உக்கிர தெய்வம் .

 நீண்டவாக்கில் படுத்திருக்கும் அன்னை.பிற்காலத்தில் கொடுங்கோல் மன்னன் எதிரிகளிடம் இறந்தான் . கன்னி தெய்வத்தை பலியிட்ட இடம்
பிங்கொணம்பாறை என அழைக்கப்படுகிறது.

மாசாணி அம்மனிடம் குறைகளை எழுதி
பூசாரியிடம் பக்தர்கள் தர அதை அம்மன் நிவர்த்தி செய்கிறார் . பில்லி
சூனியம் போன்ற அமானூஷ்ய சக்திகளிடம் இருந்து காக்க உக்கிரதெய்வமான மாசாணிஅம்மன வணங்கினால் நலம் பயக்கும்.

உப்பாறு படுகையில் பொள்ளாச்சியில்
இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஆனைமலையில் உள்ள மிக பிரமாண்டமாண   ஸ்ரீமாசாணி அம்மன் திருக்கோவில் அம்பிகையை வந்து வணங்கி தங்கள் வாழ்வில்
வளம் பெறுங்கள் நன்றி,