அருள்மிகு சுகவனேஷ்வரர் -சுவர்ணாம்பிகை திருக்கோவில் தரிசனம்
மூலவர் :
ஸ்ரீ சுகவனேஸ்வரர் (கலியுகத்தில் கிளி உருவம் கொண்ட சுக பிரம்மரிசி
வழிபட்டதால் சுகவனம் என்ற திருப்பெயர் ஏற்பட்டது )
அம்பாள் :
ஸ்ரீ
சுவர்ணாம்பிகை
ஸ்தல அமைப்பும் சிறப்பும் :
பஞ்ச பாண்டவர்களால் வழிபட்ட திருமணி முத்தாறு படுகையில் அமைந்த சுயம்பு லிங்கங்களில் முதலாலதாக சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
சேலம் நகரின் நடுவே கிழக்கு பார்த்த வண்ணம் 3 இராஜ கோபுரங்களை உடையதோர் அற்புத திருக்கோவிலாகும் .ஸ்தலம் ,மூர்த்தி,தீர்த்தம் ,மூன்றிலும் சிறப்புகொண்டது. சுவாமி சுயம்பாக சற்றே சாய்வாக லிங்க உருவில் காட்சிதருகிறார் .
முடியில் வேடனால் வெட்டப்பட்ட தழும்பு உள்ளதாம் . அம்பிகை
சுவர்ணாம்பிகை சன்னதியும் அருட்பார்வையும் காணற்கரியது. பிரகாரத்தின்
அருகில் ஓர் கிணறு அமைந்துள்ளது .
ஸ்தலவிருட்சம் : பாதிரி மரம்
ஸ்தலம்
விளக்கும் புத்தகங்கள் :
பாபநாச ஸ்தல புராணம்,மற்றும் அருணகிரி நாதரால்
பாடல் பெற்ற ஸ்தலம் . , சுந்தரர், ஔவையார் ஆகியோர் வழிபட்ட பாடல் பெற்றஸ்தலமாகும் .
ஸ்ரீ சுகவனேசப்பெருமானின் வேறு பெயர்கள் :
கிளிவண்ணமுடையார் , கிளிவனநாதர், பாபநாசர் ,பட்டீஸ்சுரர் ,நாகீசர்
,மும்முடிநாதர் என்றும் அம்பாள் ஸ்ரீ சுவர்ணாம்பிகை,மரகதவல்லி
,பச்சைவல்லி என்பனவாகும்.
தீர்த்தக்கிணற்றிக்கு அமண்டுக தீர்த்தம் என்றுபெயர் . இன்றுவரை இக்கிணற்றில் தவளைகள் இல்லை என்பதே ஆச்சர்யமான
செய்தியாகும் .
திருக்கோவில் காலம் : சுமார் 800ஆண்டுகள்
எனத்தெரிகிறது. கி.பி 1200களில் சுந்தர பாண்டியன் என்பவனால்
திருக்கோவில் கட்டப்பட்டதாக வரலாறு.
பூஜை நேரங்கள் :
காலை 6.00 மணி ,
காலை9.00மணி
உச்சிகால பூஜை 11.30
மாலை 5.30
இரவு 8.30பூஜையென
5 காலப்பூஜை
சிறப்பாக நடைபெறுகிறது.
ஆண்டுத்திருவிழா : வைகாசி மாதம்
முடிவுரை:
பிரம்மனால் கிளி தோஸம் பெற்ற சுகமுனிவர் சாபம் நீங்கப் பெற்ற அற்புத
ஸ்தலத்தை நீங்களும் வணங்கினால் பிறவித்தோஸம் விலகி நன்மைகள் நாளும் நடைபெறும் . அற்புத அதிர்வுகள் கொண்ட ஆலயம் .
வந்து வணங்கி விட்டு
கருத்திடுங்கள் , நன்றி

No comments:
Post a Comment