மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கும் இனிய வேளையில் மரங்களின் அடையாளங்கள் பதிவிடலாம் என ஆர்வமாக உள்ளேன்.நீண்ட காலங்களுக்கு பின் பதிவு எழதலாம் என எண்ணியுள்ளேன்.மூலிகை பற்றிய பதிவுகள் இருக்கும்.தொடர்ந்து பயணிப்போம்,நன்றி
Friday, July 8, 2016
Thursday, July 7, 2016
Wednesday, July 6, 2016
Tuesday, December 1, 2015
அருள்மிகு பிரம்மேஸ்வரர் திருக்கோவில்,சுல்வாடி, மாட்டெலி
தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு பிரம்மேஸ்வர சுவாமியை தரிசிக்கும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் வழியாக மலைப்பாதையில் கர்கேகண்டி 4 ரோடு வந்து அங்கிருந்து 4 துாரத்தில் சுல்வாடியில் பிரம்மேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அந்தியூரில் இருந்து 60 கி.மீ ஆகும். சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இங்கு வீரபத்திரசாமி, பொம்மையசாமி,தொட்டையசாமிஆகிய சன்னதிகள் அமைந்துள்ளது.மேற்படி திருக்கோயில் கொள்ளேகால்வட்டம் சாம்ராஜ்நகர் மாவட்டமாகும்.அருகில் பிரசித்திபெற்ற கிச்சிகுத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. அவசியம் தரிசிக்க வேண்டிய சிவாலயம்,நன்றி

Wednesday, July 22, 2015
அப்பா பைத்தியம் சுவாமிகள் ஜீவசமாதி
சேலத்தில் பார்க்க பல்வேறு இடங்கள் இருந்தாலும் சித்தர்களை தேடி பயணிப்பவர்களுக்கு அல்லாதார் ஆன்மீக ஸ்தலமாக விளங்குவது அப்பா பைத்தியம் சுவாமிகள் ஜீவசமாதி ஆகும் . சேலத்தில் பழைய சூரமங்கலம் அருகிலும்,சேலம் ரயில்வே ஜங்ஷனில் இருந்து அரை கிமீ தொலைவில் திருவாக்கவுண்டனுாரில் தருகவிலாஸ் என்னும் சத்குரு மாளிகையில் அப்பா பைத்தியம் ஜீவசமாதி அமைந்துள்ளது. சுவாமிகள் பற்றி. : கரூர் ஜமீன் வம்சாவழியில் 1859 ஆண்டு சித்திரை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர் .தம்மை பைத்தியம் என்று சுவாமிகள் கூறிக்கொள்வாராம், பக்தர்கள் இவரை அப்பா என்றே அழைத்தார்கள். ஆகையால் அப்பா பைத்தியம் என பக்தர்கள் அழைத்தார்கள்.12.2.2000 ஜீவசமாதி: தைமாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் ஆனார்கள்... நன்றி
Monday, June 22, 2015
அம்பிகை மாயம்மா ஜீவசமாதி
சித்தர்களை தேடி பயணப்பது ஒர் சுகமான ஆன்மீக தேடல் ,ஆயினும் ஓர் பெண் சித்தர் ஜீவசமாதியை தரிசிக்க ஆர்வத்துடன் துவங்கியது நம்பயணம் .மாயம்மா அவர்களை தரிசிக்க சேலம் வந்ததோம். மாயம்மா பற்றி விபரங்களை தேட 1920 முதல் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் வாழ்ந்த அம்பிகை அம்சம் கொண்டவர், பெண் சித்தராக வாழ்ந்து பல அற்புதங்கள் செய்தவர் என்பதை அறிந்தேன். செல்லும் வழி : சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் வழியில் மாடர்ன் தியேட்டர்ஸ் சினிமா ஸ்டுடியோ அருகில், சேலம் சட்டக்கல்லூரி எதிரில் மாயம்மா ஜிவசமாதியாக அமைந்து அருள் பாலிக்கிறார்.9.2.1992 ஆம் நாள் மாயம்மா ஜீவசமாதியான நாளாகும். பல மனக்குழப்பத்தில் இருந்த எனக்கு சென்ற மாதம் மாயம்மாவை தரிசனம் செய்தவுடன் மனதில் அமைதி உண்டானதாக உணர்கிறேன். அம்பிகை அம்சமான தாய் மாயம்மாவை வணங்கி எல்லா நலனும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
Friday, May 15, 2015
கிச்சி குத்து மாரியம்மன் திருக்கோயில்
அண்மையில் ஓர் சிறப்பான ஓர் ஆலயத்தை தரிசித்து வந்தேன்.சக்தி அம்சமான
இந்த அழகிய திருக்கோயில் மூலவராக கிச்சி குத்து மாரியம்மன்
அடைந்துள்ளார். இந்த ஆலயம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம்
கொள்ளேகால் வட்டம் மாட்டெலி அருகில் சுள்ளுவாடி கிராமத்தில்
அமைந்துள்ளது.இது அந்தியூர்-பர்கூர்-கர்கேகண்டி - கொள்ளேகால் வழியில்
கர்கேகண்டீ 4 ரோட்டில் இருந்து 3கி.மீ தொலைவில்
அமைந்துள்ளது.தரிசித்து வாருங்கள்.நன்றி
Saturday, January 17, 2015
பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை
நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...
-
மனித வாழ்வில் எத்தனோயோ வரங்கள் கிடைக்கப்பெற்றாலும் குழந்தை வரம் முக்கியமானது. அதுவே நம் அடுத்த தலைமுறையின் சொத்தாகும் . குழந்தையில்லா பெண...
-
பாலமலை அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில் palamalai sri sidheswara temple; kolathur, ...