Tuesday, February 7, 2012

ஸ்ரீ கோனியம்மன் தரிசனம்





ஸ்ரீ கோனி அம்மன் திருக்கோவில்


SRI KONNI AMMAN TEMPLE COIMBATORE

தைப்பூசத்திருநாளில் கோவை செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மருத மலை முருகரை பார்க்க முடியவில்லை என்றாலும் கோவையை காக்கும் அரசி, அம்பிகையான ஸ்ரீ கோனி அம்மனை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது.

திருக்கோவில் அமைவிடம் :

பெரிய கடைவீதி ,டவுன்ஹால் கோவை.

முகப்பில் பஞ்சமுக விநாயகர் திருக்கோவில் பழங்கால அரசமரமும் ஆரம்பமே பிரமாண்டமாக இருக்க வணங்கி உள்ளே சென்றால் ஸ்ரீ கோனி அம்மன் அழகுடன் 4 கரங்களுடன் உடுக்கைவாள் சக்கரங்களுடன் மணி. கபாலம் கேடயம் கொண்டு சூட்சம சக்தியாய் இருக்கிறார் .

திருக்கோவில் வளாகத்தில் சாந்த விநாயகர் சன்னதியும் நவகிரக சன்னதி,ஸ்ரீ வள்ளி,தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர் சன்னதிகள் காணக்கிடைக்காத அற்புதம் . ஸ்ரீ கோனியம் திருக்கோவில் பின்புறமுள்ள ஸ்தலமரம் நாகலிங்கமரம் அழகாய் பூத்துக் குழுங்குகிறது.

திருக்கோவில் தோன்றி 500 முதல் 1000 ஆண்டுகள் இருக்கலாம் . ஆலயம் முன்பு இருந்த ஊர் கோவன்புத்தூர் என்றும் காலப்போக்கில் மருவி கோயம்புத்தூர் ஆகிவிட்டது.

பழங்கால அரசர் வாழ்ந்த இடங்களில் எல்லாம் கோட்டைகள் அமைத்து அங்கு அம்பாள் சிவனுக்காக திருக்கோவில்கள் எழுப்பி உள்ளார்கள் . அந்த வகையில் ஸ்ரீகோனியம்மன் அமைவிடம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே தற்போது "கோட்டைமேடு" என்ற பகுதி தற்போதும் உள்ளது. அருகிலேயே கோட்டை ஈஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்த்திருவிழா:

வருடாந்திர விழாவாக மார்ச் முதல் வாரத்தில் அல்லது மாசி மாதத்தின் கடைசி வாரத்தில் நடைபெறுகிறகிறது. கோயம்பத்தூரின் பெரிய தேர்விழாவாக நடைபெறுகிறது. சுமார் இரண்டு வட்சம் பக்தர்கள் தேர் இழுக்க கோவை மக்களே கொண்டாடி மகிழும் அளவில் தேர் திருவிழா நடைபெறுகிறது.

ஸ்ரீ கோனி அம்மனை நம்பிக்கையுடன் வந்து வணங்குகள் பெரியதோர் கோவை மாநகரத்தையே காக்கும் அன்னை உங்கள் குறைகளுக்காக செவி சாய்க்க மாட்டாரா என்ன ?

உப செய்தி:

மிகப்பெரிய இராஜகோபுரம் ஸ்ரீ கோனியம்மனுக்காக தயாராகி வருகிறது.

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...