Sunday, February 5, 2012

ஈரோட்டை காக்கும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆருத்ரகபாலீஸ்வரர் திருக்கோவில் .





ஸ்ரீ வாரணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோவில்
SRI VARANAMBIKAI AND ARUTHRAKABALIESWARAR THIRUKKOVIL, ERODE

அமைவிடம் :

ஈரோடு நகரத்தின் உட்பகுதியில் ஈஸ்வரன் கோவில் வீதியில் பழங்காலத்தில் மன்னர் ஆட்சி செய்த பகுதியில் இப்பகுதி " கோட்டை " என்று அழைக்கப்படுகிறது.

மூலவர் :
ஸ்ரீ ஆருத்ர கபாலீஷ்வரர் இறைவனை திருத்தொண்டீசுவரர் ,
கோட்டை ஈஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்

அம்பாள்:

ஸ்ரீ வாரணாம்பிகை திருக்கோவில் செல்லும் வழி :

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பன்னீர் செல்வம் பூங்கா வந்து இறங்கி அங்கிருந்து 200 மீட்டர் நடைப்பயணத்தில் திருக்கோவிலை சென்றடையலாம் .

திருக்கோவில் சிறப்புகள் :

ஸ்ரீ ஆருத்ர கபாலீஷ்வரர் திருக்கோவிலில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் . திருக்கோவில் துவங்கி 1500ஆண்டுகளாக அருள்பாலீக்கும் இறைவன் கி.பி 1146 ல் குடமுழுக்கு நடந்துள்ளதாக ஆவணங்கள் பறை சாற்றுகின்றது. கதிரவனின் கதிர்கள் மாசி மாதத்தில் 25,26,27 ல் இறைவன் மேல் விழுவது விஷேசமாகும் .

கல்வெட்டு :

850 ஆண்டுகள் மற்றும் பாடல் பெற்ற ஸ்தலாமாக விளங்கி வருகிறது. இறைவனுக்கு நான்கு கால பூஜை நடை பெறுகிறது.

அமைப்பு :

கிழக்கு நோக்கிய நிலையில் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கின்ற ஸ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோவில் இரண்டு ராஜகோபுரங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க ஓர் வழியும் , அம்பாள் ஸ்ரீ வாரணாம்பிகையை தரிசிக்க ஓர் ராஜ கோபுர வழியும் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் ராஜ கோபுரம் பின் கொடிமரம் மற்றும் நந்தீஷ்வரரை வணங்கி பின் உள்ள செல்ல முகப்பில் அருள் தரும் மகாகணபதி ,அருள் தரும் பாலமுருகரை வணங்கி இரு பிரகாரங்கள் கொண்ட அமைப்பில் உள் பிரகாரத்தில் சுவாமி ஸ்ரீஆருத்ர கபாலீஷ்வரர் சிறிய சுயம்பு மூர்த்தியாக அமைந்துள்ளார் .

சிவதரிசனம் செய்து வெளியே வந்தால் வலப்புறம் துர்க்கை என்னும் பத்ரகாளியும் பின் நால்வர் சன்னதிகளை வணங்கி 63 நாயன்மார்கள் தரிசனம் செய்து ஸ்ரீ பொல்லாப்பிள்ளையாரை வணங்கி சேக்கிழார் நம்பியாண்டார் நம்பி, நார்த்தன கணபதியை வணங்கி ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை வணங்கி

பின் உட்பிரகாரத்தில் தொடர்ந்து வலம் வர சோமாஸ் கந்தர் வணங்கி பின்புறமுள்ள லிங்கோத்பவர் பிரம்மா அழகுடன் விளங்கும் வள்ளி ,தெய்வானை உடனமர் கல்யாண சுப்பிரமணியரை வணங்கலாம் பின் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ,ஸ்ரீவிஷ்ணு துர்க்கையை வணங்கினால் அருகில் பழங்கால சிறிய கிணறு அழகாய் அமைந்துள்ளது. பின் நவகிரக சன்னதிகள் வணங்கி ஸ்ரீ சனீஷ்வர பகவானை வணங்கினால் உட்பிரகார முகப்பை அடைந்து விடலாம் .

ஸ்ரீ வாரணாம்பிகை சன்னதி:

கொடிமரம் வணங்கி நந்தீசர் துதித்து தனிச்சன்னதியாக வீற்றிருக்கும் ஸ்ரீ வாரணாம்பிகை அம்மன் அழகும் சக்தியும் ஒருங்கே அமையப்பெற்ற இறைவியை வணங்கலாம் . பின் வெளிப்பிரகாரத்தில் ஸ்ரீ மூல விநாயகர் வணங்கி பின் தனிச்சன்னதியில் யானை உரிந்த நாதராக வீற்றிருக்கும் ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தியை தொழுது ஸ்ரீ வாரணம்பிகை சன்னதி இடப்புறமுள்ள ஸ்ரீ சண்டிகேஸ்வரியை வணங்கி

பின் திருக்கோவில் ஸ்தலமரமாக உள்ள சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வன்னி மரம் அதனடியே வீற்றிருக்கும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியை தொழுது காலபைரவரை வணங்கி சிவனருள் முழுமையாக முடித்து வரலாம் . சூரிய சந்திரகளை வணங்கி கொடிமரம் முன்பு நெடுசான்கிடையாக விழுந்து வணங்கி சிவனருளை பெறலாம் .

திருக்கோவில் அமைப்பு பிரமாண்டமானது . திருக்கோவில் பூஜை நேரம் : காலை 5.30 முதல் மதியம் 12.30 வரையிலும் மாலை 4.30 முதல் 08.30வரையிலும் திறந்திருக்கும் . விஷேச காலங்களில் மாறுதலுக்குட்படும் .

திருக்கோவிலில் அமைந்துள்ள சன்னதிகள் :

சித்தி விநாயகர் , ஸ்ரீ பாலதண்டாயுதபாணி, சூரிய சந்திரர்கள்,ஸ்ரீ வராணாம்பிகை ,மூலவிநாயகர் ,பைரவர் , மகாகணபதி, துர்க்கை,1008 சிவலிங்கம் , 63 நாயன்மார்கள் ,வலம்புரிவிநாயகர்,ஜீரகண்டேஷ்வரர் ,ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் . முடிவுரை : எங்கும் நீக்கமறை நிறைந்திருக்கிற சிவபெருமான் இங்கு திருத்தொண்டீசராக ஆருத்ர கபாலீஷ்வரராக ஈரோட்டை காக்கும் கோட்டை ஈஸ்வரரை வணங்கி வேண்டும் வரம் பெற்றிடுங்கள் .

ஓம் சிவாய நமஹ.

2 comments:

''இறைவனடி யுவராஜா'' said...

ஜி ஸ்ரீ வாரணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோவில்
பற்றிய தகவல் தந்தமைக்கு நன்றி

மேலும் திருகோவிலைப்பற்றி தகவலை எதிர் நோக்கும் .


என்றும் நட்புடன்
யுவராஜா

ஓம் சிவாய நம

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

யுவா, சிவாலயத் தேடல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மேலும் ஓர் சிவாலய அறிமுகத்தில் சந்திப்போம். ஓம் சிவாய நமஹ

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...