Sunday, February 5, 2012

ஈரோட்டில் பள்ளி கொண்ட ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஸ்ரீ கஸ்தூரி ரங்கநாதர் திருக்கோவில்,






SRI KASTHURI RANGANATHAR TEMPLE


ஈரோடு அமைவிடம் :

ஈரோடு மாவட்டத்தின் தலைநகரான ஈரோட்டில் பன்னீர் செல்வம் பூங்கா அருகில் 200மீட்டர் தூரத்தில் ஈஸ்வரன் கோவில் வீதியில் திருக்கோவில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் கோட்டை என அழைக்கப்பட்டு பல சிற்றரசர்களால் வாழ்ந்து வந்த இப்பகுதி வரலாற்று சிறப்பு மிக்கது.

திருக்கோவில் மூலவராக ஸ்ரீ கஸ்தூரி பெருமாள் அருள்புரிய பள்ளி கொண்டு பிரமாண்ட நிலையில் ஸ்ரீ பெருமாளின் தரிசனம் அழகானது. தெற்கு பார்த்த நிலையில் திருக்கோவில் மூலவர் இருக்க திருக்கோவில் இராஜகோபுரம் அழகில் ரசிக்கக்கூடிய ஒன்றாகும் .

திருக்கோவில் ஆண்டாள் சன்னதியும் தரிசிக்கவேண்டிய இடமாகும் .

ஸ்ரீ கமலவள்ளி தாயார் சன்னதி :

திருக்கோவில் பின்பகுதி பிரகாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது .பங்குனி உத்திரதன்று சுவாமியுடன் 1 நாள் மட்டும் சிறப்பாக திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரிவர் மற்றம் ஸ்ரீ தன்வந்நிரி ஸ்ரீ விஷ்வக்னேசர் சன்னதிகள் பார்த்து தரிசிக்க வேண்டிய இடமாகும் .ஸ்ரீசக்கரத்தாழ்வார் 16 கைகளுடன் தலையில் அக்னி விரிய காட்சி தருகிறார் . பழமையான தேர் புரட்டாசி தேர்திருவிழா விஷேசமானதாகும் .

ஸ்தலவிருட்சம் :

வில்வமரம் .

திருக்கோவில் வெளிபிரகாரத்தில் ஸ்ரீ ராமனுஜர் சன்னதி , ஸ்ரீ ஆழ்வார்கள் சன்னதி ஸ்ரீ லிங்கப்பாறை ஆஞ்சனேயர் கல்வெட்டாக செதுக்கி அழகாக உள்ளார் .

மூலவரின் சிறப்புகள் :

திருக்கோவில் மூலவர்க்கு காவல் தெய்வமாக ஸ்ரீஜெயந்,ஸ்ரீ விஜயன் ஆகியோர் வீற்றிருக்க ஸ்ரீதேவி,பூதேவி உடனமர் ஸ்ரீ கஸ்தூரி ரங்கநாதர் தரிசிக்க வேண்டிய ஆலயம் .பிரகாரத்தில் ஸ்ரீகஷ்தூரி பெருமாள் பள்ளிகொண்ட கோலத்தில் வலதுகையில் தண்டம் தலைக்கு மேல் ஐந்து தலையுடன் ஆதிஸேசன் உடல் சுற்றி இருக்க ஸ்ரீ ஆஞ்சனேயர் ஸ்ரீ கருடாள்வார்கள் உள்ளனர் .

ஆனி மாதத்தில் தைலக்காப்பு 48 நாள் சுவாமியின் முகம்,பாதமே அப்போது காண முடியும் . ஸ்ரீபெருமாளுக்குரிய நாளான ஏகாதசி, சனிக்கிழமை நாட்களில் திருக்கோவிலில் கூட்டம் அலைமேதுகிறது. இங்கு வந்து இறை வழிபாட்டை மேற்கொண்டு பல நலங்கள் பெற்று பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள் .

திருக்கோவில் திறந்திருக்கும் நேரம் :

05.30முதல் 12.30வரையிலும்
மாலை 04.30முதல் இரவு 08.30 வரையிலும் திறந்திருக்கும் .

ஈரோடு வந்தால் கண்டிப்பாக ஸ்ரீ கஸ்தூரி ரங்கநாதரை தரிசனம் செய்து விட்டு கருத்துரையிடுங்கள் நன்றி.

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...