Sunday, January 22, 2012

ஆற்றங்கரை நாகரீகத்தின் உச்சம் ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகர் திருக்கோவில் ,தூக்கநாயக்கன் பாளையம் .கோபி




ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகர் திருக்கோவில் திருக்கோவில்


அமைவிடம் :

ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் தூக்கநாயக்கன் பாளையம் என்னும் அழகிய ஊரில் அமைந்துள்ளது. T.N .PALAYAM என சுருக்கமாக அழைக்கப்படும் தூக்கநாயக்கன் பாளையம் ஊரின் பஸ் ஸ்டாப்பில் இறங்கி ஸ்ரீ முருங்கத்தூர் முனியப்பன் திருக்கோவில் கடந்து வாய்க்கால் கரை வழியாக சுமார் 1 கி.மீ பயணித்தால் மத்தாளக்கோம்பு விநாயகர் எனக்கேட்டால் சொல்வார்கள்.

மத்தாளக்கோம்பு:

திருக்கோவில் தலைப்பே வித்தியாசமாக இருப்பதால் புராணத்திற்கு செல்வோம் . பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது இப்பகுதிக்கு வந்த போது திரவுபதிக்கு தாகம் எற்பட அப்போது தன் அம்பால் மத்து ஆழத்தில் கோம்பு ஓன்றை உருவாக்கி தாகம் தீர்த்ததாக புராண வழிச் செய்திகள் இயம்புகின்றன.

மற்றொரு பெயர் காரணம் உண்டு அதன் விளக்கம் கோம்பு முழுவதும் மத்த இலை பழங்காலத்தில் படர்ந்து இருந்ததால் மத்த இலைகோம்பு என்பது மாறி மருவி மத்தாளக்கோம்பு என மாறி இருக்கும்.

ஸ்ரீ விநாயகர் :

பழங்கால ஆற்றங்கரை நாகரீகத்தை பறைசாற்றும் விதமாக கால வரையறை அறியாத அறிய முடியாத திருக்கோவிலாக ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகர் திருக்கோவிலாகும் . ஸ்ரீ விநாயகர் இருண்டுகரம் ஓர் தும்பிக்கையுடன் இடது கரத்தால் தும்பிக்கையை இறுக்கிப்பிடித்தபடி யோக நிலையில் இருப்பது எங்கும் காண முடியாத விஷேசமாகும்

கிரிடம் இல்லாத மொட்டை தலை மனிதகாதுடன் ஸ்ரீ மத்தாளகோம்பு விநாயகர் விஷேசமானவர் . விநாயகர் முன்பு உள்ள மூக்ஷிதவாகனர்க்கு பதிலாக நந்தீஸ்வரர் அமைந்திருக்கிருப்பது இத்திருக்கோவில் சிவ அம்சம் பொருந்திய ஸ்தலமாகும் . விநாயகர் அருகில் சுமார் 28 ராகு கேது சிலைகள் அமைந்துள்ளன.

நடந்த உண்மை:

சுமார் 120 வருடங்களுக்கு ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகரை திருடிச்செல்ல இரவில் மூன்று திருடர்கள் வந்தாகவும் ,அப்போது கடப்பாரையால் குத்தும்போது (தற்போதும் விநாயகர் வயிற்றில் காயம் உள்ளது) யானை பிளிரும் சத்தம் கேட்டு பயந்து கை கால்கள் செயலிழந்து இரண்டு திருடர்கள் விழுந்து விட ஒருவர்க்கு பார்வை பறி போய்விட்டதாம் . பின்பு திருக்கோவில் பூசாரி பழனியாண்டி அவர்கள் வந்து ஊர் மக்களும் எச்சரித்து விரட்டி விட்டதாக செவி வழிச்செய்திகள் இயம்புகின்றன.

ஸ்தலமரம் :

இரட்டை அரசமரம் .பழங்காலத்தில் ஓர் பெரிய அரசமரம் இருந்து விழந்துவிட்டதாகவும் பிறகு அதன் விதையால் தற்போது முளைத்துள்ள இரட்டை அரசமரத்திற்கு 400 வருடங்கள் இருக்கும் . அருகே நாகலிங்கமரம் அழகாய் பூத்துக்குழுங்கிறது.

மத்தாளக்கோம்பு தீர்த்தம் :

ஸ்ரீ விநாயகர் சன்னதிக்கு எதிரில் 50மீட்டர் தொலைவில் உள்ள அழகிய நீர் ஊற்றுக் குளமாகும். எக்காலத்திலும் இது வற்றாத தீர்த்தக்குளமாகும் . சுற்றிலும் நெல் வயல்கள் சேறுகளாய் இருக்க தீர்த்தக்குளத்தில் உள்ள நீர் பன்னீர் போன்ற சுத்தமாக அழகாக மிகச்சுத்தமாக இருப்பது ஆச்சர்யமாக உள்ளது. திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சோப்பு பயன்படுத்தாமல் குளிக்க அனுமதிக்கிறார்கள் .இங்கு படிக்கட்டில் பழங்கால தமிழ் எழுத்துக்கள் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது.

பழங்கால ஆற்றங்கரை நாகரீக சான்று :

திருக்கோவிலுக்கு சற்று தூரத்தில் எருக்கந்துறை என்னுமிடத்தில் பழங்கால தமிழ் மக்கள் வாழ்ந்த சுவடுகள் கல்தூண் ,மண்ணால் ஆன சட்டிகள் , பழங்கால கற்கள் இருப்பதே சாட்சி . ஆக ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகர் அக்காலத்தில் வாழ்ந்த மக்களால் வணங்கப்பட்ட ஆலயம் சுமார் 1500வருடங்கள் முந்தைய பழமையான திருக்கோவில் என்பது புலனாகிறது. கோம்பு என்றால் ,தீர்த்தக்குளம் என பொருள் கொள்ளலாம் .

ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகர் திருக்கோவில் செல்ல ஏதேனும் வழி அல்லது விபரங்கள் அறிய முன்பு இப்பகுதியில் வாழ்ந்து தற்போது சென்னையில் உள்ள

நன்பர் சுதாகர் 9841984524

எண்ணில் தொடர்பு கொள்ளலாம் . நமக்கு திருக்கோவிலை அறிமுகப்படுதியதும் இவரே.

முடிவுரை :

நம் ஆன்மீகப்பயணத்தில் இந்த வருடத்தின் பிள்ளையார் சுழியாக ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது . கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஆலயமாகும். உங்களுக்கும் ஆச்சர்யமூட்டும் திருக்கோவிலாக இது இருக்குமென நம்புகிறேன் .ராகு ,கேது தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும் .

வந்து வணங்கி விட்டு மெயில் செய்யுங்கள் .
நன்றி

6 comments:

சுதாகர் சண்முகம் said...

இதைவிட அழகாக மத்தாளக்கோம்பு கோவிலைப்பற்றி எழுத முடியாது. திரு மாதேஷ் அவர்களுக்கு நாங்கள் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். திரு மாதேஷ் செய்து கொண்டிருப்பது மிகச்சிறந்த ஆன்மீகப் பணி. இது போன்ற பணிகளை எல்லோராலும் செய்துவிடமுடியாது. திரு மாதேஷ் அவர்களின் தாய் தந்தையர் செய்த புண்ணியம். அவர் பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன். ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.

நன்றி

சுதாகர் சண்முகம்

இராஜராஜேஸ்வரி said...

ஆற்றங்கரை நாகரீகத்தின் உச்சம் ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகர் திருக்கோவில் ,தூக்கநாயக்கன் பாளையம் .கோபி"

மிக அருமையான தெளிவான பகிர்வு.. பாராட்டுக்கள்..

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

thanks SUDAKAR,ungalin pangu ithil undu,unkalukum valthukkal

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

thanks RAJARAJESWARI,ungal irai pakthi viyakkavaikirathu.

Agarathan said...

நேரில் சென்று வணங்கியது போன்ற ஒரு உணர்வு தல ... வாழ்த்துக்கள் ...

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

thank you thala'prakash'

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...